search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dinakaran"

    ஜெயலலிதா அறிவித்த தாய் சேய் நலப்பெட்டகம் நினைவாகவே பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்வு செய்தோம் என அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #AMMK #Dinakaran #GiftPack
    காஞ்சிபுரம்:

    டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. அதற்கு பின்னர் பொதுவான சின்னம் தேர்வு செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டள்ளது. அதன்படி டி.டி.வி. தினகரன் அணிக்கு பரிசு பெட்டகம் சின்னம் இன்று ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் காஞ்சிபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பரிசுப்பெட்டி சின்னத்தை அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:



    தேர்தல் ஆணையம் தனிச்சின்னம் அடங்கிய பட்டியலை அனுப்பி தேர்வு செய்ய கோரியது. அதற்காக 36 சின்னங்கள் அடங்கிய பட்டியலை எங்களுக்கு அனுப்பியது. அதில் பரிசு பெட்டகத்தை தேர்வு செய்தோம்.

    ஜெயலலிதா அறிவித்த தாய் சேய் நலப்பெட்டகம் நினைவாக பரிசு பெட்டகத்தை தேர்வு செய்தேன். மிகப் பெரிய போராட்டத்திறகு பிறகு பரிசு பெட்டகம் சின்னம் கிடைத்துள்ளது. 

    அமைச்சர் ஜெயக்குமார் எப்படி பேசுகிறாரோ, அதற்கு எதிராகவே மக்கள் வாக்களித்து வருகின்றனர். எனவே அவர் அப்படி பேசுவது எங்களைப் பொறுத்தவரை நல்ல சகுனம்தான் என தெரிவித்தார். #LokSabhaElections2019 #AMMK #Dinakaran #GiftPack
    பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளில் அ.ம.மு.க. வேட்பாளர் உள்பட 22 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
    பெரம்பலூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெறவுள்ளது. அந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கி, நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட சுயேச்சை வேட்பாளர்கள் காலை 11 மணி முதலே பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். அதன்படி சுயேச்சை வேட்பாளர்களான 21 பேர் தேர்தல் அதிகாரி சாந்தாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ.வும், கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான ராஜசேகரன் நேற்று மதியம் தனது கட்சிக்காரர்கள், கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ. கட்சிக்காரர்களுடன் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டாவில் இருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேட்பாளருடன் வேட்புமனுதாக்கல் செய்வதற்கு நான்கு பேரும் மட்டுமே செல்ல அனுமதித்தனர். பின்னர் வேட் பாளர் ராஜசேகரன், பெரம்பலூர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் கார்த்திகேயன், கட்சியின் மாநில விவசாய அணி துணை செயலாளர் செல்வகுமார், திருச்சி மாவட்ட அம்மா பேரவையின் செயலாளர் ராமு, பெரம்பலூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர் ரபீக் ஆகிய 4 பேருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான சாந்தாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து ராஜசேகரனுக்கு மாற்று வேட்பாளராக, அ.ம.மு.க.வின் திருச்சி மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ராஜாராமநாதன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    ஏற்கனவே பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக அ.தி.மு.க. வேட்பாளர் சிவபதி, தி.மு.க. கூட்டணி கட்சியான இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாந்தி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் முத்து லட்சுமி மற்றும் 4 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். பாரிவேந்தருக்கு மாற்று வேட்பாளராக, அவரது மகன் ரவி பச்சமுத்து வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

    நேற்று மட்டும் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ராஜசேகரன் மற்றும் 21 சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 22 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ஜனநாயக கட்சி, அ.ம.மு.க.வின் மாற்று வேட்பாளர்களை தவிர்த்து பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட மொத்தம் 30 வேட்பாளர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் வேட்பாளர்களில் சிலர் ஒரு வேட்பு மனுவிற்கு பதிலாக கூடுதலாக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ததில் மொத்தம் 41 வேட்பு மனுக்கள் வந்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னம் தரமுடியாது என சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. #ElectionCommission #dinakaran #supremecourt
    புதுடெல்லி:

    தலைமை தேர்தல் கமிஷன் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ந்தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அணியை அதிகாரப்பூர்வ அ.தி.மு.க.வாக அறிவித்து, அந்த அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது.

    இதை எதிர்த்து டி.டி.வி.தினகரன் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை தற்போது டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் டி.டி.வி.தினகரன் இடைக்கால மனு ஒன்றை டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில், தான் ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டி, உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் விதத்தில் இரட்டை இலை சின்னம் வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை தனக்கு பிரஷர் குக்கர் சின்னத்தை ஒதுக்கும் படியும், தனது அணிக்கான பெயரை தான் குறிப்பிட்டுள்ள 3 பெயர்களில் இருந்து ஒன்றை அனுமதிக்கும்படியும் தேர்தல் கமிஷனுக்கு கோர்ட்டு உத்தரவிடக்கோரி இருந்தார்.

    அவருடைய இந்த கோரிக்கையை டெல்லி ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டு, பிரஷர் குக்கர் சின்னத்தை டி.டி.வி. தினகரனுக்கு ஒதுக்கீடு செய்யும்படி தேர்தல் கமிஷனுக்கு கடந்த ஆண்டு மார்ச் 9-ந்தேதி உத்தரவிட்டது.

    டெல்லி ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மதுசூதனன் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி ஏ.எம். கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் டி.டி.வி. தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னத்தை ஒதுக்க டெல்லி ஐகோர்ட்டு ஆணை பிறப்பித்தது தவறு என்று கூறி, அந்த உத்தரவுக்கு கடந்த ஆண்டு மார்ச் 28-ந்தேதி இடைக்கால தடை விதித்தது.

    அத்துடன், சுப்ரீம் கோர்ட்டில் இந்த பிரச்சினை மீது அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் வரை பிரஷர் குக்கர் சின்னத்தை டி.டி.வி. தினகரன் தலைமையிலான அணி பயன்படுத்தக்கூடாது என்றும் நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கட்சி பதிவு செய்யப்படாததால், டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க.வுக்கு பொதுச்சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் இந்திய தேர்தல் ஆணையம் வாதம் செய்தது.  இதைத்தொடர்ந்து விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை தர முடியாது என உச்சநீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அ.ம.மு.க. பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் பொது சின்னத்தை வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ElectionCommission #dinakaran #supremecourt
    தேனி தொகுதியில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தெரு, தெருவாக பணத்தை அள்ளி இரைக்கிறார்கள் என்று தங்க. தமிழ்ச்செல்வன் புகார் தெவித்துள்ளார். #thangatamilselvan #opanneerselvam #dinakaran

    குன்னம்:

    பெரம்பலூரில் அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேனி பாராளுமன்ற தொகுதியில் எனக்கு மக்கள் மிகப்பெரிய வெற்றியை தருவார்கள் என நம்புகிறேன். தேர்தல் ஆணையம் நியாயமாக நடந்தால் நல்லது. ஆளும் கட்சிக்கு உடனே ரிசல்ட் கொடுக்கிறார்கள். எங்கள் கட்சியை நசுக்க பார்க்கிறார்கள்.

    ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பணத்தை அள்ளி இரைக்கிறார்கள். தெரு, தெருவாக ரோட்டில் பணத்தை போட் டுக்கொண்டே போகிறார்கள். அந்த அளவுக்கு அத்துமீறல் நடக்கிறது. ஆனால் போலீசார் வேடிக்கை பார்க்கிறார்கள்.


    கலெக்டர் இதனை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தில்பாலாஜி, கலைராஜன் ஆகியோர் போனது எங்கள் இயக்கத்திற்கு பெரிய இழப்பு இல்லை. தேனி பகுதியில் 25 ஆண்டுகளாக பணி செய்துள்ளேன். எனக்கு மக்கள் ஆதரவு தருவார்கள்.

    பணம் மட்டுமே முதலீடாக வைத்து தேர்தலை பார்க்க முடியாது. பணத்தை கொடுத்தால் யாரும் ஓட்டு போடமாட்டார்கள். மக்கள் மனநிலை நேரத்திற்கு ஏற்ப மாறும். பணம், அதிகாரத்தை வைத்து வெற்றி பெற முடியாது. பா.ஜ.க., அ.தி.மு.க. அரசுக்கு மக்களிடம் நல்ல பெயர் இல்லை.

    ஜாக்டோ-ஜியோ அமைப்பின் 9 அம்ச கோரிக்கைகளை பரிசீலனை செய்வோம் என தேர்தல் அறிக்கை வெளியிட்டது அ.ம.மு.க. மட்டுமே தான். எத்தனை ஆண்டுகளாக ஜாக்டோஜியோ அமைப்பினர் போராடுகிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சியும் ஏன்? அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து தேர்தல் அறிக்கையில் வெளியிடவில்லை.

    எங்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் நல்ல மெஜாரிட்டி உள்ளது. தற்போது மிகப் பெரிய அரசியல் மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அந்த மாற்றத்தை மக்கள் ஓட்டு போட்டு தருவார்கள்.

    புல்வாமா தாக்குதல் குறித்து தேர்தல் ஆணையம் பேசக்கூடாது என தடை போட்டுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் பேசி வருகின்றனர். இது தேர்தல் விதிமீறல்.

    இதனால் முதல்வர், அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு துணிவிருக்கிறதா? 100 சதவீதம் குக்கர் சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கும். குக்கர் சின்னம் கிடைக்கா விட்டால் தனித்தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். இந்த தேர்தலில் டி.டி.வி. அலை வீசுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan #opanneerselvam #dinakaran

    பாராளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று கடலூரில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார். #dinakaran #parliamentelection

    கடலூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மக்கள் சந்திப்பு பயணத்தை நடத்தி வருகிறார். நேற்று மாலை அவர் கடலூர் உழவர் சந்தை, ரெட்டிச்சாவடி, குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி போன்ற பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தார்.

    பொதுமக்கள் மத்தியில் திறந்த ஜீப்பில் நின்றபடி டி.டி.வி. தினகரன் பேசினார்.

    வருகிற ஏப்ரல் மாதம் இறுதியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிந்தவுடன் தமிழகத்தில் உள்ள 21 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிறது. பாராளுமன்ற தேர்தல் வர இருக்கும் சமயத்தில் இன்று கூட்டணி என்ற நாடகம் கடந்த ஒரு வாரமாக நடப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்.

    தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை செலுத்துவதை விட எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் அமைச்சர் பொறுப்பை வாங்கி தங்கள் நிலையை பாதுகாத்து கொள்ள தங்களை பலப்படுத்திக் கொள்ள ஒரு கூட்டணியை அ.தி.மு.க. அமைத்து உள்ளது.

    தமிழகத்தை வஞ்சிக்கிற மத்திய பாரதீய ஜனதா கட்சியும், தமிழக மக்களால் வெறுக்கப்பட்டு உள்ள ஆளுங்கட்சியும், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு குற்றவாளி என்றும் தற்போது உயிரோடு இருந்திருந்தால் அவர் சிறைச்சாலையில் இருந்து இருப்பார் என்றும் தவறாக பேசியவர்களும் கூட்டணி வைத்துள்ளார்கள்.

    காவிரி டெல்டா பகுதியில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் மக்களை அச்சுறுத்தும் திட்டமான மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவைகளுக்கு அனுமதி தந்தது காங்கிரஸ் ஆட்சி. இதனை அனுமதித்தது தி.மு.க. ஆட்சி. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்து தொடங்கி வைத்தார். ஆனால் ஜெயலலிதா இந்த திட்டத்தை வராமல் மக்கள் நலன் கருதி தடுத்தார்.

    ஆனால் ஜெயலலிதா பெயரை சொல்லி ஆட்சி நடத்துபவர்கள் மத்திய அரசுக்கு பணிந்து விட்டனர். தமிழகத்தில் பா.ஜ.க.வின் கிளை கட்சியாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

    தற்போது தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி 2 முறை வந்து விட்டார். ஆனால் கஜா புயல் தாக்கியபோது மக்கள் பாதிக்கப்பட்டபோது வராதவர்கள் தற்போது வாக்குகளுக்காக வருகிறார்கள். அவர்களை நீங்கள் முறியடிக்க வேண்டும்.

    ஜெயலலிதா இருக்கும்போது கடலூர் பாராளுமன்ற தொகுதி உள்பட 37 தொகுதியில் வேட்பாளர்களை வெற்றி பெற செய்தீர்கள். அதுபோல 95 சதவீதம் தொண்டர்களை வைத்திருக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. குக்கர் சின்னத்தில்தான் போட்டியிடும். எத்தனை சதி நடந்தாலும் உச்சநீதிமன்றம் சென்று இந்த சின்னத்தை பெறுவோம். இளைஞர்களும், மக்களும் எங்களுடன் இருப்பதால் வேறு கூட்டணி தேவையில்லை.

    வரும் தேர்தலில் பிரதமரை நிர்ணயம் செய்பவர்கள் தமிழக மக்களாகத் தான் இருப்பார்கள். அப்படியொரு வாய்ப்பினை அ.ம.மு.க.வினருக்கு பொதுமக்கள் வழங்க வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார். #dinakaran #parliamentelection

    பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. இரண்டாக பிரிந்து உள்ளதால் நிச்சயமாக தினகரன் பெரும்பாலான ஓட்டுக்களை பிரிப்பார் என்று கருணாஸ் எம்எல்ஏ கூறியுள்ளார். #Karunas #dinakaran #admk

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த கருணாஸ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற 27-ந்தேதி சென்னையில் நடக்கும் கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை யாருக்கு ஆதரவு என்பது குறித்து முடிவு எடுக்கும். அது மக்கள் நலன் சார்ந்ததாகவே நிச்சயம் இருக்கும்.

    ஏற்கனவே நான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளதால் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து அதில் ஏற்பட்டுள்ள சட்ட சிக்கல் குறித்து கலந்தாலோசனை செய்து அதன் பிறகு ஒரு முடிவு எடுக்கப்படும்.

    பதவி என்பது மக்கள் கொடுத்தது. மக்களுக்காக எதையும் இழக்க நான் தயாராக உள்ளேன். மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் வாக்குகளை பெற்று எம். எல்.ஏ.வாக வருவேன்.

    வரும் பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. இரண்டாக பிரிந்து உள்ளதால் நிச்சயமாக தினகரன் பெரும்பாலான ஓட்டுக்களை பிரிப்பார். அது அ.தி.மு.க.விற்கு பாதகமாக அமையும்.


    கழகங்கள் இல்லாத தமிழகம் என்று கூறி வந்த பா.ஜ.க., அ.தி.மு.க.வோடு கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் என்ன? அவர்கள் தனித்து நிற்க வேண்டியது தானே.

    இதேபோன்று கடந்த மாதம் வரை பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வந்தது. அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் புகார் மனுவும் அளித்துள்ளனர். அவர்கள் தற்போது அ.தி. மு.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன? தைலாபுரத்தில் நடந்த விருந்தின் பின்னணி மற்றும் மர்மம் என்ன?

    மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைப்பதில் மத்திய மாநில அரசுகள் அரசியல் செய்து வருகிறது. உடனடியாக விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்காவிட்டால் வரும் பாராளுமன்ற தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயம் மத்திய, மாநில அரசுக்கு தகுந்த பதில் அளிப்பார்கள்

    அனைத்து அரசியல் கட்சிகளும் தினகரனின் வளர்ச்சியை பொறுக்காமல் அவரை பலவீனப்படுத்த நினைக்கின்றனர். ஆனால் அவர் மேலும் பலம் பெற்று தான் வருகிறார். அவரை பா.ஜ.க. திகார் ஜெயிலுக்கு அனுப்பாமல் இருந்திருந்தால் அவர் அரசியலுக்கு வந்திருக்க மாட்டார்.

    நான் தமிழன் என்று சொல்வதில் அது மட்டுமே தகுதியாக இருக்கிறது என்று கமல் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழன் என்று கூறுவது தான் தகுதி என்றார். #Karunas #dinakaran #admk

    தி.மு.க.- தினகரன் அணியுடன் கூட்டணி இல்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். #kamal #dmk #ttvdinakaran #parliamentelection

    சென்னை:

    சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் பள்ளியில் ரோட்டராக்ட் கிளப் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ‘தமிழகம் என்னும் குழந்தை தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதை யாரும் தட்டிக் கொடுக்கவும் இல்லை; கொஞ்சவும் இல்லை. ரத்தம் வந்தால் அதை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும், உடனடியாக அறுவை சிகிச் சைக்காக செல்ல முடியாது. 44 பேர் இறந்துள்ளனர்.

    உங்களது பெற்றோர் உங்களை ராணுவத்துக்குச் செல்ல வேண்டாம் என்றால், அவர்களிடம் சொல்லுங்கள், ராணுவத்தில் உயிரிழப்பவர்களைவிட தமிழகத்தில் சாலை விபத்தில் உயிர் இழப்பவர்கள்தான் அதிகம் என்று.

    ராணுவ வீரர்கள் இறப்பதற்குதான் ராணுவத்துக்கு வருகிறார்கள் என்கிறார்கள். ராணுவ வீரர்கள் சாக வேண்டும் என்ற அவசியமில்லை. இரண்டு நாட்டின் தலைவர்களும் அமர்ந்து பேசினால், ராணுவ வீரர்கள் உயிரிழக்க வேண்டிய தில்லை.

    இந்த ஒரு வருடத்தில் எதை எதை செய்யக் கூடாது என்பதை தெரிந்து கொண்டேன். அரசியலில் என்ன செய்யக்கூடாது என்பதை எனக்கு முன்பாக அரசியலில் உள்ளவர்கள் கற்றுக்கொடுத்தனர்.

    பொதுஅறிவு கூட இல்லாதவர்கள் தலைவர்களாக இருக்கிறார்கள்.

    கூட்டணி என்னும் கறுப்புக் குட்டைக்குள் எனது புது காலணியை அழுக்காக்க விரும்பவில்லை. மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அது தமிழகத்தை பாதிக்கும். கட்சியைத் தொடங்கிவிட்டு தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று சொல்வது முறையல்ல.

    கிராம சபைக் கூட்டம் என்று இருப்பது உங்களுக்குத் தெரியாதா. நேற்று வந்த பையனைப் பார்த்து காப்பி அடிக்க வெட்கமாக இல்லையா?’’.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கமல் கலந்துரையாடலுக்கு பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

    கேள்வி:- தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்க காரணம் என்ன?

    பதில்:- தி.மு.கவை கடுமையாக விமர்சிக்க, தி.மு.கவே காரணம், மறைமுகமாக அல்ல நேரடியாக விமர்சிப்பேன். கூட்டணியில் இடம்பெற முடியாத தால் தி.மு.கவை விமர்சிக்க வில்லை.

    கே:- டி.டி.வி தினகரனுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் வருகிறதே?

    ப:- அந்த தகவல் உங்களுக்கு வேண்டுமானால் நல்ல தகவலாக இருக்கலாம். எனக்கு அல்ல.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். #kamal #dmk #ttvdinakaran #parliamentelection

    பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. வெற்றி பெறும் என்று அந்த கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. அந்தியூரில் நடந்த மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தில் பேசினார். #Dinakaran #Parliamentelection #AMMK
    அந்தியூர் :

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தை ஈரோடு மாவட்டத்தில் நடத்தி வருகிறார். அதன்படி அவர் நேற்று இரவு அந்தியூருக்கு சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் திறந்த வேனில் நின்றபடி பேசினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

    அந்தியூர் அருகே உள்ள மணியாச்சி ஓடைநீரை வரட்டுப்பள்ளம் அணை உள்பட 7 ஏரிகளுக்கு கொண்டுவரவேண்டும். பர்கூர் மலைப்பகுதியின் மேற்கு பகுதியில் உள்ள மலைக்கிராமங்களுக்கு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும். மேட்டூர் வலதுகரை வாய்க்கால் உபரிநீரை அந்தியூர் பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு கொண்டு வரவேண்டும் ஆகியவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் என்னிடம் தெரிவித்து உள்ளனர். அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அந்தியூர் பகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

    அந்தியூரில் திறந்த வேனில் நின்றபடி டி.டி.வி.தினகரன் பேசியபோது எடுத்த படம்.

    தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் குடிநீர் பிரச்சினை உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளாமல் தண்ணீரை அரசு வீண் செய்கிறது. இதனால் தான் குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது. மழைநீரை சேமிக்க நடவடிக்கை மேற்கொண்டால் நாம் கர்நாடக மாநிலத்தில் தண்ணீருக்கு கை ஏந்த வேண்டிய நிலை இருக்காது.

    தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் தங்களுடைய குறைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்தினர். அவர்களை அழைத்து பேசாமல் அதிகாரத்தில் உள்ளவர்கள் மிரட்டி வருகிறார்கள். தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போராட்டம் நடைபெறுகிறது. ஆனால் அவற்றை அரசு கண்டு கொள்வதில்லை. மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். எனவே எப்போது பாராளுமன்ற தேர்தல் வந்தாலும் தமிழ்நாட்டில் அ.ம.மு.க. வெற்றி பெறும்.

    இவ்வாறு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.

    இதேபோல் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை வாரச்சந்தையில் நடந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார். #Dinakaran #Parliamentelection #AMMK
    வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வினர் வெற்றி பெறுவோம் என்ற கனவில் மிதக்கிறார்கள். அவர்களால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது என்று தினகரன் கூறியுள்ளார். #dinakaran #parliamentelection #admk #mkstalin

    சத்தியமங்கலம்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஏழை தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு தலா 2 ஆயிரம் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இது தவறில்லை ஆனால் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன்?

    விவசாய விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு எங்கள் கட்சி ஆதரவு அளிக்கும். நாங்கள் எப்போதும் விவசாயிகளின் நண்பனாகவே இருப்போம்.

    பட்ஜெட்டில் தூர்வார 300 கோடி ஒதுக்கி இருப்பதாக கூறுகிறார்கள். மேட்டூர் அணை நீர் கடலில் கலந்ததுதான் மிச்சம். ஜெயலலிதா எந்தெந்த திட்டங்களை எதிர்த்தாரோ..அதையெல்லாம் இந்த அரசு ஆதரிக்கிறது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வினர் வெற்றி பெறுவோம் என்ற கனவில் மிதக்கிறார்கள். அவர்களால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது மக்கள் கொஞ்சம்.. கொஞ்சமாக நம்பிக்கை இழந்து வருகின்றனர்.


    திருவாரூர் சட்டசபை தொகுதி இடை தேர்தலில் ஒன்றிய செயலாளரை தான் அவர் போட்டியிட முடிவு செய்தார். இதனால் அவர் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்.

    இவ்வாறு தினகரன் கூறினார். #dinakaran #parliamentelection #admk #mkstalin

    வருகிற பாராளுமன்ற-சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்று தினகரன் பேசினார். #dinakaran #parliamentelection #assemblyelection

    அரக்கோணம்:

    வேலூர் மாவட்டம் அரக்கோணம், அம்மனூர், தக்கோலம், நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அ.ம.மு.க. சார்பில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் நடந்தது.

    இதில், சிறப்பு அழைப்பாளராக அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு, கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:-

    தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சியும், துரோக ஆட்சியும் நடைபெற்று வருகிறது. எனவே, பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வினரை தோற்கடியுங்கள்.

    விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், அரசு ஊழியர்கள் உட்பட பலர் அ.ம.மு.க.வை ஆதரித்து வாக்களியுங்கள்.

    அப்போதுதான், ஜெயலலிதாவின் மக்கள் ஆட்சி அமைக்க முடியும் என்றார்.

    இதில் முன்னாள் எம்.பி. கோபால், வேலூர் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் என்.ஜி.பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர். #dinakaran #parliamentelection #assemblyelection

    அ.தி.மு.க.வினர் எந்த கூட்டணி அமைத்தாலும் ஒரு தொகுதியில் கூட அவர்களுக்கு டெபாசிட் கிடைக்காது என்று தினகரன் தெரிவித்துள்ளார். #dinakaran #admk #parliamentelection

    ரிஷிவந்தியம்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் மேற்கொண்டு வந்தார்.

    கடந்த 6-ந்தேதி தொடங்கிய இவரது புரட்சி பயணம் நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று மாலை தியாகதுருகம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, மேல்நாரியப்பனூர், வடக்குநந்தல், ஆலத்தூர், சங்கராபுரம், பாவலம் ஆகிய இடங்களில் பேசினார். பகண்டை கூட்ரோடு பகுதியில் நள்ளிரவு 1 மணிக்கு திறந்தவேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் பேசினார்.


    இன்றைய முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆட்சி செய்வதற்கு காரணமாக இருந்த நமது கழக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும், எனக்கும் துரோகம் செய்த காரணத்தால் பிரபு எம்.எல்.ஏ. போன்று தமிழ்நாட்டிலுள்ள தொண்டர்கள் அனைவரும் அ.ம.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். ஜெயலலிதாவின் பெயரை சொல்லி ஆட்சி செய்பவர்கள் தொகுதி மக்களின் தேவைகளை சரிவர செய்யவில்லை.

    பட்ஜெட்டில் பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி உள்ளார்கள். ஆனால், ரிஷிவந்தியம் தொகுதியை ஆட்சியாளர்கள் திட்டமிட்டு புறக்கணித்துள்ளனர். மழை இல்லாத காரணத்தால் விவசாயிகள் அண்டை மாநிலங்களுக்கு பிழைப்பு தேடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் ஒரு கோடிக்கு மேல் படித்த மாணவ-மாணவிகள் வேலை இல்லாமல் திண்டாடுகிறார்கள். அரசு சார்ந்த கரும்பு ஆலைகளும், தனியார் கரும்பு ஆலைகளும், விவசாயிகளின் கரும்பு நிலுவைத் தொகையை வழங்காததால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

    மேட்டூர் அணை நிரம்பி கடலுக்கு செல்லும் நீரை முறையாக சேமித்து விவசாயத்துக்கு பயன்படுத்த இந்த ஆட்சியாளர்கள் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

    அவர்கள் எல்லோரும் பணத்தை கொள்ளையடிப்பதிலேயே குறிக்கோளாக உள்ளனர். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. காதில் பூ சுற்றுவதுபோல் பட்ஜெட்டில் பல திட்டங்களை அறிவித்துள்ளார்கள்.

    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் செய்தால் அவர்களை அடக்குகிறார்கள். ஆனால் இவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்காமலேயே அவர்களது சம்பளத்தை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கி உள்ளனர்.

    தற்போது தமிழகத்தின் கடன் ரூ.4 லட்சம் கோடி உள்ளது. இதையெல்லாம் சரி செய்யாமல் டாஸ்மாக்கில் இருந்து வருகிற வருமானத்தால் ஆட்சியை ஓட்டிவிடலாம் என்று பகல் கனவு காணுகின்றனர்.

    ஜெயலலிதா 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பேன் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போதுள்ள ஆட்சியாளர்கள் மதுக்கடையை குறைக்காமல் வருமானத்தை அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு நமக்கு சாதகமாக வரும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த தீர்ப்பு நமக்கு சாதகமாக வரவில்லை. எனவே வருகிற பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மக்கள் தீர்ப்பு அளிக்க உள்ளனர்.

    சட்டமன்ற இடைத்தேர்தலில் எட்டு தொகுதிகளில் வெற்றி பெறவில்லை என்றால் ஆளுங்கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்து விடும்.

    அ.தி.மு.க.வினர் எந்த கூட்டணி அமைத்தாலும் ஒரு தொகுதியில் கூட அவர்களுக்கு டெபாசிட் கிடைக்காது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரிஷிவந்தியம் தொகுதியில் ஐ.டி.ஐ. தொழிற்சாலை கொண்டு வருவோம். 24 மணி நேரமும் செயல்படும் கூடுதல் ஆஸ்பத்திரி அமைக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு பஸ் போக்குவரத்து செய்து கொடுப்போம். பகண்டை கூட்ரோட்டில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும். அனைத்து ஏரிகளையும் தூர்வாரி, நீர்நிலைகளில் நீரை சேமிக்க வழிவகை செய்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #dinakaran #admk #parliamentelection

    துரோகிகளுக்கு பாடம் புகட்ட மக்கள் தேர்தலை எதிர்பார்க்கிறார்கள் என்று டிடிவி தினகரன் பேசினார். #dinakran #parliamentelection #admk #pmmodi

    கள்ளக்குறிச்சி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடந்த 6-ந்தேதி முதல் விழுப்புரம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    3-வது நாளான நேற்று கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சித்தலூருக்கு வந்த அவர் திறந்தவேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

    தியாகதுருகத்தில் இருந்து சித்தலூர் வரை உள்ள சாலை, போக்குவரத்துக்கு உகந்ததாக இல்லை. காரணம் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நியாயத்தின் பக்கம் இருப்பதால், சாலையை சீரமைக்காமல் மக்கள் விரோத ஆட்சியாளர்கள் இருந்து வருகிறார்கள். மக்கள் வெறுக்கும் இந்த ஆட்சி தொடரக்கூடாது என்பது தான் தமிழக மக்களின் எண்ணமாக உள்ளது.

    இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர நல்லதொரு சந்தர்ப்பமாக விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலோடு, 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் வர இருக்கிறது. அந்த 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறாது.

    தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்வது உங்கள் கைகளில் தான் உள்ளது. காரணம் வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மத்தியில் அதிக பெரும்பான்மை கிடைக்க போவதில்லை. இதனால் தமிழக மக்களாகிய நீங்கள் இந்தியாவின் பிரதமரை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளீர்கள். உங்கள் வாக்குகளை வீணடிக்காமல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து எங்களை வெற்றி பெற செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் நாங்கள் போராடுவோம்.

    இவ்வாறு டி.டி.வி.தினகரன் பேசினார்.

    அதனை தொடர்ந்து டி.டி.வி.தினகரன் சின்னசேலம் பஸ் நிலையத்தில் திறந்த வேனில் நின்றபடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    உச்சநீதிமன்றத்தின் 47 பக்க தீர்ப்பில் நமக்கு சாதகமாகத்தான் உள்ளது. தொடர்ந்து உரிமைக்காகவும், மக்களின் நலனுக்காகவும் போராடுவோம். குக்கர் சின்னம் நமக்குதான். ஆனால், விரைவில் அ.தி.மு.க. கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் முடக்கி விடுவார்கள்.

    தமிழகம் முழுவதும் நமக்கு மக்கள் பெரும் ஆதரவையும், வரவேற்பையும் தருகிறார்கள். நியாயத்தின் பக்கம் மக்கள் இருக்கிறார்கள். துரோகிகளுக்கு பாடம் புகட்ட தேர்தலை எதிர்பார்க்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #dinakran #parliamentelection #admk #pmmodi

    ×