search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட  தொழிலாளர்துறை ஜீப் டிரைவர் பிணமாக மீட்பு
    X

    காவிரி ஆற்றில் குளிக்கும் போது அடித்துச் செல்லப்பட்ட லேபர் ஆபீஸ் ஜீப் டிரைவர் பாலாஜியை படத்தில் காணலாம்.

    ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளர்துறை ஜீப் டிரைவர் பிணமாக மீட்பு

    • ஜேடர்பாளையம் பரிசல் துறை காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது பாலாஜி காவிரியாற்றில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்ததாக தெரிகிறது.
    • இதனால் அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்த அவரது நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர்.

    பரமத்திவேலூர்:

    ஈரோடு மாவட்டம், கொல்லம்பாளையத்தை சேர்ந்த வெங்கட்ராமன் மகன் பாலாஜி (வயது 30). இவர் ஈரோடு தொழிலாளர் துறை அலுவலகத்தில் தற்காலிக டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 5-ந்தேதி இவரும் இவரது நண்பர்களான திவாகர், அருண் மற்றும் செண்பகராஜ் ஆகிய 4 பேரும் பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையத்தில் உள்ள சுற்றுலா மையமான அண்ணா பூங்கா மற்றும் படுகை அணை ஆகியவற்றை சுற்றி பார்த்தனர். பின்னர் ஜேடர்பாளையம் பரிசல் துறை காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது பாலாஜி காவிரியாற்றில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்ததாக தெரிகிறது. இதனால் அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்த அவரது நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர்.

    எனினும் அவரை காப்பாற்ற முடியாததால் அருகில் இருந்த மீனவர்கள் மற்றும் திருச்செங்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு‌ துறையினர் மற்றும் மீனவர்கள் கடந்த 2 நாட்களாக காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாலாஜியை தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பாலாஜி நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் கரூர் மாவட்டம் கோம்புப்பாளையம் பகுதி காவேரி ஆற்று ஓரத்தில் பிணமாக மிதந்து கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து பாலாஜியின் தாய் தமயந்தி ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது பிரேதத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×