என் மலர்
நீங்கள் தேடியது "ப. சிதம்பரம்"
- GST சீர்திருத்தம் செய்வதற்கு 8 ஆண்டுகள் என்பது மிகவும் தாமதமானது
- கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி விகிதங்களுக்கு எதிராக நாங்கள் கடுமையாகக் குரல் கொடுத்து வருகிறோம்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.
பல முக்கிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பல பொருட்களின் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் பொருட்கள் மீதான வரி குறைப்பை காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் பொருட்கள் மீதான வரி குறைப்பு வரவேற்கத்தக்கது. சீர்திருத்தம் செய்வதற்கு 8 ஆண்டுகள் என்பது மிகவும் தாமதமானது
தற்போதைய ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் இன்று வரை நடைமுறையில் உள்ள விகிதங்கள் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கவே கூடாது.
கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் விகிதங்களுக்கு எதிராக நாங்கள் கடுமையாகக் குரல் கொடுத்து வருகிறோம். ஆனால் எங்கள் வேண்டுகோள்கள் உங்கள் காதுகளுக்கு கேட்கவே இல்லை.
இப்போது ஜி.எஸ்.டி. வரியில் மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசை தூண்டியது எது?
மந்தமான பொருளாதார வளர்ச்சியா? வீட்டுக் கடன் அதிகரிப்பா? வீட்டு சேமிப்பு குறைவதா? பீகாரின் தேர்தலா? டிரம்பின் வரி விதிப்பா? அல்லது இவை அனைத்துமா?
- புலம்பெயர்ந்த தொழிலாளி சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க அவர்களது சொந்த மாநிலங்களுக்கு ஏன் செல்ல கூடாது?
- சத் பூஜை பண்டிகையின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பீகாருக்குத் திரும்புவதில்லையா?
பீகார் சிறப்பு திருத்தத்திற்குப் பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 65 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக 6.5 லட்சம் வெளிமாநில தொழிலாளர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்க்க போகிறார்கள் என்று வெளியான தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையிலும் வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "தேர்தல் ஆணையத்தில் சிறப்பு தீவிர திருத்த நடைமுறை மேலும் மேலும் சுவாரஸ்யமாகி வருகிறது
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை இழக்கப்படும் அபாயத்தில் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 6.5 லட்சம் வெளிமாநிலத்தவரை வாக்காளர்களாக "சேர்ப்பது" பற்றி வெளிவந்துள்ள செய்திகள் ஆபத்தானவை மற்றும் சட்டவிரோதமானவை
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை "நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள்" என்று அழைப்பது அவர்களை அவமதிப்பதாகும். மேலும் தமிழக வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில் மிகப்பெரிய தலையீட்டை ஏற்படுத்தும்.
வழக்கமாகச் செய்வது போல, புலம்பெயர்ந்த தொழிலாளி ஏன் பீகார் (அல்லது அவர்களது சொந்த மாநிலத்தில்) மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க சொந்த மாநிலங்களுக்கு ஏன் செல்ல கூடாது?
சத் பூஜை பண்டிகையின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பீகாருக்குத் திரும்புவதில்லையா?
வாக்காளராகப் பதிவு செய்ய ஒருவருக்கு நிலையான மற்றும் நிரந்தர சட்டப்பூர்வ வீடு இருக்க வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பீகாரில் (அல்லது வேறு மாநிலத்தில்) அத்தகைய வீடு உள்ளது. அவர்கள் தமிழ்நாட்டில் எப்படி வாக்காளராகப் பதிவு செய்ய முடியும்?
புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பம் பீகாரில் நிரந்தர வீடு வைத்திருந்து பீகாரில் வசிக்கிறது என்றால், புலம்பெயர் தொழிலாளி தமிழ்நாட்டிற்கு "நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்" என்று எப்படி கருதப்பட முடியும்?
தேர்தல் ஆணையம் தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து மாநிலங்களின் தேர்தல் தன்மை மற்றும் முறைகளை மாற்ற முயற்சிக்கிறது
இந்த அதிகார துஷ்பிரயோகத்தை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போராட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- நமக்கு தெரிந்தவரை, அவர்கள் இந்தியாவில் உருவான பயங்கரவாதிகளாக இருக்கலாம்.
- போர் நிறுத்தத்தை அறிவித்தது இந்திய அரசு அல்ல. டொனால்ட் டிரம்ப் தான்.
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் இன்று விவாதம் தொடக்கம். பகல் 12 மணிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவையில் பேசவுள்ளார்.
16 மணிநேரம் நடைபெறவுள்ள விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர்.
இந்நிலையில், "பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து வந்ததாக நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்த ப. சிதம்பரம், "பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு NIA எடுத்த நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வெளியிட பாஜக அரசாங்கம் விரும்பவில்லை. அவர்கள் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டார்களா? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அதாவது, நமக்கு தெரிந்தவரை, அவர்கள் இந்தியாவில் உருவான பயங்கரவாதிகளாக இருக்கலாம். அவர்கள் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் என்று நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்? அதற்கு எந்த ஆதாரமும் இல்லை
ஆபரேஷன் சிந்தூரின் போது ஏற்பட்ட இழப்புகளை மறைக்கிறார்கள். ஒரு போரில், இரு தரப்பிலும் இழப்புகள் ஏற்படுவது இயல்பு தான். இந்தியா இழப்புகளைச் சந்தித்திருக்கும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அதை வெளிப்படையாகச் சொல்லுங்கள்
பிரதமர் ஏன் ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேசவில்லை? நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதம் நடத்துவதற்கு ஏன் தயங்குகிறீர்கள்
போர் நிறுத்தம் எப்படி வந்தது என்பது குறித்து கேட்கப்படும் கேள்விகள் பாஜக அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறதா? ஏனென்றால், நேர்மையாகச் சொல்லப் போனால், போர் நிறுத்தத்தை அறிவித்தது இந்திய அரசு அல்ல. டொனால்ட் டிரம்ப் தான்" என்று தெரிவித்தார்.
ப. சிதம்பரத்தின் இக்கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
- காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட நிதியுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடி ரூ.4,900 பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி, "தமிழ்நாட்டின் வளர்ச்சி தான் நமது முக்கியமான உறுதிப்பாடு. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட நிதியுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் இந்த ஒப்பேடு குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.
அவரது பதிவில், "பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி அவர்கள் பேசியிருக்கிறார்:
'ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பத்தாண்டுகளில் (2004-2014) தமிழ்நாட்டுக்கு அளித்த நிதியை விட மூன்று மடங்கு நிதியை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதினோறு ஆண்டுகளில் (2014-2025) தந்திருக்கிறது' என்று பெருமைபட்டிருக்கிறார்
இது அசாதரணமும் அல்ல, அதிசயமும் அல்ல!
2013-14 ஆம் ஆண்டில் மத்திய அரசின் வரவு-செலவு (பட்ஜெட்) தொகை
ரூ 15, 90, 434 கோடி
2024-25 ஆம் ஆண்டில் மத்திய அரசின் வரவு-செலவுத் தொகை
ரூ 47, 16, 487 கோடி
வரவு-செலவுத் தொகை ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை விடக் கூடுவது நடைமுறை; வளர்ந்து வரும் நாடுகளில் அது இயல்பாக நடப்பது
10 ஆண்டுகளில் வரவு-செலவு மொத்தத் தொகை மூன்று மடங்கு கூடும் போது ஒவ்வொரு இனத்திற்கும் திட்டத்திற்கும் செலவு கூடுவதும் நடைமுறை; அது இயல்பாக நடப்பது
10 ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நடக்கும்? பிரதமர் மோடியின் 10-11 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்குப் பகிர்ந்தளித்த நிதியை விட மூன்று மடங்கு -- அல்லது அதற்கும் அதிகமான மடங்கு -- நிதி அளிக்கப்படும் என்பதும் அதிசயமாகாது; இயல்பாக நடக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
- வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பா.ஜ.க. அரசு வீழ்ச்சி அடைந்து விட்டது.
- மத்திய பா.ஜ.க. அரசு கோமாவில் உள்ளதாக ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பா.ஜ.க. அரசு வீழ்ச்சி அடைந்து விட்டதாகவும், மத்திய பா.ஜ.க. அரசு கோமாவில் உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் பீகார், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை ஒப்புக்கொள்வோம்.
ஆனால், மணிப்பூரில் தொடரும் இடைவிடாத வன்முறைக்கு, பிற மாநில பிரச்சினைகளில் இருந்து எப்படி பரிகாரம் தேடிக் கொள்ள முடியும்? எப்படி அதனை மன்னிக்க முடியும்?
பீகார், மேற்குவங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடுமையான நடவடிக்கை தேவைப்பட்டால், மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்துங்கள்.
ஆனால் மணிப்பூரில் நடக்கும் காட்டுமிராண்டித்தனத்தை மன்னிக்க முடியாது.
மணிப்பூர் பா.ஜ.க. அரசு வீழ்ச்சியடைந்து விட்டது. மத்திய பா.ஜ.க. அரசு கோமாவில் உள்ளது என பதிவிட்டுள்ளார்.






