search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாட்ஸ்அப்"

    • 140-க்கும் அதிக வங்கிகளை பயன்படுத்த முடியும்.
    • யு.பி.ஐ. பேமண்ட் கடந்த 2020 ஆண்டு அறிமுகம்.

    வாட்ஸ்அப் நிறுவனம் சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட்களை மேற்கொள்ளும் வசதியை இந்திய பயனர்களுக்கு வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக வெளியான ஸ்கிரீன்ஷாட்களில் புது வசதி யு.பி.ஐ. செட்டிங்ஸ் (UPI Settings) பகுதியில் இன்டர்நேஷனல் பேமண்ட்ஸ் (International Payments) ஆப்ஷனில் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.

    இதனை தேர்வு செய்யும் போது, சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட் ஆப்ஷனை ஆக்டிவேட் செய்து, எவ்வளவு காலம் இது செயல்படுத்த வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். யு.பி.ஐ. பேமண்ட் வசதியை வழங்கும் போன்பே (PhonePe) மற்றும் ஜிபே (GPay) உள்ளிட்டவைகளில் இந்த வசதி ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    அந்த வரிசையில் தற்போது இந்த அம்சம் வாட்ஸ்அப்-இல் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் செயலியில் யு.பி.ஐ. பேமண்ட் சேவை கடந்த 2020 நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 140-க்கும் அதிக வங்கிகளை பயன்படுத்த முடியும்.

    சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட் மேற்கொள்ளும் வசதி தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போதைக்கு இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான இதர விவரங்கள் மற்றும் வெளியீட்டு அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    • பயனர்கள் எளிதில் மிகமுக்கிய தகவல்களை இயக்கிட முடியும்.
    • சமீபத்தில் பின் செய்யப்படும் தகவல் சாட்களில் முதலில் தெரியும்.

    வாட்ஸ்அப் செயலியில் ஒரே சமயம் மூன்று குறுந்தகவல்களை பின் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் உரையாடல், காண்டாக்ட் அல்லது க்ரூப்-இல் ஒற்றை மெசேஜை பின் செய்வதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது.

    தற்போது மார்க் ஜூக்கர்பர்க் தனது அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனலில் வெளியிட்டுள்ள தகவலின் படி பயனர்கள் சாட் ஒன்றில் அதிக குறுந்தகவல்களை பின் செய்து கொள்ளலாம். இதன் மூலம் பயனர்கள் எளிதில் மிகமுக்கிய தகவல்களை இயக்கிட முடியும்.

     


    பயனர்கள் டெக்ஸ்ட் (Text), புகைப்படம் (Image) அல்லது கருத்து கணிப்பு (Polls) உள்ளிட்டவைகளை பின் செய்ய முடியும். இப்படி பின் செய்யப்படும் மெசேஜ்கள் 24 மணி நேரம், 7 நாட்கள் அல்லது 30 நாட்கள் வரை சாட்களின் மேல் பேனர் போன்று காட்சியளிக்கும். அதிக குறுந்தகவல்களை பின் செய்யும் போது, சமீபத்தில் பின் செய்யப்படும் தகவல் சாட்களில் முதலில் தெரியும்.

    குறுந்தகவல்களை பின் செய்ய, குறிப்பிட்ட மெசேஜ்-ஐ அழுத்தி பிடித்து "பின்" (Pin) ஆப்ஷனை க்ளிக் செய்து எவ்வளவு நேரம் பின் செய்யப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

    ஆண்ட்ராய்டில் இந்த அம்சத்தை இயக்க மெசேஜ்-ஐ அழுத்தி பிடித்து மோர் ஆப்ஷன்ஸ் (More Options) - பின் (Pin) - எவ்வளவு நேரம் காண்பிக்கப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்து பின் (Pin) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

    ஐபோனில் இந்த அம்சத்தை இயக்க மெசேஜ்-ஐ அழுத்தி பிடித்து மோர் ஆப்ஷன்ஸ் (More Options) - பின் (Pin) - எவ்வளவு நேரம் காண்பிக்கப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

    வெப் மற்றும் டெஸ்க்டாப்-இல் இந்த அம்சத்தை இயக்க மெசேஜ்-ஐ க்ளிக் செய்து மெனு ஆப்ஷனில் பின் மெசேஜ் (Pin Message) - எவ்வளவு நேரம் காண்பிக்கப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்து பிறகு பின் (Pin) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

    க்ரூப் சாட் பின் செய்யும் முறை:

    க்ரூப் சாட்களில் மெசேஜ்களை பின் செய்ய க்ரூப் அட்மின்கள் அனுமதிக்க முடியும். மெசேஜ் பின் செய்யப்படுவதை சிஸ்டம் மெசேஜ் க்ரூப் பயனர்களுக்கு தெரிவிக்கும். எனினும், மெசேஜ் பின் செய்யப்பட்ட பிறகு க்ரூப்-இல் சேர்க்கப்படுவோருக்கு இது தெரியாது.

    • வாட்ஸ்அப் மூலம் "விக்சித் பாரத்" தகவல் அனுப்பும் மத்திய அரசு.
    • தேர்தல் நடத்தை விதியை மீறுவதாக தேர்தல் ஆணையத்திடம் புகார்.

    இந்தியாவின் 100-வது சுதந்தர தினவிழா கொண்டாடும் 2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக (விக்சித் பாரத்) உருவாக வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்தை பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். இதை நோக்கி பயணிப்பதாகவும், இதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதாகவும் பிரதமர் மோடி அறிவித்தார்.

    மத்திய அரசு "விக்சித் பாரத்" என்ற அத்திட்டம் குறித்து விளம்பரம் செய்து வருகிறது. வாட்ஸ்அப் மூலம் விக்சித் பாரத் திட்டம் பெயரில் தகவல் அனுப்புகிறது.

    தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த விளம்பரம் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

    அதன்பேரின் வாட்ஸ்அப் மூலம் அனுப்பும் "விக்சித் பாரத்" தொடர்பான தகவலை நிறுத்துமாறு மத்திய அரசை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

    • ஆப்பிள் மீமோஜி மற்றும் ஸ்னாப்சாட்-இன் பிட்மோஜி போன்றதாகும்.
    • ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் டெஸ்டிங் செய்யப்படுகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் தங்களை நகைப்பூட்டும் வகையில் வெளிப்படுத்திக் கொள்ள செய்யும் விதமாக கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அம்சம் தான் அவதார்ஸ். இதை கொண்டு பயனர்கள் தங்களை வெளிப்படுத்தும் உருவங்களை வாட்ஸ்அப் செயலியிலேயே உருவாக்கிக் கொள்ளலாம். இந்த வசதி ஆப்பிள் மீமோஜி மற்றும் ஸ்னாப்சாட்-இன் பிட்மோஜி போன்றதாகும்.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் உள்ள அவதார்ஸ்-ஐ யார் யார் பார்க்க வேண்டும் என்பதை தேர்வு செய்யும் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா 2.24.6.8 வெர்ஷனில் டெஸ்டிங் செய்யப்படுகிறது.

     


    இந்த அம்சத்தின் படி பயனர்கள் தங்களின் அவதார்ஸ்-ஐ யார் யார் பார்க்க வேண்டும் என்பதை- காண்டாக்ட் (My Contacts), தேர்ந்தெடுக்கப்பட்ட காண்டாக்ட்கள் (Selected Contacts) அல்லது யாருக்கும் வேண்டாம் (Nobody) என மூன்று ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

    நீங்களும், நீங்கள் தேர்வு செய்யும் காண்டாக்ட்-ம் இந்த அம்சத்தை ஒருவருக்கொருவர் தேர்வு செய்யும் பட்சத்தில் இருவரின் ஸ்டிக்கர்களும் அவரவர் சாட்களில் காணப்படும். புதிய அம்சம் மூலம் பயனர்களின் தனியுரிமை பாதுகாக்கப்படும்.

    இது ஒருவரின் ஸ்டிக்கர்களை அவர்களுக்கு அறிமுகமில்லாதவர்கள் பார்ப்பதையும், பயன்படுத்துவதையும் தவிர்க்க செய்கிறது. இந்த அம்சம் தற்போது டெஸ்டிங்கில் உள்ள நிலையில், அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனில் எப்போது வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    • அம்பிகாவுக்கு தனது கணவரின் நண்பருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது.
    • மகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி முடிந்தவுடன் பிரிந்து விடலாம் என்று கூறினேன்.

    ராஜ்கோட்:

    குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் குருபா ஜிரோலி. தொழில் அதிபர். இவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு 17 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர்.

    இவர்கள் அம்பிகா டவுன்ஷிப் பகுதியில் உள்ள சாந்திலன் நிவாஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் அம்பிகாவுக்கு தனது கணவரின் நண்பருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையறிந்த குருபா ஜிரோலி, மனைவியை கண்டித்தார். கள்ளக்காதலை கைவிடும்படி கூறினார். ஆனால் அம்பிகா, கள்ளக்காதலனுடன் செல்ல திட்டமிட்டார்.

    இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த குருபா ஜிரோலி, இரும்பு பொருளால் மனைவியின் தலையில் சரமாரியாக தாக்கி கொலை செய்தார்.

    பின்னர் மனைவி உடலை வீடியோ எடுத்து அதை குடியிருப்பில் வசிப்பவர்களின் வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்தார். அந்த வீடியோவில் குருபா ஜிரோலி கூறும்போது, மனைவியிடம் கள்ளக்காதலை கைவிட வலியுறுத்தினேன். மகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி முடிந்தவுடன் பிரிந்து விடலாம் என்று கூறினேன்.

    ஆனால் அதற்கு அவர் மறுத்து, காதலனுடன் ஓடிபோக திட்டமிட்டார். இதனால் அவரை கொலை செய்தேன். அவரை கொன்றதற்காக நான் வருத்தப்படவில்லை. அவரால் நான் கொடுமைகளை அனுபவித்தேன் என்று கூறினார். இதை பார்த்த குடியிருப்பு வாசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் குருபா ஜிரோலி போலீசில் சரண் அடைந்தார்.

    • பாதுகாக்கப்பட்ட தேர்வு வினாத்தாள் வாட்ஸ்-அப்பில் பரவியது எப்படி? என்பது தெரியவில்லை.
    • தேர்வு நப்பதற்கு முன்பாகவே வினாத்தாள் வெளியாகியது உறுதி செய்யப்பட்ட போதிலும், அது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வுக்கு தயாராகிவரும் வகையில், அவர்களுக்கு மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆங்கில பாடத்துக்கான தேர்வுத்தாள், தேர்வு நடப்பதற்கு முன்னதாகவே மாணவ-மாணவிகளின் வாட்ஸ்-அப்பில் பரவியதாக தெரிகிறது. பொதுவாக தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் ஒருவாரத்துக்கு முன்பாகவே பள்ளி அலுவலகத்தின் லாக்கர்களில் வைக்கப்படும்.

    அவை தேர்வு நடப்பதற்கு சற்று நேரத்துக்கு முன்பு தான் அங்கிருந்து எடுக்கப்படும். அப்படி பாதுகாக்கப்பட்ட தேர்வு வினாத்தாள் வாட்ஸ்-அப்பில் பரவியது எப்படி? என்பது தெரியவில்லை. தேர்வு நப்பதற்கு முன்பாகவே வினாத்தாள் வெளியாகியது உறுதி செய்யப்பட்ட போதிலும், அது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை.

    இதனால் அது தொடர்பாக விசாரணை எதுவும் நடக்கவில்லை என தெரிகிறது.

    • அதிக கட்டுப்பாடுகளை வழங்கும் வகையில் புதிய அப்டேட் உருவாக்கப்பட்டுள்ளது.
    • நடவடிக்கை எடுக்க செய்யும் விதமாக புதிய அம்சம் வழங்கப்படுகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் ஸ்பேம்-ஐ (Spam) லாக் ஸ்கிரீனில் இருந்தே பிளாக் செய்யும் புதிய வசதி வழங்கப்பட இருக்கிறது. ஸ்பேம் எனப்படும் தேவையற்ற குறுந்தகவல்கள் தொடர்ச்சியாக அதிகளவில் அனுப்பப்பட்டு வரும் நிலையில், இதனை எதிர்கொள்ளும் வகையிலும் பயனர்களுக்கு மெசேஜிங் அனுபவத்தில் அதிக கட்டுப்பாடுகளை வழங்கும் வகையிலும் இந்த அப்டேட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    பயனர்களை ஏமாற்றும் தகவல்கள் அடங்கிய ஸ்பேம் மெசேஜ்கள் வாட்ஸ்அப்-இல் அதிகளவில் அனுப்பப்பட்டு வருவது பயனர்களிடையே கவலையை ஏற்படுத்தி வந்தது. அந்த வகையில், பயனர்கள் இவற்றுக்கு லாக் ஸ்கிரீனில் இருந்தபடியே நடவடிக்கை எடுக்க செய்யும் விதமாக புதிய அம்சம் வழங்கப்படுகிறது.

     


    இதன் மூலம் வாட்ஸ்அப் பயனர் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை அதிகப்படுத்தும் மற்றும்ஓர் முயற்சியாக புதிய அம்சம் அமைந்துள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்யாமல், நேரடியாக லாக் ஸ்கிரீனில் இருந்தபடி ஸ்பேம் மெசேஜ்களை பிளாக் செய்ய முடியும். இதற்கு ஸ்பேம் நோட்டிஃபிகேஷனை அழுத்திப்பிடித்து பிறகு திரையில் தெரியும் பல்வேறு ஆப்ஷன்களில் பிளாக் செய்யக் கோரும் ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.

    ஸ்பேம் மெசேஜ்களை பிளாக் செய்வதோடு அவற்றை ரிபோர்ட் செய்யும் ஆப்ஷனும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. புதிய வசதி தவிர பயனர்கள் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- பிரைவசி -- பிளாக்டு கான்டாக்ட்ஸ் -- ஆட் போன்ற ஆப்ஷன்களுக்கு சென்று பிளாக் செய்ய வேண்டிய கான்டாக்ட்-ஐ சேர்க்க முடியும்.

    • முன்னதாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்தது.
    • ஐ.ஒ.எஸ். வெர்ஷனில் இந்த வசதி டெஸ்டிங் செய்யப்படுகிறது.

    வாட்ஸ்அப் நிறுவனம் ஐ.ஒ.எஸ். வெர்ஷனில் பாஸ்கீ வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பாஸ்கீ அம்சம் பயனர்கள் வாட்ஸ்அப்-ஐ பாஸ்வேர்டு இன்றி பயோமெட்ரிக் மூலம் லாக்-இன் செய்யும் வசதியை வழங்குகிறது. முன்னதாக இதே போன்ற வசதி ஆண்ட்ராய்டு வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    அந்த வரிசையில், தற்போது ஐ.ஒ.எஸ். வெர்ஷனில் பாஸ்கீ வசதி வழங்கப்படுகிறது. தற்போது டெஸ்டிங் செய்யப்படும் நிலையில், விரைவில் இந்த வசதி வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். வெர்ஷனிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா 2.24.2.73 வெர்ஷனில் பாஸ்கீ அம்சத்திற்கான வசதி டெஸ்டிங் செய்யப்படுகிறது.

     


    பாஸ்கீ அம்சம் ஹார்டுவேர் சார்ந்து இயங்கும் அம்சம் ஆகும். இது ஃபிடோ அலையன்ஸ் மூலம் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் உடனான கூட்டணி மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் டச் ஐ.டி. அல்லது ஃபேஸ் ஐ.டி. மூலம் சைன் இன் செய்ய முடியும்.

    ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப் பாஸ்கீ விவரங்கள் கூகுளின் பாஸ்வேர்டு மேனேஜரில் சேமிக்கப்படுகிறது. தற்போது டெஸ்டிங் செய்யப்படும் நிலையில், வாட்ஸ்அப் பாஸ்கீ அம்சம் முதலில் தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு மட்டும் பீட்டா வடிவில் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் விரைவில் மற்ற பயனர்களுக்கும் செயலியின் ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும்.

    • வாட்ஸ்அப்-இல் ஒருங்கிணைந்து வேலை செய்ய அனுமதிக்கும்.
    • வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் அம்சம் இடம்பெற்றுள்ளது.

    வாட்ஸ்அப் செயலியில் மூன்றாம் தரப்பு சாட்களுக்கான வசதி விரைவில் வழங்கப்படும் என தெரிகிறது. ஐரோப்பிய யூனியனின் டிஜிட்டல் மார்கெட்ஸ் விதியை ஏற்கும் வகையில் இந்த வசதி வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் மூன்றாம் தரப்பு செயலிகள் வாட்ஸ்அப்-இல் ஒருங்கிணைந்து வேலை செய்ய அனுமதிக்கும்.

    புதிய வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா வெர்ஷனில் இதற்கான வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இதே அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா 24.2.10.72 வெர்ஷனில் இந்த அம்சம் இடம்பெற்று இருக்கிறது. இதனை wabetainfo கண்டறிந்து தெரிவித்து இருக்கிறது.

     


    இது தொடர்பாக வெளியிடப்பட்டு இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களில் "Third-Party Chats" (மூன்றாம் தரப்பு சாட்கள்) பெயரில் தனி ஃபோல்டர் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஃபோல்டரில் மற்ற செயலிகளின் சாட்களை பார்க்க முடியும் என்று தெரிகிறது. இந்த அம்சம் எவ்வாறு இயங்கும் என்பது பற்றி அதிக தகவல்கள் இல்லை. மேலும், இதில் எந்தெந்த செயலிகள் இயங்கும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

    இந்த அம்சம் வழங்கப்பட்டதும், வாட்ஸ்அப் பயனர்கள் மற்ற குறுந்தகவல் செயலிகளை பயன்படுத்துவோரிடமும் சாட் செய்ய அனுமதிக்கும். வாட்ஸ்அப்-இல் மற்ற கான்டாக்ட்களுக்கு சாட் செய்வதை போன்றே, இதர செயலிகளை பயன்படுத்துவோரிடமும் சாட் செய்ய முடியும்.

    புதிய அம்சம் பற்றி அதிக தகவல்கள் இடம்பெறவில்லை. எனினும், வாட்ஸ்அப் இதனை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். வெர்ஷன்களில் வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவது மட்டும் தற்போதைக்கு உறுதியாகி இருக்கிறது.

    • மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார்.
    • சாட் மற்றும் க்ரூப்களில் இதற்கான வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் செயலியில் உள்ள பிராட்காஸ்டிங் அம்சம் சேனல்ஸ்-இல் புதிய வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. பிரபலங்கள் மற்றும் நிறுவனங்கள் அதன் ஃபாளோயர்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்யும் நோக்கில் வழங்கப்பட்டுள்ள அம்சம் தான் வாட்ஸ்அப் சேனல். இதில் தற்போது கூடுதலாக புதிய வசதிகள் வழங்குவதை மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார்.

    அதன்படி வாட்ஸ்அப் சேனலலில் வாக்களிக்கும் வசதி வழங்கப்படுகிறது. அதன்படி வாட்ஸ்அப் சேனல் வைத்திருப்பவர்கள் தங்களின் உறுப்பினர்கள் இடையே கருத்து கேட்க வாக்கெடுப்பு நடத்த முடியும். ஏற்கனவே வாட்ஸ்அப் சாட் மற்றும் க்ரூப்களில் இதற்கான வசதி வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

     


    இத்துடன் வாட்ஸ்அப் சேனல் அப்டேட்களை ஸ்டேட்டஸ் ஆக வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. ஒரே சேனலில் பலரை அட்மின்களாக வைத்துக் கொள்ளும் வசதியும் புதிய அப்டேட் மூலம் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் சேனல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே, அதில் பல்வேறு புதிய வசதிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    • வாட்ஸ்அப் செயலியில் வியூ ஒன்ஸ் அம்சம் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படுகிறது.
    • வாய்ஸ் மெசேஜ்களும் எண்ட்-டு-எண்ட் முறையில் என்க்ரிப்ட் செய்யப்பட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்களை ஒரு முறை மட்டுமே பார்க்க செய்யும் "வியூ ஒன்ஸ்" எனும் அம்சம் கடந்த 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த அம்சம் செயலியின் வாய்ஸ் மெசேஜஸ் ஆப்ஷனிலும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த வசதியை செயல்படுத்தினால், பயனர்கள் வாய்ஸ் மெசேஜ்களை ஒருமுறை மட்டுமே கேட்க முடியும். அதன் பிறகு, வாய்ஸ் மெசேஜ் சாட்-இல் இருந்து காணாமல் போகிடும்.

     


    வியூ ஒன்ஸ் வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது எப்படி?

    சாட் அல்லது க்ரூப் சாட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

    மைக்ரோபோன் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்

    இனி மேல்புறமாக ஸ்வைப் செய்து ரெக்கார்டிங்-ஐ க்ளிக் செய்ய வேண்டும்

    ரெக்கார்டு ஆப்ஷனை அழுத்திப்பிடித்து ரெக்கார்டு செய்ய வேண்டும்

    இனி 1 ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்

    1 ஐகான் பச்சை நிறத்திற்கு மாறியதும் அது வியூ ஒன்ஸ் மோடில் இருப்பதாக அர்த்தம்

    இனி குறுந்தகவலை அனுப்ப செய்யும் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்

    வியூ ஒன்ஸ் ஆப்ஷனில் அனுப்பப்பட்ட குறுந்தகவல், மீடியா அல்லது வாய்ஸ் மெசேஜ்களில் நீங்கள் அவற்றை பார்த்துவிட்டதை குறிக்கும் ரிசீப்ட் காணப்படும். இவ்வாறு காண்பிக்கப்பட்டதும், அந்த தகவல்களை மீண்டும் பார்க்க முடியாது.

    இந்த மெசேஜ்கள் எதுவும் சேமிக்கப்படாது. வாட்ஸ்அப் செயலியில் மற்ற மெசேஜ்களை போன்றே வியூ ஒன்ஸ் வாய்ஸ் மெசேஜ்களும் எண்ட்-டு-எண்ட் முறையில் என்க்ரிப்ட் செய்யப்படும் என வாட்ஸ்அப் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் செயலியில் வியூ ஒன்ஸ் வாய்ஸ் மெசேஜ் அம்சம் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் நாட்களில் இந்த அம்சம் அனைவருக்குமான ஸ்டேபில் அப்டேட்டில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். 

    • சாட்களை சீக்ரெட் கோட் மூலம் மறைத்து கொள்ளலாம்.
    • அஞ்சி நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.

    வாட்ஸ்அப் செயலியில் உள்ள லாக்டு சாட் (Locked Chat) அம்சத்திற்கு புதிதாக சீக்ரெட் கோட் (Secret Code) எனும் வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக அறிவிக்கப்பட்ட சாட் லாக் அம்சம் தற்போது நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தங்களின் சாட்களை சீக்ரெட் கோட் மூலம் மறைத்து வைத்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு செய்யும் போது, நீங்கள் உங்களது போனினை மற்றவர்களிடம் கொடுக்கும் போது, அவர்கள் உங்களது மிகமுக்கிய உரையாடல்களை பார்த்து விடுவார்களா என்ன அஞ்சி நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் நீங்கள் உங்களது சாட்களுக்கென தனி பாஸ்வேர்டு உருவாக்கிக் கொள்ளலாம். பாஸ்வேர்டுக்கு மாற்றாக கைரேகை அல்லது ஃபேஸ் ஐடி உள்ளிட்டவைகளையும் பயன்படுத்தலாம்.

     

    அந்த வரிசையில், மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் வாட்ஸ்அப் செயலியில் புதிய சாட் லாக் அம்சத்தில் சீக்ரெட் கோட் வசதி வழங்கப்படுவதாக அறிவித்து இருக்கிறார். இதை கொண்டு சாட்களை பிரத்யேக பாஸ்வேர்டு மூலம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். சீக்ரெட் கோட் மூலம் மறைத்து வைக்கப்படும் சாட்கள் அனைத்தும் மெயின் சாட் லிஸ்ட்-இல் காண்பிக்கப்படாது.

    மேலும் செயலியில் பயனர் செட் செய்த சீக்ரெட் கோட்-ஐ பதிவிட்டால் மட்டுமே இயக்க முடியும். இந்த அம்சத்தினை இயக்க செயலியின் சாட் -- லாக் செட்டிங்ஸ் -- ஹைடு லாக்டு சாட்ஸ் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இனி சீக்ரெட் கோட்-ஐ செட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பிறகு, நீங்கள் தேர்வு செய்த சாட் மெயின் சாட் லிஸ்ட்-இல் இடம்பெறாது.

     

    தற்போது லாக்டு சாட் அம்சத்தை இயக்குவதற்கான ஷாட்கட்- சாட் ஸ்கிரீனில் இருந்து கீழ்புறம் நோக்கி ஸ்வைப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பிறகு, கைரேகை சென்சார் அல்லது ஃபேஸ் ஐடி மூலம் சாட்களை இயக்கலாம். சாட்களில் சீக்ரெட் கோட் செட் செய்த பிறகு, செயலியில் உள்ள லாக்டு சாட்ஸ்-ஐ இயக்க வாட்ஸ்அப் சர்ச் பாரில் சீக்ரெட் கோட்-ஐ பதிவிட வேண்டியது அவசியம் ஆகும்.

    ×