என் மலர்

  நீங்கள் தேடியது "Amber grease"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 3 கிலோ திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் ஒரு அறையில்மறைத்து வைத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
  • கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  செங்கோட்டை:

  செங்கோட்டை அருகே விஸ்வநாதபுரம் பகுதியில் சிலர் ஆம்பர்கிரீஸ் கட்டிகளை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

  அங்கு தங்கச்சன் என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது சிறு சிறு துண்டுகளாக சுமார் 3 கிலோ திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் ஒரு அறையில்மறைத்து வைத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் சந்தை மதிப்பு சுமார் 41 லட்சம் என கூறப்படுகறது.

  இதுசம்பந்தமாக தங்கச்சன் (வயது 65) மற்றும் அவரது மகன் வர்கீஸ் (35) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து செங்கோட்டைகாவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் 2 பேரிடமும் துருவிதுருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. செங்கோட்டை வனத்துறையினரும் தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ×