என் மலர்
நீங்கள் தேடியது "Recovery"
- ஜேடர்பாளையம் பரிசல் துறை காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது பாலாஜி காவிரியாற்றில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்ததாக தெரிகிறது.
- இதனால் அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்த அவரது நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர்.
பரமத்திவேலூர்:
ஈரோடு மாவட்டம், கொல்லம்பாளையத்தை சேர்ந்த வெங்கட்ராமன் மகன் பாலாஜி (வயது 30). இவர் ஈரோடு தொழிலாளர் துறை அலுவலகத்தில் தற்காலிக டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 5-ந்தேதி இவரும் இவரது நண்பர்களான திவாகர், அருண் மற்றும் செண்பகராஜ் ஆகிய 4 பேரும் பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையத்தில் உள்ள சுற்றுலா மையமான அண்ணா பூங்கா மற்றும் படுகை அணை ஆகியவற்றை சுற்றி பார்த்தனர். பின்னர் ஜேடர்பாளையம் பரிசல் துறை காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது பாலாஜி காவிரியாற்றில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்ததாக தெரிகிறது. இதனால் அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்த அவரது நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர்.
எனினும் அவரை காப்பாற்ற முடியாததால் அருகில் இருந்த மீனவர்கள் மற்றும் திருச்செங்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் கடந்த 2 நாட்களாக காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாலாஜியை தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பாலாஜி நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் கரூர் மாவட்டம் கோம்புப்பாளையம் பகுதி காவேரி ஆற்று ஓரத்தில் பிணமாக மிதந்து கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து பாலாஜியின் தாய் தமயந்தி ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது பிரேதத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராயபுரம் பகுதியை சேர்ந்த சுப்பையா பாண்டியன் என்பவரின் வாரிசுகளுக்கு பாத்தியப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
- நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திச்செல்வி விசாரணை மேற்கொண்டு சந்திரன் பதிவு செய்த ஆவணம் ரத்து செய்யப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டம், ராயபுரம் பகுதியை சேர்ந்த சுப்பையா பாண்டியன் என்பவரின் வாரிசுகளான சரோஜினி, கஸ்தூரி, மணிராஜ், தங்கராசு, கடலாட்சி மற்றும் சந்திரன் ஆகிய 6 பேருக்கு பாத்தியப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான 7 ஏக்கர் 31 செண்ட் நிலத்தை, அவர்களின் கடைசி தம்பி சந்திரன் என்பவர் மொத்த நிலத்தையும் அபகரிக்கும் நோக்கத்துடன் சந்திரனின் மனைவி செல்லம்மாளுக்கு ஏற்பாடு ஆவணம் செய்துள்ளார்.
இதுகுறித்து சரோஜினி கடந்த 6-ந் தேதி கொடுத்த புகாரின் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திச்செல்வி விசாரணை மேற்கொண்டு சந்திரன் பதிவு செய்த ஆவணம் ரத்து செய்யப்பட்டது.
மீட்கப்பட்ட நிலத்திற்கான ஆவணங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் முன்னிலையில் தங்கராசுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
- கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டது.
- கோர்ட்டு உத்தரவுபடி
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஆண்டிமடம் விளந்தை பகுதியில் உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி ஆண்டிமடம் விளந்தை மேலஅகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனடிப்படையில் நேற்று கோயில் சொத்துக்களை கையகப்படுத்த இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் நாகராஜன் தலைமையிலான குழுவினர் ஆண்டிமடம் விலந்தை பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போதுஆக்கிரமிப்பு தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்ட 26 பேரில் 24 பேர் நீதிமன்ற மூலம் பெற்ற தடை உத்தரவை காண்பித்துள்ளனர்.
தடை உத்தரவு வாங்காத இரண்டு நபர்களான ராதாகிருஷ்ணனின் அன்னதான கூடமும், செல்வகுமாரின் வால்பட்டரை இடம் மீட்கப்பட்டது. இதில் செயல் அலுவலர் செந்தமிழ்செல்வி மற்றும் வருவாய் துறையினர், காவல்துறையினர் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர், செயல் அலுவலர்கள், திருக்கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் வால்பட்டறை மற்றும் அன்னதான கூடம் ஆகியவற்றுக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- காணாமல்போன 131 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது
- ஏமாந்தவர்களின் பணம் ரூ.2,46,100 மீட்டுள்ளனர்
கரூர்:
கரூர் மாவட்டத்தில் செல்போன்கள் காணாமல் போனதாக பொதுமக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் ரூ.26 லட்சம் மதிப்புள்ள 131 போன்களை கரூர் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் செல்போனில் வரும் லிங்க், யூடியூப் விளம்பரம், ஆன்லைன் மூலம் நடந்த மோசடிகளில் ஏமாந்தவர்களின் பணம் ரூ.2,46,100 மீட்டுள்ளனர். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி. சுந்தரவதனம் சம்பந்தப்பட்டவர்களிடம் செல்போன்கள் மற்றும் தொகையை இன்று (ஆக. 30) காலை 11 மணிக்கு உரியவர்களிடம் ஒப்படைக்கிறார்.
- 121 செல்போன்கள் மீட்கப்பட்டது.
- உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் நடந்தது.
vசெல்போன்கள் ,recovery, மீட்பு, cell phones
மதுரை
மதுரை நகரில் மீனாட்சி அம்மன் கோவில் (7), தெற்கு வாசல் (2), திடீர்நகர் (17), திலகர் திடல் (10), திருப்பரங்குன்றம் (5), தல்லாகுளம் (39), செல்லூர் (10), அண்ணாநகர் (31) ஆகிய இடங்களில் தொலைந்து போன ரூ.12.10 லட்சம் மதிப்பு உடைய 121 செல்போன்கள் போலீசாரால் மீட்கப்பட்டன. அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் நடந்தது. போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
மதுரை மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.82.10 லட்சம் மதிப்பு உடைய மொத்தம் 821 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
- புதுவை அருகே உள்ள பொம்மையர் பாளையத்தில் மயிலம் பொம்மபுர ஆதின மடம் உள்ளது.
- இந்த மடத்தினை சிவஞான பாலய சுவாமிகள் நிர்வகித்து வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை அருகே உள்ள பொம்மையர் பாளையத்தில் மயிலம் பொம்மபுர ஆதின மடம் உள்ளது. இந்த மடத்தினை சிவஞான பாலய சுவாமிகள் நிர்வகித்து வருகிறார்.
பொம்மபுர ஆதினத்துக்கு சொந்தமான இடங்களை பலர் ஆக்கிரமித்து கொண்டனர். ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்ற செயல்முறை நடவடிக்கைகள் மூலம் மீட்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிள்ளை சாவடி கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய பகுதியில் பொம்மபுர ஆதினத்துக்கு சொந்தமான இடத்தை வடிவாம்பிகை இளையராஜா தம்பதியினர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். இது தொடர்பாக ஆதீனம் மூலம் கோர்ட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயராணி தலைமையில் ஆய்வாளர்கள், செல்வராஜ், தினேஷ் செயலர் சிவக்குமார் மற்றும் வானூர் வருவாய்த்துறையினர், கோட்டகுப்பம் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், தலைமை காவலர் ராஜாராம் முன்னிலையில் ஜே.சி.பி. எந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த வீட்டை அப்புறப்படுத்தினர். மீட்கப்பட்ட இடம் பொம்புர ஆதீனம் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
பிரச்சனை ஏதும் நடக்காமல் இருக்க தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
- கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்டனர்
- தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா கருக்காகுறிச்சி வட தெரு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு சொந்தமான ஆடு இறை தேடிச்செல்லும் பொழுது தவறுதலாக வீட்டின் அருகே உள்ள 60 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லா கிணற்றில் விழுந்தது. இதைகண்ட அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆட்டை உயிருடன் மீட்டு உரிமையா ளரிடம் ஒப்படைத்தனர்.
- சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் பஹ்ரைன் நாட்டில் தவித்த முதியவர் 29 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்கப்பட்டார்.
- இந்திய தூதரகத்தை மணிவேல் தொடர்பு கொண்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கருந்தலாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சமுத்து (வயது 59), அவரது மனைவி நல்லம்மாள். இவர்களது மகள் சுந்தராம்பாள், மகன் மணிவேல் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் பச்சமுத்து 1991ஆம் ஆண்டு குடும்ப சூழ்நிலை காரணமாக பஹ்ரைன் நாட்டிற்கு வேலைக்கு சென்றார். விடுமுறைக்கு ஊருக்கு திரும்பி அவர் 1993 ஆம் ஆண்டு மீண்டும் பஹ்ரைன் நாட்டிற்க்கு சென்றார். அவ்வாறு பஹ்ரைன் சென்ற பச்சமுத்து கடந்த 1996 ஆம் ஆண்டு வரை தனது குடும்பத்தினருக்கு கடிதம் எழுதி நலம் விசாரித்து வந்தார். அதன் பிறகு அவரிடம் இருந்து குடும்பத்தினருக்கு கடிதம் அனுப்பவில்லை. மேலும் அவரிடம் இருந்து கடிதம் வரும், வரும் என எதிர்பார்த்த குடும்பத்தினருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஆனாலும் தமிழகத்திலிருந்து பஹ்ரைன் நாட்டிற்குச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் உறவினர்களிடம் அவ்வப்போது நல்லம்மாள் தனது கணவரை பார்த்தீர்களா? என விசாரித்து புலம்பி வந்துள்ளார். இந்நிலையில் கூலி வேலை செய்து மிகவும் கஷ்டப்பட்டு வந்த நல்லம்மாள் தனது மகள் சுந்தராம்பாள் மற்றும் மகன் மணிவேல் ஆகியோர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உறவினர் ஒருவர் மூலம் கடந்த ஜனவரி மாதம் பச்சமுத்து என்பவர் பஹ்ரைன் நாட்டில் உள்ளதாக அவரது மகன் மணிவேலுக்கு தகவல் கிடைத்தது.
இதையொட்டி மணிவேல் குடும்பத்தினர் தனது தந்தை பச்சைமுத்துவிடம் தொலைபேசி யில் வாட்ஸ் அப் மூலம் பேசினர். அப்போது பச்சமுத்து பஹ்ரைன் நாட்டில் வேலை இல்லாமல் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு வருவதாகவும், தான் குடும்பத்துடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மணிவேல் தனது தந்தையை ஊருக்கு அழைத்து வர முடிவு செய்தார். அதன்படி பார்வையாளராக பஹ்ரைன் நாட்டுக்குச் சென்று அங்கிருந்து தந்தையை அழைத்து வர முயற்சி செய்தார். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக விசா கிடைக்கவில்லை. தொடர்ந்து பஹ்ரைன் நாட்டில் டிரைவராக வேலை பார்த்து வரும் தனது கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் மகன் நாகராஜ் என்பவரை மணிவேல் தொடர்பு கொண்டு விசாரித்தார். அப்போது அவர் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார். அதன்படி இந்திய தூதரகத்தை மணிவேல் தொடர்பு கொண்டார். மேலும் பாஸ்போர்ட் அலுவலகம் மூலமாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பச்சமுத்து குறித்த உண்மை தன்மையை விசாரணை செய்து அறிக்கையாக மாவட்ட காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து பக்ரைன் நாட்டில் உள்ள அன்னைத் தமிழ் மன்ற தலைவர் செந்தில்குமார், உலக வெளிநாட்டுவாழ் கூட்டமைப்பின் தலைவர் சுதீர், இந்திய தூதரகத்தின் தூதுவர் பியூஷ் ஸ்ரீவத்ஸவா ஆகியோரின் உதவியுடன் பச்சமுத்து தமிழகம் வந்தார். பச்சமுத்துவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அன்னை தமிழ் மன்றத்தின் செயலாளர் தாமரைக்கண்ணன் என்பவர் பச்சமுத்துவுடன் சென்னை விமான நிலையம் வரை வந்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு அவரது மகன் மணிவேல் தனது தந்தையை காரில் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றார். சொந்த ஊருக்கு சென்ற பச்சமுத்துவை அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
- வாடகைக்கு பெற்றிருந்த 4 நபர்கள் அதிக அளவு வாடகை பாக்கி வைத்திருந்தனர்.
- 40 நபர்களுக்கு கடைகளாக உள்வாடகைக்கும் விட்டிருந்தார்கள்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சென்னையை அடுத்த போரூரில் அமைந்துள்ள அருள்மிகு ராமநாதஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமாக 373 கிரவுண்ட் நிலம் உள்ளது. இதனை குடியிருப்பாகவும், வணிக பயன்பாட்டிற்கும் வாடகைக்கு விடப்பட்டிருந்தது.
குன்றத்தூர் சாலையில் வணிக பயன்பாட்டுக்கு 5.5 கிரவுண்ட் மனையினை வாடகைக்கு பெற்றிருந்த 4 நபர்கள் வாடகை செலுத்தாமலும், 40 நபர்களுக்கு கடைகளாக உள்வாடகைக்கும் விட்டிருந்தார்கள்.
நியாய வாடகையை செலுத்தாமல் அதிக அளவு வாடகை பாக்கி வைத்திருந்ததால் இவர்கள் மீது இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தீர்ப்பின்படி காவல்துறை உதவியுடன் வருவாய் துறையினரின் முன்னிலையில் அச்சொத்து திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 13 கோடி ஆகும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஏரியில் மிதந்த பச்சிளம் குழந்தையின் உடல் மீட்கப்பட்டது
- கொன்று ஏரியில் வீசியிருக்கலாம் என போலீசார் ெ தரிவித்தனர்.
அரியலூர்:
அரியலூர் அருகே வாலாஜா நகரம் ஊராட்சிக்குட்பட்ட ராஜீவ் நகரில் உள்ள பாப்பேரியில் பிறந்த சில நாட்களே ஆன குழந்தையின் உடல் கரை ஒதுங்கி கிடந்தது. இது குறித்து தகவலறிந்த அரியலூர் போலீசார் அங்கு சென்று குழந்தையின் உடலை எடுத்தனர். பிறந்து சில நாட்களே ஆன அந்த பெண் குழந்தையின் தலை, கல்லால் நசுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. யாரோ, குழந்தையை கொன்று ஏரியில் வீசியிருக்கலாம் என போலீசார் ெ தரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






