என் மலர்
செய்திகள்

வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாததால் மாணவர் தற்கொலை
வாடிப்பட்டி அருகே வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாத விரக்தியில் மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை:
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள தனிச்சியம் பகவதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அமுதகண்ணன். இவரது மகன் அழகு (19). வாடிப்பட்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தார்.
இந்த நிலையில் குடும்பத்தில் வறுமை ஏற்பட்டதால் அழகு தொடர்ந்து படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் மனவேதனை அடைந்த அழகு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். படிப்பை தொடர முடியாத சூழ்நிலையில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story