search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஜத"

    காங்கிரஸ் - மஜத கூட்டணி புனிதமில்லாதது என பாஜகவினர் விமர்சித்து வரும் நிலையில், காஷ்மிரில் பாஜக-பிடிபி கூட்டணி மட்டும் புனிதமானதா? என அம்மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். #OmarAbdullah
    ஸ்ரீநகர்:

    கர்நாடகாவில் போதிய பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் முதல்வர் எடியூரப்பா தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது. மஜத தலைவர் குமாரசாமி நாளை முதல்வராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் - மஜத கூட்டணியை புனிதமில்லாத கூட்டணி என பாஜக தலைவர்கள் விமர்சித்து வந்தனர். இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, “எப்போதும் பாஜகவில் இருந்து ஒருவர் காங்கிரஸ் - மஜத கூட்டணி புனிதமில்லாதது என அழைக்கிறார். காஷ்மீரில் பாஜக - பிடிபி கூட்டணி எப்படிப்பட்டது என அவர்கள் (பாஜக) விளக்கமளித்தால் முன்னே கூறியது சரியாக இருக்கும்” என பதிவிட்டுள்ளார். #OmarAbdullah
    கர்நாடக காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் கொச்சிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர்கள் ஐதராபாத் நகரில் உள்ள சொகுசு ஓட்டலுக்கு சென்றடைந்தனர். #KarnatakaCMRace
    ஐதராபாத்:

    கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூரப்பா நேற்று முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

    இதற்கிடையே, எம்.எல்.ஏ.க்களை இழுத்து விடக்கூடாது என்பதற்காக மைசூரு சாலையில் உள்ள சொகுசு விடுதியில் காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டனர். எடியூரப்பா பதவியேற்ற நிலையில், விடுதிக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதனால், பாஜகவினர் அவர்களை எளிதில் தொடர்பு கொள்ளவோ, அங்கிருந்து எம்.எல்.ஏ.க்கள் தப்பிக்கவோ வழி உள்ளது.



    இதனால், எம்.எல்.ஏ.க்களை கேரளாவுக்கு இடம்மாற காங்கிரஸ், மஜத தலைமை திட்டமிட்டன. நேற்றிரவு, தனியார் விமானம் மூலம் கொச்சி செல்ல ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், விமான போக்குவரத்து அமைச்சகம் அதற்கு முட்டுக்கட்டை போட்டது. இதனால், இன்று காலை இரண்டு கட்சி எம்.எல்.ஏ.க்களும் ஐதராபாத்துக்கு பேருந்து மூலம் வந்தடைந்தனர்

    அவர்களுக்காக அங்கு இரண்டு சொகுசு ஓட்டல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. விடுதியை சுற்றி பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. #KarnatakaCMRace
    கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள சொகுசு விடுதிக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெற பட்டுள்ளதால், கேரளாவுக்கு சென்று தங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #KarnatakaCMRace
    பெங்களூர்:

    கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூரப்பா இன்று முதல்வராக பதவியேற்றுள்ளார். 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

    இந்நிலையில், மைசூரு சாலையில் உள்ள சொகுசு விடுதியில் காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ளனர். இன்று எடியூரப்பா பதவியேற்ற நிலையில், விடுதிக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதனால், பாஜகவினர் அவர்களை எளிதில் தொடர்பு கொள்ளவோ, அங்கிருந்து எம்.எல்.ஏ.க்கள் தப்பிக்கவோ வழி உள்ளது.



    இதனால், எம்.எல்.ஏ.க்களை கேரளாவுக்கு இடம்மாற காங்கிரஸ், மஜத தலைமை யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத ஆட்சியமைக்க உரிமை கோட உள்ள நிலையில், கவர்னர் ஆட்சியமைக்க அழைக்கவில்லை என்றால் தர்ணா போராட்டம் நடத்துவோம் என இரு கட்சிகளும் அறிவித்துள்ளன. #KarnatakaVerdict #Congress #JDS
    பெங்களூர்:

    கர்நாடக சட்டசபை தேர்தலில்  தனிப்பெரும் கட்சியாக பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. 104 இடங்களைக் பாரதீய ஜனதா கைப்பற்றி உள்ளது.  காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளிலும், மஜத கட்சி 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. முல்பாகல் தொகுதியில் ஒரு சுயேச்சை வேட்பாளரும், ராணிபென்னூர் தொகுதியில் கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சி வேட்பாளரும், ஒரு தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்று உள்ளனர். 

    இதனால் அங்கு தொங்கு சட்டசபை ஏற்பட்டு உள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க கவர்னரிடம் கோரிக்கை வைத்து உள்ளது. அதுபோல் பாஜகவும்  கவர்னரிடம் ஆட்சி அமைக்க கோரிக்கை வைத்து உள்ளது.

    கர்நாடகாவில் ஆட்சி அமைக்க  கவர்னர் பாஜகவை தான் அழைப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், இன்று மாலை மஜத தலைவர் குமாரசாமி காங்கிரஸ் தலைவர்களுடன் அம்மாநில கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்.

    இதற்காக, எம்.எல்.ஏக்களிடம் கையெழுத்து பெறும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுக்காவிடில் கவர்னர் இல்லம் முன்னதாக தர்ணா போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ், மஜத கட்சிகள் அறிவித்துள்ளன. எம்.பி.க்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாஜகவை கவர்னர் ஆட்சியமைக்க அழைத்தால் சுப்ரீம் கோர்ட்டை நாடவும் காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
    கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 12 பேர் பங்கேற்கவில்லை என தகவல் வெளியான நிலையில், 78 எம்.எல்.ஏ.க்களும் தொடர்பில் இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். #Karnataka
    பெங்களூர்:

    கர்நாடகாவில் நேற்று வெளியான சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது.

    104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது. காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது. இதனை அடுத்து, 100 கோடி ரூபாய் எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசுவதாக மஜத தலைவர் குமாரசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில், இன்று நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 12 பேர் பங்கேற்கவில்லை. இதனால், அவர்கள் முகாம் மாறியதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இந்த தகவலை மறுத்துள்ள அம்மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா, “78 எம்.எல்.ஏ.க்களும் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். 12 பேர் பிதார் பகுதியில் இருந்து வருவதால் கூட்டத்திற்கு வர தாமதம் ஆகியுள்ளது” என கூறினார். #KarnatakaElections
    கர்நாடக அரசியல் திடீர் திருப்பமாக காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பாஜக முக்கிய வியூகம் வகுத்து வருகிறது. #KarnatakaVerdict
    பெங்களூர்:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. பெரும்பான்மைக்கு தேவையான 122 தொகுதிகளை எந்த கட்சியும் கைப்பற்றவில்லை. அதிகபட்சமாக பாஜக 72 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 32 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

    காங்கிரஸ் கட்சி 42-ல் வெற்றியும், 35-ல் முன்னிலை பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 18-ல் வெற்றியும் 20-ல் முன்னிலையில் உள்ளது. இதனால், காங்கிரஸ் - மஜத இடையே கூட்டணி ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது. முதல்வர் பதவியை மஜதவுக்கும், துணை முதல்வர் பதவி காங்கிரசுக்கும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    20 மந்திரி பதவி காங்கிரசுக்கும், 16 மஜத கட்சிக்கும் பிரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலையும் கூட்டணி அமைத்து சந்திக்க உடன்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மாலை 5.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாக மஜத மூத்த தலைவர் தானிஷ் அலி தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, டெல்லியில் பாஜக தலைவர் கர்நாடக தேர்தல் முடிவுகள் தொடர்பாக முக்கிய மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர், மந்திரிகள் ரவிஷங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ஜே.பி. நட்டா உடனடியாக பெங்களூர் புறப்பட்டுள்ளனர். #KarnatakaVerdict
    கர்நாடக தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், பாஜக அதிக இடங்களில் வென்றாலும் தனிப்பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #KarnatakaVerdict #BJP
    பெங்களூர்:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 224 இடங்களில் 222 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக 106 இடங்கள் வரை முன்னிலையில் உள்ளது.

    காங்கிரஸ் கட்சி 72 இடங்களிலும், மஜத 40 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. சற்று நேரத்திற்கு முன்னதாக பெரும்பான்மை இடங்களை தாண்டி பாஜக முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில், பாஜக ஆட்சியமைக்க எந்த எல்லைக்கும் செல்லும் என்பது முந்தைய தேர்தல் வரலாறுகளில் தெரிய வந்தது. அதேபோல, இம்முறையும் எப்படியாவது ஆட்சியமைக்க அக்கட்சி தீவிர முயற்சி எடுக்கும்.

    காங்கிரஸ் கட்சியும், மஜத கட்சியும் கூட்டணி அமைக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால், அம்மாநில அரசியல் களம் பரபரப்பானதாக மாறியுள்ளது. #KarnatakaVerdict #BJP
    கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருவதால் ஆட்சியமைப்பதில் குமாரசாமியின் பங்கு முக்கியமாக இருக்கும் என கருதப்படுகிறது. #KarnatakaElectionResults
    பெங்களூர்:

    கர்நாடகாவில் நடந்து முடிந்த 222 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடந்து வருகிறது. காங்கிரஸ் - பாஜக என இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகிக்கின்றன. சமபலத்தின் இரு கட்சிகளும் இருப்பதால் கருத்து கணிப்புகள் கூறியது போல தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு உள்ளது.

    தேசிய கட்சிகளே ஆண்டுள்ள கர்நாடகாவில், மதச்சார்பற்ற ஜனதா தளம் குறிப்பிட்ட வாக்கு வங்கியை வைத்துள்ளது. முந்தைய தேர்தல்களில் ஆட்சியை தீர்மாணிக்கும் சக்தியாகவும் இந்த கட்சி இருந்துள்ளது.

    குறிப்பாக 2004-ம் ஆண்டு நடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு குமாரசாமி (மஜத தலைவர்) ஆதரவளிக்க காங்கிரஸ் ஆட்சியமைத்தது. 2006-ம் ஆண்டு ஆதரவை திரும்ப பெற்றதால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. இதன் பின்னர், பாஜக - மஜத இடையே ஒரு உடன்பாடு ஏற்பட்டது.

    மீதமுள்ள ஆட்சி காலத்தில் குமாரசாமி முதல்வராகவும், அதன் பின்னர், எடியூரப்பா முதல்வராக இருப்பார் எனவும் உடன்பாடு செய்யப்பட்டது. அதன்படி குமாரசாமி முதல்வரானார். 2007-ம் ஆண்டு அக்டோபரில் பதவியை விட்டுக்கொடுக்க குமாரசாமி தயாரானாலும் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆட்சியை விட்டுக்கொடுக்கவில்லை.

    இதனால், கொதிப்படைந்த எடியூரப்பா ஆதரவை வாபஸ் பெற்றதால் குமாராசாமி அரசு கவிழ்ந்தது. இதனை அடுத்து, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இம்முறை காங்கிரஸ், பாஜக எனும் இருபெரும் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காது என்றே கருத்து கணிப்புகள் கூறியது. அதேபோல, இரு கட்சிகளும் சமபலத்தில் உள்ளன.



    அப்படி தொங்கு சட்டசபை அமைந்தால், அது குமாரசாமிக்கு அடிக்கும் யோகமாக இருக்கும். இரு கட்சிகளுக்கும் பெரும்பாண்மை இல்லாமல், மஜத 30 தொகுதிகள் வரை வென்றால், மஜக துணையில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. அப்படி நடக்கும் பட்சத்தில், பாஜகவானது குமாரசாமியுடன் கைகோர்க்க தயங்காது.

    ஆனால், எடியூரப்பா உடன் குமராசாமிக்கு பழைய பஞ்சாயத்து இருக்கும் நிலையில் முதல்வரை மாற்ற வேண்டும் என குமாரசாமி கோரிக்கை விடுக்கலாம். அதனை பாஜக தலைமை எப்படி எடுத்துக்கொள்ள போகிறது என்பது தெரியவில்லை.

    ஒருவேலை காங்கிரஸ் அதிக இடங்களில் வென்று பெரும்பான்மை இல்லை என்றால், அது சிக்கல் தான், ஏனென்றால், சித்தராமையா மஜக கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தவர். இதனால், குமாரசாமியுடன் கைகோர்க்க அவர் விரும்ப மாட்டார் என்றே தெரிகிறது.

    அரசியலில் எதுவும் எதிர்பார்க்காததுதான், அகிலேஷ்யாதவ் - மாயவதி கைகோர்த்தது போல, இதுவும் நடக்கலாம். எப்படி இருந்தாலும், கர்நாடக தேர்தல் களத்தில் எளிதான வெற்றி என்பது எந்த கட்சிக்கும் சாத்தியமில்லை என்பதால், வாக்கு எண்ணிக்கைக்கு பின்னரும் அம்மாநில அரசியல் பரபரப்பானதாகவே இருக்கும். #KarnatakaElectionResults
    கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கருத்து கணிப்புகள் கூறும் நிலையில், அம்மாநில அரசியல் களம் குமாரசாமிக்கு ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்படுகிறது. #KarnatakaElections
    பெங்களூர்:

    கர்நாடகாவில் நேற்று நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. வரும் 15-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில், பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, இப்போதே பதவியேற்கப்போகும் நாளை தெரிவித்து விட்டார்.

    எடியூரப்பா மனநலம் சரியில்லாமல் பேசி வருகிறார் என சித்தராமையாவும் பதிலடி கொடுத்துள்ளார். தேசிய கட்சிகளே ஆண்டுள்ள கர்நாடகாவில், மதச்சார்பற்ற ஜனதா தளம் குறிப்பிட்ட வாக்கு வங்கியை வைத்துள்ளது. முந்தைய தேர்தல்களில் ஆட்சியை தீர்மாணிக்கும் சக்தியாகவும் இந்த கட்சி இருந்துள்ளது.

    குறிப்பாக 2004-ம் ஆண்டு நடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு குமாரசாமி (மஜத தலைவர்) ஆதரவளிக்க காங்கிரஸ் ஆட்சியமைத்தது. 2006-ம் ஆண்டு ஆதரவை திரும்ப பெற்றதால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. இதன் பின்னர், பாஜக - மஜத இடையே ஒரு உடன்பாடு ஏற்பட்டது.

    மீதமுள்ள ஆட்சி காலத்தில் குமாரசாமி முதல்வராகவும், அதன் பின்னர், எடியூரப்பா முதல்வராக இருப்பார் எனவும் உடன்பாடு செய்யப்பட்டது. அதன்படி குமாரசாமி முதல்வரானார். 2007-ம் ஆண்டு அக்டோபரில் பதவியை விட்டுக்கொடுக்க குமாரசாமி தயாரானாலும் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆட்சியை விட்டுக்கொடுக்கவில்லை.



    இதனால், கொதிப்படைந்த எடியூரப்பா ஆதரவை வாபஸ் பெற்றதால் குமாராசாமி அரசு கவிழ்ந்தது. இதனை அடுத்து, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இம்முறை காங்கிரஸ், பாஜக எனும் இருபெரும் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காது என்றே கருத்து கணிப்புகள் கூறுகின்றது.

    அப்படி தொங்கு சட்டசபை அமைந்தால், அது குமாரசாமிக்கு அடிக்கும் யோகமாக இருக்கும். மஜத 30 தொகுதிகள் வரை வெல்லும் என கருத்து கணிப்புகள் கூறும் நிலையில், மஜக துணையில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. அப்படி நடக்கும் பட்சத்தில், பாஜகவானது குமாரசாமியுடன் கைகோர்க்க தயங்காது.

    ஒருவேலை காங்கிரஸ் அதிக இடங்களில் வென்று பெரும்பான்மை இல்லை என்றால், அது சிக்கல் தான், ஏனென்றால், சித்தராமையா மஜக கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தவர். இதனால், குமாரசாமியுடன் கைகோர்க்க அவர் விரும்ப மாட்டார் என்றே தெரிகிறது.

    அரசியலில் எதுவும் எதிர்பார்க்காததுதான், அகிலேஷ்யாதவ் - மாயவதி கைகோர்த்தது போல, இதுவும் நடக்கலாம். எப்படி இருந்தாலும், கர்நாடக தேர்தல் களத்தில் எளிதான வெற்றி என்பது எந்த கட்சிக்கும் சாத்தியமில்லை என்பதால், வாக்கு எண்ணிக்கைக்கு பின்னரும் அம்மாநில அரசியல் பரபரப்பானதாகவே இருக்கும். #KarnatakaElections
    ×