என் மலர்tooltip icon

    இந்தியா

    அமெரிக்காவின் மிரட்டலால் ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவது குறைந்துள்ளது - ப.சிதம்பரம்
    X

    அமெரிக்காவின் மிரட்டலால் ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவது குறைந்துள்ளது - ப.சிதம்பரம்

    • மலிவு விலையில் கிடைத்தால் வெனிசுலாவிடமிருந்தும் இந்தியா எண்ணெய் வாங்க வேண்டும்.
    • இதிலுள்ள ராஜதந்திர சிக்கல்கள் வெளியுறவுத் துறைக்கும் பிரதமருக்கேத் தெரியும்

    அமெரிக்காவின் மிரட்டலால் ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது பெருமளவு குறைந்துள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    கூட்டத்தொடரின் பின் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், "எந்த நாட்டிடமிருந்து மலிவான விலையில் எண்ணெய் கிடைக்கிறதோ, அவற்றிடமிருந்து எண்ணெய் வாங்குவது இந்தியாவின் உரிமை.

    ஆனால் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணிந்து ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துக்கொண்டுள்ளது" என்று கூறினார்.

    இரானுக்குப் பதிலாக வெனிசுலாவிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் என்று டிரம்ப் கூறியுள்ளது குறித்துக் கேட்டபோது, " நான் டிரம்ப்பின் செய்தி தொடர்பாளர் இல்லை. மலிவு விலையில் கிடைத்தால் வெனிசுலாவிடமிருந்தும் இந்தியா எண்ணெய் வாங்க வேண்டும்.

    ஆனால் இதிலுள்ள ராஜதந்திர சிக்கல்கள் வெளியுறவுத் துறைக்கும் பிரதமருக்கேத் தெரியும்" என்றார்.

    Next Story
    ×