search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Food"

    • திருத்துறைப்பூண்டி அரசு பள்ளியில் சரிவிகித உணவு கருத்தரங்கம் நடைபெற்றது.
    • சரிவிகித உணவின் மூலம் ஒருவர் ஆரோக்கிய வாழ்க்கை வாழ முடியும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சரிவிகித உணவு கருத்தரங்கம் நடைபெற்றது. பொறுப்பு தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை வகித்தார்.

    ஆசிரியர்கள் தெய்வ சகாயம், பாஸ்கரன், தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தனர்.

    ஆசிரியர் நடராஜன் வரவேற்றார்.

    வட்டார வளமைய சிறப்பு பயிற்சி ஜானகிராமன் பேசுகையில், சமச்சீர் உணவு அல்லது சரிவிகித உணவு என்பது வயதிற்கும், செய்யும் தொழிலுக்கும் ஏற்ற வகையில் அளவிலும் குணத்திலும் தேவைக்கேற்ற உணவுப் பொருள்களைக் கொண்டதாகும்.

    இவ்வுணவு உடலுக்கு வேண்டிய கலோரிகள், புரதம், தாது உப்புக்கள், வைட்டமின்கள் அனைத்தையும் போதுமான அளவு கொடுத்து சிறிதளவு எதிர்பாராத தேவைக்கும் பயன்படக்கூடிய அளவில் உணவுச் சத்துக்களைக் கொடுக்கிறது.

    சரிவிகித உணவின் மூலம் ஒருவர் ஆரோக்கிய வாழ்க்கை வாழ முடியும்.

    உடலின் இயக்கங்கள் சரிவர நடைபெற்று, உடல் நலமும் நல்ல முறையில் இருக்கும் என்றார்.

    நிகழ்ச்சியில் பாரம்பரிய அரிசியில் தயாரிக்கப்பட்ட கொழுக்க ட்டைகள் மாண வர்களுக்கு வழங்கப்பட்டது.

    ஆசிரியர் பிரபாகரன் நன்றி கூறினார்.

    ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சக்கரபாணி செய்து இருந்தார்.

    ஆசிரியர்கள் மீனாட்சி சுந்தரம், ஆடின் மெடோனா, அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டத்தில், கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப் படுவதாக உணவு பாது காப்பு அலுவலர்களுக்கு புகார்கள் வந்தது.
    • கலப்பட ஜவ்வரிசி, தரமற்ற உணவு பொருள் விற்றது, கலப்பட ஆயில் விற்றது உள்ளிட்ட இதர பொருட்களில் கலப்படமாக விற்ற 13 வழக்கில் ரூ. 75 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில், கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப் படுவதாக உணவு பாது காப்பு அலுவலர்களுக்கு புகார்கள் வந்தது.

    இதை யடுத்து சேலம் உணவு பாது காப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் ஆத்தூர், சங்க கிரி, இடைப்பாடி, மேட்டூர், ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்ட னர்.

    அதில், போலியானது, உணவுக்கு ஒவ்வாத கேடு தரக்கூடியது என்பது போன்ற உணவு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சேலம் வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, கடந்த மாதத்தில் 13 வழக்குகளில் ரூ. 75 ஆயிரம் அபராதம் விதித்து, வருவாய் அலுவலர் மேனகா உத்தரவிட்டார்.

    அதில், கலப்பட ஜவ்வரிசி, தரமற்ற உணவு பொருள் விற்றது, கலப்பட ஆயில் விற்றது உள்ளிட்ட இதர பொருட்களில் கலப்படமாக விற்ற 13 வழக்கில் ரூ. 75 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டது.

    • 70க்கும் அதிகமான தன்னார்வலர் உதவியுடன் சேவை அளிக்கப்படுகிறது.
    • மாதம் ஒருமுறை மருத்துவ சேவை, ஆண்டுக்கு நான்குமுறை புத்தாடைகள் வழங்கி வருகின்றனர்.

    திருப்பூர் :

    ஆதரவற்றவர்களுக்கும், மாற்றத்திறனாளிகளுக்கும் உணவளித்து சேவையாற்றும் அட்சயபாத்திரம் அமைப்பு 2019 நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. திருப்பூரில் 15 மண்டலங்களாக பிரித்து 70க்கும் அதிகமான தன்னார்வலர் உதவியுடன் சேவை அளிக்கப்படுகிறது. ஆதரவற்றவர், முதியோர், மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தினமும் காலை உணவு வழங்கப்படுகிறது. மாதம் ஒருமுறை மருத்துவ சேவை, ஆண்டுக்கு நான்குமுறை புத்தாடைகள் வழங்குவது, பராமரிப்பது என சேவையாற்றி வருகின்றனர்.

    அட்சய பாத்திரம் அமைப்பின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து ஆலோசிக்க சிறப்பு கருத்தரங்கு மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. மங்கலம், ஆண்டிபாளையம் பாரடைஸ் அரங்கில் அன்னம் பகிர்ந்திடு, சாய்ந்திட தோள்கொடு என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடந்தது.

    உலக நல வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு, அட்சயபாத்திரம் ஆலோசனை குழு தலைவர் மோகன்கார்த்திக் தலைமை வகித்தார். தலைவர் செந்தில்குமார், செயலாளர் நாகராஜன் ஆகியோர் சமூக பணிகளை விளக்கி பேசினர்.

    அறக்கட்டளையின் புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி வெளியே ஓட்டல்களில் உணவு ஆர்டர் செய்து ஏழைகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. இனி புதிய சமையல் கூடம் உருவாக்கி தரமான உணவு தயாரித்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தன்னார்வலர்கள் பங்களிப்புடன், இலவச இரவு நேர உணவு வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். அத்துடன் பொதுமக்கள், தொழிலாளர் பயன்பெறும் வகையில் குறைந்தவிலையில் மதிய உணவு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • முதியோர் இல்லத்தில் இனிப்பு மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
    • வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செல்வராஜ் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    திருப்பூர் :

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி திருப்பூர் மத்திய பேருந்து நிலைய தொ. மு.ச., ஆட்டோ நண்பர்கள் ஏற்பாட்டில் வசந்தம் முதியோர் இல்லத்தில் இனிப்பு மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செல்வராஜ் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    வாலிபாளையம் செயலாளர் மு.க. உசேன், தி.மு.க., மாநகர நிர்வாகிகள் சிவபாலன், திலகராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சசிகுமார், வாலிப்பாளையம் பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் சதிஷ்குமார் மற்றும் மாவட்ட, மாநகர பகுதி கழக நிர்வாகிகளும், மத்திய பேருந்து நிலைய தொ.மு.ச., ஆட்டோ நண்பர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    • அதிநவீன தொழில்நுட்பத்தை உள்வாங்கி, நல்ல உணவின் மூலம் உலகை பாதுகாக்க வேண்டும்.
    • பொது சுகாதாரத்தில் உள்ள சவால்களுக்கான தீர்வுகளை கண்டறிய வேண்டும்

    தஞ்சாவூர்:

    தேசிய உணவு தொழில்நு ட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம் (நிப்டெம்) தஞ்சாவூர், இந்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஒரு முன்னோடி ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமாகும்.

    "உணவுத் தரநிலைகள் உயிர்களைக் காக்கும்" என்ற கருப்பொருளின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில், உலக உணவுப் பாதுகாப்பு நாள் அதன் வளாகத்தில் நடத்தப்பட்டது.

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை விருந்தினராக பங்கேற்றார்.

    தஞ்சாவூர் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா முன்னிலையில் மாணவர்க ளின் திறமைத் தேடல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    அப்போது கலெக்டர் பேசும்போது :-

    ஒழுங்குமுறை அமைப்பு கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் போன்ற நிறுவனங்கள் பொது சுகாதாரத்தில் உள்ள சவால்களுக்கான தீர்வுகளை கண்டறிய வேண்டும். பாதுகாப்பற்ற உணவில் இருந்து மக்களைக் காக்க புதுமையான தொழில்நுட்பங்களைக் மாணவர்கள் கண்டறிய வேண்டும். அதிநவீன தொழில்நுட்பத்தை உள்வாங்கி, நல்ல உணவின் மூலம் உலகை பாதுகாக்க வேண்டும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் லோகநாதன், நிறுவனத்தின் அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் புவனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குழந்தைகளிடம் பாடல்களை பாட சொல்லி கேட்டு மகிழ்ந்தார்.
    • உரிய அளவீடு, தடிமனில் சாலை அமைக்கப்பட்டுள்ளதா என அதன் தரத்தை பரிசோதித்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அங்கு பயிலும் குழந்தை களின் கல்வித்திறனை பரிசோதிக்கும் வகையில் குழந்தைகளிடம் ரைம்ஸ் என்னும் பாடல்களை பாட சொல்லி கேட்டு மகிழ்ந்தார்.

    மேலும் மாணவர்களுக்கு வழங்க தயார் செய்யப்பட்ட உணவின் தரத்தினை ஆய்வு செய்தார்.

    அங்கன்வாடி மையத்தில் சமைக்க பயன்படுத்தும் பருப்பு மற்றும் அரிசி தரமாக உள்ளதா எனவும் ஆய்வு செய்தார்.

    இதேபோல், திருமலை நகரில் ரூபாய் 3.90 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வரும் சாலையில் தரத்தினை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

    உரிய அளவீடு, தடிமனில் சாலை அமைக்கப்பட்டு ள்ளதா என அமைக்கப்பட்ட சாலை ஊழியர்களைக் கொண்டு வெட்டிப் பார்த்து அதன் தரத்தை பரிசோதித்தார்.

    ஆய்வின் போது, சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் உதவி இயக்குனர் ஊராட்சிகள் மஞ்சுளா, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சட்டநாதபுரம் தட்சிணா மூர்த்தி, புங்கனூர் ஜூனைதா பேகம் கமாலுதீன், ஒன்றிய குழு உறுப்பினர் விசாகர் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர் வசம் ஒப்படைக்க வேண்டும்.
    • சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில மைய முடிவின்படி, தமிழ்நாடு அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர் வசம் ஒப்படைக்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சித்ரா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ராணி துவக்கவுரை–யாற்றினார். மாவட்டச் செயலாளர் இராஜூ விளக்கவுரை–யாற்றினார். அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கோவை.சுப்பிரமணியம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் முருகையன், நெடுஞ்சாலைத்துறை சாலைப்ப–ணியாளர் சங்க நிர்வாகி ரமேஷ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் அந்துவன்சே–ரல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அன்பழகன் சிறப்புரை–யாற்றினார். நாகைமாலி எம்.எல்.ஏ. நிறைவுரை யாற்றினார். மாவட்டப் பொருளாளர் பாலாம்பாள் நன்றி கூறினார். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் ஜானி டாம் வர்க்கீசிடம் அளித்தனர்.

    • சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டி பிளஸ் தியேட்டரில் உள்ள கடைகளில் காலாவதியான சிப்ஸ் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு அதிகாரி களுக்கு தகவல் கிடைத்தது.
    • அப்போது காலாவதியான 2 லிட்டர் பால், தயாரிப்பு காலாவதி தேதி குறிப்பிடாத 71 கிலோ ஐஸ்கிரீம், 18 கிலோ கேக் கிலோ சிப்ஸ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது .

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டி பிளஸ் தியேட்டரில் உள்ள கடைகளில் காலாவதியான சிப்ஸ் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு அதிகாரி களுக்கு தகவல் கிடைத்தது.

    அதன்ேபரில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவலிங்கம் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர் . அப்போது காலாவதியான 2 லிட்டர் பால், தயாரிப்பு காலாவதி தேதி குறிப்பிடாத 71 கிலோ ஐஸ்கிரீம், 18 கிலோ கேக் கிலோ சிப்ஸ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது .

    மேலும் தியேட்டர் நிர்வாகத்தினர் மீது உணவு பாதுகாப்பு சட்டம்- 2006 பிரிவு 52, 56, 58 -ன் படி நீதிவழி தீர்வு அலுவலரிடம் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.

    • விளையாட்டு மற்றும் மேம்பாட்டு துறைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு.
    • ஜல்லிக்கட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பாக வாதாட செய்து நல்ல தீர்ப்பு வாங்கி தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சென்னை:

    தி.மு.க. இலக்கிய அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாநில இலக்கிய அணி தலைவர் புலவர் இந்திரகுமாரி தலைமையில் மாநில செயலாளர் வி.பி. கலைராஜன் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

    தமிழாய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி தமிழால் வாழ்த்தரங்கம் நடத்துவது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க அழைப்பது. தொழில் துறையில் தமிழ்நாட்டை முதல் இரண்டு இடங்களுக்குள் கொண்டு வந்ததோடு கல்வி, மருத்துவம், மகளிர் நலன், விவசாயம், இளைஞர் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டை முதல் மாநிலமாக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது.

    விளையாட்டு மற்றும் மேம்பாட்டு துறைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மிகச்சிறந்த விளையாட்டு மைதானம் அமைப்பதுடன் ஆசிய ஆக்கி போட்டியை சென்னையில் நடத்தவும், முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளை நடத்தவும் அரும்பாடு பட்டு வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உழைப்பை பாராட்டுவதோடு அவரது தோளோடு தோள் நின்று கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுவது.

    ஜல்லிக்கட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பாக வாதாட செய்து நல்ல தீர்ப்பு வாங்கி தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் நந்தனம் நம்பிராஜன், ஈரோடு இறைவன், சந்திரபாபு, வெங்கடாசலம், தசரதன், ஆர்.எம்.டி. ரவீந்திரன், செந்தில், கே.எம். நாதன், திராவிட மணி, பிரம்மபுரம் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போலீசார் ஆதரவின்றி சுற்றித்திரிபவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • 2 பேரையும் மீட்டு உணவு மற்றும் உடை வழங்கினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் ஆதரவின்றி சுற்றி திரிந்து யாசகம் பெறுபவர்களை பிடித்து காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று ரெயில்வே இருப்புப்பாதை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் தஞ்சாவூர் ரெயில்வே இருப்புப்பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, ஏட்டு சரவண செல்வம் மற்றும் போலீசார் ஆதரவின்றி சுற்றி திரிபவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அதன்படி சுற்றித்திரிந்து யாசகம் பெற்று வந்த தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா வடக்கூரை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 53), திருவண்ணாமலை மாவட்டம் அத்திஅந்தன் போஸ்ட் தெற்கு தெருவை சேர்ந்த மோகன் ( 51) ஆகிய 2 பேரையும் மீட்டு உணவு மற்றும் உடை வழங்கினர்.

    பின்னர் அவர்களை தஞ்சாவூர் மாதாகோட்டையில் உள்ள விக்டோரியா முதியோர் காப்பகத்தில் ஒப்படைத்து நல்ல முறையில் பராமரிக்க கேட்டுக் கொண்டனர்.

    • சாப்பிடும் போதுகூட சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் மூழ்கியவாறே உள்ளனர்.
    • இரவு உணவை தயார் செய்ததும் டைனிங் டேபிளில் வைக்கும் தாயார், குடும்பத்தினர் அனைவரையும் அழைக்கிறார்.

    மனிதனின் ஆறாம் விரலாய் செல்போன் மாறிவிட்டது. சாப்பிடும் போதுகூட சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் மூழ்கியவாறே உள்ளனர். இதனால் குடும்பத்தில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போதும், சமையலறையில் செல்போன், லேப்டாப்பிற்கும் இடம் ஒதுக்க வேண்டிய நிலை வந்துவிட்டது எனலாம்.

    இந்நிலையில் ஒரு தாய் தனது குடும்பத்தினரை செல்போன், லேப்டாப் இல்லாமல் நிம்மதியாக சாப்பிட வைப்பதற்காக மேற்கொண்ட புது 'டெக்னிக்' இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் இரவு உணவை தயார் செய்ததும் டைனிங் டேபிளில் வைக்கும் தாயார், குடும்பத்தினர் அனைவரையும் அழைக்கிறார். ஒவ்வொருவராக வந்ததும் அவர்கள் தங்களிடம் உள்ள செல்போன், லேப்டாப்பை அவரிடம் ஒப்படைத்த பிறகே அவர்களுக்கு தட்டில் சாப்பாடு போடுகிறார். அதன் பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து நிம்மதியாக சாப்பிடுவது போன்று காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தாயின் டெக்னிக்கை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் இந்த வீடியோ 1.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    திருக்கோஷ்டியூர் பகுதி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்து ரூ. 1 லட்சம் உணவு பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கலப்படமான டீத்தூள், கலர் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்கள், குட்கா உள்ளிட்டவைகளை விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகனுக்கு தகவல் கிடைத்தது. 

     இதனையடுத்து  திருக்கோஷ்டியூர் பகுதிகளில் உள்ள மளிகை கடை, உணவகங்கள், பெட்டிக்கடை, பேக்கரிகள் உள்ளிட்டவைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. 

    அப்போது  ரூ.1 லட்சம் மதிப்பிலான விற்பனை செய்யப்பட்ட உணவு பொருட்கள், கலப்பட டீ தூள் மற்றும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் கண்டுபிடிக்கப்பட்டு   பறிமுதல் செய்யப்பட்டன. 

    இதில் சுமார் 100 கிலோ டீத்தூள், 100 கிலோ பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  பெட்டிக்கடையில் பான்ம சாலா விற்கப்பட்டதையும் கண்டுபிடித்த உணவு பாதுகாப்பு அலுவலர்  அவற்றையும் பறிமுதல் செய்தார். மேலும்  மளிகை கடைக்காரர் மற்றும் அந்த பகுதி மக்கள் மத்தியில் போலி டீத்தூளை கண்டுபிடிக்கும் முறையினை செய்து காண்பித்தார். 

    இந்த நிகழ்வின் போது உணவு பாதுகாப்புதுறை உதவியாளர்கள் மாணிக்கம், மன்சூர், ஆரிப் ஆகியோர்   இருந்தனர்.

    ×