search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police constable suicide"

    ஆரணி அருகே போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து களம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணி களம்பூர் அடுத்த அய்யம்பேட்டையை சேர்ந்தவர் முனியன் (வயது 45). போளூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சரஸ்வதி (40). திருவண்ணாமலை எஸ்.பி. அலுவலகத்தில் ஏட்டுவாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சரண் (11), முகில் (9) என்ற 2 மகன்கள் உள்ளனர். சரண் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். முகில் (9). 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    முனியன் கடந்த 10 நாட்களாக விடுப்பு எடுத்து வீட்டில் தங்கி இருந்தார். லீவு முடிந்து நேற்று காலை வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு திரும்பினார். வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் வெளியே சென்ற அவர் அங்குள்ள குளக்கரை அருகே வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

    இதனை கண்ட அப்பகுதியினர் அவரை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முனியன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    முனியன் தற்கொலை செய்து கொண்டதற்கு பணிச்சுமை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என களம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பணிச்சுமை காரணமாக ஆயுதப்படை போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை பேரையூர் அருகில் உள்ள சாப்டூரை சேர்ந்தவர் ராமர் (வயது29). மதுரை ஆயுதப்படை போலீசில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஆனந்தம். இவர்களுக்கு 6, 4 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மதுரை ஆயுதப்படை வளாக குடியிருப்பில் ராமர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    ராமருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதுதவிர ராமருக்கு பணிச்சுமை காரணமாக மனவருத்தம் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ராமர் இன்று அதிகாலை வீட்டில் மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்ததும் தல்லாகுளம் போலீசார் விரைந்து சென்று ஏட்டு ராமரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ராமரின் உடலை பார்த்து அவரது மனைவியும், குழந்தைகளும் கதறி துடித்தது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

    ஏட்டு ராமர் ஏற்கனவே 3 முறை தற்கொலைக்கு முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந் துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
    மதுரையில் பணி முடிந்து வீடு திரும்பிய போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மதுரை:

    மதுரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் மும்மூர்த்தி (வயது 37). இவர் சிலைமான் புளியங்குளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்றபோது மும்மூர்த்தி சோர்வாக காணப்பட்டார். குடும்பத்தினர் விசாரித்த போது எதுவும் பிரச்சனை இல்லை என்று கூறிவிட்டு தூங்கச் சென்றார்.

    இந்த நிலையில் நள்ளிரவில் மும்மூர்த்தி தனது அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து சிலைமான் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று மும்மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்து கொண்ட மும்மூர்த்திக்கு மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

    போலீஸ் ஏட்டு மும்மூர்த்தி பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில் தற்கொலை செய்து கொண்டதால் பணிச்சுமை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்தாரா? அல்லது குடும்ப பிரச்சனை காரணமா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலீஸ் ஏட்டு தற்கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    ×