search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Food"

    • புதிய வகையான உணவு பழக்கத்தால் மனிதன் பாதிக்கப்படுகிறான்
    • நல்ல உடல் ஆரோக்கியத்துடன் 120 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தனர்.

     வேலாயுதம்பாளையம், 

    பழைய காலத்து உணவு வகைகளால் மனிதர்களின் ஆரோக்கியமான உடல்நிலையும், தற்போதைய உணவு பழக்க வழக்கங்களால் மனிதர்களின் உடல்நிலை சீர்கெட்டு போனது குறித்தும் மூதாட்டியின் கருத்து:-

    கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு காலை உணவாக கேழ்வரகு களி,கம்மஞ்சோறு,சோளச்சோறு போன்றவற்றையே பயன்படுத்தி வந்தோம். மதிய உணவாகவும் அதையே பயன்படுத்தினோம். இரவு உணவாக மட்டும் அரிசி சோற்றை சாப்பிட்டு வந்தோம். வேறு எந்த உணவுகளையும் அவர்கள் பயன்படுத்தவில்லை. காலங்காலமாக இந்த உணவுகளை பயன்படுத்தி வந்ததன் காரணமாக நல்ல உடல் ஆரோக்கியத்துடன் 120 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தனர்.

    அவர்களுக்கு எந்த நோய், நொடியும் இல்லாமல் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வந்தனர். 20 ஆண்டுகளுக்கு முன் முதல் நவநாகரீகம் பெருகி பல்வேறு நவீன வெளிநாட்டு உணவு பழக்கத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தற்காலங்களில் இளைஞர்கள் புதிய புதிய உணவு வகைகளை தேடி சென்று சாப்பிட்டு வருகின்றனர். இதன் காரணமாக உடல் நலன்கள் பாதிக்கப்பட்டு ஆரோக்கியமும் இல்லாமல் குறைந்த வயதிலேயே மனிதன் இறக்கக்கூடிய நிலைக்கு சென்று விடுகிறான். பாஸ்ட் புட் உணவையும், சவர்மா, பர்கர் போன்ற பல்வேறு புதிய வகையான உணவுகளை இப்போதைய இளைஞர்கள் தேடிச் செல்கின்றனர். வேகவைத்த, எண்ணெயில் பொரித்த சிக்கன் வகைகளையும் , மட்டன் வகைகளையும் குளிர்சாதன பெட்டிக்குள் வைத்திருந்து விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் ஆடு, கோழி கறிகளை வெட்டி குளிர்சாதனம் பெட்டிக்குள் வைத்து அதை அவ்வப்போது எடுத்து உணவுகளாக தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இதன் காரணமாக மனிதனின் உடலுக்கு கேடு விளைவிக்கிறது. இதன் காரணமாகவே நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் இறந்தார். 48-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்தனர். அதேபோல் அதே நாமக்கல் பகுதியில் பர்கர் சாப்பிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றனர். அந்த காலத்து உணவு முறைகளை பயன்படுத்தி வந்திருந்தால் இது போன்ற நிலைமைகள் ஏற்படாது. எனவே அந்தக் காலத்து உணவு பழக்க வழக்கத்திற்கும் இந்த காலத்து உணவு பழக்க வழக்கத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. ஒவ்வொரு நாளும் வேக வைத்த எண்ணெய்யிலேயே மீண்டும் உணவு பொருட்களை தயாரிக்கின்றனர். இதனால் உடல்நலம் பாதிக்கிறது. எனவே நாம் பழைய உணவு பழக்கத்திற்கு சென்று அந்த காலத்து உணவு பழக்கவழக்கங்களை நாம் பயன்படுத்தி வந்தால் உடல் நலத்தை பேணிக் காக்க முடியும். நமது உடலை பாதுகாப்போம் என்றார்.

    • பரமத்தி வேலுார் பகுதியில் செயல்பட்டு வரும் மீன் உணவு கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வகுமார் தணிக்கை மேற்கொண்டார்.
    • தற்பொழுது பரவி வருவ தால் காய்ச்சிய குடிநீரை வாடிக்கையாளா்க ளுக்கு வழங்க அறிவுரை வழங்கினார்.

    பரமத்திவேலுார்:

    உணவு பாதுகாப்பு மருந்து நிர்வாகத் துறை ஆணையா் உத்தரவின் பேரில், நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா அறிவுரையின் பேரில் பரமத்தி வேலுார் பகுதியில் செயல்பட்டு வரும் மீன் உணவு கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வகுமார் தணிக்கை மேற்கொண்டார்.

    பருவநிலை மாற்றத்தினால் வடிக்கையாளா்களுக்கு வைரஸ் காய்ச்சல், தற்பொழுது பரவி வருவ தால் காய்ச்சிய குடிநீரை வாடிக்கையாளா்க ளுக்கு வழங்க அறிவுரை வழங்கி னார்.

    தொடர்ந்து பழைய எண்ணையை மீண்டும் மீண்டும் பொறிப்ப தற்கு பயன்படுத்திய 2 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

    மழைக்காலம் முடியும் வரை தொடர் ஆய்வுகள் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் நடத்தப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்தார்.

    • அதிர்ச்சியடைந்த விடுதி வார்டன் உடனடியாக 5 மாணவர்களையும் ஆம்புலன்சு மூலமாக மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
    • சம்பவம் குறித்து கோட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள தொண்டாமுத்தூரில் அரசு ஆதிதிராவிடர் மாணவர் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் 34 மாணவர்கள் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

    நேற்று இரவு விடுதியில் 20 மாணவர்கள் மட்டும் இருந்தனர். விடுதியில் மாணவர்களுக்கு நேற்று இரவு 8.30 மணியளவில் சாப்பாடு, ரசம் மற்றும் முட்டை ஆகியவை உணவாக வழங்கப்பட்டது.

    இதில் விடுதியில் உள்ள திருப்பூர் உடுமலையை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர் சபரீஸ் (வயது 12), ஆனைமலை கரியன்செட்டிப் பாளையத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர் முத்துகணேஷ் (12), மீனாட்சிபுரத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் ஹரிகரன் (15), வால்பாறையை சேர்ந்த பிளஸ்-1 மாணவர் முனீஸ் (16), பொள்ளாச்சி காளிபாளையத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர் சிவபிரசாந்த் (12) ஆகிய 5 மாணவர்கள் மதியம் மீதி இருந்த பாசிப்பருப்பு குழம்பை எடுத்து சாப்பிட்டனர்.

    சிறிது நேரத்தில் 5 மாணவர்களுக்கும் வயிற்று வலியுடன் வாந்தி ஏற்பட்டது. இதனையடுத்து 5 மாணவர்களும் ஒருவர் பின் ஒருவராக மயங்கினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விடுதி வார்டன் உடனடியாக 5 மாணவர்களையும் ஆம்புலன்சு மூலமாக மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு டாக்டர்கள் மாணவர்களை பரிசோதனை செய்தபோது கெட்டுபோன உணவை மாணவர்கள் சாப்பிட்டதால் வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து டாக்டர்கள் மாணவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து கோட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • இதில் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த பழவாத்தான்கட்டளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு வழங்கும் திட்டத்தை சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

    இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் பூர்ணிமா, தாசில்தார் வெங்கடேஸ்வரன், வட்டார வளர்ச்சி ஆணையர் பூங்குழலி, பழவாத்தான்கட்டளை ஊராட்சி தலைவர் சந்திரசேகர், ஒன்றிய துணை தலைவர் கணேசன், தலைமை ஆசிரியர் சாந்தி மற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை திருமயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது
    • அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன உணவருந்தினார்

    புதுக்கோட்டை 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. புதுக்கோட்டை திருமயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மாணவ, மாணவிகளுடன் ஒன்றாக தரையில் அமர்ந்து உணவருந்தினார்.

    உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு (எ) சிதம்பரம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் , அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • காலை உணவு திட்டத்தை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார்.

    மன்னார்குடி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருக்குவளையில் உள்ள அரசு பள்ளியில் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தியதை தொடர்ந்து, மன்னார்குடி அடுத்த உள்ளிக்கோட்டை அருகே சம்மட்டிக்குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார்.

    இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையா மங்கலம் பாலு, ஒன்றிய செயலாளர்கள் முத்துவேல், சித்தேரி சிவா, இளைஞர் மாவட்ட துணை செயலாளர் முருகானந்தம், இளைஞர் அணி ஜெயகாந்தன், சிலம்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒரு மாணவ, மாணவிக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி ரவை, கோதுமை ரவை , சேமியா.
    • ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்கப்படுகிறது.

    திங்கட்கிழமை-காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவை உப்புமா;

    செவ்வாய்க்கிழமை -காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி,

    புதன்கிழமை -காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா பொங்கல், வெண் பொங்கல்.

    வியாழக்கிழமை -காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா உப்புமா, அரிசி உப்புமா, ரவா உப்புமா, கோதுமை ரவை உப்புமா.

    வெள்ளிக்கிழமை- காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, ரவா காய்கறி கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி ஆகியவை மாணவர்களுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

    ஒரு மாணவ, மாணவிக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி ரவை, கோதுமை ரவை , சேமியா.

    மேலும், அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்கள், சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் மற்றும் உள்ளூரில் கிடைக்கக்கூடிய காய்கறிகள், ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்கப்படுகிறது.

    • 25 லட்சம் பேருக்கு சுடச்சுட உணவு தயாரித்து வழங்கப்படும்.
    • ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் பொது மக்களை பங்கேற்க செய்யும் வகையில் அம்மா பேரவையின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கி விளம்பர லோகோவை இரு சக்கர வாகனங்களில் பொருத்தும் நிகழ்ச்சி அம்மா பேரவை சார்பில் மதுரை புறநகர் (தெற்கு)மேற்கு ஒன்றியம் குமா ரத்தில் நடைபெற்றது. சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் மரக்கன்றுகளை வழங்கி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.வி. கருப்பையா, எஸ்.எஸ். சரவணன், கே தமிழரசன், மாணிக்கம், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் இளங்கோவன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர்கள் வெற்றிவேல், தனராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமை யில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் மாநாடு முதலில் 25 ஏக்கரில் நடந்த திட்டமிடப் பட்டது. அதனை தொடர்ந்து 35 ஏக்கர், அதனைத் தொடர்ந்து 65 ஏக்கரில் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் 25 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள்.

    குறிப்பாக அவர்களுக்கு வழங்கப்படும் உணவு அவசரமாக தயாரிக்க கூடாது, சாதம் குழைவாக இருக்க வேண்டும் என்று ஒரு தாயைப் போல எங்களுக்கு அறிவுறுத்தி யுள்ளார்.

    அதேபோல் வருப வர்களுக்கு சுகாதாரம், குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட் டுள்ளது. தற்போது வாகனங்களை நிறுத்த மட்டும் 350 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் 25 லட்சம் பேருக்கு சுடச்சுட உணவு தயாரிக்கும் பணிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    ஆடி மாதம் என்பதால் காற்று அதிகமாக உள்ளது. அதனால் மைதானத்தில் தூசி ஏற்பட்டு தொண்டர்க ளுக்கு இடையூறு ஏற்படால் இருக்கும் வகையில் மைதானத்தில் 35 ஏக்கரில் தரையில் மேட் அமைக்கப் படுகிறது.

    மாநாட்டில் கழகத்திற்காக உழைத்த மூத்த நிர்வாகி களுக்கு பொன்னாடை அணிவித்து எடப்பாடியார் கவுரவிக்கிறார். இந்த மாநாட்டில் காலையில் மாநாட்டு பந்தலில் எடப்பாடியார் கட்சி கொடியினை ஏற்றும்போது தொண்டர் படைகள் ராணுவ சிப்பாய்கள் போல் மரியாதை அளிக்கிறார்கள்.

    ஸ்டாலின் நாட்டு மக்களுக்காக எதையும் செய்யவில்லை. ஆனால் தனது தந்தையார் புகழை பரப்புவதற்கும், கல்வெட்டு வைப்பதற்கும், தனது மகன் உதயநிதியை முதலமைச்சர் ஆக்குவதற்கும் தான் உழைத்து வருகிறார்.

    தமிழகத்தில் பள்ளிகளில் சாதி தீண்டாமை அதிகரித்து வருகிறது. இது வேதனை தரும் விஷயமாகும். மாமன்னன் படம் எடுத்த இயக்குனரை நேரில் பாராட்டுகிறார். ஆனால் நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் களையும், அதே போல் டெல்டா பகுதிகளில் பாதிப்படைந்த விவசாயி களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல முதல மைச்சருக்கு நேரமில்லை.

    சட்டமன்றத்தில் அம்மா வுக்கு நடந்த கொடுமை குறித்து எடப்பாடியார் விரிவாக வெளியிட்டுள் ளார். ஆனால் ஸ்டாலின் இதில் பச்சை பொய் பேசியிருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருத்துறைப்பூண்டி அரசு பள்ளியில் சரிவிகித உணவு கருத்தரங்கம் நடைபெற்றது.
    • சரிவிகித உணவின் மூலம் ஒருவர் ஆரோக்கிய வாழ்க்கை வாழ முடியும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சரிவிகித உணவு கருத்தரங்கம் நடைபெற்றது. பொறுப்பு தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை வகித்தார்.

    ஆசிரியர்கள் தெய்வ சகாயம், பாஸ்கரன், தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தனர்.

    ஆசிரியர் நடராஜன் வரவேற்றார்.

    வட்டார வளமைய சிறப்பு பயிற்சி ஜானகிராமன் பேசுகையில், சமச்சீர் உணவு அல்லது சரிவிகித உணவு என்பது வயதிற்கும், செய்யும் தொழிலுக்கும் ஏற்ற வகையில் அளவிலும் குணத்திலும் தேவைக்கேற்ற உணவுப் பொருள்களைக் கொண்டதாகும்.

    இவ்வுணவு உடலுக்கு வேண்டிய கலோரிகள், புரதம், தாது உப்புக்கள், வைட்டமின்கள் அனைத்தையும் போதுமான அளவு கொடுத்து சிறிதளவு எதிர்பாராத தேவைக்கும் பயன்படக்கூடிய அளவில் உணவுச் சத்துக்களைக் கொடுக்கிறது.

    சரிவிகித உணவின் மூலம் ஒருவர் ஆரோக்கிய வாழ்க்கை வாழ முடியும்.

    உடலின் இயக்கங்கள் சரிவர நடைபெற்று, உடல் நலமும் நல்ல முறையில் இருக்கும் என்றார்.

    நிகழ்ச்சியில் பாரம்பரிய அரிசியில் தயாரிக்கப்பட்ட கொழுக்க ட்டைகள் மாண வர்களுக்கு வழங்கப்பட்டது.

    ஆசிரியர் பிரபாகரன் நன்றி கூறினார்.

    ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சக்கரபாணி செய்து இருந்தார்.

    ஆசிரியர்கள் மீனாட்சி சுந்தரம், ஆடின் மெடோனா, அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டத்தில், கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப் படுவதாக உணவு பாது காப்பு அலுவலர்களுக்கு புகார்கள் வந்தது.
    • கலப்பட ஜவ்வரிசி, தரமற்ற உணவு பொருள் விற்றது, கலப்பட ஆயில் விற்றது உள்ளிட்ட இதர பொருட்களில் கலப்படமாக விற்ற 13 வழக்கில் ரூ. 75 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில், கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்கப் படுவதாக உணவு பாது காப்பு அலுவலர்களுக்கு புகார்கள் வந்தது.

    இதை யடுத்து சேலம் உணவு பாது காப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் ஆத்தூர், சங்க கிரி, இடைப்பாடி, மேட்டூர், ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்ட னர்.

    அதில், போலியானது, உணவுக்கு ஒவ்வாத கேடு தரக்கூடியது என்பது போன்ற உணவு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சேலம் வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, கடந்த மாதத்தில் 13 வழக்குகளில் ரூ. 75 ஆயிரம் அபராதம் விதித்து, வருவாய் அலுவலர் மேனகா உத்தரவிட்டார்.

    அதில், கலப்பட ஜவ்வரிசி, தரமற்ற உணவு பொருள் விற்றது, கலப்பட ஆயில் விற்றது உள்ளிட்ட இதர பொருட்களில் கலப்படமாக விற்ற 13 வழக்கில் ரூ. 75 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டது.

    • 70க்கும் அதிகமான தன்னார்வலர் உதவியுடன் சேவை அளிக்கப்படுகிறது.
    • மாதம் ஒருமுறை மருத்துவ சேவை, ஆண்டுக்கு நான்குமுறை புத்தாடைகள் வழங்கி வருகின்றனர்.

    திருப்பூர் :

    ஆதரவற்றவர்களுக்கும், மாற்றத்திறனாளிகளுக்கும் உணவளித்து சேவையாற்றும் அட்சயபாத்திரம் அமைப்பு 2019 நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. திருப்பூரில் 15 மண்டலங்களாக பிரித்து 70க்கும் அதிகமான தன்னார்வலர் உதவியுடன் சேவை அளிக்கப்படுகிறது. ஆதரவற்றவர், முதியோர், மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தினமும் காலை உணவு வழங்கப்படுகிறது. மாதம் ஒருமுறை மருத்துவ சேவை, ஆண்டுக்கு நான்குமுறை புத்தாடைகள் வழங்குவது, பராமரிப்பது என சேவையாற்றி வருகின்றனர்.

    அட்சய பாத்திரம் அமைப்பின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து ஆலோசிக்க சிறப்பு கருத்தரங்கு மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. மங்கலம், ஆண்டிபாளையம் பாரடைஸ் அரங்கில் அன்னம் பகிர்ந்திடு, சாய்ந்திட தோள்கொடு என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடந்தது.

    உலக நல வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு, அட்சயபாத்திரம் ஆலோசனை குழு தலைவர் மோகன்கார்த்திக் தலைமை வகித்தார். தலைவர் செந்தில்குமார், செயலாளர் நாகராஜன் ஆகியோர் சமூக பணிகளை விளக்கி பேசினர்.

    அறக்கட்டளையின் புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி வெளியே ஓட்டல்களில் உணவு ஆர்டர் செய்து ஏழைகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. இனி புதிய சமையல் கூடம் உருவாக்கி தரமான உணவு தயாரித்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தன்னார்வலர்கள் பங்களிப்புடன், இலவச இரவு நேர உணவு வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். அத்துடன் பொதுமக்கள், தொழிலாளர் பயன்பெறும் வகையில் குறைந்தவிலையில் மதிய உணவு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • முதியோர் இல்லத்தில் இனிப்பு மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
    • வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செல்வராஜ் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    திருப்பூர் :

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி திருப்பூர் மத்திய பேருந்து நிலைய தொ. மு.ச., ஆட்டோ நண்பர்கள் ஏற்பாட்டில் வசந்தம் முதியோர் இல்லத்தில் இனிப்பு மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செல்வராஜ் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    வாலிபாளையம் செயலாளர் மு.க. உசேன், தி.மு.க., மாநகர நிர்வாகிகள் சிவபாலன், திலகராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சசிகுமார், வாலிப்பாளையம் பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் சதிஷ்குமார் மற்றும் மாவட்ட, மாநகர பகுதி கழக நிர்வாகிகளும், மத்திய பேருந்து நிலைய தொ.மு.ச., ஆட்டோ நண்பர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    ×