என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞர் நூற்றாண்டு விழா வாழ்த்தரங்கம் விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
    X

    கலைஞர் நூற்றாண்டு விழா வாழ்த்தரங்கம் விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

    • விளையாட்டு மற்றும் மேம்பாட்டு துறைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு.
    • ஜல்லிக்கட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பாக வாதாட செய்து நல்ல தீர்ப்பு வாங்கி தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சென்னை:

    தி.மு.க. இலக்கிய அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாநில இலக்கிய அணி தலைவர் புலவர் இந்திரகுமாரி தலைமையில் மாநில செயலாளர் வி.பி. கலைராஜன் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

    தமிழாய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி தமிழால் வாழ்த்தரங்கம் நடத்துவது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க அழைப்பது. தொழில் துறையில் தமிழ்நாட்டை முதல் இரண்டு இடங்களுக்குள் கொண்டு வந்ததோடு கல்வி, மருத்துவம், மகளிர் நலன், விவசாயம், இளைஞர் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டை முதல் மாநிலமாக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது.

    விளையாட்டு மற்றும் மேம்பாட்டு துறைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மிகச்சிறந்த விளையாட்டு மைதானம் அமைப்பதுடன் ஆசிய ஆக்கி போட்டியை சென்னையில் நடத்தவும், முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளை நடத்தவும் அரும்பாடு பட்டு வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உழைப்பை பாராட்டுவதோடு அவரது தோளோடு தோள் நின்று கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுவது.

    ஜல்லிக்கட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பாக வாதாட செய்து நல்ல தீர்ப்பு வாங்கி தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் நந்தனம் நம்பிராஜன், ஈரோடு இறைவன், சந்திரபாபு, வெங்கடாசலம், தசரதன், ஆர்.எம்.டி. ரவீந்திரன், செந்தில், கே.எம். நாதன், திராவிட மணி, பிரம்மபுரம் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×