என் மலர்

    செய்திகள்

    சோழவந்தான் அருகே ராணுவ வீரர் வி‌ஷம் குடித்து தற்கொலை
    X

    சோழவந்தான் அருகே ராணுவ வீரர் வி‌ஷம் குடித்து தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சோழவந்தான் அருகே விடுமுறையில் வந்திருந்த ராணுவ வீரர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோழவந்தான்:

    சோழவந்தான் அருகே உள்ள வடகாடுபட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி (வயது 42). ராணுவ வீரரான இவர் செகந்திராபாத்தில் பணியாற்றி வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு முனியாண்டி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    முனியாண்டி திடீரென்று இந்த பரிதாப முடிவை தேடிக்கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. முனியாண்டியின் மரணம் குறித்து வடகாடு பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் ஜோதி முத்து மற்றும் போலீசார் விரைந்து சென்று முனியாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முனியாண்டி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×