என் மலர்
நீங்கள் தேடியது "ரஷியா"
- உக்ரைன்- ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் விரும்புகிறார்.
- முக்கிய அம்சங்கள் கொண்ட போர் நிறுத்த திட்டங்களை வழங்கியுள்ளார்.
ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து 4 வருடங்கள் நிறைவடைய இருக்கிறது. இருந்தபோதிலும் இரு நாடுகளுக்கு இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முக்கிய அம்சங்கள் கொண்ட போர் நிறுத்த பரிந்துரையை அறிவித்துள்ளார். அதனடிப்படையில் உக்ரைன் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்த போதிலும் நிலத்தை விட்டுக்கொடுப்பது மற்றும் நாட்டின் பாதுகாப்பு உத்தரவாதம் ஆகியவற்றில் உக்ரைன் உடன்படவில்லை. இதனால் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது.
இந்த நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை அடைவதற்கு உக்ரைன் மற்றும் ரஷியாவுக்கு ஜூன் மாதம் வரை அமெரிக்கா காலக்கெடு வழங்கியுள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்திற்குள் ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால், டிரம்ப் நிர்வாகம் அதற்கான அழுத்தத்தை கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்திற்குள் எல்லாவற்றையும் செய்ய அமெரிக்க விரும்புகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர எல்லாவற்றையும் செய்வார்கள். அனைத்து நிகழ்ச்சிக்குமான தெளிவான அட்டவணையை அமெரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது என ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் பரிந்துரை தொடர்பான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை அடுத்த வாரம் மியாமியில் நடைபெற வாய்ப்புள்ளது. இதில் உக்ரைன் பங்கேற்கும் எனவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஒரு பக்கம் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்ற போதிலும், மறுபக்கம் ரஷியா உக்ரைனின் மின்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
- ரஷியாவில் நேற்று முன்தினம் இரவு வானில் ஒரே நேரத்தில் 4 நிலவுகள் தோன்றின.
- இதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர்.
மாஸ்கோ:
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று முன்தினம் இரவு வானில் ஒரே நேரத்தில் 4 நிலவுகள் தோன்றுவது போன்ற காட்சி தென்பட்டது. இதை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
விண்வெளியில் ஒரே ஒரு நிலவு மட்டுமே இருக்கும் நிலையில், 4 நிலவுகள் தெரிந்தது ஒரு மாயத்தோற்றம் என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள். இத்தகைய நிகழ்வு பாரசெலீன் அல்லது மூன் டாக் என அழைக்கப்படுகிறது.
இது ஒரு வானியல் நிகழ்வு அல்ல, மாறாக வளிமண்டலத்தில் ஏற்படும் ஒளியியல் மாற்றமாகும். பூமியின் வளிமண்டலத்தில் மிக உயரத்தில் உள்ள மேகங்களில் அறுகோண வடிவத்திலான சிறிய பனிப் படிகங்கள் இருக்கும். நிலவொளி இந்த பனிப் படிகங்கள் வழியாக ஊடுருவிச் செல்லும்போது, அந்தப் படிகங்கள் ஒரு சிறிய 'பிரிசம்' போல செயல்பட்டு ஒளியை வளைக்கின்றன. இவ்வாறு வளையும் ஒளியினால், உண்மையான நிலவிற்கு இருபுறமும் பிரகாசமான ஒளிப்புள்ளிகள் தோன்றுகின்றன. இது பார்ப்பதற்கு வானில் பல நிலவுகள் இருப்பது போன்ற மாயையை உருவாக்குகிறது என வானிலை அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இத்தகைய நிகழ்வுகள் ரஷ்யா போன்ற கடும் குளிர் நிலவும் பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன.
- மலிவு விலையில் கிடைத்தால் வெனிசுலாவிடமிருந்தும் இந்தியா எண்ணெய் வாங்க வேண்டும்.
- இதிலுள்ள ராஜதந்திர சிக்கல்கள் வெளியுறவுத் துறைக்கும் பிரதமருக்கேத் தெரியும்
அமெரிக்காவின் மிரட்டலால் ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது பெருமளவு குறைந்துள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தொடரின் பின் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், "எந்த நாட்டிடமிருந்து மலிவான விலையில் எண்ணெய் கிடைக்கிறதோ, அவற்றிடமிருந்து எண்ணெய் வாங்குவது இந்தியாவின் உரிமை.
ஆனால் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணிந்து ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துக்கொண்டுள்ளது" என்று கூறினார்.
இரானுக்குப் பதிலாக வெனிசுலாவிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் என்று டிரம்ப் கூறியுள்ளது குறித்துக் கேட்டபோது, " நான் டிரம்ப்பின் செய்தி தொடர்பாளர் இல்லை. மலிவு விலையில் கிடைத்தால் வெனிசுலாவிடமிருந்தும் இந்தியா எண்ணெய் வாங்க வேண்டும்.
ஆனால் இதிலுள்ள ராஜதந்திர சிக்கல்கள் வெளியுறவுத் துறைக்கும் பிரதமருக்கேத் தெரியும்" என்றார்.
- 200 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த ரெயில் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியது.
- எரிசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் பயணிகள் ரெயிலை குறிவைத்து ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று கார்கிவ் நகரில் சுமார் 200 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த ரெயில் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதேநேரம், ஒடெசா நகரில் ரஷ்யா 50-க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவி நடத்திய தாக்குதலில் இதில் 3 பேர் உயிரிழந்தனர். மற்றும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலில் ஒடெசா நகரில் 10-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள், ஒரு தேவாலயம், மழலையர் பள்ளி மற்றும் பள்ளிகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக இதன்போது எரிசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஸ்லோவியான்ஸ்க் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு தம்பதியும், ஜபோரிஜியா பகுதியில் ஒரு முதியவரும் தாக்குதலில் பலியாகியுள்ளனர். இதன்மூலம் ஒரே நேரத்தில் ரஷியா நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
- தெற்கு பிரான்சின் மார்சேய் துறைமுகம் அருகே இந்தக் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டது.
- மார்சேய் துறைமுகத்தில் அந்தக் கப்பல் பலத்த பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் எண்ணெய் விற்பனை உட்பட பல்வேறு வணிகர்களுக்கு தடைகளை விதித்துள்ளன.
ஆனால் தடைகளை மீறி ரஷியா கப்பல்கள் மூலம் ரகசியமாக எண்ணெய் ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்நிலையில் மத்திய தரைக்கடலில் Grinch என்ற எண்ணெய் கப்பல் பிரான்ஸ் kadarpadaiஅதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. இது ரஷியாவுடையது என்று சந்தேகிக்கப்படுகிறது.
தெற்கு பிரான்சின் மார்சேய் துறைமுகம் அருகே இந்தக் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டது. கப்பலில் இருந்த 58 வயதான இந்திய கேப்டன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
மற்ற ஊழியர்கள் கப்பலிலேயே இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மார்சேய் துறைமுகத்தில் அந்தக் கப்பல் தற்போது பலத்த பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து முதல் முறையாக உக்ரைன் - ரஷியா - அமெரிக்கா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது.
- உக்ரைன் தலைநகர் கீவ், இரண்டாவது பெரிய நகரமாக கார்க்கிவ் உட்பட 17 பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேட்டோ நாடுகளுடன் சேர முயற்சித்த உக்ரைனால் தங்களுக்கு ஆபத்து என கூறி கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது.
தீர்வு எட்டப்படாமல் நான்கு ஆண்டுகளை கடந்து உக்ரைன் -ரஷியா போர் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் பதவியேற்றத்துமுதல் அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் போரை நிறுத்த பல முயற்சிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து முதல் முறையாக உக்ரைன் - ரஷியா - அமெரிக்கா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது.
டான்பாஸ் உள்ளிட்ட கைப்பற்றிய பிராந்தியங்களை ரஷியா விட்டுத் தர மறுப்பதால் இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த சுற்று பேச்சுவார்த்தை பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் நேற்று உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ், இரண்டாவது பெரிய நகரமாக கார்க்கிவ் உட்பட 17 பகுதிகள் மீது ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளது.
குடியிருப்பு கட்டடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 12 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அங்கு குளிர்காலம் என்பதால் மக்கள் மின்சாரமின்றி கடும் குளிரால் அவதிப்பட்டு வருகின்றனர்.
- உக்ரைன் ஒரு முடிவில்லாத சுழற்சியில் சிக்கிக்கொண்டுள்ளது
- இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் மிக நெருக்கத்தில் இருப்பதாக டிரம்ப கூறியுள்ளார்.
நேட்டோ நாடுகளுடன் சேர முயற்சித்த உக்ரைனால் தங்களுக்கு ஆபத்து என கூறி கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது.
தீர்வு எட்டப்படாமல் நான்கு ஆண்டுகளை கடந்து உக்ரைன் -ரஷியா போர் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் பதவியேற்றத்துமுதல் அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் போரை நிறுத்த பல முயற்சிகளை செய்து வருகிறார்.
அமெரிக்காவின் அலாஸ்காவில் ரஷிய அதிபர் புதினை கடந்த ஆகஸ்டில் சந்தித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் முடிவு எட்டப்படவில்லை.
இதற்கிடையே கடந்த ஜனவரி 19 முதல் சுவிட்சர்லாந்தின் தவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடந்து வரும் நிலையில் நேற்று இதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார்.
அங்கு வைத்து அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்து ஜெலன்ஸ்கி போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதல் முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை, ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ளதாக ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
இதன்படி, அமெரிக்கா, உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய மூன்று நாடுகளும் முதன்முறையாக நேரடியாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
முன்னதாக மாநாட்டில் பேசிய ஜெலன்ஸ்கி, உக்ரைன் ஒரு முடிவில்லாத சுழற்சியில் சிக்கிக்கொண்டுள்ளது என்றும் ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர, போரை நிறுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் சாடினார்.
மாநாட்டின் ஒரு பகுதியாக ஜெலன்ஸ்கி உடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது என்றும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் மிக நெருக்கத்தில் இருப்பதாக டிரம்ப கூறியுள்ளார்.
இதற்கிடையே அமெரிக்காவின் சிறப்புத் தூதர்கள் இருவர் மாஸ்கோவில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கு மத்தியில் உக்ரைனின் தென்கிழக்குப் பகுதிகளில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்தார். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- உக்ரனைில் வெப்பநிலை மைனஸ் 20 டிகிரிக்கு கீழ் குறைந்து வாட்டி வதைக்கிறது.
- மக்கள் ஹீட்டர் போன்றவற்றை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.
உக்ரைன்- ரஷியா இடையிலான போர் தொடங்கி 4 ஆண்டுகள் முடிவடைய இருக்கிறது. அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறது. என்றபோதிலும் உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
தற்போது நவீன டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் உக்ரைனில் உள்ள மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மக்கள் குடியிருக்கும் வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.
தற்போது உக்ரைனில் கடுமையான குளிர்காலம் ஆகும். மைனஸ் 20 டிகிரிக்கு வெப்பநிலை குறைந்துள்ளது. குளிர்காலத்தை தாங்குவதற்கு மக்கள் ஹீட்டர் போன்றவற்றை பயன்படுத்துவார்கள். ஆனால், மின்சாரம் இல்லாததால் கடுங்குளிரால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
உக்ரைனின் தலைநகர் கீவ் நகரில் 60 சதவீதம் இடங்களில் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. சுமார் 4 ஆயிரம் கட்டிடங்கள் மின்சார தடையால் பாதிக்கப்பட்டுள்ளன.
ரஷியா அதிபர் புதியை, அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் சந்தித்து பேச இருக்கிறார். உக்ரைன் குழுவையும் சந்தித்து பேச இருக்கிறார்.
- ரஷியாவில்146 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடுமையான பனிப்பொழிவு என்று கூறப்படுகிறது.
- உயரமான கட்டிடங்களில் 4-வது மாடி வரை பனியால் சூழப்பட்டுள்ளது.
ரஷியாவின் பல பகுதிகளில் வரலாறு காணாத வகையில் மிகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இது ரஷியாவில்146 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடுமையான பனிப்பொழிவு என்று கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் பனியால், வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரை வரை பனி படர்ந்துள்ளது. பல இடங்களில் பனியின் உயரம் பல மீட்டர்களை எட்டியுள்ளது.
தலைநகர் மாஸ்கோ மற்றும் பல்வேறு நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ரஷியாவின் கம்சட்கா தீபகற்பம் பனிப்பொழிவால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு பனிக் குவியல்கள் 10 முதல் 40 அடி உயரம் வரை சேர்ந்துள்ளன.
உயரமான கட்டிடங்களில் 4-வது மாடி வரை பனியால் சூழப்பட்டுள்ளது. சாலைகளில் மலை போல் பனி குவிந்துள்ளதால் கார் உள்ளிட்ட வாகனங்கள் முற்றிலுமாகப் புதைந்துள்ளன. இதனால் பொதுப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
மோசமான வானிலை காரணமாகச் சகாலின் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது மற்றும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடும் பனிப்பொழிவால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ராட்சத இயந்திரங்களைக் கொண்டு பனியை அகற்றும் பணியில் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
- ரஷியா கடந்த நான்கு ஆண்டுகளாக உக்ரைன் மீது போர் நடத்தி வரும் நிலையில், அமைதி ஒப்பந்தம் இன்னும் எட்டப்படாமல் உள்ளது
- காசா பகுதியில் போருக்குப் பிந்தைய நிர்வாகத்தைச் சீரமைப்பது மற்றும் அங்கு அமைதியை நிலைநாட்டுவது இதன் நோக்கம்.
போர் நிறுத்தத்தின் பின் காசாவின் நிர்வாகம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளைக் கண்காணிக்க காசா அமைதிக் குழுவை அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைத்துள்ளார்.
இதில் இடம் பெற இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
அந்த வகையில் காசா அமைதிக் குழுவில் உறுப்பினராக இணையுமாறு ரஷ்ய அதிபர் புதினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரஷியா கடந்த நான்கு ஆண்டுகளாக உக்ரைன் மீது போர் நடத்தி வரும் நிலையில், அமைதி ஒப்பந்தம் இன்னும் எட்டப்படாமல் உள்ளது.
இத்தகைய சூழலில், ரஷிய அதிபர் புதினை காசா அமைதிக் குழுவில் இணையுமாறு டிரம்ப் அழைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குழுவின் முக்கிய நோக்கம் காசா பகுதியில் போருக்குப் பிந்தைய நிர்வாகத்தைச் சீரமைப்பது மற்றும் அங்கு அமைதியை நிலைநாட்டுவது என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே காசா அமைதிக் குழுவில் சேர மறுத்தால் பிரான்ஸ் மதுபானங்கள் மீது 200 சதவீதம் வரி விதிப்பேன் என அந்நாட்டு அதிபர் மாக்ரோனை டிரம்ப் மிரட்டியுள்ளார்.
- நாடு மீது மீண்டும் தாக்குதல் நடத்த போராட்டங்களை அமெரிக்கா பயன்படுத்தக்கூடாது.
- உலகளாவிய சர்வதேச பாதுகாப்பிற்கும் பாதகமான விளைவுகள் ஏற்படும்.
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா விடுத்துள்ள மிரட்டல்களுக்கு ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஜகாரோவா கூறியதாவது:-
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா விடுக்கும் மிரட்டல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா விமானப்படை ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்கிய பிறகு, அந்த நாடு மீது மீண்டும் தாக்குதல் நடத்த போராட்டங்களை அமெரிக்கா பயன்படுத்தக்கூடாது.
இதுபோன்ற நடவடிக்கைகளால் மத்திய கிழக்கிற்கும் உலகளாவிய சர்வதேச பாதுகாப்பிற்கும் பாதகமான விளைவுகள் ஏற்படும்.
வர்த்தக வரிகளை உயர்த்துவதன் மூலம் ஈரானின் வெளிநாட்டு கூட்டாளிகளை மிரட்டிப் பணிய வைக்கும் அமெரிக்காவின் முயற்சி கண்டித்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அடுத்த இலக்கு ரஷிய அதிபர் புதின் என ஜெலன்ஸ்கி மறைமுகமாக குறிப்பிட்டார்.
- ரஷிய அதிபர் புதின் மீது சர்வதேச நீதிமன்றத்தின் பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளது.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கப் படைகள் கைது செய்துள்ள நிலையில், அடுத்த இலக்கு ரஷிய அதிபர் புதின் என ஜெலன்ஸ்கி மறைமுகமாக குறிப்பிட்டார்.
இந்நிலையில் புதினை கைது செய்ய அமெரிக்கா உத்தரவிடுமா என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், "அதற்கான அவசியம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.
அவருடன் எப்போதும் ஒரு சிறந்த உறவை வைத்திருக்கவே விரும்பினேன். ஆனால் தற்போதைய நிலைமை ஏமாற்றமளிக்கிறது. உக்ரைன்-ரஷிய போரைத் தடுக்க முடியாததில் எனக்கு வருத்தம் உண்டு" என்று கூறினார்.
ரஷியாவின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், பல ரஷிய வீரர்கள் போரில் கொல்லப்படுவதாகவும் குறிப்பிட்ட டிரம்ப் , இந்தப் போரை மிக விரைவில் முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாக தெரிவித்தார்.
உக்ரைனில் செய்த போர் குற்றங்களுக்காக ரஷிய அதிபர் புதின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.






