என் மலர்

  நீங்கள் தேடியது "Madurai suicide"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உடல்நலக்குறைவால் மனவேதனையில் இருந்த மனைவி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதை கண்ட கணவனும் விஷமருந்தி உயிரிழந்த சம்பவம் செங்கப்படை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • இருவரது உடல்களையும் போலீசார் கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருமங்கலம்:

  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள செங்கப்படை கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணமூர்த்தி (வயது60).

  இவர் கே.வெள்ளாகுளம் அரசு பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி பாண்டியம்மாள் (50). இவர்களுக்கு வெங்கடசாமி என்ற மகனும், சசிகலா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.

  நாராயணமூர்த்தியும், பாண்டியம்மாளும் தனியாக வசித்து வருகின்றனர். நேற்று இரவு வழக்கம் போல் தூங்கச் சென்றனர். இன்று காலை வெகு நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கவில்லை.

  சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன்-மனைவி இருவரும் இறந்து கிடந்தனர். அவர்களது உடல் அருகே பூச்சி மருந்து பாட்டில்கள் கிடந்தன. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் முருகன், திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தெரிவித்தார். போலீசார் இருவரின் உடலை ஆய்வு செய்தபோது இருவரும் விஷம் குடித்து தற்கொலைசெய்து கொண்டது தெரியவந்தது.

  போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பாண்டியம்மாள் சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றும் குணம் ஆகவில்லை.

  இதனால் மன வேதனையில் இருந்து வந்தததால் தற்கொலை செய்ய முடிவெடுத்து விஷம் குடித்து இறந்தார். மனைவி விஷம் குடித்து இறந்ததைக் கண்டு நாராயணமூர்த்தியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

  இருவரது உடல்களையும் போலீசார் கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  உடல்நலக்குறைவால் மனவேதனையில் இருந்த மனைவி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதை கண்ட கணவனும் விஷமருந்தி உயிரிழந்த சம்பவம் செங்கப்படை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சோழவந்தான் அருகே விடுமுறையில் வந்திருந்த ராணுவ வீரர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  சோழவந்தான்:

  சோழவந்தான் அருகே உள்ள வடகாடுபட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி (வயது 42). ராணுவ வீரரான இவர் செகந்திராபாத்தில் பணியாற்றி வந்தார்.

  கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு முனியாண்டி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

  முனியாண்டி திடீரென்று இந்த பரிதாப முடிவை தேடிக்கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. முனியாண்டியின் மரணம் குறித்து வடகாடு பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.

  இன்ஸ்பெக்டர் ஜோதி முத்து மற்றும் போலீசார் விரைந்து சென்று முனியாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முனியாண்டி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பணிச்சுமை காரணமாக ஆயுதப்படை போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  மதுரை:

  மதுரை பேரையூர் அருகில் உள்ள சாப்டூரை சேர்ந்தவர் ராமர் (வயது29). மதுரை ஆயுதப்படை போலீசில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஆனந்தம். இவர்களுக்கு 6, 4 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மதுரை ஆயுதப்படை வளாக குடியிருப்பில் ராமர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

  ராமருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதுதவிர ராமருக்கு பணிச்சுமை காரணமாக மனவருத்தம் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

  இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ராமர் இன்று அதிகாலை வீட்டில் மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  தகவல் அறிந்ததும் தல்லாகுளம் போலீசார் விரைந்து சென்று ஏட்டு ராமரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  ராமரின் உடலை பார்த்து அவரது மனைவியும், குழந்தைகளும் கதறி துடித்தது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

  ஏட்டு ராமர் ஏற்கனவே 3 முறை தற்கொலைக்கு முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந் துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உசிலம்பட்டியில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தூக்குப்போட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்தார்.
  உசிலம்பட்டி:

  மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள நக்கலப்பட்டியைச் சேர்ந்தவர் வனராஜா. இவரது மகன் சதீஷ் (வயது 27).

  இவர் பழனி போலீஸ் பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். சதீஷ், ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.

  அதனை வீட்டில் கூறி திருமணத்திற்கு சம்மதம் கேட்டார். ஆனால் அவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  இதனால் சதீஷ் அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் மனம் தளராமல் வீட்டில் பேசினார். ஆனால் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தரவில்லை.

  இதனால் சதீஷ் மனவேதனைஅடைந்தார். நேற்று அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வாழ்க்கையில் வெறுப்படைந்த சதீஷ், வீட்டின் விட்டதில் போர்வையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். உறவினர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

  உசிலம்பட்டி தாலுகா போலீசார் விரைந்து சென்று சதீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமணமான 2 ஆண்டில் வி‌ஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்தார். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
  பேரையூர்:

  சேடப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கம்மாளப்பட்டியைச் சேர்ந்தவர் அமர்நாத். இவரது மனைவி வினோதினி (வயது 19). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஹரி  என்ற மகன் உள்ளான்.

  எம்.கல்லுப்பட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அமர்நாத் வேலை பார்த்து வருகிறார்.

  இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த வினோதினி வி‌ஷம் குடித்து மயங்கினார். சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்து சேடப்பட்டி போலீசில் புகார் செய்யப் பட்டது. வினோதினிக்கு திருமணமாகி 2 ஆண்டே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது. அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  மதுரை:

  மதுரை ஜவகர்புரம் முனியாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 16), பிளஸ்-1 மாணவி.

  கடந்த சில நாட்களாக ஐஸ்வர்யா, காய்ச்சலால் அவதிப்பட்டார். இதனால் பள்ளி செல்லவில்லை. இது அவருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது.

  இந்த நிலையில் யாரும் இல்லாத நேரத்தில் ஐஸ்வர்யா, தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து அவரது தாயார் ராஜேஸ்வரி, தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐஸ்வர்யா எதற்காக தற்கொலை செய்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாடிப்பட்டி அருகே வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாத விரக்தியில் மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  மதுரை:

  மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள தனிச்சியம் பகவதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அமுதகண்ணன். இவரது மகன் அழகு (19). வாடிப்பட்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தார்.

  இந்த நிலையில் குடும்பத்தில் வறுமை ஏற்பட்டதால் அழகு தொடர்ந்து படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

  இதனால் மனவேதனை அடைந்த அழகு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

  இது குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். படிப்பை தொடர முடியாத சூழ்நிலையில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் மூதாட்டி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மதுரை:

  மதுரை கோரிப்பாளையம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் காதர்ஒலி (வயது28). கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 2-வது திருமணம் செய்து கொண்டார். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.

  இதனால் மனஉளைச்சலில் இருந்த காதர்ஒலி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

  செல்லூர் தாகூர் தெருவைச் சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவரது மனைவி நிர்மலா (60). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் சம்பவத்தன்று உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகிய அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

  கே.புதூர் காந்திபுரத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மனைவி அம்புஜம் (65). இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த அம்புஜம் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  ×