search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி அருகே ரூ.7 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு
    X

    மீட்கப்பட்ட நிலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட காட்சி.


    தென்காசி அருகே ரூ.7 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு

    • ராயபுரம் பகுதியை சேர்ந்த சுப்பையா பாண்டியன் என்பவரின் வாரிசுகளுக்கு பாத்தியப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
    • நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திச்செல்வி விசாரணை மேற்கொண்டு சந்திரன் பதிவு செய்த ஆவணம் ரத்து செய்யப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், ராயபுரம் பகுதியை சேர்ந்த சுப்பையா பாண்டியன் என்பவரின் வாரிசுகளான சரோஜினி, கஸ்தூரி, மணிராஜ், தங்கராசு, கடலாட்சி மற்றும் சந்திரன் ஆகிய 6 பேருக்கு பாத்தியப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான 7 ஏக்கர் 31 செண்ட் நிலத்தை, அவர்களின் கடைசி தம்பி சந்திரன் என்பவர் மொத்த நிலத்தையும் அபகரிக்கும் நோக்கத்துடன் சந்திரனின் மனைவி செல்லம்மாளுக்கு ஏற்பாடு ஆவணம் செய்துள்ளார்.

    இதுகுறித்து சரோஜினி கடந்த 6-ந் தேதி கொடுத்த புகாரின் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திச்செல்வி விசாரணை மேற்கொண்டு சந்திரன் பதிவு செய்த ஆவணம் ரத்து செய்யப்பட்டது.

    மீட்கப்பட்ட நிலத்திற்கான ஆவணங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் முன்னிலையில் தங்கராசுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    Next Story
    ×