search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Murder of democracy"

    கர்நாடகத்தில் நடந்து இருப்பது ஜனநாயக படுகொலை என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார். #Karnataka #BJP #ShivSena #UddhavThackeray
    மும்பை:

    பா.ஜனதாவின் பழைய கூட்டணி கட்சியான சிவசேனா, பிரதமர் மோடியின் நடவடிக்கைகளையும், பா.ஜனதாவையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

    சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உல்ஹாஸ் நாகரில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசுகையில் கர்நாடக விவகாரம் குறித்து குறிப்பிட்டார். அவர் பேசியதாவது:-

    எந்த கட்சிக்கு அதிக பலம் இருக்கிறதோ அந்த கட்சியைத்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும். ஆனால் கர்நாடகத்தில் நடந்து இருப்பது ஜனநாயக படுகொலை.

    கவர்னர் வஜுபாய் வாலா ஜன சங்கத்தைச் சேர்ந்தவர். அவர் கட்சி தொண்டர் போல் நடந்து கொள்கிறார். கர்நாடகத்தில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் டெல்லி உத்தரவுப்படி நடக்கிறது. டெல்லி மேலிடம்தான் முடிவு எடுக்கிறது.


    கவர்னரைப் போல் முதல்-மந்திரிகளையும் நீங்களே நியமித்துக் கொண்டால் தேர்தல் எதற்கு? டெல்லியில் இருந்து முதல்-மந்திரியை நியமித்துக் கொள்ளுங்கள். அப்படி டெல்லியே நியமித்தால் தேர்தல் சமயங்களில் பிரசாரம் செய்ய வேண்டி இருக்காது. மோடியின் வெளிநாட்டு பயணத்துக்கும் இடையூறு இருக்காது.

    ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும் போது ராமர் கோவில் கட்டுவோம் என்பார்கள். கர்நாடக தேர்தலில் ஓட்டுப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தியதில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. எனவே வாக்கு சீட்டு முறையில் ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Karnataka #BJP #ShivSena #UddhavThackeray
    ×