search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Goa"

    உடல்நலக் குறைவால் கோவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று மாலை டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். #ManoharParrikar
    பனாஜி:

    கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக, வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

    இதற்கிடையே, மனோகர் பாரிக்கர் மீண்டும் உடல் நலக்குறைவால் கோவாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், கோவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று மாலை டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.

    அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. தொடர்ந்து அவரது வீட்டில் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும் என கோவா முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #ManoharParrikar
    ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கோவாவில் நேற்று நடைபெற்ற கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவா அணி ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு 2-வது அணியாக முன்னேறியது. #ISL #Goa #Kerala
    கோவா:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கோவாவில் நேற்று இரவு நடந்த 80-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தன. 22-வது நிமிடத்தில் கோவா அணியின் பெர்ரான் கொராமினாஸ் முதல் கோல் அடித்தார். 25-வது நிமிடத்தில் கோவா அணி வீரர் எடு பெடியா கோல் திணித்தார். முதல் பாதியில் கோவா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

    78-வது நிமிடத்தில் கோவா அணி வீரர் ஹீகோ கோல் அடித்தார். பதில் கோல் திருப்ப கேரளா அணியினர் எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் கோவா அணி 3-0 என்ற கோல் கணக்கில் கேரளா அணியை வீழ்த்தியது. 16-வது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி 9 வெற்றி, 4 டிரா, 3 தோல்வியுடன் 31 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்ததுடன் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு 2-வது அணியாக முன்னேறியது. ஏற்கனவே பெங்களூரு எப்.சி. அணி ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தது. 17-வது ஆட்டத்தில் ஆடிய கேரளா அணி சந்தித்த 7-வது தோல்வி இதுவாகும்.

    நாளை (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு கவுகாத்தியில் நடைபெறும் 81-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி.(கவுகாத்தி)-எப்.சி.புனே சிட்டி அணிகள் மோதுகின்றன.
    கோவா தலைநகர் பனாஜியில் உள்ள பெண்கள் கழிப்பறைக்குள் கோவாவில் புர்கா அணிந்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். #Burqaman #ladiestoilet #BurqamaninGoa
    பனாஜி:

    கோவா தலைநகர் பனாஜி நகரில் அரசு தலைமை பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் ஆண்-பெண்களுக்கான கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், நேற்று முன்தினம் பெண்கள் கழிப்பறைக்குள் சென்றுவிட்டு வெளியே வந்த ஒரு உருவத்தின் நடை, உடை, பாவனையில் சந்தேகப்பட்ட சிலர் அந்நபரை பிடித்து விசாரித்தபோது ‘அவ்வை சண்முகி’ நாடகம் அம்பலமானது.

    சுமார் 35 மதிக்கத்தக்க அந்நபர் புர்காவின் உள்ளே ஜீன்ஸ் பேன்ட் மற்றும் டி-ஷர்ட் அணிந்து தலையில் சவுரி முடியுடன் பெண்கள் கழிப்பறைக்குள் வேண்டுமென்றே நுழைந்தது தெரியவந்தது.

    சம்பவம் அறிந்து அங்குவந்த போலீசார், விர்ஜில் பாஸ்கோ பெர்னான்டஸ் என்னும் அந்நபரை கைது செய்து, முஸ்லிம் பெண்ணைப்போல் ஆள்மாறாட்டம் செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. #Burqaman #ladiestoilet #BurqamaninGoa
    கோவாவின் டபோலிம் விமான நிலையத்தில் தங்கத்தினை ஜீன்ஸில் வைத்து கடத்திய பெண்ணை சுங்க அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். #Goacustomsaction #womenarrested
    பனாஜி:

    கோவா விமான நிலையத்தில் இன்று காலை சுங்க அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, துபாயில் இருந்து வந்த ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணின் உடமைகளை முழுமையாக சோதனையிட்டனர்.

    அப்போது அந்த பெண், தங்கத்தை உருக்கி, பாலீத்தீன் பாக்கெட்டில் அடைத்து அதனை ஜீன்ஸ் உடைகளுக்குள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி நூதனமான முறையில் கடத்தி வரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட தங்க பேஸ்ட் 590 கிராம் எடை கொண்டது. இதன் மதிப்பு 18,08,840 ரூபாய் ஆகும். தங்கம் கடத்தி வந்த பெண்ணை கைது செய்து, சுங்க அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Goacustomsaction #womenarrested

    கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து கோவா திரும்பினார் என முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது. #ManoharParrikar
    பனாஜி:

    கோவா மாநிலத்தில் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. அந்த கூட்டணியில் கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி மற்றும் மூன்று சுயேட்சைகள் முக்கிய அங்கம் வகித்து வருகின்றனர்.

    கடந்த ஆண்டு முதல்-மந்திரி மனோகர் பாரிக்கருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மீள முடியாத நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மனோகர் பாரிக்கர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். இடையிடையே உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது அவர் டெல்லி, மும்பை, பனாஜியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    கடந்த வாரம் அவர் உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டு மூக்கில் ‘டியூப்’ பொருத்தப்பட்ட நிலையில் அவர் கோவா சட்டசபைக்கு வந்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கடந்த 31-ம் தேதி முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரின் உடல் நிலையில் மேலும் பாதிப்பு ஏற்பட்டதால் டெல்லி அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தது. அவரை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சிலர் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.

    இந்நிலையில், கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து கோவா திரும்பினார் என முதல் மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், திட்டமிட்டபடி சிகிச்சை முடிந்து டெல்லியில் இருந்து முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று கோவா திரும்பினார் என தெரிவித்துள்ளது. #ManoharParrikar
    டெல்லியில் நடைபெற்ற 5வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் டெல்லி டைனமோஸ் எப்.சி. - எப்.சி.கோவா அணிகளுக்கிடையிலான போட்டி டிராவில் முடிந்தது. #IndianSuperLeague
    புதுடெல்லி:

    5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடரில் டெல்லியில் நேற்று இரவு நடந்த 69-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது. 14-வது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி 7 வெற்றி, 4 டிரா, 3 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 14 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 5 டிரா, 7 தோல்வியுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.

    நாளை (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் நடைபெறும் 70-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. #IndianSuperLeague

    கோவா கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் மது அருந்துவோருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. #Goa #PublicPlace #Alcohol #Jail
    பனாஜி:

    அழகான கடற்கரைகள், பாரம்பரிய கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் நிறைந்த கோவா மாநிலத்துக்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அங்குள்ள கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் மது அருந்தி பொழுதை போக்குகின்றனர்.

    இதனால் சமீப காலமாக அங்கு பல்வேறு பிரச்சினைகள் நடந்து வருகின்றன. இது கோவா அரசுக்கும், போலீசாருக்கும் மிகப்பெரும் தலைவலியாக மாறி வருகிறது. எனவே இதை தடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது. சுற்றுலா வர்த்தக பதிவு சட்டத்தில் மேற்கொண்டுள்ள இந்த திருத்தத்துக்கு மாநில மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    இதன் மூலம் கோவாவில் உள்ள கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தலங்களில் மது அருந்துவோருக்கும், மதுபாட்டில்களை உடைப்போருக்கும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அதை செலுத்த தவறினால் 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும். இதைப்போல சுற்றுலா தலங்கள் மற்றும் பொது இடங்களில் சமைப்போருக்கும் மேற்படி தண்டனை வழங்கப்படும் என மந்திரி ஒருவர் தெரிவித்தார். #Goa #PublicPlace #Alcohol #Jail
    கோவா மாநிலத்தில் தனியாக கடற்கரை நோக்கி நடந்து சென்ற பிரிட்டன் நாட்டு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #GoaBeach #BritishWomanHarrassed
    பனாஜி:

    கோவா மாநிலம் தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள பலோலம் பீச் அருகே பிரிட்டனைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர் தங்கியிருந்தார். அவர் நேற்று இரவு வடக்கு கோவாவில் உள்ள திவிம் ரெயில் நிலையம் செல்வதற்காக கேனகோனா ரெயில் நிலையம் சென்றார். ஆனால், ரெயில் மிகவும் தாமதமானதால், இன்று அதிகாலை அங்கிருந்து தான் தங்கியிருந்த பலோலம் கடற்கரை பகுதிக்கு நடந்து வந்துள்ளார்.

    அதிகாலை 4 மணியளவில் அவர் தனியாக நடந்து வருவதைக் கவனித்த மர்ம ஆசாமி, அந்த பெண்ணை திடீரென தாக்கி நிலைகுலையச் செய்து, பின்னர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அத்துடன் அந்த பெண் கொண்டு வந்த லக்கேஜ்களையும் (3 பேக்) திருடிச் சென்றுள்ளான்.

    இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியைத் தேடி வருகின்றனர். #GoaBeach #BritishWomanHarrassed
    கோவா விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 22 லட்ச ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #GoldSmuggling #Goa
    பனாஜி:

    இந்தியாவில் பண்டிகை காலங்களில் தங்கத்தின் மதிப்பு அதிகரிப்பதால் அதற்கான தேவையும் அதிகரிக்கும். அதன்படி எதிர்வரும் பண்டிகைகளை முன்னிட்டு, கடத்தல்காரர்கள் அண்டை நாடுகளில் இருந்து தங்கத்தை இந்தியாவுக்குள் கடத்துகின்றனர். இதனை தடுக்க சுங்கத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இன்று கோவா விமான நிலையத்தில் வழக்கமான சோதனையின் போது சந்தேகப்படும் படியாக இருந்த வெளிநாட்டவரிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 755 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதன் மதிப்பு 22 லட்சத்து 4 ஆயிரத்து 592 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #GoldSmuggling #Goa
    காங்கிரஸ் கட்சியின் கோவா மாநில செய்தித்தொடர்பாளார் செய்தியாளர்களை சந்தித்தபோது, கோவா மாநிலத்தின் மீது அக்கறை கொண்டு பாஜகவில் இருந்து விலகுமாறு பாஜகவின் கூட்டணி கட்சிகளுக்கு வலியுறுத்தியுள்ளார். #Congress #Goa #BJP #ManoharParrikar #YatishNaik
    பனாஜி:

    கோவா மாநிலத்தின் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் யடிஷ் நாயக், பாஜக ஒரு குழப்பமான கட்சி என்றும், கூட்டணி கட்சிகள் ஆட்சியை பார்வையிடலாமே தவிர முக்கிய முடிவுகள் எடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், கோவாவில் தலைமை இல்லாத பாஜக இருந்து வருவதாகவும், முதல்வர் இல்லாத நேரத்தில் பொறுப்பு முதல்வரை நியமிக்கவே அவர்களால் முடியவில்லை எனவும் சாடிய நாயக், அரசை எப்படி வழிநடத்துவது எனவே அவர்களால் முடிவெடுக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், முதல்மந்திரி பாரிக்கர், மும்பை மருத்துவமனையிலும், டெல்லி, அமெரிக்க மருத்துவமனைகளுக்கும் சென்று வந்ததை நாம் பார்த்தோம் ஆனால் கடந்த பல மாதங்களாக தலைமை செயலகத்தில் அவரை காண முடியவில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

    அரசின் இயக்கம் முற்றிலும் சீர்கெட்டுவிட்டதாக விமர்சித்துள்ள கோவா மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் மாநிலத்தின் மீது அக்கறை கொண்டு கூட்டணியில் இருந்து விலக நேர்மையாக முடிவெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். #Congress #Goa #BJP #ManoharParrikar #YatishNaik
    கோவாவில் பாஜக எம்.எல்.ஏ.வின் மகன் ஓட்டிய ஆடம்பர கார் மோதிய விபத்தில் 18 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #GoaMLASon #CarAccident
    பனாஜி:

    கோவா மாநிலத்தின் ஆளும் பாஜக அரசின் எம்.எல்.ஏ.வான கிலென் டிக்லோவின் மகன் கைல் கிலென் சௌசா டிக்லோ நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலையில் தனது ஆடம்பர காரில் வேகமாக சென்றுகொண்டு இருந்தபோது சாலையை கடக்க முயன்ற 2 இளம்பெண்கள் மீது வேகமாக மோதினார்.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் டைனியாட் வஹித் பிஸ்தி என்ற 18 வயது பெண் சிகிச்சை பலனின்றி பலியானார். சம்ரின் காலித் பிஸ்தி என்ற மற்றொரு பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



    இந்த விபத்தின்போது அப்பகுதியில் இருந்த மக்கள் கார் மீது கற்களை எரிந்து சேதப்படுத்தவும், காரில் தீ வைக்கவும் முயற்சித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பாஜக எம்.எல்.ஏ.வின் மகன் கைல் கிலென் சௌசா டிக்லோ கைது செய்யப்பட்டார். மேலும், காரில் தீ வைக்க முயன்ற பொதுமக்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், நேற்று இரவு கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வின் மகன் கைது செய்யப்பட்டு இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #GoaMLASon #CarAccident
    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நாளை சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி - கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #ISL
    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐஎஸ்எல்) போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் சென்னையின் எப்சி அணி தனது முதல் ஆட்டத்தில் பெங்களூருவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது.

    சென்னையின் எப்சி தனது 2-வது ஆட்டத்தில் நாளை கோவாவுடன் மோதுகிறது. இப்போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    இதில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்சி முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மெயில்சன் ஆல்வஸ் தலைமையிலான சென்னை அணியில் பெர்னாண்டஸ், ஆகஸ்டோ, ஜெஜெ, ஜெர்மன் பிரீத்சிங், நெல்சன், சபியா போன்ற வீரர்கள் உள்ளனர். கோவாவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் கட்டுபாட்டில் பந்து அதிக நேரம் இருந்தது.



    ஆனால் கோல் அடிக்க முடியவில்லை. பல கோல் வாய்ப்புகளை தவறவிட்டனர். இதனை சரி செய்ய வேண்டியது அவசியம்.
    சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பலத்த மழை பெய்தால் நாளைய போட்டி பாதிக்கப்பட கூடிய வாய்ப்பும் உள்ளது. கொச்சியில் இன்று இரவு நடக்கும் 7-வது ‘லீக்’ ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதுகின்றன.
    ×