search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "iPhone"

    • புதிய ஐபோனை வாங்க பல வாடிக்கையாளர்கள் மும்பை விரைந்தனர்.
    • சம்பவம் தொடர்பாக இரு வாடிக்கையாளர்கள் மீதும் குற்ற வழக்குகள் பதிவு.

    உலகின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனாக ஐபோன் இருக்கிறது. எனினும், இதனை வாங்க ஆப்பிள் நிறுவன ரசிகர்கள் ஆண்டு முழுக்க காத்திருப்பதும், பல மணி நேரங்கள் வரிசையில் நிற்பதும் வாடிக்கையான காரியம் ஆகிவிட்டது. இந்த நிலையில், ஐபோன் 15 வினியோகத்திற்கு தாமதம் ஏற்பட்டதால், இரண்டு வாடிக்கையாளர்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு வாடிக்கையாளர்கள் புதிய ஐபோன் 15-ஐ வாங்க காத்திருந்தனர். ஐபோன் 15 கிடைக்க அவர்கள் எதிர்பார்த்ததைவிட நீண்ட நேரம் ஆகும் போது, இரு வாடிக்கையாளர்கள் கோபமுற்றனர். இது தொடர்பாக விற்பனையாளர்களிடம் நடந்த பேச்சுவார்த்தை, மோதலில் நிறைவுற்றது. சம்பவத்தின் போது, ஐபோன் 15 கிடைக்க தாமதமானதால் கடையில் பணியாற்றிய விற்பனையாளரை தாக்கினர்.

    வடக்கு டெல்லியில் உள்ள கம்லா நகர் சந்தையில் உள்ள ஐபோன் விற்பனை மையத்தில் இந்த சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தொடர்பாக இரு வாடிக்கையாளர்கள் மீதும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    முன்னதாக ஆமதாபாத் மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் மும்பைக்கு சென்று புதிய ஐபோனை வாங்க விரைந்தனர் என்று தகவல்கள் வெளியாகின. மேலும் புதிய ஐபோன், ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்ஸ் உள்ளிட்டவைகளை ஆப்பிள் ஸ்டோரில் (பி.கே.சி.) வாங்க வரிசையில் காத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • குடோனுக்குள் புகுந்து 105 ஐபோன்களை திருடியதாக கூறப்படுகிறது.
    • புனே மாவட்டத்தில் உள்ள லோனிகண்ட் காவல் நிலையத்தில் குர்ஷித் ஒப்படைப்பு.

    புனே மாவட்டத்தில் உள்ள குடோனின் ஷட்டரை உடைத்து ரூ. 65 லட்சம் மதிப்பிலான ஐபோன்களை திருடியதாக 32 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    குற்றம் சாட்டப்பட்ட நபர் ஜார்க்கண்டை சேர்ந்த தோபாஜுல் குர்ஷித் ஷேக் என்றும் மும்பை காவல்துறையின் குற்றப் பிரிவின் மிரட்டி பணம் பறித்தல் தடுப்புப் பிரிவினரால் மஸ்ஜித் பந்தர் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    தோபாஜூல் குர்ஷித் கடந்த ஜூலை 15ம் தேதி புனே அருகே வாகோலி பகுதியில் உள்ள குடோனுக்குள் புகுந்து 105 ஐபோன்களை திருடியதாக கூறப்படுகிறது.

    இதைதொடர்ந்து, குர்ஷித் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கை விசாரிக்கும் புனே மாவட்டத்தில் உள்ள லோனிகண்ட் காவல் நிலையத்தில் குர்ஷித் ஒப்படைக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இந்நிறுவனத்தை தொடங்கிய கவ், 2019ல் தலைமை பதவியை துறந்தார்
    • இதுவரை அரசியலில் அவரால் பெரும் வெற்றி பெற முடியவில்லை

    அமெரிக்காவின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள், அதன் பிரபலமான ஐபோனை தயாரிக்க உலகெங்கும் பல நிறுவனங்களை ஒப்பந்ததாரர்களாக நியமித்துள்ளது. இவற்றில் முன்னணியில் இருப்பது சீனாவிலும், தைவான் நாட்டிலும் உள்ள தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட ஹோன் ஹாய் பிரஸிஷன் நிறுவனம்.

    உலகெங்கிலும் இந்நிறுவனம், ஃபாக்ஸ்கான் எனும் பெயரில் தனது வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

    மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமான ஃபாக்ஸ்கான், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மட்டுமல்லாது, அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தின் கிண்டில் எனப்படும் மின்னணு புத்தகம், ஜப்பான் நாட்டின் நிண்டென்டோ வீடியோ கேம் உட்பட உலகின் பல நிறுவனங்களுக்கு மின்னணு பொருட்களை தயாரித்து வழங்கி வருகிறது.

    இந்நிறுவனத்தை டெர்ரி கவ் எனும் தைவான் நாட்டின் கோடீசுவரர் 1974ல் தொடங்கினார். தனது உழைப்பால், முன்னணி நிறுவனமாக இதனை முன்னேற்றிய கவ், 2019ல் தனது தலைமை பதவியை துறந்தார். இவருக்கு தற்போதைய வயது 72. அதற்கு பிறகு அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த போதிலும் அவரால் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை.

    இந்நிலையில், வரும் 2024 ஜனவரி மாதம் தைவான் நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் எந்க கட்சியையும் சாராத சுயேட்சை வேட்பாளராக போட்டியிட போவதாக கவ் அறிவித்துள்ளர்.

    தைவானின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் 2022 ஆம் ஆண்டு 6வது இடத்தை பிடித்த டெர்ரி கவ், பல தசாப்தங்களாக பொது வெளியில் தனது கருத்துக்களை அஞ்சாமல் கூறும் வழக்கம் கொண்டவராக கருதப்படுகிறார்.

    வெற்றி பெறுவதற்காக தனது தேர்தல் அறிக்கையில் அவர் கூறப்போகும் திட்டங்களை குறித்து யூகங்கள் இப்போதே சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

    • ஐபோன் 15 சீரிசில்- ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் இடம்பெற்று இருக்கலாம்.
    • இந்த தேதியிலேயே ஐபோன் 15 சிரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.

    ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பது அனைவரும் அறிந்ததே. எனினும், அந்நிறுவனம் சார்பில் இதுபற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள், அவற்றின் அம்சங்கள் மற்றும் ரெண்டர்கள் என ஏராளமான தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வந்துள்ளன.

    அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களின் வெளியீட்டு தேதி பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதன்படி அமெரிக்க மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை செப்டம்பர் 13-ம் தேதி விடுமுறை எடுக்க கேட்டுக் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதே நாளில் முக்கிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    கோப்புப் படம்

    கோப்புப் படம்

     

    அந்த தேதியில் எந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், ஆப்பிள் ஒவ்வொரு ஆண்டும் இதே காலக்கட்டத்தில் தனது புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறது. அந்த வகையில், இந்த தேதியிலேயே ஐபோன் 15 சிரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐபோன் 15 சீரிசில்- ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது. நான்கு மாடல்களும் அதன் முந்தைய வெர்ஷனில் இருந்ததை விட டிசைன் மாற்றங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    • குழந்தையின் தாயாரிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன.
    • போலீசார் விசாரிப்பதை அறிந்த வாலிபர் தலைமறைவாகிவிட்டார்.

    கொல்கத்தா :

    மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா அருகே உள்ள கங்காநகர் பனிஹத்தி பகுதியில் அந்த தம்பதி வசித்து வருகிறார்கள். அவர்கள் கடந்த சில வாரங்களாக தங்கள் குழந்தையின்றி நடமாடுவது குறித்தும், ஜாலியாக பல இடங்களுக்கு சுற்றித்திரிவது குறித்தும் அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

    இதையடுத்து போலீசார், இளம்பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரிப்பதை அறிந்த வாலிபர் தலைமறைவாகிவிட்டார். குழந்தையின் தாயாரிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன.

    ஒரு மாதத்திற்கு முன்பாக அந்த தம்பதி தங்களது 8 மாத ஆண் குழந்தையை ஒருவரிடம் விற்றுள்ளனர். அதில் கிடைத்த பணத்தில் ஐபோன்-14 என்ற நவீன மாதிரி போனை விலைக்கு வாங்கி உள்ளனர். மேலும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று உல்லாசமாக வாழ்ந்துள்ளனர்.

    அத்துடன் புதிதாக வாங்கிய செல்போனில் வீடியோ காட்சிகளை பதிவு செய்து ரீல்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளனர்.

    "இதுகுறித்து எங்களுக்கு கடந்த 24-ந் தேதிதான் புகார் வந்தது. குழந்தையை விற்பனை செய்த குற்றத்திற்காக அந்த பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். குழந்தையை எவ்வளவு பணத்திற்கு விற்றார்கள், யாரிடம் விற்றார்கள் என்பது பற்றிய விவரங்கள், அந்த பெண்ணின் கணவரை பிடித்தால்தான் தெரியவரும். இது தொடர்பாக அவளது கணவரையும், குழந்தையை வாங்கியவர்களையும் தேடி வருகிறோம்" என்று போலீசார் தெரிவித்தனர்.

    • இதன் அரிதான தன்மைதான் ஐபோன் விரும்பிகளிடையே அதற்கு ஒரு மதிப்பை உண்டாக்கியிருக்கிறது.
    • மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த போன் 2007ம் வருடத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக டைம் பத்திரிக்கையால் பாராட்டப்பட்டது.

    முதல் தலைமுறை போன் எனப்படும் 2007ம் வருட ஐபோன் ஒன்று சுமார் ரூ.1 கோடியே 56 லட்சத்திற்கு ($190373) ஏலம் போயிருக்கிறது.

    இந்த ஐபோனின் அசல் விலையான சுமார் ரூ.50,000ஐ விட தற்போது ஏலம் போன தொகை 300 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    "4 ஜிபி மெமரி கொண்ட இந்த ஐபோன், வாங்கும்போது இருந்த தொழிற்சாலை பேக்கிங்குடன், நல்ல தரமான நிலையில் இருக்கிறது. இது ஒரு கிடைத்தற்கரிய உயர் ரக சேகரிக்கும் பொருள்", என எல்சிஜி ஆக்சன்ஸ் எனும் இணைய ஏல நிறுவனம் தனது விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்தது.

    ஏலம் தொடங்கியபோது, சுமார் ரூ.80,000 ($10,000) என முதலில் கேட்கப்பட்டது. அதன்பின்னர் படிப்படியான ஏலத் தொகை உயர்ந்து உச்சத்தை எட்டியது. இந்த ஏலத்தில் 28 போட்டியாளர்கள் இருந்தனர்.

    "இதன் அரிதான தன்மைதான் ஐபோன் விரும்பிகளிடையே அதற்கு ஒரு மதிப்பை உண்டாக்கியிருக்கிறது. இதன் தொடு திரைக்கோ அல்லது பொத்தான்களுக்கோ எந்த குறைபாடும் இல்லாமல் இருந்தது மற்றொரு அரிதான விஷயம். இதன் உரிமையாளர் இந்த மாடல்கள் தயாரிக்கப்படும் போது ஆப்பிளின் தொழிற்சாலையில், அதன் பொறியியல் பிரிவில் வேலை செய்து வந்தார்" என ஏல நிறுவனம் தெரிவித்தது.

    16 வருடத்திற்கு முன்பு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான் பிரான்ஸிஸ்கோவில் ஜனவரி 2007ல் மேக்வேர்ல்ட் நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனத்தின் அப்போதைய தலைமை நிர்வாகி ஸ்டீவ் ஜாப்ஸ் இந்த ஐபோனை அறிமுகப்படுத்தும் போது, "இந்த ஐபோனை ஆப்பிள் இன்று மீண்டும் புதிதாக கண்டெடுத்திருக்கிறது" என கூறினார்.

    மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த போன் 2007ம் வருடத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக டைம் பத்திரிக்கையால் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் சில நாட்களுக்கு பிறகு குறைந்துபோன விற்பனையினாலும், 8 ஜிபி மெமரியுடன் அடுத்த வடிவம் வந்ததாலும் இதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டது.

    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்
    • விஸ்ட்ரான் தொழிற்சாலையின் மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது

    இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான டாடா குழுமம், அடுத்த மாதம் விஸ்ட்ரான் கார்பரேசனின், ஐபோன் தொழிற்சாலையை கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் செய்யவிருக்கிறது. ஒரு இந்திய நிறுவனம் ஐபோனை தயாரிக்கும் (assembly of iPhones) துறையில் நுழைவது இது முதல் முறையாகும். இதன்மூலம் ஐபோன் தயாரிக்கும் முதல் நிறுவனம் என்ற பெருமையை பெறப்போகிறது.

    தெற்கு கர்நாடகாவில் தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட விஸ்ட்ரான் கார்பரேசன் நிறுவனத்தின் தொழிற்சாலை ரூ.5 ஆயிரம் கோடிக்கும் ($600 மில்லியன்) அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆலையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் ஐபோன் 14 மாடலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதனை வாங்க டாடா குழுமம் ஒரு வருடமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தெரிகிறது.

    விஸ்ட்ரான், 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டில், சுமார் ரூ.15 ஆயிரம் கோடி ($1.8 பில்லியன்) மதிப்பிலான ஐபோன்களை தங்கள் தொழிற்சாலையிலிருந்து அனுப்ப உறுதியளித்துள்ளது. அடுத்த ஆண்டிற்குள் ஆலையின் பணியாளர்களை மும்மடங்காக்கவும் திட்டமிட்டுள்ளது. விஸ்ட்ரான் இந்தியாவை விட்டு வெளியேறும் போது, டாடா ஒப்பந்தத்தின்படி செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்த 2-வது காலாண்டில், விஸ்ட்ரான் இந்தியாவில் இருந்து சுமார் ரூ. 4 ஆயிரம் கோடி மதிப்பிலான ஐபோன்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் டாடா, விஸ்ட்ரான் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் செய்தித்தொடர்பாளர்கள் இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

    தமிழ்நாட்டில் டாடா குழுமம், நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்திருக்கும் அதன் தொழிற்சாலையில் ஐபோன் சேஸிஸ் எனப்படும் முக்கிய பாகத்தை உருவாக்கி வருகிறது.

    கோவிட் முடக்கம் மற்றும் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்கள் ஆகிய காரணங்களால் சீனாவை சார்ந்திருக்கும் நிலையிலிருந்து விலகும் முயற்சிகளை ஆப்பிள் நிறுவனம் முடுக்கிவிட்டுள்ளது.

    உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை விரிவுபடுத்தும் வகையில் லாபகரமான நிதிச்சலுகைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி அரசு திட்டங்களை வகுத்ததில் இருந்து உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா முன்னேற்றம் கண்டு வருகிறது.

    டாடா குழுமத்தின் இந்த முயற்சி உறுதியானால் உலகின் தொழிற்சாலை என்ற சீனாவின் தற்போதைய நிலையை மாற்ற மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க ஊக்கம் கிடைக்கும்.

    • ஐபோனின் பாதுகாப்பு கேஸ் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
    • ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் மியூட் ஸ்விட்ச் பற்றிய புது தகவல் வெளியானது.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபோன் 15 சீரிஸ் விவரங்கள் ஏற்கனவே பலமுறை வெளியாகி விட்டது. தற்போது ஐபோன் சீரிஸ் வெளியீடு நெருங்கி வருவதை அடுத்து, மேலும் அதிக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் 2023 ஐபோன் மாடல்கள் டிசைன் மற்றும் ஹார்டுவேரில் அதிக மாற்றங்களை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் பழைய மியூட் ஸ்விட்ச் நீக்கப்பட்டு, புதிய பட்டன் வழங்கப்பட இருக்கிறது. இதுபோன்ற தகவல் வெளியாவது இதுவே முதல் முறை ஆகும்.

     

    ஐபோனின் பாதுகாப்பு கேஸ் புகைப்படங்களின் மூலம் இது தெரியவந்துள்ளது. டிப்ஸ்டர் மஜின் பு வெளியிட்டு இருக்கும் ஐபோன் கேஸ் புகைப்படங்களில், இதன் டிசைன் எப்படி இருக்கும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் மியூட் ஸ்விட்ச் பட்டன் பொருத்தப்படும் இடம் மாற்றப்பட இருக்கிறது.

    இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் ஆப்பிள் நிறுவனம் 16 ஆண்டுகளுக்கு பிறகு இத்தகைய மாற்றத்தை மேற்கொள்ளும். ஐபோன் கேஸ் ரென்டர்களில் புதிய ஐபோன் சற்று அகலமான, வட்ட வடிவம் கொண்ட பட்டன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் மியூட் ஸ்விட்ச்-க்கு மாற்றாக பிரத்யேக கஸ்டம் பட்டன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    ஏற்கனவே வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஐபோன் மாடலில் கேமராவை இயக்கவும், போனினை ஸ்விட்ச் ஆஃப் செய்ய புதிய பட்டன் வழங்கப்படுகிறது. மேலும் புதிய ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் கேமரா பம்ப் சற்றே பெரியதாக இருக்கும் என்றும், இதில் மேம்பட்ட கேமரா சென்சர்கள் வழங்கப்படுகின்றன. 

    • ஆப்பிள் மொபைல் சாதனங்களில் அமெரிக்க சிறப்பு சேவைகளின் உளவு நடவடிக்கை அம்பலம்.
    • ஆப்பிள் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைப்பு இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு.

    ரஷிய ரகசங்களை அறிந்து கொள்ளும் அமெரிக்க நாட்டின் சதித்திட்டத்தை ரஷிய பாதுகாப்பு பிரிவு கண்டுபிடித்துள்ளது. அதன்படி ரஷியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஐபோன்களை பிரத்யேக உளவு மென்பொருள் மூலம் அமெரிக்கா உளவு பார்த்து வந்துள்ளது.

    சுமார் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் சாதனங்கள் இந்த உளவு நடவடிக்கையில் பாதிக்கப்பட்டு இருப்பதாக மாஸ்கோவை சேர்ந்த கேஸ்பர்ஸ்கை ஆய்வகம் தெரிவித்து இருக்கிறது. மேலும் நாடு முழுக்க சுமார் ஆயிரத்திற்கும் அதிக ஐபோன்களில் இந்த பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் ரஷியாவை சேர்ந்த வெளியுறவுத் துறை அதிகாரிகளின் சாதனங்களும் அடங்கும்.

    "ஆப்பிள் மொபைல் சாதனங்களில் அமெரிக்க சிறப்பு சேவைகளின் உளவு நடவடிக்கையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம்," என்று பாதுகாப்பு பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது. இந்த திட்டத்திற்காக ஆப்பிள் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைப்பு இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதற்கான தெரிகின்றன.

    ரஷிய பாதுகாப்பு துறை தெரிவித்து இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. "ஆப்பிள் சாதனங்களில் பேக்டோர் ஏற்படுத்தும் நோக்கில் இதுவரை எந்த அரசுடனும் நாங்கள் பணியாற்றியது இல்லை. எதிர்காலத்திலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம்," என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.

    • புதிய அம்சம் கொண்டு பயனர்கள் ஒற்றை அக்கவுண்டினை அதிக ஐபோன்களில் லாக் இன் செய்யலாம்.
    • இந்த அம்சம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது.

    வாட்ஸ்அப் செயலியில் கம்பேனியன் மோடு (companion mode) பெயரில் புதிய அம்சம் வழங்கப்படுகிறது. புதிய வாட்ஸ்அப் ஐஒஎஸ் 23.10.76 வெர்ஷன் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வெளியிடப்பட்டு வருகிறது. இதனை பயனர்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அப்டேட் செய்து கொள்ளலாம். இந்த அம்சம் கொண்டு பயனர்கள் அதிகபட்சம் நான்கு ஐபோன்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியும்.

    புதிய கம்பேனியன் மோடு அம்சம் கொண்டு பயனர்கள் ஒற்றை அக்கவுண்டினை அதிக ஐபோன்களில் லாக் இன் செய்து கொள்ளலாம். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. இந்த அம்சம் கொண்டு வாட்ஸ்அப் செயலி இரண்டாவது சாதனத்திலும் இயங்க செய்ய, வலதுபுறம் இருக்கும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும்.

    அடுத்து லின்க் டிவைஸ் (link device) ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இனி கியூஆர் கோடு திரையில் தோன்றும். வாட்ஸ்அப் பயன்படுத்தும் பிரைமரி சாதனத்தில், செட்டிங்ஸ் மற்றும் லின்க்டு டிவைசஸ் (linked devices) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதற்காக ஐபோனில் கேமராவை இயக்குவதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.

    இவ்வாறு செய்த பின் இரண்டு சாதனங்களிலும் வாட்ஸ்அப் சின்க் செய்யப்பட்டு விடும். பிரைமரி சாதனத்தில் இண்டர்நெட் இணைப்பு இல்லாத சமயத்திலும், இரண்டாவது சாதனத்தில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியும். இரண்டாவது ஐபோனில் வாட்ஸ்அப் வீடியோ / ஆடியோ அழைப்புகளை மேற்கொண்டு மற்ற அம்சங்களை இயக்கலாம்.

    சில சாட்கள் முழுமையாக லோடு ஆகாமலோ அல்லது, கால் லாக்ஸ் சரியாக தெரியாமல் போகும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். நான்கு சாதனங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் போதிலும், அனைத்தும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் முறையில் பாதுகாக்கப்படும் என்று வாட்ஸ்அப்-இன் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்து உள்ளது.

    • ஐபோனின் SE, ஐபோன் 11, ஐபோன் 12, ஐபோன் 13, ஐபோன் மினி மற்றும் ஐபோன் SE 3 ஆகிய மாடல்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளன.
    • ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு அசத்தல் டிஸ்கவுண்ட்டும் வழங்கப்படுகின்றன.

    பிளிப்கார்ட்டில் எண்ட் ஆஃப் சீசன் சேல் தற்போது போடப்பட்டுள்ளது. ஜூன் 17-ந் தேதி வரை உள்ள இந்த சேலில் ஏராளமான ஆஃபர்களும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி ஐபோனின் SE, ஐபோன் 11, ஐபோன் 12, ஐபோன் 13, ஐபோன் மினி மற்றும் ஐபோன் SE 3 ஆகிய மாடல்களின் விலைகளும் அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளன.

    ஐபோன் SE என்பது ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் குறைவான விலை கொண்ட போன் ஆகும். இதன் 64 ஜிபி வெர்ஷன் ரூ.29,999-க்கும், 128 ஜிபி வெர்ஷன் ரூ.34,900-க்கும், 256 ஜிபி வெர்ஷன் ரூ.44,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போதைய ஆஃபர் படி ரூ.999 மதிப்புள்ள பைஜுஸ் 3 லைவ் வகுப்புகள், 3 மாதத்திற்கான கானா பிளஸ் சப்ஸ்கிரிப்ஷன், ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர ஆக்சிஸ் பேங்க் கார்டு வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக ரூ.12,500 எக்ஸ்சேன்ஞ் டிஸ்கவுண்ட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


    அதேபோல் ஐபோன் 11 மாடலின் 64 ஜிபி வெர்ஷன் 49,999-ல் இருந்து 41,999 ஆகவும், 128 ஜிபி வெர்ஷன் 54,900ல் இருந்து 46,999 ஆகவும் விலை குறைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களது பழைய போனுக்கு ரூ.12,500 எக்ஸ்சேஞ் ஆஃபர் பெறுவதோடு கூடுதலாக ரூ.2,250 இன்ஸ்டண்ட் டிஸ்கவுண்டும் பெற முடியும்.

    இதுதவிர ஐபோன் 12 மாடல்கள் ரூ.12 ஆயிரம் வரையிலும், ஐபோன் 13 மாடல்களுக்கு ரூ.10 ஆயிரம் வரையிலும், ஐபோன் 13 மினி மாடலுக்கு ரூ. 6 ஆயிரம் வரையிலும், ஐபோன் SE 3 மாடலுக்கு ரூ. 2 ஆயிரம் வரையிலும் விலைகுறைப்பு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு அசத்தல் டிஸ்கவுண்ட்டும் வழங்கப்படுகின்றன.

    ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்கள் உற்பத்தியை மெல்ல சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
     

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றுவது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்பிள் நிறுவன சாதனங்கள் உற்பத்திக்காக சீனாவை மட்டும் சார்ந்து இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ஆப்பில் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை மாற்றும் முடிவு குறித்த புது தகவலை பிரபல ஆப்பிள் வல்லுனர் மிங் சி கியோ தெரிவித்து உள்ளார்.

    சீனாவில் இருந்து ஆப்பிள் சாதனங்கள் உற்பத்தி இந்தியாவுக்கு மாற்றும் முடிவு சிறப்பான ஒன்று தான், ஆனால் இவ்வாறு செய்யும் போது சீனாவை சேர்ந்த ஆப்பிள் உற்பத்தியாளர்கள் இந்தியாவில் உற்பத்தியை மாற்றும் போது வீண் பிரச்சினைகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனா இடையே நிலவும் அரசியல் பிரச்சினை காரணமாக ஆப்பிள் தனது சாதனங்கள் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.

     ஐபோன்

    இதோடு சீனாவுக்கு அடுத்தப்படியாக உற்பத்திக்கான சிறந்த சூழல் கொண்ட நாடுகளில் வியட்நாம் முதன்மையானது என அவர் தெரிவித்து இருக்கிறார். சீனா மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் அரசியல் மோதல்கள் காரணமாகவும் ஆப்பிள் தனது உறிபத்தியை சீனாவில் இருந்து மாற்ற முடிவு எடுத்துள்ளது. 

    இதுகுறித்து வெளியான மற்ற தகவல்களின் படி ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலுக்கான உற்பத்தி பணிகள் வியட்நாமில் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் துவங்கும் என கூறப்படுகிறது. மேலும் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலில் லைட்னிங் போர்ட் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். முந்தைய தகவல்களில் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 யு.எஸ்.பி. டைப் சி கனெக்டர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. 
    ×