search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு கவிழும்-  திருநாவுக்கரசர்
    X

    நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு கவிழும்- திருநாவுக்கரசர்

    கர்நாடக சட்டசபையில் நாளை மாலை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு கவிழும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #Congress #KarnatakaElection #Thirunavukkarasar
    சென்னை:

    கர்நாடக சட்டசபையில் நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருப்பது பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கருத்து கூறியதாவது:-

    உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். 15 நாள் கால அவகாசம் என்பது ஒரு பெரும்பான்மை இல்லாத அரசாங்கம் முதல்-அமைச்சர் மட்டும் இருந்து கொண்டு ஆட்சி அமைக்க முடியாது.

    நாளை மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது. வெறும் 104 இடங்களை வைத்துள்ள பா.ஜனதாவால் கண்டிப்பாக பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. அதனால் எடியூரப்பா அரசாங்கம் கண்டிப்பாக கவிழும்.

    காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் சேர்ந்து ஆட்சி அமைக்க கூடிய வாய்ப்பு எதிர்காலத்தில் ஏற்படும்.

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது முதல் பெரிய கட்சி பா.ஜனதா என்கிறார். அப்படி பார்த்தால் பீகாரில் ஆர்.ஜே.டி. லாலு கட்சிதான் பெரிய கட்சி. லாலுவும் நிதிஷ் குமாரும் சேர்ந்து நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி அமைத்தனர். அதன்பிறகு அதை உடைத்து பி.ஜே.பியும் நிதிஷ்குமாரும் சேர்ந்து ஆட்சி அமைத்திருக்கிறார்கள்.

    அந்த மாநிலத்தில் அதிக இடங்களை பிடித்தது லாலு கட்சிதான் அவர்களுக்குதான் அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    அதே மாதிரிதான் கோவாவில் கங்கிரசுக்கு 28, பா.ஜனதாவுக்கு 22 இடம் தான் உள்ளது. இதேபோல் மிசோரம் மாநிலத்திலும் நிலைமை உள்ளது. இப்படி பல மாநிலங்களில் எப்படியாவது குறுக்கு வழியில் ஆட்சியில் அமர வேண்டும் என்ற நிலையில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கிறது.

    4 மாநிலத்தில் அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்ட கட்சிகள் எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கோவாவில் ஆரம்பித்து மற்ற மாநிலங்களிலும் கேட்க ஆரம்பித்துள்ளன.


    எனவே ஜனநாயக விரோதமாக குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க கவர்னரை ஏஜெண்டாக பயன்படுத்தும் தவறான வழிமுறையை பிரதமர் மோடியும் மத்திய பா.ஜனதா அரசும் தொடர்ந்து பின்பற்றி வருகிறது.

    கர்நாடக சட்டசபையில் நடக்கும் தீர்ப்பின் மூலமாக கண்டிப்பாக பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சி கவிழும்போது ஒரு சரியான பாடத்தை பா.ஜனதா கற்றுக்கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Congress #KarnatakaElection #Thirunavukkarasar
    Next Story
    ×