என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு சேவைகள்"

    • இணையதள வழிமுறைகள் மூலம் ஏற்படும் சிரமங்களோ அல்லது அரசு அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியமோ இனி இருக்காது.
    • 16 துறைகளைச் சேர்ந்த 51 சேவைகள் தற்போது வாட்ஸ்-அப் மூலம் வழங்கப்படுகின்றன.

    சென்னை:

    'வாட்ஸ்-அப்' மூலம் 51 அரசு சேவைகள் பெறும் விதமாக "நம்ம அரசு'' வாட்ஸ்-அப் சாட்பாட் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்கள் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதலில் ஒரு புரட்சிகரமான மைல் கல்லாக, தமிழ்நாடு மின்னாளுமை முகமை "நம்ம அரசு'' வாட்ஸ்-அப் சாட்பாட் சேவையை மாநிலத்தின் முன்னணி தகவல் தொழில்நுட்ப மாநாடான உமாஜின்- 2026 நிகழ்வில் அறிமுகப்படுத்தி உள்ளது. "நம்ம அரசு'' வாட்ஸ்-அப் சாட்பாட் சேவையின் மூலம், பொதுமக்கள் அரசு சேவைகளைத் தங்களது செல்போன் வழியாகவே எளிதாகப் பெற முடியும்.

    இதன் மூலம் இணையதள வழிமுறைகள் மூலம் ஏற்படும் சிரமங்களோ அல்லது அரசு அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியமோ இனி இருக்காது. பொதுமக்கள் +9178452 52525 என்ற வாட்ஸ்-அப் எண்ணின் மூலம் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்.

    அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் "நம்ம அரசு'' திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மெட்டா இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் அருண் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த திட்டத்தின் முதல்கட்டமாக உள்ளாட்சித்துறை சேவைகள், இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த பக்தர்களுக்கான சேவைகள், மின்சார வாரிய கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 16 துறைகளைச் சேர்ந்த 51 சேவைகள் தற்போது வாட்ஸ்-அப் மூலம் வழங்கப்படுகின்றன.

    மக்களின் வசதியை மேலும் மேம்படுத்தும் வகையில், "நம்ம அரசு'' தளத்தில் மேலும் பல துறை சார்ந்த சேவைகளை படிப்படியாக இணைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஊழலை ஒழிக்க டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கொண்டுவந்த அரசின் சேவைகளை வீடுகளுக்கு நேரடியாக வந்து வழங்கும் திட்டத்தின் முதல் நாளில் 369 பேர் பயன் அடைந்தனர். #DoorStepDelivery
    புதுடெல்லி:

    சான்றிதழ்கள் பெறுவதற்காக அரசு அலுவலகங்களில் மக்கள் காத்திருப்பதை தவிர்க்கவும், அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதை தடுக்கவும் டெல்லி அரசு முடிவு செய்தது.

    பிறப்பு, இறப்பு, சாதி, வருமானம் மற்றும் திருமண சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 40 வகையான சேவைகளை வீட்டுக்கே நேரடியாக சென்று வழங்க மாநில அரசு திட்டமிட்டது.


    இந்த திட்டம் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. வீடியோ கான்பரன்சிங் மூலம் பல்வேறு அரசு அலுவலகங்களில் திட்டம் தொடங்கப்பட்டது. தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் திட்டத்தை தொடங்கி வைத்தார். இது டெல்லியில் சட்டசபை தொகுதிகள் தோறும் ஆம்ஆத்மி கட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட 58 இடங்களில் பொது மக்கள் பார்த்து அறிய வசதியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    முதல் நாளான நேற்று வீடு தேடி வரும் சேவை திட்டத்தில் பலன் பெற 21 ஆயிரம் பேர் டெலிபோன் செய்தனர். ஆனால் முகவரிகளால் 1286 பேரிடம் மட்டுமே பேச முடிந்தது.

    அவர்களில் 369 பேர் மட்டுமே சேவைகளை பெற அனுமதி வழங்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு ‘1076’ என்ற டெலிபோன் நம்பர் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு காலை 8 மணி முதல் 10 மணி வரை பேசி தங்களது அரசு சேவை குறித்த தேவைகளை தெரிவிக்கலாம். #DoorStepDelivery #Kejriwal
    ×