search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gift pack"

    பாராளுமன்ற தேர்தலில் தினகரனுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பரிசு பெட்டி சின்னமானது காலி பெருங்காய டப்பா என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார். #LokSabhaElections2019 #ADMK #RBUdhayakumar
    மதுரை:

    தேனி பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் உசிலம்பட்டி பகுதிகளில் இன்று கிராமம், கிராமமாக சென்று ஆதரவு திரட்டி பிரசாரம் செய்தார்.

    அவருடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நீதிபதி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் சென்றனர். அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    அ.தி.மு.க. அரசு மக்களுக்கு செய்துள்ள சாதனைகளை எடுத்துக்கூறி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறது. ஆனால் தி.மு.க.வினர் தனி நபர் விமர்சனம் செய்து ஓட்டு கேட்கிறார்கள். இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    ஜெயலலிதா மீது வழக்குகளை போட்டு தொல்லை கொடுத்த தி.மு.க.வினர் இப்போது ஜெயலலிதா மீது பரிதாபம் காட்டுகிறார்கள்.

    மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா மரணத்தை வைத்து அரசியல் நடத்த பார்க்கிறார். அ.தி.மு.க.வை அழிக்கப்போவதாக கூறிய டி.டி.வி. தினகரன் வருகிற பாராளுமன்ற தேர்தலோடு காணாமல் போய் விடுவார். அவருக்கு “பரிசு பெட்டி” சின்னம் கிடைத்துள்ளது. அந்த பரிசு பெட்டி காலி பெருங்காய டப்பா. அது தோற்கிற சின்னம். இரட்டை இலை சின்னம் தான் வெற்றி மகுடம் சூடும் சின்னமாகும்.

    எனவே தேனி பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. பெறும் வெற்றி டெல்லியில் எதிரொலிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #ADMK #RBUdhayakumar
    ஜெயலலிதா அறிவித்த தாய் சேய் நலப்பெட்டகம் நினைவாகவே பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்வு செய்தோம் என அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #AMMK #Dinakaran #GiftPack
    காஞ்சிபுரம்:

    டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. அதற்கு பின்னர் பொதுவான சின்னம் தேர்வு செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டள்ளது. அதன்படி டி.டி.வி. தினகரன் அணிக்கு பரிசு பெட்டகம் சின்னம் இன்று ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் காஞ்சிபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பரிசுப்பெட்டி சின்னத்தை அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:



    தேர்தல் ஆணையம் தனிச்சின்னம் அடங்கிய பட்டியலை அனுப்பி தேர்வு செய்ய கோரியது. அதற்காக 36 சின்னங்கள் அடங்கிய பட்டியலை எங்களுக்கு அனுப்பியது. அதில் பரிசு பெட்டகத்தை தேர்வு செய்தோம்.

    ஜெயலலிதா அறிவித்த தாய் சேய் நலப்பெட்டகம் நினைவாக பரிசு பெட்டகத்தை தேர்வு செய்தேன். மிகப் பெரிய போராட்டத்திறகு பிறகு பரிசு பெட்டகம் சின்னம் கிடைத்துள்ளது. 

    அமைச்சர் ஜெயக்குமார் எப்படி பேசுகிறாரோ, அதற்கு எதிராகவே மக்கள் வாக்களித்து வருகின்றனர். எனவே அவர் அப்படி பேசுவது எங்களைப் பொறுத்தவரை நல்ல சகுனம்தான் என தெரிவித்தார். #LokSabhaElections2019 #AMMK #Dinakaran #GiftPack
    அனைத்து வாக்காளர்களிடமும் பரிசு பெட்டகம் சின்னத்தை கொண்டு சென்று வெற்றி பெறுவோம் என்று தேனி பாராளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். #LokSabhaElections2019 #AMMK #ThangaTamilselvan #GiftPack
    ஆண்டிப்பட்டி:

    டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. அதற்கு பின்னர் பொதுவான சின்னம் தேர்வு செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி டி.டி.வி. தினகரன் அணிக்கு பரிசு பெட்டகம் சின்னம் இன்று ஒதுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தேனி பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனிடம் டெலிபோனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    எங்களிடம்தான் பூத் கமிட்டி உள்பட அனைத்து வேலைகளுக்கும் நிர்வாகிகள் உள்ளனர். அடிமட்ட தொண்டனும் அ.ம.மு.க.விடம் உள்ளனர். எனவே எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சின்னம் ஒரு பெரிதல்ல. ஆனாலும் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றியே தீருவோம்.



    தற்போது பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கியது மகிழ்ச்சியளிக்கிறது. இதனை அனைத்து வாக்காளர்களிடமும் கொண்டு சென்று வெற்றி பெறுவோம். எங்களுக்குதான் மக்கள் செல்வாக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #AMMK #ThangaTamilselvan #GiftPack
    ×