search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Policeman Suicide"

    • கர்னூல் நகரத்தில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில் சத்திய நாராயணா என்ற போலீஸ்காரர் நேற்று பணியில் இருந்தார்.
    • தலையில் குண்டு பாய்ந்து சத்தியநாராயணா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், கர்னூல் நகரத்தில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில் சத்திய நாராயணா என்ற போலீஸ்காரர் நேற்று பணியில் இருந்தார்.

    குளியல் அறைக்கு சென்ற சத்தியநாராயணா தன்னிடம் இருந்த துப்பாக்கியால் தனக்குத்தானே திடீரென நெற்றி பொட்டில் சுட்டுக் கொண்டார்.

    இதில் தலையில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். துப்பாக்கி சத்தம் கேட்ட அலுவலக ஊழியர்கள் குளியலறைக்கு சென்று பார்த்தபோது சத்தியநாராயணா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சத்திய நாராயணா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்திய நாராயணா பணி சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • குடும்ப பிரச்சினையால் மன உளைச்சலில் காணப்பட்டார்
    • தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர்

    வேட்டவலம்:

    வேட்டவலம் பெரியார் தெருவை சேர்ந்தவர் பிர சாந்த் (வயது 28). இவர் சென் னையை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கவுரி. மகன் தமிழ் அமுதன் (2).

    இந்த நிலையில் பிரசாந்த் கடன் பெற்று இதனால் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் குடும்ப பிரச்சினை யாலும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் காணப்பட்டார்.

    நேற்று காலை பிர சாந்த், வீட்டின் அருகே உள்ள ஆணைக்கட்டு சாவடி பகுதியில் உள்ள கல்குவாரி குட் டைக்கு சென்றார்.

    அங்கு குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண் டார். இது குறித்து அந்த பகு தியில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பிரசாந்த் குதித்த கல் குவாரி குட்டையில் இறங்கி அவரை தேடினர்.

    சிறிது நேர தேடலுக்கு பிறகு பிரசாந்தை அவர்கள் பிணமாக மீட்டனர். பின்னர் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பிரசாந்தின் தாயார் குமுதவல்லி, வேட்டவலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • போலீஸ் நிலையத்தில் பணியின் போது போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக போலீஸ்காரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • திருக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகே மொளப்பாக்கத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்(வயது42). இவர் திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற போலீஸ்காரர்கள் அரிகிருஷ்ணனை மீட்டு மண்ணாடிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அரிகிருஷ்ணன் விஷம் குடித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அரிகிருஷ்ணன் பரிதாபமாக இறந்து போனார்.

    பணிச்சுமை காரணமாக அரிகிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சனையில் இந்த முடிவை மேற்கொண்டாரா? என்பது உடனடியாக தெரியவில்லை.

    இதுகுறித்து திருக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் நிலையத்தில் பணியின் போது போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக போலீஸ்காரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ரூ.18 லட்சம் கடன் பெற்று வீடு கட்டியுள்ளார்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி பசுமை நகர் பகுதியை சேர்ந்தவர் சென்னன் என்பவரின் மகன் இன்பராஜ் (வயது 33). இவர் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் வங்கியில் வீடு கட்டுவதற்காக ரூ.18 லட்சம் கடன் பெற்று வீடு கட்டியுள்ளார். மேலும் அந்த வங்கிக் கடனை செலுத்தி வந்துள்ளார்.

    கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி தனியார் வங்கியில் இருந்து திருப்பத்தூர் பகுதியில் உள்ள தேசிய மையமாக்கப்பட்ட வங்கிக்கு வீட்டு பத்திரத்தை மாற்றம் செய்து தனியார் வங்கி கடனை அடைத்துவிட்டு கூடுதலாக 6 லட்சம் வங்கி கடன் பெற்றுள்ளார்.

    மேலும் இந்த வங்கி கடனை மாதம் தவணை முறையில் செலுத்தி வந்துள்ளார்.

    இதனால் கடன் சுமை அதிகமாகி விட்டது என வீட்டில் அடிக்கடி கூறி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து விட்டு மாலை வீட்டிற்கு வந்தவர் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

    பின்னர் நேற்று மாலை வீட்டிலிருந்த அறையில் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தார் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் இன்பராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இவருக்கு திருமணமாகி கலை என்ற மனைவியும் விஷ்வா (வயது 8), பவின் (6) என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    இதுகுறித்து தந்தை சென்னன் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வங்கி கடன் பெற்று கடன் சுமை அதிகமானதால் மன உளைச்சலில் போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மடுகரையை சேர்ந்த போலீஸ்காரர் மலையராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் புதுவை காவல்துறையில் பணிபுரியும் மற்ற போலீஸ்காரர்கள் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    • மனைவி பிரேமா கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் நாகராஜ் (வயது39). இவர் கோரிமேடு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.

    நேற்றுமுன்தினம் பணி முடிந்து வீட்டுக்கு சென்ற நாகராஜ் அங்கு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்சினை காரணமாக நாகராஜ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சோக சம்பவம் மற்ற போலீசாரின் மனதில் மறையாத நிலையில் புதுவையில் மேலும் ஒரு போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அது பற்றிய விவரம் வருமாறு:-

    புதுவை நெட்டப்பாக்கம் அருகே மடுகரை இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் மலையராஜா (வயது48). இவர் மடுகரை மற்றும் நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து கடந்த சில மாதங்களாக புதுவை போலீஸ் ஐ.ஜி. அலுவலகம் அருகில் உள்ள காவல்கட்டுப்பாட்டு அறையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.

    இவருக்கு பிரேமா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சமீப காலமாக மலையராஜா நீரழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் மலையராஜாவுக்கு நோய் கொடுமை அதிகமானதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மலையராஜா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    வீட்டின் பின்புறத்தில் உள்ள சிமெண்ட்டு சீட் போட்ட கூடாரத்தில் அவர் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார்.

    படுக்கையில் இருந்து வெளியே சென்ற கணவர் வெகுநேரமாக திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது மனைவி பிரேமா வீட்டின் பின்புறத்துக்கு சென்று பார்த்தார். அப்போது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு பிரேமா அலறினார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து தூக்கில் இருந்து மலையராஜாவை மீட்டு மதகடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மலைய ராஜா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து அவரது மனைவி பிரேமா கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நேற்றுமுன்தினம் கோரிமேட்டில் போலீஸ்காரர் நாகராஜ் தூக்குப்போட்டு தற்கொலைசெய்து கொண்ட நிலையில் தற்போது மடுகரையை சேர்ந்த போலீஸ்காரர் மலையராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் புதுவை காவல்துறையில் பணிபுரியும் மற்ற போலீஸ்காரர்கள் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • உருக்கமான கடிதம் எழுதி விட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீஸ்காரர் எழுதிய கடிதங்களை கைப்பற்றி தொப்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    தொப்பூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பண்ணந்தூர் அருகே உள்ள வாடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது55). இவர் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவரது முதல் மனைவி முனியம்மாள். இவர்களுக்கு விஜய் என்கிற ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் முனியம்மாள் தற்கொலை செய்து கொண்டார். இதனால் இந்திராகாந்தி என்ற பெண்ணை இரண்டாவதாக மகேஸ்வரன் திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு சுந்தரேசன், இனிதா ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். மகேஸ்வரன் பணிக்கு செல்லாமல் தேங்காய் வியாபாரம் செய்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வருடம் முன்பு குடும்ப தகராறு காரணமாக மகேஸ்வரன், இந்திராகாந்தியை அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் ஜாமீனில் மகேஸ்வரன் வெளியே வந்துள்ளார்.

    இதனால் அவர் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள சவுளூரில் உள்ள உறவினர் வீட்டில் முதல் மனைவி மகன் விஜய்யுடன் இரண்டு மாதங்களாக தங்கி இருந்துள்ளார்.

    முதல் மனைவியின் நினைவு நாளான கடந்த 11.8.22 அன்று காலை முதலே மகேஸ்வரன் மனம் உடைந்த நிலையில் அழுது கொண்டிருந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.

    இதையடுத்து நல்லம்பள்ளி அருகே உள்ள சவுளூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் உள்ள மரத்தில் மகேஸ்வரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை இன்று அதிகாலையில் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது பற்றி தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் யமுனாதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அப்போது மகேஸ்வரன் மரத்தின் அருகிலேயே நான்கு பக்கங்களில் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு தூக்கு மாட்டி கொண்டு இறந்துள்ளார்.

    அதில் தன் மனைவி கடந்த ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் என் மனைவியின் உயிர் பிரிந்ததற்கு நான் தான் காரணம். இதனால் எனக்கு வாழ பிடிக்கவில்லை.

    மேலும் தன்னுடைய மகன் விஜய்க்கு, நீ என்னை மன்னித்துவிடு. உனக்கு நிறைய கஷ்டங்களை கொடுத்து விட்டேன்.

    இனியும் நீ இங்கு இருக்க வேண்டாம். நீ உன் தாத்தா, பாட்டி இருக்கும் இடத்திற்கு சென்று விடு.

    உன் மாமாவிடம் பணம் கொடுத்து உள்ளேன். அதை வாங்கி எனது இறுதி சடங்கை முடித்து விடவும் என்று தன் மகனுக்கும் உருக்கமான கடிதத்தை எழுதி வைத்துள்ளார்.

    மேலும் தொப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் இது நானாக எடுத்து கொண்ட முடிவு. என் மரணத்திற்கும் மற்ற யாருக்கும், எந்த தொடர்பும் இல்லை எனவும் எழுதி வைத்துள்ளார்.

    மகேஸ்வரன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எழுதிய கடிதங்களையும் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

    உருக்கமான கடிதம் எழுதி விட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • திருமணத்தில் மணியரசுவுக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மணியரசு மனவேதனையுடன் காணப்பட்டார்.
    • தங்கியிருந்த போலீஸ் குடியிருப்பில் இன்று மணியரசு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பொள்ளாச்சி:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பருத்தியூரைச் சேர்ந்தவர் மணியரசு (வயது 32). இவர் பொள்ளாச்சியை அடுத்த கோமங்கலம் போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார். போலீஸ் நிலையம் அருகே உள்ள குடியிருப்பிலேயே தங்கியிருந்து வேலை பார்த்தார்.

    மணியரசுவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து அவருக்கு பெண் பார்த்து திருமணமும் நிச்சயிக்கப்பட்டது. அடுத்த மாதம் திருமணம் நடத்தவும் பெற்றோர் ஏற்பாடுகள் செய்து வந்தனர்.

    இந்த திருமணத்தில் மணியரசுவுக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மணியரசு மனவேதனையுடன் காணப்பட்டார்.

    இந்தநிலையில் இன்று தான் தங்கியிருந்த போலீஸ் குடியிருப்பில் மணியரசு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்த சக போலீஸ்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டு மணியரசுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. மணியரசு தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த 7 ஆண்டுகளாக குடும்பத்தினருடன் போலீஸ்காரர் திருநாவுக்கரசு கோவில் பதாகையில் வசித்து வந்தார்.
    • திருநாவுக்கரசுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

    ஆவடி:

    கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தவர் திருநாவுக்கரசு. 39 வயதான இவர் ஆவடி அருகே உள்ள கோவில் பதாகை பகுதியில் குடும்பத்தோடு வசித்து வந்தார்.

    இவரது மனைவி கலைச்செல்வி. 10 வயதில் ரசிகா என்ற மகளும், 6 வயதில் ரக்‌ஷன் என்ற மகனும் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளாக குடும்பத்தினருடன் போலீஸ்காரர் திருநாவுக்கரசு கோவில் பதாகையில் வசித்து வந்தார். திருநாவுக்கரசுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் திருநாவுக்கரசின் மனைவி கலைச்செல்வி புரசைவாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த திருநாவுக்கரசு படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி அவரது நண்பர் சுரேந்தர் ஆவடி டேஸ்க் பேக்டரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதன் பேரில் போலீசார் விரைந்து சென்று திருநாவுக்கரசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • திருமணமான 4 மாதத்தில் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    விழுப்புரம் மாவட்டம் கிடார் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால் என்பவரது மகன் வீரமுத்து (வயது 27). இவர் கடந்த 2018-ம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்தார்.

    2019-ம் ஆண்டு முதல் திருவண்ணாமலை ஆயுதப்படை போலீசில் பணியாற்றி வந்தார் இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவரது மனைவியுடன் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பின்புறம் உள்ள ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் ஆடி மாதம் பிறந்த காரணத்தால் வீரமுத்து அவரது மனைவியை மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

    நேற்று அவர் பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். மாலையில் வீரமுத்துவின் மனைவி அவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு செல்போனை எடுத்து வீரமுத்து பேசாத காரணத்தால் சந்தேகமடைந்த அவரது மனைவி உடனடியாக வீரமுத்துவின் நண்பர் ஒருவருக்கு தகவல் தெரிவித்து அவரை நேரில் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

    அப்போது வீரமுத்து தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வீரமுத்து தற்கொலைக்கு காரணம் என்ன என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    காதலியை திருமணம் செய்ய பிடிக்காமல் போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாகர்கோவில்:

    நித்திரவிளையை அடுத்த நடைக்காவு, பாறையடியை சேர்ந்தவர் அஜின்ராஜ்(வயது 26).

    நெல்லை மாவட்டம் மணி முத்தாறு 9-வது பட்டாலியனில் வேலை பார்த்த அஜின் ராஜூக்கு கோதையாறு நீர் மின் நிலையத்தில் பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.

    கோதையாறு நீர் மின் நிலையத்தில் போலீசார் தங்கும் ஓய்வு அறையில் நேற்று அஜின்ராஜ் தங்கி இருந்தார். திடீரென அவர் தங்கி இருந்த அறையில் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டது. நீர் மின் நிலைய ஊழியர்கள் சத்தம் கேட்டு அங்கு ஓடிச் சென்றனர்.

    அங்கு அஜின்ராஜ் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து கிடந்தார். அவர் தன்னைதானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.

    அஜின்ராஜ் தற்கொலை செய்த தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. அவர்கள் கோதையாறு சென்று அஜின்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது சாவுக்கு காரணம் என்ன? என்றும் விசாரித்தனர்.

    இதற்காக அஜின்ராஜின் செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அவர் கடைசியாக யாரிடம் பேசினார்? எப்போது பேசினார்? என்பதை கண்டறியும் பணி நடந்தது.

    இதற்கிடையே அஜின்ராஜ் தற்கொலை செய்தது குறித்து பேச்சிப்பாறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அஜின்ராஜிக்கும், அவரது ஊரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் காதல் இருந்தது தெரிய வந்தது.

    அஜின்ராஜ், போலீஸ் வேலையில் சேர்ந்த பின்பு காதலியை புறக்கணித்ததாக தெரிகிறது. இது தொடர்பாக காதலி நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் அஜின்ராஜை அழைத்து விசாரித்தனர்.

    அஜின்ராஜ், காதலியை 6 மாதம் கழித்து திருமணம் செய்வதாக கூறியுள்ளார். 6 மாத கெடு முடிவடையும் நிலையில் காதலி, அஜின்ராஜை தொடர்பு கொண்டு உள்ளார். காதலியிடம் அஜின்ராஜ் நேற்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியதாக தெரிகிறது.

    அஜின்ராஜின் காதலி நேற்று திருமணத்திற்காக ஊரில் காத்திருந்தார். அஜின்ராஜ் நீண்ட நேரமாகியும் ஊருக்கு வராததால் அவரது காதலி, உறவினர்களுடன் களியக்காவிளை போலீஸ் நிலையம் சென்றார். அங்கு காதலன் தன்னை திருமணம் செய்ய வராமல் ஏமாற்றி விட்டதாக கூறினார். போலீசார் மாணவியின் காதலனான அஜின்ராஜை தேடினர்.

    அப்போது அவர் கோதையாறு நீர் மின் நிலையத்தில் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இந்த தகவலை போலீசார் காதலியிடம் தெரிவித்தனர். இதை கேட்டதும் அவர் கதறி அழுதார்.

    இது பற்றி களியக்காவிளை போலீசார், அஜின்ராஜ் தற்கொலை வழக்கை விசாரிக்கும் பேச்சிப்பாறை போலீசாருக்கு தெரிவித்தனர்.

    அஜின்ராஜ் காவல் பணியில் இருக்கும் போது தற்கொலை செய்து கொண்டதால் இது பற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சரண்யாஅறி இது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.

    அஜின்ராஜ் தற்கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
    உசிலம்பட்டியில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தூக்குப்போட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்தார்.
    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள நக்கலப்பட்டியைச் சேர்ந்தவர் வனராஜா. இவரது மகன் சதீஷ் (வயது 27).

    இவர் பழனி போலீஸ் பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். சதீஷ், ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.

    அதனை வீட்டில் கூறி திருமணத்திற்கு சம்மதம் கேட்டார். ஆனால் அவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் சதீஷ் அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் மனம் தளராமல் வீட்டில் பேசினார். ஆனால் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தரவில்லை.

    இதனால் சதீஷ் மனவேதனைஅடைந்தார். நேற்று அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வாழ்க்கையில் வெறுப்படைந்த சதீஷ், வீட்டின் விட்டதில் போர்வையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். உறவினர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    உசிலம்பட்டி தாலுகா போலீசார் விரைந்து சென்று சதீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவையில் ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Policemansuicide #Suicidecase

    கோவை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்தவர் அமர்நாத் (வயது 25). இவர் கோவை மாவட்டம் கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4-வது பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை பட்டாலியன் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார்.

    இதைப்பார்த்த போலீஸ்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து உயரதிகாரிகளுக்கும், குனியமுத்தூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அமர்நாத் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    அமர்நாத் கடந்த 2016-ம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். பட்டாலியன் அலுவலகத்தில் எழுத்தராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    நேற்று வேலை முடிந்ததும் இரவு 10 மணிக்கு முகாம் அலுவலகத்தில் உள்ள குடியிருப்புக்கு திரும்பிய நிலையில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். அமர்நாத் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Policemansuicide #Suicidecase

    ×