என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
    X

    அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் மகாபாரதி திடீர் ஆய்வு செய்தார்.

    அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் 'திடீர்' ஆய்வு

    • குழந்தைகளிடம் பாடல்களை பாட சொல்லி கேட்டு மகிழ்ந்தார்.
    • உரிய அளவீடு, தடிமனில் சாலை அமைக்கப்பட்டுள்ளதா என அதன் தரத்தை பரிசோதித்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அங்கு பயிலும் குழந்தை களின் கல்வித்திறனை பரிசோதிக்கும் வகையில் குழந்தைகளிடம் ரைம்ஸ் என்னும் பாடல்களை பாட சொல்லி கேட்டு மகிழ்ந்தார்.

    மேலும் மாணவர்களுக்கு வழங்க தயார் செய்யப்பட்ட உணவின் தரத்தினை ஆய்வு செய்தார்.

    அங்கன்வாடி மையத்தில் சமைக்க பயன்படுத்தும் பருப்பு மற்றும் அரிசி தரமாக உள்ளதா எனவும் ஆய்வு செய்தார்.

    இதேபோல், திருமலை நகரில் ரூபாய் 3.90 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வரும் சாலையில் தரத்தினை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

    உரிய அளவீடு, தடிமனில் சாலை அமைக்கப்பட்டு ள்ளதா என அமைக்கப்பட்ட சாலை ஊழியர்களைக் கொண்டு வெட்டிப் பார்த்து அதன் தரத்தை பரிசோதித்தார்.

    ஆய்வின் போது, சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் உதவி இயக்குனர் ஊராட்சிகள் மஞ்சுளா, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், ஒன்றிய ஆணையர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சட்டநாதபுரம் தட்சிணா மூர்த்தி, புங்கனூர் ஜூனைதா பேகம் கமாலுதீன், ஒன்றிய குழு உறுப்பினர் விசாகர் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×