search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு துறை"

    • பரமத்தி வேலுார் பகுதியில் செயல்பட்டு வரும் மீன் உணவு கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வகுமார் தணிக்கை மேற்கொண்டார்.
    • தற்பொழுது பரவி வருவ தால் காய்ச்சிய குடிநீரை வாடிக்கையாளா்க ளுக்கு வழங்க அறிவுரை வழங்கினார்.

    பரமத்திவேலுார்:

    உணவு பாதுகாப்பு மருந்து நிர்வாகத் துறை ஆணையா் உத்தரவின் பேரில், நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா அறிவுரையின் பேரில் பரமத்தி வேலுார் பகுதியில் செயல்பட்டு வரும் மீன் உணவு கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வகுமார் தணிக்கை மேற்கொண்டார்.

    பருவநிலை மாற்றத்தினால் வடிக்கையாளா்களுக்கு வைரஸ் காய்ச்சல், தற்பொழுது பரவி வருவ தால் காய்ச்சிய குடிநீரை வாடிக்கையாளா்க ளுக்கு வழங்க அறிவுரை வழங்கி னார்.

    தொடர்ந்து பழைய எண்ணையை மீண்டும் மீண்டும் பொறிப்ப தற்கு பயன்படுத்திய 2 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

    மழைக்காலம் முடியும் வரை தொடர் ஆய்வுகள் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் நடத்தப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்தார்.

    • நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
    • கடந்த நிதி ஆண்டில் நமது பாதுகாப்பு உற்பத்தி ரூ.ஒரு லட்சம் கோடியை தாண்டியது.

    பெங்களூரு :

    இந்திய ராணுவத்துறை சார்பில் பாதுகாப்பு துறையில் தன்னிறைவு அடைவது தொடர்பான குழு கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமை வகித்து பேசியதாவது:-

    பாதுகாப்பு துறையில் நமது தேவையை பூர்த்தி செய்வது மிக முக்கியமானது. இந்த நோக்கத்தில் பாதுகாப்பு துறையில் இந்தியா தற்சார்பு அடைவதை உறுதி செய்ய முயற்சி செய்து வருகிறோம். இது தொடர்பாக மத்திய அரசு முடிவுகளால் இலக்கை அடைகிறோம். நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

    உலக அளவில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள நமது ராணுவத்தில் தொழில்நுட்ப ரீதியாக நவீனமயத்தை அறிமுகம் செய்து வருகிறோம். ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு, நடப்பு ஆண்டில் உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்ய 75 சதவீத நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசின் தீவிர முயற்சிகளால் நீர்மூழ்கி கப்பல், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆயுதங்கள் உள்நாட்டில் சொந்த முயற்சியில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    நமது பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி நமது நாட்டின் தேவையை மட்டும் பூர்த்தி செய்யாமல், நமது நட்பு நாடுகளின் பாதுகாப்பு தேவைகளையும் பூர்த்தி செய்யப்படுகின்றன. கடந்த நிதி ஆண்டில் நமது பாதுகாப்பு உற்பத்தி ரூ.ஒரு லட்சம் கோடியை தாண்டியது. இதில் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

    இது நமது நாட்டின் பாதுகாப்புத்துறை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சி. பாதுகாப்பு துறையில் தன்னிறைவு அடையும் முயற்சிக்கு கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். நாம் பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாற வேண்டும் என்றால் நாம் அனைவரும் நாடு தான் முதன்மை என்ற ஒரு நிலைப்பாட்டில் நிற்க வேண்டும். அப்போது தான் தற்சார்பு நிலையை நாம் அடைய முடியும்.

    இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.

    • ஆளில்லா உளவு பார்க்கும் டிரோன்களின் சோதனை அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக பாதுகாப்பு துறையினர் தெரிவித்து உள்ளனர்.
    • இந்திய தொழில் நுட்பத்தில் உள்நாட்டிலேயே டிரோன்களை தயாரித்தால் செலவு கணிசமாக குறையும்.

    புதுடெல்லி:

    இந்திய ராணுவம் தற்போது பல நவீன ஆயுதங்களை தனது படைபிரிவில் சேர்த்து வருகிறது.

    மேலும் வெளிநாட்டு ஆயுதங்களை வாங்குவதற்கு பதில் அவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன்படி ராணுவத்தில் கண்காணிப்பு மற்றும் ஆய்வு பணிகளுக்கான டிரோன்களை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்து உள்ளது.

    இந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆளில்லா உளவு பார்க்கும் டிரோன்களின் சோதனை அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக பாதுகாப்பு துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    இச்சோதனையில் டிரோன்களின் செயல்பாடுகள் வெற்றிகரமாக அமைந்தால் அவற்றை ராணுவத்தில் இணைத்து கொள்வது பற்றி உயர் அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

    இதுபோல ராணுவத்துக்கு அதிக ஆயுதங்களை ஏந்தி செல்லும் ஆளில்லா விமானங்கள் தயாரிப்பிலும் டி.ஆர்.டி.ஓ. எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி வருகிறது. இதன் இறுதி கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

    இப்பணிகள் முடிந்ததும் வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதம் ஆளில்லா விமானத்தின் சோதனையும் நடைபெறும். இந்த விமானச்சோதனை வெற்றி பெற்றால் இந்தியா இதுபோன்ற பல விமானங்களை தயாரிக்கமுடியும்.

    டி.ஆர்.டி.ஓ. தயாரித்து வரும் ஆளில்லா விமானம் மூலம் சுமார் 300 கிலோ ஆயுதங்களை சுமந்து செல்ல முடியும். தரையில் இருந்து 28 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து செல்லவும், 18 மணி நேரத்திற்கு தடை இன்றி பறக்கும் விதத்திலும் இந்த விமானம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    தபஸ் பி.எச். என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமான தயாரிப்பும் வெற்றி பெற்றால் இந்திய ராணுவத்தில் டிரோன்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, அதன் கண்காணிப்பு திறனும் மேம்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்திய ராணுவத்திற்காக இப்போது அமெரிக்காவில் இருந்து நவீன டிரோன்கள் வாங்கப்பட உள்ளது. சுமார் 30 டிரோன்கள் வாங்க திட்டமிடப்பட்டது. இதற்கான செலவு 3 பில்லியன் டாலர் ஆகும். அதாவது இந்திய பண மதிப்பில் ரூ.24 ஆயிரம் கோடியாகும்.

    இதையே இந்திய தொழில் நுட்பத்தில் உள்நாட்டிலேயே டிரோன்களை தயாரித்தால் செலவு கணிசமாக குறையும். எனவே விரைவில் இதுபோன்ற உள்நாட்டு தயாரிப்புகளை தொடங்க டிஆர்.டி.ஓ. திட்டமிட்டு வருகிறது.

    • தற்போதைய செயலாளர் அஜய் குமார் பதவிக் காலம் நடப்பு ஆண்டு அக்டோபர் 31-ந்தேதியுடன் நிறைவடைகிறது.
    • வருவாய்த்துறை செயலாளராக சஞ்சய் மல்கோத்ரா நியமனம் செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் அடுத்த பாதுகாப்பு துறை செயலாளர் நியமனம் பற்றி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் செயலாளராக உள்ள அரமனே கிரிதர், நாட்டின் அடுத்த பாதுகாப்பு துறை செயலாளராக நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டின் பாதுகாப்பு துறை செயலாளராக தற்போது உள்ள அஜய் குமார் பதவிக் காலம் நடப்பு ஆண்டு அக்டோபர் 31-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து கிரிதர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். கிரிதருக்குப் பதிலாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவரான அல்கா உபாத்யாயா புதிய சாலை மற்றும் போக்குவரத்துச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதேபோன்று, வருவாய் துறை செயலாளர் தருண் பஜாஜ் பதவிக்காலம் வருகிற நவம்பர் 30-ந்தேதியுடன் நிறைவடைகிற சூழலில், நிதியமைச்சகத்தின் நிதி சேவை துறைக்கான செயலாளராக உள்ள சஞ்சய் மல்கோத்ரா, அடுத்து அந்த பதவியை வகிப்பார் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

    ×