என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர்களுடன் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அமர்ந்து உணவருந்தினார்.
அரசு பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய அமைச்சர் ராஜா
- காலை உணவு திட்டத்தை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடங்கி வைத்தார்.
- நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார்.
மன்னார்குடி:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருக்குவளையில் உள்ள அரசு பள்ளியில் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தியதை தொடர்ந்து, மன்னார்குடி அடுத்த உள்ளிக்கோட்டை அருகே சம்மட்டிக்குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையா மங்கலம் பாலு, ஒன்றிய செயலாளர்கள் முத்துவேல், சித்தேரி சிவா, இளைஞர் மாவட்ட துணை செயலாளர் முருகானந்தம், இளைஞர் அணி ஜெயகாந்தன், சிலம்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






