என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதல்வரின் காலை உணவு திட்டம் தொடக்கம்
- புதுக்கோட்டை திருமயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது
- அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன உணவருந்தினார்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. புதுக்கோட்டை திருமயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மாணவ, மாணவிகளுடன் ஒன்றாக தரையில் அமர்ந்து உணவருந்தினார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு (எ) சிதம்பரம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் , அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






