search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Death Sentence"

    பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் கிறிஸ்தவ குடியுருப்பு பகுதிக்குள் கொலைவெறி தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் மரண தண்டனையை ராணுவ தளபதி உறுதிப்படுத்தியுள்ளார். #PakistanArmy #hardcoreterrorists #deathsentence
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் கடந்த 2016-ம் ஆண்டில் நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த வீடுகள், பள்ளிகளை சூறையாடியதுடன் தற்கொலைப்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என 34 பேரை ஈவிரக்கமின்றி கொன்றனர்.

    இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜமாத் உர் அஹ்ரார் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த இப்ரார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், நாட்டின் பல பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட சில வழக்குகளில் தொடர்புடைய 15 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், அந்நாட்டின் சட்டப்படி மேற்கண்ட பயங்கரவாதிகள் 15 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதிப்படுத்தி ராணுவ தளபதி காமர் ஜாவெத் பாஜ்வா இன்று உத்தரவிட்டார். #PakistanArmy #hardcoreterrorists #deathsentence #ChristianColony #suicideattacks 
    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது சீக்கியர்களுக்கு எதிராக வெடித்த கலவரம் தொடர்பான வழக்கில் முதல்முறையாக இன்று ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. #antiSikhriotscase
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது சீக்கியர்களுக்கு எதிராக வெடித்த கலவரம் தொடர்பான வழக்கில் முதல்முறையாக இன்று ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 31-10-1984-ம் அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

    இந்த கலவரம் தொடர்பாக டெல்லி கோர்ட்டில் நடந்துவந்த வழக்கு விசாரணையில் முதல்முறையாக ஒருவருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    டெல்லியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இருவரை உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் டெல்லி போலீசார் போதிய ஆதாரங்கள் இல்லை என வழக்கை முன்னர் மூடி விட்டனர். எனினும், சிறப்பு புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.



    இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி அஜய் பான்டே, குற்றவாளி யஷ்பால் சிங் என்பவருக்கு மரண தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் நரேஷ் ஷெராவத் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்துள்ளார். இருவருக்கும் தலா 35 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

    இந்த தீர்ப்புக்கு டெல்லியில் உள்ள பல்வேறு சீக்கிய அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த வன்முறை தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்றுவந்த 241 வழக்குகளும் முன்னர் முடித்து வைக்கப்பட்டன.

    இவற்றில் 186 வழக்குகள் உரிய விசாரணை நடத்தாமலேயே முடித்து வைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ், இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்பிப்பதற்காக கண்காணிப்பு குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்தது.

    இந்த குழு சமர்ப்பித்த அறிக்கையை இன்று ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட் மேற்படி 186 வழக்குகளையும் மீண்டும் விசாரிக்க தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #antiSikhriotscase #Delhicourt #firstdeathsentence #deathsentence
    சவுதி அரேபிய துணை தூதரகத்தில் நிருபர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது.#JamalKhashoggi

    ரியாத்:

    சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகை நிருபர் ஜமால் கசோக்கி (56). அமெரிக்க குடியுரிமை பெற்றவர். இவர் துருக்கியில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் கடந்த அக்டோபர் 2-ந்தேதி நடந்தது.

    தொடக்கத்தில் அவர் மாயமானதாக கூறப்பட்டது. துருக்கி மற்றும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை தொடர்ந்து அவர் படுகொலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மயக்க மருந்து கொடுத்து கொலை செய்து பின்னர் அவர் உடல் உறுப்புகள் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டது தெரிய வந்தது.

    இந்த கொலையில் சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. அதை சவுதி அரேபிய அரசு மறுத்துள்ளது.

    இதுகுறித்து அரசு வக்கீல் அலுவலக செய்தி தொடர்பாளர் ஷாலன் அல்-ஷாலன் அமெரிக்க பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அதில் இந்த கொலைக்கும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

    இந்த வழக்கை சவுதி அரேபிய உளவுத்துறையின் துணை தலைவர் ஜெனரல் அகமது அல்-அஸ்சிரி தலைமையிலான குழு விசாரித்து வருகின்றனர்.

    இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். மேலும் 21 பேர் போலீஸ் பாதுகாப்பில் வைத்து விசாரிக்கப் படுவார்கள். அவர்களில் 11 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார். #JamalKhashoggi

    கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி நெஞ்சு வலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோவை:

    மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் ரவி(வயது 56). திருப்பூர் ரூரல் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

    இதையடுத்து கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ரவி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று மாலை சிறையில் இருந்த ரவிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே சிறை ஊழியர்கள் அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிறிது நேரத்தில் அவர் இறந்தார். 

    இது குறித்த புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி மாவட்டத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. #DeathPenalty #Theni
    தேனி:

    தேனி மாவட்டத்தில் கடந்த 2014-ம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுந்தர்ராஜ், ரூபின், மற்றும் குமரேசன் ஆகியோர் மீதான குற்றம் நீரூபிக்கப்பட்டு அவர்களுக்கு இன்று தண்டனை வழங்கப்பட்டது. 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #DeathPenalty #Theni
    திருவண்ணாமலையில் கடந்த 2000-ம் ஆண்டு விஷ சாராயம் குடித்து 13 பேர் பலியான விவகாரத்தில், குற்றவாளிகள் 5 பேருக்கு மாவட்ட கோர்ட் விதித்த தூக்கு தண்டனையை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. #MadrasHC
    சென்னை:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் கடந்த 2000ம் ஆண்டில், விஷம் கலந்த சாராயத்தை குடித்து 13 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜெயபால், முருகன், காளியப்பன், தில்லைக்கண்ணு, குமார் ஆகிய 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து மாவட்ட கோர்ட் கடந்த ஏப்ரல் மாதம் 27-ம் தேதி உத்தரவிட்டது. 

    மேலும், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 பேருக்கும் தலா, 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி புகழேந்தி தீர்ப்பு வழங்கினார்.

    இந்த தண்டனையை எதித்து குற்றவாளிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் 5 பேரின் தூக்குதண்டனையை ரத்து செய்தனர். 
    சிறுமியை கற்பழித்த வழக்கில் ஆசிரியர் மகேந்திரசிங் கோன்ட்டுக்கு தூக்குத்தண்டனை விதித்து சாத்னா கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிபதி தீர்ப்பு அளித்து உள்ளார். #GirlMolestedCase
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் சாத்னா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த ஜூலை மாதம் சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்டார்.

    அந்த கிராமத்துக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வரும் ஒப்பந்த ஆசிரியர் மகேந்திர சிங் கோன்ட் சிறுமியை கற்பழித்துள்ளார். இந்த பலாத்கார சம்பவத்தில் சிறுமியின் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் சிறுமியை கற்பழித்த வழக்கில் ஆசிரியர் மகேந்திரசிங் கோன்ட்டுக்கு தூக்குத்தண்டனை விதித்து சாத்னா கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிபதி தினேஷ்குமார் சர்மா தீர்ப்பு அளித்து உள்ளார்.

    12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்தது.

    இந்த சட்டத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுமியை கற்பழித்த வழக்கில் வழங்கப்பட்ட 9-வது தூக்குத்தண்டனை தீர்ப்பு இதுவாகும். #GirlMolestedCase
    எகிப்து நாட்டில் முன்னாள் அதிபர் முஹம்மது மோர்சியை பதவிநீக்கம் செய்து ஆட்சியை கைப்பற்றிய அப்டெல் பட்டா சிசியின் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. #Egyptsitin #75sentencedtodeath
    கெய்ரோ:

    எகிப்து நாட்டில் கடந்த 2013-ம் ஆண்டில் அதிபர் பதவியில் இருந்து ராணுவத்தால் வெளியேற்றப்பட்ட முஹம்மது மோர்சியின் ஆட்சியை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் அப்போது அவரது இயக்கத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் தலைநகர் கெய்ரோவில் உள்ள ரப்பா அடாவியா சதுக்கத்தில் முகாம்கள் அமைத்து போராட்டம் நடத்தினர்.

    அவருக்கு ஆதரவாக முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்தவர்களும் போராட்டங்களில் குதித்தனர். அவர்களை கலைக்க முயன்ற ராணுவத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் சுமார் 800 பேர் கொல்லப்பட்டனர்.

    மேலும், அதிபர் அப்டெல் பட்டா சிசியின் ஆட்சிக்கு எதிரான கலகத்தில் ஈடுபட்டதாக முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


    அவர்களில் சுமார் 700 பேர் மீதான வழக்கு விசாரணையில் பலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிலர் தூக்கிலிட்டும் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்த மூத்த தலைவர்கள் எஸ்ஸாம் அல்-ஏரியான், முஹம்மது பெல்ட்டாகி உள்பட 75 பேருக்கு மரண தண்டனை விதித்து இன்று கெய்ரோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Egyptsitin #75sentencedtodeath  
    அசாம் மாநிலத்தில் 11 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #Assam
    திஸ்பூர்:

    அசாம் மாநிலம் நாகோன் பகுதியில் 11 வயது சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த 6 பேரையும் கைது செய்தனர்.

    சிறுமியை பாலியல் வன்புணர்வு கொலை செய்தது தொடர்பாக நடத்தப்பட்ட நீதிவிசாரணையில், முக்கிய குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதர 5 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு, போதிய சாட்சியங்கள் இல்லாத காரணத்தால் விடுவிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. #Assam
    பாகிஸ்தானில் இம்ரான்கான் கட்சியை சேர்ந்த பெண் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேருக்கு மரண தண்டனை விதித்து கராச்சி கோர்ட் தீர்ப்பளித்தது.
    கராச்சி:

    பாகிஸ்தானில் கடந்த 2013-ம் ஆண்டு தேர்தலின்போது, கராச்சி தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த நேரத்தில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த பெண் தலைவர் ஜாஹ்ரா ஷகீத், அவருடைய வீட்டுக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இந்த கொலைக்கு எம்.கியூ.எம்.எல். என்ற அமைப்புத்தான் காரணம் என இம்ரான்கான் புகார் கூறினார். அதைத் தொடர்ந்து ஜாஹ்ரா ஷகீத் கொலையில், அந்த அமைப்பை சேர்ந்த முகமது ரஷீத் என்ற மாஸ்டர், ஜாகித் அப்பாஸ் ஜைதி, இர்பான், கலீம் ஆகிய 4 பேர் சிக்கினர்.

    இது தொடர்பான வழக்கை கராச்சி பயங்கரவாத தடுப்பு கோர்ட்டு விசாரித்து வந்தது. விசாரணையின்போது முகமது ரஷீத் என்ற மாஸ்டர், ஜாகித் அப்பாஸ் ஜைதி ஆகிய இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர். சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளும் அவர்களை சரியாக அடையாளம் காட்டினர்.

    இந்த நிலையில் விசாரணை முடிந்து, கராச்சி பயங்கரவாத தடுப்பு கோர்ட்டு நேற்று தனது தீர்ப்பை வழங்கியது. ஜாஹ்ரா ஷகீத் கொலையில், முகமது ரஷீத் என்ற மாஸ்டர், ஜாகித் அப்பாஸ் ஜைதி ஆகிய 2 பேருக்கும் உள்ள தொடர்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது என நீதிபதி கூறி 2 பேருக்கும் மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.

    அதே நேரத்தில் இந்த வழக்கில் சிக்கி இருந்த எஞ்சிய இருவரான இர்பான், கலீம் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார்.
    மத்தியப்பிரதேசம் மாநிலம், மன்ட்சவுர் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 7 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் இரு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. #2mengetdeathsentence #Mandsaurminorgirl
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம், மன்ட்சவுர் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 26-ம் தேதி மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து செல்லவரும் தந்தைக்காக 7 வயது சிறுமி காத்திருந்தாள்.

    அப்போது, அங்கு வந்த இர்பான்(எ)பய்யு(20), ஆசிப்(24) ஆகியோர் அந்த சிறுமியின் வாயைப்பொத்தி அங்கிருந்து கடத்திச் சென்றனர். அருகாமையில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் சிறுமியை கற்பழித்தனர். மேலும், கழுத்தை அறுத்து அவளை கொல்லவும் முயன்றனர்.

    உயிருக்கு போராடி, கதறிய சிறுமியின் கூச்சலை கேட்டு அப்பகுதியை கடந்துசென்ற சிலர் உதவிக்கு ஓடிவந்தனர். இதை கண்டதும் அந்த இரு காமுகர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பிறப்புறுப்பு உள்ளிட்ட உடலின் பல பாகங்களில் படுகாயங்களுடன் கிடந்த சிறுமியை இந்தூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இன்னும் அவள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இவ்வழக்கை விரைந்து விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி நிஷா குப்தா, குற்றவாளிகள் இருவருக்கும் (சமீபத்தில் அமலுக்கு வந்த 12 வயதுக்கும் குறைவான சிறார்-சிறுமியர் கற்பழிப்பு தண்டனை சட்டத்தின்கீழ்) மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார். #2mengetdeathsentence  #Mandsaurminorgirl   
    மத்திய பிரதேசத்தில் சிறுமி கற்பழிப்பு வழக்கு தொடர்பான விசாரணைகள் முடிந்த 3 நாளில் வாலிபருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் ரேகளி நகர் அருகே முகினி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த ஜூலை மாதம் 18-ந் தேதி கற்பழிக்கப்பட்டார். இது தொடர்பாக நரேஷ் என்ற வாலிபரை போலீசார் அதே தினத்தில் கைது செய்தனர்.

    சிறுமியை கற்பழித்த வழக்கில் வாலிபர் நரேசுக்கு சாகர் மாவட்ட கோர்ட்டு நீதிபதி சுதான்சு சக்சேனா தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    மத்திய பிரேதச மாநிலத்தில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கும் வகையில் சட்டசபையில் ஒருமனதாக மசோதா கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய சட்டத்தின்படி மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்திய தண்டனை சட்டம் 376-வது பிரிவின்படி தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டது.

    இந்த வழக்கில் விசாரணை முடிந்த 3 தினங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அனைத்து விசாரணையும் முடிந்து 3 நாளில் தீர்ப்பு அளிக்கப்பட்டது சாதனையாகும்.

    சாகர் மாவட்டத்தில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் வழக்கில் 3-வது முறையாக தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதே கோர்ட்டில் கடந்த மாதம் இதே மாதிரியான வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×