search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "allies parties"

    காங்கிரஸ் கட்சியின் கோவா மாநில செய்தித்தொடர்பாளார் செய்தியாளர்களை சந்தித்தபோது, கோவா மாநிலத்தின் மீது அக்கறை கொண்டு பாஜகவில் இருந்து விலகுமாறு பாஜகவின் கூட்டணி கட்சிகளுக்கு வலியுறுத்தியுள்ளார். #Congress #Goa #BJP #ManoharParrikar #YatishNaik
    பனாஜி:

    கோவா மாநிலத்தின் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் யடிஷ் நாயக், பாஜக ஒரு குழப்பமான கட்சி என்றும், கூட்டணி கட்சிகள் ஆட்சியை பார்வையிடலாமே தவிர முக்கிய முடிவுகள் எடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், கோவாவில் தலைமை இல்லாத பாஜக இருந்து வருவதாகவும், முதல்வர் இல்லாத நேரத்தில் பொறுப்பு முதல்வரை நியமிக்கவே அவர்களால் முடியவில்லை எனவும் சாடிய நாயக், அரசை எப்படி வழிநடத்துவது எனவே அவர்களால் முடிவெடுக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், முதல்மந்திரி பாரிக்கர், மும்பை மருத்துவமனையிலும், டெல்லி, அமெரிக்க மருத்துவமனைகளுக்கும் சென்று வந்ததை நாம் பார்த்தோம் ஆனால் கடந்த பல மாதங்களாக தலைமை செயலகத்தில் அவரை காண முடியவில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

    அரசின் இயக்கம் முற்றிலும் சீர்கெட்டுவிட்டதாக விமர்சித்துள்ள கோவா மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் மாநிலத்தின் மீது அக்கறை கொண்டு கூட்டணியில் இருந்து விலக நேர்மையாக முடிவெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். #Congress #Goa #BJP #ManoharParrikar #YatishNaik
    ×