என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    16 ஆண்டுகளில் முதல் முறை - ஐபோனில் வரப்போகும் புதிய மாற்றம்!
    X

    16 ஆண்டுகளில் முதல் முறை - ஐபோனில் வரப்போகும் புதிய மாற்றம்!

    • ஐபோனின் பாதுகாப்பு கேஸ் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
    • ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் மியூட் ஸ்விட்ச் பற்றிய புது தகவல் வெளியானது.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபோன் 15 சீரிஸ் விவரங்கள் ஏற்கனவே பலமுறை வெளியாகி விட்டது. தற்போது ஐபோன் சீரிஸ் வெளியீடு நெருங்கி வருவதை அடுத்து, மேலும் அதிக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் 2023 ஐபோன் மாடல்கள் டிசைன் மற்றும் ஹார்டுவேரில் அதிக மாற்றங்களை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் பழைய மியூட் ஸ்விட்ச் நீக்கப்பட்டு, புதிய பட்டன் வழங்கப்பட இருக்கிறது. இதுபோன்ற தகவல் வெளியாவது இதுவே முதல் முறை ஆகும்.

    ஐபோனின் பாதுகாப்பு கேஸ் புகைப்படங்களின் மூலம் இது தெரியவந்துள்ளது. டிப்ஸ்டர் மஜின் பு வெளியிட்டு இருக்கும் ஐபோன் கேஸ் புகைப்படங்களில், இதன் டிசைன் எப்படி இருக்கும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் மியூட் ஸ்விட்ச் பட்டன் பொருத்தப்படும் இடம் மாற்றப்பட இருக்கிறது.

    இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் ஆப்பிள் நிறுவனம் 16 ஆண்டுகளுக்கு பிறகு இத்தகைய மாற்றத்தை மேற்கொள்ளும். ஐபோன் கேஸ் ரென்டர்களில் புதிய ஐபோன் சற்று அகலமான, வட்ட வடிவம் கொண்ட பட்டன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் மியூட் ஸ்விட்ச்-க்கு மாற்றாக பிரத்யேக கஸ்டம் பட்டன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    ஏற்கனவே வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஐபோன் மாடலில் கேமராவை இயக்கவும், போனினை ஸ்விட்ச் ஆஃப் செய்ய புதிய பட்டன் வழங்கப்படுகிறது. மேலும் புதிய ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் கேமரா பம்ப் சற்றே பெரியதாக இருக்கும் என்றும், இதில் மேம்பட்ட கேமரா சென்சர்கள் வழங்கப்படுகின்றன.

    Next Story
    ×