என் மலர்
நீங்கள் தேடியது "Alwarkurichi"
- கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட விக்கிரமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி துணை மின்நிலையங்களில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் உள்ளது.
- அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநேியோகம் இருக்காது.
கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட விக்கிரமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி துணை மின்நிலையங்களில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான காரையார்,சேர்வலார், பாபநாசம், வீ.கே.புரம், சிவந்தி புரம், அடைய கருங்குளம், ஆறுமுகப்பட்டி, கோட்டைவிளைபட்டி, முதலியார் பட்டி, ஆழ்வார்குறிச்சி, கருத்தப்பிள்ளையூர், ஏ.பி.நாடனூர், துப்பாக்குடி, கலிதீர்தான்பட்டி மற்றும் பொட்டல் புதூர்,ஆம்பூர், பாப்பான்குளம், சம்பன்குளம், செல்லப்பிள்ளையார் குளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சிவா.
- இவர் அந்த பகுதியில் நண்பர்களுடன் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தார்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் சிவா. கடந்த 31-ந்தேதி இவர் அந்த பகுதியில் நண்பர்களுடன் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக அம்பையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளி பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் மீது பட்டாசை கொளுத்தி போடுமாறு சிவா தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் அனைவரும் பட்டாசை கொளுத்தி அந்த பஸ்சின் டயரில் வீசி உள்ளனர்.
இந்த சம்பவங்கள் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசார் சிவா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி
- கடந்த ஆகஸ்ட் 13-ந்தேதி கருத்தப்பிள்ளையூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் மின்தடை ஏற்பட்டதை சரி செய்ய சக மின் ஊழியர் சீதாராமன் என்பவருடன் ராமசாமி அந்த தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி(வயது 50). இவர் ஆழ்வார்குறிச்சி மின்சார வாரியத்தில் கடந்த 24 ஆண்டுகளாக ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார்.
மின்சாரம் தாக்கியது
கடந்த ஆகஸ்ட் 13-ந்தேதி கருத்தப்பிள்ளையூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் மின்தடை ஏற்பட்டதை சரி செய்ய சக மின் ஊழியர் சீதாராமன் என்பவருடன் ராமசாமி அந்த தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது மின் பழுதை சரி செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி ராமசாமி கீழே விழுந்துள்ளார். இதில் தீக்காயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பலி
இதுதொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் இறப்பதற்கு முன்பாக சக மின் ஊழியரான சீதாராமன் மின்சாரத்தை அணைக்காமல் விட்டதால் மின்சாரம் தாக்கியதாக போலீசில் வாக்குமூலம் அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் சீதாராமனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போராட்டம்
இதற்கிடையே ராமசாமி குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதற்கான உத்தரவாதத்தை மின்சாரத்துறை வழங்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அவரது உறவினர்கள், பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டம் இன்றும் 2-வது நாளாக தொடர்கிறது. அவர்களிடம் மின்வாரிய அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.