search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka election"

    கர்நாடகத்தில் நடந்து இருப்பது ஜனநாயக படுகொலை என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார். #Karnataka #BJP #ShivSena #UddhavThackeray
    மும்பை:

    பா.ஜனதாவின் பழைய கூட்டணி கட்சியான சிவசேனா, பிரதமர் மோடியின் நடவடிக்கைகளையும், பா.ஜனதாவையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

    சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உல்ஹாஸ் நாகரில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசுகையில் கர்நாடக விவகாரம் குறித்து குறிப்பிட்டார். அவர் பேசியதாவது:-

    எந்த கட்சிக்கு அதிக பலம் இருக்கிறதோ அந்த கட்சியைத்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும். ஆனால் கர்நாடகத்தில் நடந்து இருப்பது ஜனநாயக படுகொலை.

    கவர்னர் வஜுபாய் வாலா ஜன சங்கத்தைச் சேர்ந்தவர். அவர் கட்சி தொண்டர் போல் நடந்து கொள்கிறார். கர்நாடகத்தில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் டெல்லி உத்தரவுப்படி நடக்கிறது. டெல்லி மேலிடம்தான் முடிவு எடுக்கிறது.


    கவர்னரைப் போல் முதல்-மந்திரிகளையும் நீங்களே நியமித்துக் கொண்டால் தேர்தல் எதற்கு? டெல்லியில் இருந்து முதல்-மந்திரியை நியமித்துக் கொள்ளுங்கள். அப்படி டெல்லியே நியமித்தால் தேர்தல் சமயங்களில் பிரசாரம் செய்ய வேண்டி இருக்காது. மோடியின் வெளிநாட்டு பயணத்துக்கும் இடையூறு இருக்காது.

    ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும் போது ராமர் கோவில் கட்டுவோம் என்பார்கள். கர்நாடக தேர்தலில் ஓட்டுப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தியதில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. எனவே வாக்கு சீட்டு முறையில் ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Karnataka #BJP #ShivSena #UddhavThackeray
    கர்நாடக மாநிலத்தில் தற்காலிக சபாநாயகர் நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நாளை காலை 10:30 மணிக்கு விசாரணை நடைபெற உள்ளது.

    புதுடெல்லி:

    கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சியமைக்க 112 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் பா.ஜ.க.விடம் 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே, வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு வலை விரித்துள்ளது. இதனால் தங்களிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை தக்க வைப்பதில் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. அதேசமயம் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசை வீழ்த்தவும் ஆயத்தமாகி வருகின்றன.

    இந்த சூழ்நிலையில் நாளை காலை 11 மணிக்கு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டும்படி ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டுள்ளார். அத்துடன் சபையை வழிநடத்துவதற்கு தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையாவை நியமனம் செய்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    போபையா நியமனத்திற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. போபையாவின் நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று இரவு இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

    உச்ச நீதிமன்ற பதிவாளரை சந்திக்க அவர்களுக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பதிவாளரை சந்திக்க அனுமதி கிடைத்தது. பதிவாளிடம் மனுவை அளித்து, தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். நாளை  நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளதால், தங்கள் மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். 

    இதையடுத்து தற்காலிக சபாநாயகர் போபையா நியமனத்துக்கு எதிராக காங்கிரஸ், மஜத சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நாளை காலை 10.30 மணிக்கு விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. #KarnatakaElection #FloorTest #ProtermSpeaker 
    கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்பதில் நிலவிவரும் அரசியல் நிலவரம் தொடர்பாக நீதிபதி தெரிவித்த கருத்தால் சுப்ரீம் கோர்ட்டில் இன்று சிரிப்பலை எழுந்தது. #KarnatakaCMrace #SCjudgewittyjoke
    புதுடெல்லி:

    கர்நாடகா மாநில சட்டசபையில் நாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

    முன்னதாக, இந்த வழக்கு விசாரணையில் எடியூரப்பா சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, பல எம்.எல்.ஏ.க்கள் வெகு தூரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பெங்களூரு நகருக்கு வர வேண்டியுள்ளதால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க சில நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

    அப்போது, சமூகவலைத்தளத்தில் கண்ட ஒரு பதிவை குறிப்பிட்ட நீதிபதி ஏ.கே. சிக்ரி, ‘தன்னிடம் 117 எம்.எல்.ஏ.க்கள் (காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம்) ஆதரவு உள்ளதாக கர்நாடக கவர்னருக்கு பிரபல விடுதி (ரிஸார்ட்) உரிமையாளர் கடிதம் எழுதி இருப்பதாக தெரியவந்துள்ளது என வேடிக்கையாக குறிப்பிட்டார்.

    காரசாரமான விவாதங்களுடன் முக்கியமான தீர்ப்பை எதிர்பார்த்து நீதிமன்றத்தில் குழுமி இருந்த அனைவரும் நீதிபதியின் இந்த கருத்தை கேட்டு மனம் விட்டு சிரித்தனர். #KarnatakaCMrace #SCjudgewittyjoke 
    கர்நாடக சட்டசபையில் நாளை மாலை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு கவிழும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #Congress #KarnatakaElection #Thirunavukkarasar
    சென்னை:

    கர்நாடக சட்டசபையில் நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருப்பது பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கருத்து கூறியதாவது:-

    உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். 15 நாள் கால அவகாசம் என்பது ஒரு பெரும்பான்மை இல்லாத அரசாங்கம் முதல்-அமைச்சர் மட்டும் இருந்து கொண்டு ஆட்சி அமைக்க முடியாது.

    நாளை மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது. வெறும் 104 இடங்களை வைத்துள்ள பா.ஜனதாவால் கண்டிப்பாக பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. அதனால் எடியூரப்பா அரசாங்கம் கண்டிப்பாக கவிழும்.

    காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் சேர்ந்து ஆட்சி அமைக்க கூடிய வாய்ப்பு எதிர்காலத்தில் ஏற்படும்.

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது முதல் பெரிய கட்சி பா.ஜனதா என்கிறார். அப்படி பார்த்தால் பீகாரில் ஆர்.ஜே.டி. லாலு கட்சிதான் பெரிய கட்சி. லாலுவும் நிதிஷ் குமாரும் சேர்ந்து நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி அமைத்தனர். அதன்பிறகு அதை உடைத்து பி.ஜே.பியும் நிதிஷ்குமாரும் சேர்ந்து ஆட்சி அமைத்திருக்கிறார்கள்.

    அந்த மாநிலத்தில் அதிக இடங்களை பிடித்தது லாலு கட்சிதான் அவர்களுக்குதான் அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    அதே மாதிரிதான் கோவாவில் கங்கிரசுக்கு 28, பா.ஜனதாவுக்கு 22 இடம் தான் உள்ளது. இதேபோல் மிசோரம் மாநிலத்திலும் நிலைமை உள்ளது. இப்படி பல மாநிலங்களில் எப்படியாவது குறுக்கு வழியில் ஆட்சியில் அமர வேண்டும் என்ற நிலையில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கிறது.

    4 மாநிலத்தில் அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்ட கட்சிகள் எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கோவாவில் ஆரம்பித்து மற்ற மாநிலங்களிலும் கேட்க ஆரம்பித்துள்ளன.


    எனவே ஜனநாயக விரோதமாக குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க கவர்னரை ஏஜெண்டாக பயன்படுத்தும் தவறான வழிமுறையை பிரதமர் மோடியும் மத்திய பா.ஜனதா அரசும் தொடர்ந்து பின்பற்றி வருகிறது.

    கர்நாடக சட்டசபையில் நடக்கும் தீர்ப்பின் மூலமாக கண்டிப்பாக பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சி கவிழும்போது ஒரு சரியான பாடத்தை பா.ஜனதா கற்றுக்கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Congress #KarnatakaElection #Thirunavukkarasar
    கர்நாடகத்தில் பா.ஜனதா வெற்றி பெற்றதன் மூலம் குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டு வந்து விட்டதாக பிரதமர் மோடி பேசியுள்ளார். #BJP #NarendraModi #KarnatakaElection
    புதுடெல்லி:

    பா.ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகக்குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் பிரதமர் மோடி, பா.ஜனதா தவைர் அமித்ஷா மற்றும் தேசிய நிர்வாகிகள், மாநில தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:-

    பா.ஜனதாவினர் தங்களது சொந்த குடும்ப நலனுக்காக குடும்ப அரசியலுக்காக பாடுபடக் கூடாது. நாட்டை பலப்படுத்துவதற்காக அனைவரும் பாடுபட வேண்டும். தேச நலனுக்குத் தான் முதலிடம், தேசம்தான் முக்கியம் என்ற கோ‌ஷத்துடன் நாம் செல்ல வேண்டும்.

    கர்நாடகத்தில் பா.ஜனதா வெற்றி பெற்றதன் மூலம் இப்போது குடும்ப அரசியல் ஒழிக்கப்பட்டு விட்டது. குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம். கடின உழைப்பு என்றால் நாட்டுக்காக பாடுபடுவதுதான். தொண்டர்கள் நாட்டுக்காக உழைக்க வேண்டும். கட்சிக்காக அல்ல.

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவையொட்டி அவரது போதனைகளை நாம் மக்களிடையே பரப்ப வேண்டும்.


    பா.ஜனதாவின் கிராம ராஜ்ஜியம் திட்டத்தின் கீழ் பா.ஜனதா மந்திரிகளும் நிர்வாகிகளும் நாடு முழுவதும் 21,000 கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்தது மிகப்பெரிய வெற்றி.

    அங்கு 22 ஆயிரம் கோடி ஏழைகளை சந்தித்து அவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் பா.ஜனதாவின் சாதனைகளை எடுத்துக் கூறி இருக்கிறோம். 2019 பாராளுமன்ற தேர்தலில் இளைஞர்கள், ஏழைகள், கிராம மக்கள், பெண்கள் ஆகியோரை கவனத்தில் கொண்டு பா.ஜனதா தொண்டர்கள் பிரசாரம் செய்ய வேண்டும்.

    பா.ஜனதாவின் தேசிய தலைவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம செய்து நிர்வாகிகளை சந்தித்து அவர்கள் எப்படி பணியாற்ற வேண்டும் என்பது பற்றி பயிற்சி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு மோடி பேசினார். #BJP #NarendraModi #KarnatakaElection
    கர்நாடகத்தில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அனுமதி அளித்தது சட்டத்துக்கு விரோதமானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். #CPI #Mutharasan #yeddyurappa
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் மாலை மலர் நிருபருக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி நதிநீர் பிரச்சனையில் மத்திய அரசு வேண்டும் என்றே அரசியல் லாபம் கருதி காலதாமதம் செய்து வந்தது. உச்ச நீதிமன்ற விசாரனை தொடர்ந்து நடந்து வந்த நிலையில் அதிகாரம் படைத்த காவிரி மேலாண்மை வாரியம் நடுவர் மன்ற தீர்ப்பின்படி அமைப்பதுடன் நடுவர் மன்றம் தமிழ்நாட்டிற்கு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்திற்கிறதோ அதை உறுதிபடுத்த வேண்டும். அதில் பிரச்சனை ஏற்பட்டால் காவிரி மேலாண்மை வாரியமே தீர்வு காண வேண்டும் மத்திய அரசை நாடுவதற்கு வழிவகை செய்யக்கூடாது. பல ஆண்டுகளாக 5 லட்சம் ஏக்கர் நிலத்தில் குறுவை சாகுபடி நடக்கவில்லை. இவ்வாண்டாவது குருவை சாகுபடிக்கு கர்நாடக அரசிடம் தண்ணீர் பெற்று தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அனுமதி அளித்தது ஜனநாயக படுகொலையாகும்.


    இது குதிரை பேரத்திற்கு வழிவகை செய்யும். ஆட்சி அமைப்பதற்கு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்ட நிலையை தங்களுக்கு சாதகமான நிலையை ஆளுநர் மூலமாக பாரதிய ஜனதா கட்சி மேற்கொள்கிறது. இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதம். ஜனநாயத்தை அவமதிக்கும் செயல்.

    இவ்வாறு அவர் கூறினார். #CPI #Mutharasan #yeddyurappa
    தேவேகவுடா செய்த காரியத்துக்காக இன்று கவர்னர் வஜுபாய் வாலா 22 ஆண்டுகளுக்கு பிறகு அவரை பழிவாங்கி விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். #KarnatakaElection2018 #VajubhaiVala #DeveGowda
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் முன்வந்தது.

    இதன்மூலம் மெஜாரிட்டி உறுப்பினர்களை பெற்ற ஜனதாதளம் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரியது.

    ஆனால், தனிப்பெரும் கட்சி என்ற முறையில் பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் வஜுபாய்வாலா அழைப்பு விடுத்தார். இதையடுத்து எடியூரப்பா முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றுள்ளார்.

    மணிப்பூர், கோவா, மேகாலயா மாநிலங்களில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வந்திருந்த போதும், பாரதிய ஜனதா எதிர்க்கட்சிகளை தன் பக்கம் இழுத்து கூடுதல் எண்ணிக்கையை காட்டி ஆட்சி அமைக்க உரிமை கோரியது.

    அந்த மாநில கவர்னர்கள் பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தனர். அதேபோல்தான் கர்நாடக கவர்னரும் நடந்து கொள்வார். மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், அவர் தனிப்பெரும் கட்சியான பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து விட்டார்.


    இதை பழைய சம்பவம் ஒன்றை நினைவுபடுத்தி தேவேகவுடாவை கவர்னர் வஜுபாய்வாலா பழிவாங்கி விட்டதாக கூறுகின்றனர்.

    1996-ம் ஆண்டு தேவேகவுடா காங்கிரஸ் ஆதரவுடன் பிரதமராக இருந்து வந்தார். அப்போது குஜராத் மாநிலத்தில் சுரேஷ் மேத்தா தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வந்தது.

    பாரதிய ஜனதாவில் முக்கிய தலைவராக இருந்த சங்கர்சிங் வகேலா கட்சியில் கலகத்தை ஏற்படுத்தி தனி அணியாக பிரிந்தார். இதன் பின்னணியில் காங்கிரஸ் செயல்பட்டது.

    சுரேஷ் மேத்தா ஆட்சி மெஜாரிட்டி இழந்து விட்டதாக சங்கர்சிங் வகேலா கூறினார்.

    இதனால் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி சுரேஷ் மேத்தாவுக்கு உத்தரவிடப்பட்டது. அதன் படி சுரேஷ்மேத்தா சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபித்தார்.

    ஆனால், அப்போது மத்தியில் இருந்த தேவேகவுடா அரசு குஜராத் அரசை டிஸ்மிஸ் செய்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. கவர்னரின் அறிக்கையின் அடிப்படையில் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு கூறியது.

    ஆனால், இது ஜனநாயக படுகொலை என கூறி குஜராத் பாரதிய ஜனதா போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது குஜராத் பாரதிய ஜனதாவில் வஜுபாய்வாலா முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்து வந்தார்.

    அன்று தேவேகவுடா செய்த காரியத்துக்காக இன்று வஜுபாய்வாலா 22 ஆண்டுகளுக்கு பிறகு அவரை பழிவாங்கி விட்டதாக கூறுகின்றனர்.

    கவர்னர் நினைத்திருந்தால் மெஜாரிட்டி எண்ணிக்கையை காட்டிய குமாரசாமியை பதவி ஏற்கும்படி அழைத்து இருக்கலாம். ஆனால், அவர் ஆட்சிக்கு வருவதை தடுத்து பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க வழி ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்.

    வஜுபாய்வாலா குஜராத்தில் ராஜ்கோட் தொகுதியில் 7 முறை பாரதிய ஜனதா சார்பில் வெற்றி பெற்றவர். அவர், நீண்ட காலமாக குஜராத் பா.ஜ.க. அரசின் 2-ம் நிலை மந்திரியாக இருந்து வந்தார். பெரும்பாலும் நிதி மந்திரியாக இருந்த அவர் 18 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

    மோடி குஜராத் முதல்- மந்திரியாக பதவி ஏற்ற போது அவருக்காக தனது தொகுதியை வஜுபாய் வாலா விட்டு கொடுத்தார்.

    பின்னர் மோடி மணி நகர் தொகுதியை தேர்வு செய்ததால் மீண்டும் ராஜ்கோட் தொகுதியில் வஜுபாய் வாலா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து குஜராத்தில் யார் முதல்- மந்திரி என்ற கேள்வி எழுந்த போது, வஜுபாய் வாலா பெயர் தான் முதலிடத்தில் இருந்தது.

    ஆனால், ஆனந்தி பென் பட்டேல் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். வஜுபாய் வாலாவுக்கு கர்நாடக கவர்னர் பதவி வழங்கப்பட்டது.

    இடையில் ஆனந்திபென் பட்டேல் ராஜினாமா செய்த போதும் வஜுபாய் வாலா முதல்- மந்திரியாக தேர்வாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், விஜய்ரூபானியை முதல்- மந்திரியாக்கினார்கள்.

    இன்று கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் வஜுபாய் வாலா சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

    இவர் மீது ஏற்கனவே சில சர்ச்சைகளும் எழுந்துள்ளன. தனது வீட்டை மறுசீரமைப்பு செய்வதற்காக ரூ.4 கோடி செலவிட்டதாகவும், ஒரு தடவை தனி ஜெட் விமானத்தில் குஜராத்துக்கு சென்றதாகவும் சர்ச்சைகள் எழுந்தன.

    மேலும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தேர்வில் பல்வேறு தவறுகள் நடந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. #KarnatakaElection2018 #VajubhaiVala #DeveGowda
    கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத ஆட்சியமைக்க உரிமை கோட உள்ள நிலையில், கவர்னர் ஆட்சியமைக்க அழைக்கவில்லை என்றால் தர்ணா போராட்டம் நடத்துவோம் என இரு கட்சிகளும் அறிவித்துள்ளன. #KarnatakaVerdict #Congress #JDS
    பெங்களூர்:

    கர்நாடக சட்டசபை தேர்தலில்  தனிப்பெரும் கட்சியாக பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. 104 இடங்களைக் பாரதீய ஜனதா கைப்பற்றி உள்ளது.  காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளிலும், மஜத கட்சி 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. முல்பாகல் தொகுதியில் ஒரு சுயேச்சை வேட்பாளரும், ராணிபென்னூர் தொகுதியில் கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சி வேட்பாளரும், ஒரு தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்று உள்ளனர். 

    இதனால் அங்கு தொங்கு சட்டசபை ஏற்பட்டு உள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க கவர்னரிடம் கோரிக்கை வைத்து உள்ளது. அதுபோல் பாஜகவும்  கவர்னரிடம் ஆட்சி அமைக்க கோரிக்கை வைத்து உள்ளது.

    கர்நாடகாவில் ஆட்சி அமைக்க  கவர்னர் பாஜகவை தான் அழைப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், இன்று மாலை மஜத தலைவர் குமாரசாமி காங்கிரஸ் தலைவர்களுடன் அம்மாநில கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்.

    இதற்காக, எம்.எல்.ஏக்களிடம் கையெழுத்து பெறும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுக்காவிடில் கவர்னர் இல்லம் முன்னதாக தர்ணா போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ், மஜத கட்சிகள் அறிவித்துள்ளன. எம்.பி.க்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாஜகவை கவர்னர் ஆட்சியமைக்க அழைத்தால் சுப்ரீம் கோர்ட்டை நாடவும் காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
    கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 12 பேர் பங்கேற்கவில்லை என தகவல் வெளியான நிலையில், 78 எம்.எல்.ஏ.க்களும் தொடர்பில் இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். #Karnataka
    பெங்களூர்:

    கர்நாடகாவில் நேற்று வெளியான சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது.

    104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது. காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது. இதனை அடுத்து, 100 கோடி ரூபாய் எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசுவதாக மஜத தலைவர் குமாரசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில், இன்று நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 12 பேர் பங்கேற்கவில்லை. இதனால், அவர்கள் முகாம் மாறியதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இந்த தகவலை மறுத்துள்ள அம்மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா, “78 எம்.எல்.ஏ.க்களும் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். 12 பேர் பிதார் பகுதியில் இருந்து வருவதால் கூட்டத்திற்கு வர தாமதம் ஆகியுள்ளது” என கூறினார். #KarnatakaElections
    கர்நாடக மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் 121 இடங்கள் வரை முன்னிலை பெற்ற பா.ஜ.க., பின்னர் படிப்படியாக சரிந்து, கடைசியில் 104 இடங்களையே கைப்பற்றியது. இதனால் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளது. #KarnatakaEletion #BJP
    பெங்களூர்:

    கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.  அடுத்த 10 நிமிடங்களில் முன்னணி நிலவரம் வெளியாகத் தொடங்கியது. தொடக்கத்தில் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. அடுத்த 30 நிமிடத்தில் காங்கிரசை பின்னுக்கு தள்ளிவிட்டு பா.ஜனதா அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. அதன்பிறகு எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து பா.ஜனதா ஏறு முகத்திலேயே இருந்தது.

    காலை 11 மணிக்கெல்லாம் ஆட்சி அமைக்க தேவையான 112 இடங்களையும் தாண்டியது. 100 தொகுதி முன்னிலையை கடந்ததுமே நாடு முழுவதும் பா.ஜனதா தொண்டர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

    டெல்லியில் மத்திய மந்திரிகள் ரவிசங்கர் பிரசாத்தும், நிர்மலா சீதாராமனும் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.

    பா.ஜனதா 121 தொகுதிகள் வரை முன்னிலை வகித்தது. அதன்பிறகு திடீர் திருப்பம் ஏற்பட்டது.

    அடுத்தடுத்த ரவுண்டுகளில் முன்னணி நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. ஏறிய பா.ஜனதாவின் முன்னணி நிலவரம் ஒவ்வொன்றாக குறைய ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் மெஜாரிட்டிக்கும் கீழே இறங்கியது.

    அதே சமயம் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்த இரு கட்சிகளையும் சேர்த்தால் ஆட்சி அமைக்கும் மெஜாரிட்டி அவர்களுக்கு கிடைத்தது.

    முழு முடிவுகளும் வெளியான போது பா.ஜனதா 104 தொகுதிகளுடன் இருந்தது. காங்கிரசுக்கு 78 தொகுதிகளும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 38 தொகுதிகளும் கிடைத்தன.

    ஆட்சி அமைக்கும் நிலைக்கு முன்னணி பெற்று கடைசியாக பின்தங்கியது பா.ஜனதாவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உற்சாகத்துடன் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த பா.ஜனதாவினர் முகத்தில் ஏமாற்றம் பரவியது.

    இதற்கிடையே காங்கிரஸ் தங்களுக்கு ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு பறிபோனாலும் பா.ஜனதாவை ஆட்சி அமைக்கவிடக்கூடாது என்பதற்காக மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சிக்கு முயற்சி மேற்கொண்டது.

    அதன் தலைவர்கள் தேவகவுடா, குமாரசாமி ஆகியோருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    பகல் 1.30 மணி:-பா.ஜனதாவுக்கு மெஜாரிட்டி இல்லை என்பது உறுதியாகி விட்டது. காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைப்பது தொடர்பான நடவடிக்கைகள் தீவிரம் அடைந்தது.

    2 மணி:- காங்கிரஸ் தலைவர்கள் குலாம்நபி ஆசாத், அசோக் கெலாட், முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் ஆகியோர் தேவகவுடா வீட்டுக்கு சென்று பேச்சு நடத்தினார்கள்.

    மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைப்பதற்கான காங்கிரசின் ஆதரவை நேரில் தெரிவித்தனர். அவர்களிடம் குமாரசாமியுடன் பேசி தெரிவிப்பதாக தேவகவுடா கூறினார்.

    2.30 மணி:- பா.ஜனதா சார்பில் வக்கீல் மூலம் தேவகவுடாவுக்கு ரகசிய தூது அனுப்பப்பட்டது. அதை ஏற்க தேவகவுடா மறுத்துவிட்டார்.


    2.40 மணி:- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேவகவுடாவுடன் பேசி தனது ஆதரவை உறுதி செய்தார்.

    3.15 மணி:- குமாரசாமி தேவகவுடா வீட்டுக்கு வந்து பேசினார். காங்கிரசின் ஆதரவை ஏற்றுக்கொள்வது என இருவரும் முடிவு செய்தனர்.

    3.30 மணி:- பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ஜெ.பி.நந்தா, தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேகர் பெங்களூர் விரைந்தனர்.

    3.35 மணி:- காங்கிரஸ் தலைவர்கள் கவர்னரை சந்தித்து தங்கள் முடிவை தெரிவித்தனர்.

    4.10 மணி:- முதல்-மந்திரி சித்தராமையா கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

    4.30 மணி:- எடியூரப்பா கவர்னரை சந்தித்தார். ஆட்சி அமைப்பது தொடர்பாக 2 நாள் அவகாசம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    மாலை 5.30 மணி:- காங்கிரஸ் தலைவர்களும், மதசார்பற்ற ஜனதா தலைவர்களும் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தனர்.

    மாலை 6.00 மணி:- முதல்-மந்திரி சித்தராமையாவும், குமாரசாமியும் கூட்டாக பேட்டி அளித்தனர். மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.

    இரவு 7.45 மணி:- அமித்ஷா பா.ஜனதா தொண்டர்கள் மத்தியில் பேசுகையில் பா.ஜனதா தொடர்ந்து 15-வது மாநிலத்தில் வெற்றிபெற்று இருப்பதாக தெரிவித்தார். #KarnatakaEletion #BJP
    தனிப்பெரும் கட்சியாக இல்லாமல் 6 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த பாரதிய ஜனதாவின் வியூகம் கர்நாடக மாநிலத்தில் பலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. #KarnatakaElection2018 #BJP
    பெங்களூர்:

    தேசிய அளவில் காங்கிரசை வீழ்த்தி பா.ஜனதா செல்வாக்கு பெற்று வருகிறது. மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததை தொடர்ந்து பெரும்பாலான மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றி வருகிறது.

    காங்கிரசுக்கு கர்நாடக மாநிலம் மட்டுமே பெரிய மாநிலமாக இருந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தாலும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளது.

    கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் 104 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது. அந்த வகையில் முதலில் பா.ஜனதாவின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா உடனடியாக ஆட்சி அமைக்க உரிமை கோராமல் 2 நாட்கள் அவகாசம் கேட்டு இருக்கிறார்.

    எதிர் முகாமில் இருந்து அதிருப்தியாளர்கள் தங்கள் பக்கம் வருவார்கள் அல்லது அவர்களை இழுக்கலாம் என்பதற்காக பா.ஜனதா அவகாசம் கேட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இதற்கு முந்தைய தேர்தல்களில் பா.ஜனதா நடந்துகொண்ட விதமே இந்த சந்தேகத்துக்கு காரணம்.

    1996 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு மெஜாரிட்டி இல்லாத நிலையில் 161 எம்.பி.க்களை வைத்துக் கொண்டு கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் வாஜ்பாய் பிரதமர் ஆனார். 13 நாட்களில் அவரது ஆட்சி கவிழ்ந்தது.

    2008-ம் ஆண்டு ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 96 தொகுதிகளையும், பா.ஜனதா 78 தொகுதிகளையும் கைப்பற்றிய நிலையில் முதலிடம் பிடித்த காங்கிரசை ஆட்சி அமைக்க விடாமல் 2-வது இடத்தில் இருந்த பா.ஜனதா, பகுஜன் சமாஜ் மற்றும் 9 சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

    2013-ல் டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 32 இடங்களில் வெற்றிபெற்றது. ஆம் ஆத்மி 28 இடங்களுடன் 2-வது இடத்தில் இருந்தது. காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியில் அமர்ந்தது. 49 நாட்களில் அந்த ஆட்சி கவிழ்ந்தது.

    2014-ல் மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 122 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது. சிவசேனா ஆதரவை வற்புறுத்தி பெற்று பா.ஜனதா ஆட்சி அமைத்தது.

    கடந்த ஆண்டு (2017) கோவா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களிலும், பா.ஜனதா 13 இடங்களிலும் வெற்றிபெற்று இருந்தது. காங்கிரஸ் கட்சி மெஜாரிட்டிக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுக்காக காத்து இருந்தபோது திடீர் என்று 2-வது இடத்தில் இருந்த பா.ஜனதா சிறிய கட்சிகள் ஆதரவை பெற்று ஆட்சியில் அமர்ந்தது.


    இதேபோல் மணிப்பூர் மாநிலத்தில் 28 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் ஆட்சி அமைக்க 3 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவைப்பட்டது. அப்போது 21 எம்.எல்.ஏ.க்களுடன் 2-வது இடத்தில் இருந்த பா.ஜனதா சிறிய கட்சிகள் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்தது.

    கோவா, மணிப்பூரில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக முதலிடத்தில் இருந்தும் 2-வது இடத்தில் இருந்த பா.ஜனதா ஆட்சி அமைத்தது. இது காங்கிரஸ் தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த ஆண்டு மேகாலயாவில் காங்கிரஸ் 21 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்த போதும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.

    19 இடங்களுடன் 2-வது இடத்தில் இருந்த தேசிய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்ற பா.ஜனதா சிறிய கட்சிகளை சேர்த்துக் கொண்டு ஆதரவு அளித்து ஆட்சி அமைக்க வழிவகுத்தது. இதன்மூலம் காங்கிரஸ் ஆட்சி அமையவிடாமல் பா.ஜனதா தடுத்துவிட்டது.

    எனவே கர்நாடகத்திலும் பா.ஜனதா குறுக்கு வழியில் செல்லுமா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #KarnatakaElection2018 #BJP
    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி என்றால் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தை வைத்து மந்திரிசபை அமைக்கலாம் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். #KarnatakaElection2018 #Sarathkumar
    அவனியாபுரம்:

    சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. எனவே அதிக இடங்களை பிடித்துள்ள கட்சி ஆட்சி அமைக்க வேண்டும்.

    கூட்டணி ஆட்சி என்றால் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தை வைத்து மந்திரிசபை அமைக்கலாம் என்பது என்னுடைய கருத்து.

    கர்நாடக தேர்தலில் முன் கூட்டியே சரியான கூட்டணி அமைத்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

    தற்போது தமிழகம் முழுவதும் மணல் திருட்டு அமோகமாக நடந்து வருகிறது. இதனால் மண்வளம், நீர்வளம் பாதிக்கப்பட்டு உள்ளன. தண்ணீர் பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது.


    வருங்காலத்தில் தண்ணீருக்காக போர் ஏற்படும். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் குறையிருந்தால் அதனை சமத்துவ மக்கள் கட்சி தைரியமாக சுட்டிக்காட்டும்.

    2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #KarnatakaElection2018 #Sarathkumar
    ×