என் மலர்

  நீங்கள் தேடியது "police probe"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சஞ்சனா கொத்த புரிநத்தம் அரசு பள்ளியில் 3 -ம் வகுப்பு படித்து வந்தாள்.
  • கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  விழுப்புரம்: 

  விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அடுத்துள்ள வனத்தாம்பாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் மகாதேவன். இவரது மனைவி நிஷாந்தினி. இவர்களது மகள் சஞ்சனா (வயது8). சஞ்சனா கொத்த புரிநத்தம் அரசு பள்ளியில் 3 -ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று தனது தோழிகளுடன் அருகில் உள்ள பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பகுதியில் இருந்த சவுரி ராஜன் என்பவர் செங்கல் சூளையில் செங்கல் அறுக்கும் பணிக்கு மண் எடுக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் சமீபத்தில் பெய்த மழையினால் தேங்கி இருந்த தண்ணீரில் சிக்கி உள்ளாள். உடன் சென்ற சஞ்சனாவின் தோழிகள் காப்பாற்றும் முயற்சியில் சத்தம் போட்டுள்ளனர்.

  சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சஞ்சனாவை மீட்டு அருகில் உள்ள அரியூர் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சஞ்சனாவை பரிசோதித்த டாக்டர்கள் அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி சஞ்சனாவின் பெற்றோர்கள் கண்டமங்கலம் போலீசில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி சஞ்சனா செங்கல் சூளை பள்ளத்தில் சிக்கி இறந்த சம்பவம் அப் பகுதியில் சோகத்வதை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பள்ளியில் உள்ள உயிரியல் ஆய்வகத்தில் ஒரு குடுவையில் மனிதக் கரு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
  • பள்ளிக்கு எதிராக மத்திய பிரதேச குழந்தை உரிமைகள் ஆணையம் போலீஸில் புகார்.

  மத்தியப் பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 6ம் தேதி அன்று கிடைத்த தகவலை அடுத்து மத்திய பிரதேச குழந்தை உரிமைகள் ஆணையம் (எம்.பி.சி.ஆர்.சி) திடீர் ஆய்வு மேற்கொண்டது. அப்போது, பள்ளியில் உள்ள உயிரியல் ஆய்வகத்தில் ஒரு குடுவையில் மனிதக் கரு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  மனித கரு எப்படி கிடைத்தது என்று கேட்டதற்கு பள்ளி நிர்வாகத்திடம் இருந்து திருப்திகரமான பதில் இல்லை. இதையடுத்து, பள்ளிக்கு எதிராக மத்திய பிரதேச குழந்தை உரிமைகள் ஆணையம் போலீஸில் புகார் அளித்தது.

  இதைதொடர்ந்து, போலீசார் எப்ஐஆர் பதிவு செய்யவில்லை என்றாலும் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

  இதுகுறித்து எம்.பி.சி.ஆர்.சி உறுப்பினர் ஓம்கார் சிங் தாக்கூர் கூறுகையில், "மருத்துவக் கல்லூரிகளில் இதுபோன்ற பாதுகாக்கப்பட்ட கருக்கள் இருந்தாலும், அவற்றை வைத்திருக்க மற்ற அமைப்புகளுக்கு அனுமதி தேவை. ஆனால் இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் சரியான விளக்கம் அளிக்காததால் அவர்களிடம் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 3 கிலோ திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் ஒரு அறையில்மறைத்து வைத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
  • கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  செங்கோட்டை:

  செங்கோட்டை அருகே விஸ்வநாதபுரம் பகுதியில் சிலர் ஆம்பர்கிரீஸ் கட்டிகளை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

  அங்கு தங்கச்சன் என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது சிறு சிறு துண்டுகளாக சுமார் 3 கிலோ திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் ஒரு அறையில்மறைத்து வைத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் சந்தை மதிப்பு சுமார் 41 லட்சம் என கூறப்படுகறது.

  இதுசம்பந்தமாக தங்கச்சன் (வயது 65) மற்றும் அவரது மகன் வர்கீஸ் (35) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து செங்கோட்டைகாவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் 2 பேரிடமும் துருவிதுருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. செங்கோட்டை வனத்துறையினரும் தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இன்று காலையில் நடைபயிற்சி சென்ற சிலர் அதனை பார்த்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
  • மேல அரியப்பபுரம் பகுதி நாடாகண்ணுபட்டி கிராமத்தை சேர்ந்த சரத்குமார் என்பது தெரிய வந்தது.

  தென்காசி:

  பாவூர்சத்திரம் அருகே உள்ள மேட்டூர் ரெயில் நிலையத்திற்கு சற்று தொலைவில் தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்ட நிலையில் வாலிபர் உடல் ஒன்று கிடந்தது.

  ரெயிலில் அடிபட்டு பலி

  இன்று காலையில் நடைபயிற்சி சென்ற சிலர் அதனை பார்த்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தென்காசி ரெயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

  அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரெயிலில் அடிபட்டு இறந்தவர் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  விசாரணை

  இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள மேல அரியப்பபுரம் பகுதி நாடாகண்ணுபட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் சரத்குமார் (வயது 25) என்பதும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை சுப்பிரமணியன் இறந்ததால் தனது தாயுடன் அவர் வசித்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

  நேற்று இரவில் வெய்காலிப்பட்டி அருகே உள்ள மேட்டூர் ெரயில் தண்டவாளத்தை இரவு 12:15 மணிக்கு கடக்க முயன்றுள்ளார். அப்போது நெல்லையில் இருந்து தென்காசி வழியாக சென்ற பாலருவி எக்ஸ்பிரஸ் அவர் மீது மோதியதாக கூறப்படுகிறது.

  இதில் தூக்கி வீசப்பட்ட சரத்குமார் உடல் 3 துண்டுகளானது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சிவா.
  • இவர் அந்த பகுதியில் நண்பர்களுடன் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தார்.

  நெல்லை:

  தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் சிவா. கடந்த 31-ந்தேதி இவர் அந்த பகுதியில் நண்பர்களுடன் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தார்.

  அப்போது அந்த வழியாக அம்பையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளி பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் மீது பட்டாசை கொளுத்தி போடுமாறு சிவா தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் அனைவரும் பட்டாசை கொளுத்தி அந்த பஸ்சின் டயரில் வீசி உள்ளனர்.

  இந்த சம்பவங்கள் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக ஆழ்வார்குறிச்சி போலீசார் சிவா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கிடங்கள் ஏரி அருகே மயக்க நிலையில் கடந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றனர்.
  • வழக்குபதிந்து அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  விழுப்புரம்:

  திண்டிவனம் கிடங்கள் 2 பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 38) இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சிறுநீர் கழிக்க சென்று விட்டு சென்றுள்ளார். மீண்டும் வெகு நேரம் ஆகியும் அவர் வராததால் குடும்பத்தினர் பல இடங்களில் தேடிய நிலையில் கிடங்கள் ஏரி அருகே மயக்க நிலையில் கடந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றனர்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குபதிந்து அவர் எப்படி இறந்தார்? ெகாலை செய்யப்பட்டாரா ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சோழவந்தான் அருகே விடுமுறையில் வந்திருந்த ராணுவ வீரர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  சோழவந்தான்:

  சோழவந்தான் அருகே உள்ள வடகாடுபட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி (வயது 42). ராணுவ வீரரான இவர் செகந்திராபாத்தில் பணியாற்றி வந்தார்.

  கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு முனியாண்டி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

  முனியாண்டி திடீரென்று இந்த பரிதாப முடிவை தேடிக்கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. முனியாண்டியின் மரணம் குறித்து வடகாடு பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.

  இன்ஸ்பெக்டர் ஜோதி முத்து மற்றும் போலீசார் விரைந்து சென்று முனியாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முனியாண்டி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
  சென்னை:

  நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் நசீர் அகமது. இவர் சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார்.

  அதில் தனது மகனுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதற்காக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன்ராஜிடம் ரூ.50 லட்சம் பணம் கொடுத்ததாகவும், அவர் இடம் வாங்கி தராமல் பணத்தை மோசடி செய்து விட்டதாகவும் கூறி இருந்தார்.

  இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் மோசடி தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன் ராஜை கைது செய்தனர்.

  மோகன்ராஜ் போக்குவரத்து துறையில் செயலாளராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  ×