என் மலர்

  நீங்கள் தேடியது "Youth kill"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இன்று காலையில் நடைபயிற்சி சென்ற சிலர் அதனை பார்த்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
  • மேல அரியப்பபுரம் பகுதி நாடாகண்ணுபட்டி கிராமத்தை சேர்ந்த சரத்குமார் என்பது தெரிய வந்தது.

  தென்காசி:

  பாவூர்சத்திரம் அருகே உள்ள மேட்டூர் ரெயில் நிலையத்திற்கு சற்று தொலைவில் தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்ட நிலையில் வாலிபர் உடல் ஒன்று கிடந்தது.

  ரெயிலில் அடிபட்டு பலி

  இன்று காலையில் நடைபயிற்சி சென்ற சிலர் அதனை பார்த்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தென்காசி ரெயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

  அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரெயிலில் அடிபட்டு இறந்தவர் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  விசாரணை

  இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள மேல அரியப்பபுரம் பகுதி நாடாகண்ணுபட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் சரத்குமார் (வயது 25) என்பதும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை சுப்பிரமணியன் இறந்ததால் தனது தாயுடன் அவர் வசித்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

  நேற்று இரவில் வெய்காலிப்பட்டி அருகே உள்ள மேட்டூர் ெரயில் தண்டவாளத்தை இரவு 12:15 மணிக்கு கடக்க முயன்றுள்ளார். அப்போது நெல்லையில் இருந்து தென்காசி வழியாக சென்ற பாலருவி எக்ஸ்பிரஸ் அவர் மீது மோதியதாக கூறப்படுகிறது.

  இதில் தூக்கி வீசப்பட்ட சரத்குமார் உடல் 3 துண்டுகளானது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  ×