என் மலர்
உலகம்

உக்ரைனில் பயணிகள் ரெயிலை குறிவைத்து ரஷியா டிரோன் தாக்குதல் - ஐவர் பலி
- 200 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த ரெயில் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியது.
- எரிசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் பயணிகள் ரெயிலை குறிவைத்து ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று கார்கிவ் நகரில் சுமார் 200 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த ரெயில் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதேநேரம், ஒடெசா நகரில் ரஷ்யா 50-க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவி நடத்திய தாக்குதலில் இதில் 3 பேர் உயிரிழந்தனர். மற்றும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலில் ஒடெசா நகரில் 10-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள், ஒரு தேவாலயம், மழலையர் பள்ளி மற்றும் பள்ளிகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக இதன்போது எரிசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஸ்லோவியான்ஸ்க் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு தம்பதியும், ஜபோரிஜியா பகுதியில் ஒரு முதியவரும் தாக்குதலில் பலியாகியுள்ளனர். இதன்மூலம் ஒரே நேரத்தில் ரஷியா நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.






