search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai cheating"

    சென்னை எழும்பூர் நட்சத்திர ஓட்டலில் ரூ.17½ லட்சம் வாடகை பாக்கி தொடர்பாக தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    சென்னை எழும்பூர் காந்தி - இர்வின் சாலையில் நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. இங்கு ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சக்திவேல் என்ற தொழில் அதிபர் தங்கி இருந்து வந்தார். இவர் இந்த ஒட்டலின் வாடிக்கையாளர் என்பதால் அவருக்கு ஓட்டலில் ஒரு அறை ஒதுக்கப்பட்டது.

    கடந்த 2017-ம் ஆண்டு முதல் அவர் இந்த ஓட்டலில் தங்கி இருந்தார். அதற்காக முன் பணமாக ஒரு தொகையையும் கொடுத்திருந்தார். அந்த பணத்தில் இருந்து அவரது வாடகை தொகையை கழித்து வந்தனர்.

    இந்த நிலையில் அவர் திடீரென்று நிர்வாகத்துக்கு தெரியாமல் ஓட்டல் அறையை காலி செய்து சென்று விட்டார்.

    இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள் அவர் செலுத்த வேண்டிய வாடகை தொகையை கணக்கீட்டு பார்த்த போது அவர் ரூ.17½ லட்சம் வாடகை பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக ஓட்டல் மானேஜர் முத்துக்குமார் கடந்த மாதம் எழும்பூர் போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் தொழில் அதிபர் சக்திவேலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
    சென்னையில் மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் நசீர் அகமது. இவர் சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார்.

    அதில் தனது மகனுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதற்காக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன்ராஜிடம் ரூ.50 லட்சம் பணம் கொடுத்ததாகவும், அவர் இடம் வாங்கி தராமல் பணத்தை மோசடி செய்து விட்டதாகவும் கூறி இருந்தார்.

    இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் மோசடி தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன் ராஜை கைது செய்தனர்.

    மோகன்ராஜ் போக்குவரத்து துறையில் செயலாளராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சென்னை வடபழனியில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனம் ரூ.20 லட்சம் ஏமாற்றியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    போரூர்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மரியதாசன். இவர் வடபழனி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோகிலாவிடம் புகார் மனு கொடுத்தார். அதில், கூறியிருப்பதாவது:-

    நான் மற்றும் எனது நண்பர்கள் ஜெருசலேம் சுற்றுலா செல்வதற்காக வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அணுகினோம்.

    அப்போது விமான டிக்கெட், விசா தங்குமிடம் சேர்த்து ஒரு நபருக்கு ரூ.1 லட்சத்து 10ஆயிரம் கட்டணம் என்றனர். ஜனவரி மாதம் 7-ந் தேதி சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்வதாகவும் கூறி இருந்தனர்.

    இதையடுத்து 5 தவணையாக ரூ. 20 லட்சத்து 50ஆயிரம் பணத்தை ஆன்லைன் மூலம் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பினேன். ஆனால் இதுவரை சுற்றுலா செல்ல எந்தவித ஏற்பாடும் செய்யவில்லை.

    மேலும் பணத்தை திருப்பி கேட்டால் மிரட்டல் விடுக்கின்றனர். எனவே டிராவல்ஸ் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×