search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "danger"

    • கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
    • வழியே செல்லும் கனரக வாகனங்களை திருப்ப முடியாமல், ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் நகரானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி,தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

    திருமணம் போன்ற விசேச நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.இதனால் பல்லடம் நகரம் எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். இதனால் விபத்துக்கள், ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வந்தது. இதனால் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும், புறவழிச்சாலை வேண்டும், மேம்பாலம் கட்ட வேண்டும் என கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பல்லடம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில்,பல்லடம் அருகே காரணம்பேட்டை முதல் பல்லடம் அண்ணாநகர் வரை உள்ளசுமார் 12 கி.மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளது.பல்லடம் பனப்பாளையம் பகுதியில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரணப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இதன் சுற்றுச்சுவர் நெடுஞ்சாலை ஒட்டியே அமைந்துள்ளதால், அடிக்கடி இங்கு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் அதிகாலை நேரத்தில் கோவில் சுவரில் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து அதிகாலை நேரத்தில் நடைபெற்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    மேலும் இந்த தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே பெத்தாம்பாளையம் செல்லும் சாலை உள்ளதால் அந்த வழியே செல்லும் கனரக வாகனங்களை திருப்ப முடியாமல், ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். எனவே கோவில் சுற்றுச்சுவரை சற்று தள்ளி அமைத்தால் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும் விபத்துக்கள் ஏற்படாமலும் தவிர்க்கலாம்.

    எனவே நெடுஞ்சாலைத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் கலந்து ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோழிக்கோடு மாவட்டத்திற்கு வருகிற 5-ந்தேதி ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தாமதமாக தொடங்கி உள்ளது. இதனால் பரவலாக அனைத்து மாவட்டங்களி லும் மிதமான அளவு மழை பெய்து வருகிறது.

    தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அடுத்த 5 நாட் களுக்கு பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கண்ணூர் மற்றும் காசர் கோடு மாவட்டங்களுக்கு நாளை முதல் 5-ந்தேதி வரையிலும் எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், கோழிக் கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு 4-ந்தேதியும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 115 மில்லி மீட்டர் முதல் 204 மில்லி மீட்டர் வரை மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோழிக்கோடு மாவட்டத்திற்கு வருகிற 5-ந்தேதி ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மாவட்டத்தில் சிவப்பு எச்சரிக்கை போன்று மிக கனமழை பெய்யுமென்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. அங்கு 204.4 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்யுமென்று எதிர்பார்க் கப்படுகிறது.

    இதேபோல் பத்தினம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கனமழையின்போது, பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

    அவசரகால அறிவுறுத்தல் களை பின்பற்றுமாறும், கடல் தாக்குதலுக்கு உள்ளா கும் பகுதிகளில் வசிப்பவர்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    மீனவர்கள் வருகிற 5-ந்தேதி வரை கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென அறிவுறுத்தப் பட்டுள்ளது. கடற்கரைகளில் மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கேபிள் ஒயர்களை முறையாக எடுத்துச் செல்லாததால் சாலையோர பகுதிகளில் ஆங்காங்கே தொங்கும் நிலை சென்னை நகரில் பல இடங்களில் காண முடிகிறது.
    • சாலையோர பகுதிகளில் உரிய அனுமதி பெறாமல் உள்ள கேபிள் ஒயர்களை அகற்ற வேண்டும்.

    சென்னையில் சாலையோர பகுதிகளில் தொங்கும் கேபிள் ஒயர்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது. சென்னையில் இணைய தளம், கேபிள்டி.வி உள்ளிட்ட சேவைகளுக்காக சாலையோரங்களில் கேபிள்கள் அமைக்கப்பட்டு வீடுகள், அலுவலகங்களுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த கேபிள் ஒயர்களை முறையாக எடுத்துச் செல்லாததால் சாலையோர பகுதிகளில் ஆங்காங்கே தொங்கும் நிலை சென்னை நகரில் பல இடங்களில் காண முடிகிறது.

    சென்னை மாநகர தெருக்களில் பல இடங்களில் தெருவிளக்கு கம்பங்களை ஆக்கிரமித்து கேபிள் ஒயர்கள் கொண்டு செல்லப்படுகின்றன. சென்னை வேப்பேரி, புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், பெரம்பூர், உள்ளிட்டபகுதிகளில் சாலைகளில் தொங்கியபடி கிடக்கும் இந்த ஒயர்கள் வாகனங்களில் சிக்கும்போது வாகன ஓட்டிகளுக்கும், அந்த வழியாக நடந்து செல்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

    சிலநேரங்களில் உயிருக்கு ஆபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றன. பல இடங்களில் கம்பங்களை நட்டு கேபிள் ஒயர்களை கொண்டு செல்லாமல், மரங்களில் தொங்கவிட்டும், வீடுகளின் மீதும் அனுமதி இல்லாமல் எடுத்து செல்கின்றனர்.

    சாலையோர பகுதிகளில் உரிய அனுமதி பெறாமல் உள்ள கேபிள் ஒயர்களை அகற்ற வேண்டும். தற்போது வேப்பேரி, பசைவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் கேபிள் ஒயர்கள் அறுந்து விழுந்து, கேட்பாரற்று வெகுநாட்களாக கிடக்கும் நிலை உள்ளது இதனை சீர்ப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கடந்த 5 மாதங்–களில் கார–ண–மில்–லா–ம–லும், தேவை–யில்–லா–மல் அபாய சங்–கி–லியை விதி–மு–றை–களை மீறி
    • இழுத்த 23 பேர் மீது ரெயில்வே பாது–காப்பு படை–யி–னர் வழக்–குப்–ப–திவு செய்–து அவர்களை கைது செய்–து உள்–ள–னர்.

    சேலம்:

    ரெயில்–களில் பய–ணி–க–ளின் அவ–சர தேவைக்–காக பயன்–ப–டுத்த அபாய சங்–கிலி பொருத்–தப்–பட்–டு உள்–ளது. இந்த அபாய சங்–கி–லியை சிலர் தேவை–யில்–லா–மல் இழுத்து ரெயிலை நிறுத்தி விடு–கின்–ற–னர். இத–னால் ரெயில் நடு–வ–ழி–யில் நிறுத்–தப்–பட்டு பய–ணி–கள் குறிப்–பிட்ட நேரத்–திற்கு செல்ல முடி–யாத நிலை ஏற்–ப–டு–கிறது.

    இது போன்ற சம்–ப–வங்–களை கட்–டுப்–ப–டுத்–தும் வகை–யில் ரெயில்வே பாது–காப்பு படை–யி–னர் ரெயில்–களில் கண்–கா–ணித்து வரு–கின்–ற–னர். மேலும் ரெயில்–களில் தேவை இல்–லா–மல் அபாய சங்–கி–லியை இழுப்–ப–வர்–கள் மீது வழக்–குப்–ப–திவு செய்து கைது செய்–யப்–பட்டு வரு–கின்–ற–னர்.

    அதன்–படி சேலம் கோட்–டத்–திற்கு உட்–பட்ட பகு–தி–களில் கடந்த 5 மாதங்–களில் கார–ண–மில்–லா–ம–லும், தேவை–யில்–லா–மல் அபாய சங்–கி–லியை விதி–மு–றை–களை மீறி இழுத்த 23 பேர் மீது ரெயில்வே பாது–காப்பு படை–யி–னர் வழக்–குப்–ப–திவு செய்–து அவர்களை கைது செய்–து உள்–ள–னர்.

    இது –கு–றித்து ரெயில்வே பாது–காப்பு படை போலீ–சார் கூறும்போது, ' கடந்த நிதி–யாண்–டில் மட்–டும் தேவை–யில்–லா–மல் ரெயி–லின் அபாய சங்–கி–லியை இழுத்து ரெயில்–களை நடு–வ–ழி–யில் 23 பேர் நிறுத்தி உள்–ள–னர். அவர்–கள் மீது வழக்–குப்–ப–திவு செய்து கைது செய்–துள்–ளோம். எனவே ரெயி–லில் தேவை–யில்–லா–மல் பய–ணி–கள் அபாய சங்–கி–லியை இழுக்–கா–மல் ரெயில்வே துறைக்கு ஒத்–து–ழைப்பு தர வேண்–டும்' என்–ற–னர்.

    • 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து வருகின்றது.
    • ஒரு சில இடங்களில் உள்ளே இருக்கும் கம்பிகள் முழுவதும் வெளியே தெரிந்த வண்ணம் உள்ளது.

    கடலூர்:

    கடலூர் கம்மியம்பேட்டை சாலையில் கெடிலம் ஆறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று செல்கிறது. இந்த பாலம் வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் கடலூர் மாநகரத்திற்குள் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் கடலூர் செம்மண்டலம் மற்றும் கடலூர் ஜவான்பவன் சாலை வழியாக அனைத்து கனரக வாகனங்களும் இந்த பாலம் வழியாக தான் சென்று வருகின்றது. இதன் காரணமாக இவ்வழியாக 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து வருகின்றது. இந்நிலையில் இந்த பாலமானது கம்மியம்பேட்டை பாலத்தின் இருபுறமும் விபத்து ஏற்படாத வகையில் சிமெண்ட் தடுப்பு கட்டைகள் அமைத்து இருந்தன.

    ஆனால் தற்போது சிமெண்ட் கட்டைகள் பெயர்ந்து வருகின்றது. மேலும் கனரக வாகனங்கள் செல்லும் போது அதிகமான அதிர்வுகள் ஏற்படுவதால் சிமெண்ட் காரைகள் சாலையில் விழுந்தும், பல இடங்களில் விரிசல் ஏற்பட்டும், ஒரு சில இடங்களில் உள்ளே இருக்கும் கம்பிகள் முழுவதும் வெளியே தெரிந்த வண்ணம் உள்ளது. இதனால் ெபரிய அளவிலான விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள், சமூக அலுவலர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே பெரிய அளவிளான சேதம் ஏற்படும் முன்னர் அதிகாரிகள் இதில் தலையிட்டு பாலத்தின் சிமெண்ட் தடுப்பு கட்டைகளை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    • ரேஷன் கடை எதிரில் சாக்கடை சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.
    • அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகிறார்கள்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் மொன்னையன் பேட்டை கிராமத்தில் விநாயகர் கோவில் தெருவில் உள்ள ரேஷன் கடை எதிரில் சாக்கடை சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.அந்த சாலை பள்ளம் மேடாக இருப்பதால் சாக்கடை நீர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாக அங்கு வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. ஒரு சிலருக்கு காய்ச்சல் இருப்பதாகவும் தெரிகிறது.

    மேலும், அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டி களும் அவதிக்குள்ளாகி றார்கள். இது தொடர்பாக அங்கு வசிப்பவர்கள் வட்டார வளர்ச்சி அலுவ லகத்தில் பல முறை மனு கொடுத்தும் பலனில்லை. எனவே, இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கழிவுநீர் வாய்க்காலை சிரமைத்து சாலையில் சாக்கடை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளம் மேடாக உள்ள சாலையை புதுப்பித்து தர வேண்டு மென பொது மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    • பொன்னியம்மாள் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.
    • ராமு (20) வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தையை கத்தியால் குத்தினார்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (வயது 42). விவசாயி, இவருக்கு பொன்னியம்மாள் (35) என்ற மனைவியும் ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பொன்னியம்மாள் தனது மகன் மற்றும் மகள்களுடன் பழைய சிறுவங்கூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இயைடுத்து வேலு 2-வது திருமணம் செய்து கொண்டு கண்ணம்மாள் (30) மற்றும் மகன், மகள் ஆகியோருடன் ரங்கநாதபுரத்தில் வசித்து வருகிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு பொன்னியம்மாள் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணச் செலவிற்கு பணம் வேண்டும் என தனது கணவர் வேலுவிடம் கேட்டுள்ளார். வேலு பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று அதிகாலை வேலுவின் மகன் ராமு (20) ரங்கநாதபுரத்திற்கு சென்றார். அங்கே வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தையை கத்தியால் குத்தினார். அப்போது வேலுவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதனைக் கண்ட ராமு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனைத் தொடர்ந்து வேலுவை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலு சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து தப்பி ஓடிய ராமுவை வலை வீசி தேடி வருகின்றனர். சகோதரியின் திருமணத்திற்கு பணம் தராத தந்தையை மகன் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒரு கிலோ எடைக்கு தினமும், 1.5 கிராம் புரோட்டீன் போதும்.
    • உடற்பயிற்சி செய்வோருக்கு புரோட்டீன் மிக அவசியம்.

    குடிமங்கலம் :

    சிக்ஸ் பேக்ஸ்' உடலுக்காக இன்றைய இளைஞர்கள் தங்களை வருத்திக் கொள்ள தயங்குவதில்லை.இதற்காக மணிக்கணக்கில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்கின்றனர்.தசைகளை சிறந்த முறையில் வலுப்பெற செய்ய, புரோட்டீன் சார்ந்த மருந்துகள் எடுத்துக் கொள்கின்றனர்.

    இது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் டாக்டர்கள். இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:- வயது மற்றும் எடைக்கு ஏற்ப தேவையான அளவு புரோட்டீனை எடுத்துக்கொ ண்டால் போதும்.ஒரு கிலோ எடைக்கு தினமும், 1.5 கிராம் புரோட்டீன் போதும். அதாவது ஒருவரின் எடை 50 கிலோ எனில் 75 கிராம் புரோட்டீன் போதும்.தொடர்ச்சியாக, உடற்பயிற்சி செய்வோருக்கு புரோட்டீன் மிக அவசியம். எளிதாக தசையை வலுப்பெற வைக்க உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் அதற்கு பின்னரும் ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவு முறையை பின்பற்ற வேண்டும். இத்துடன் சிறிது கார்போ ஹைட்ரேட், கொழுப்பு கொண்ட உணவு சாப்பிடலாம். தேவையின்றி அதிக புரோட்டீன் உட்கொள்ளும் போது சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.நாம் உண்ணும் உணவிலேயே புரோட்டீன் உள்ளது. காய்கறிகளில் புரோட்டீன் உள்ளவற்றை சாப்பிடலாம்.இதனால் எவ்வித பிரச்னையும் இல்லை. மாறாக அதிக புரோட்டீன் உள்ள உணவு உட்கொள்ளும் போது உடற்பயிற்சி செய்தாலும், செய்யாவிட்டாலும், சிறுநீரகம் பாதிப்படைவது உறுதி. உடற்பயிற்சி செய்பவர்கள் அதிக புரோட்டீன் தேவை என ஒரு சில புரோட்டீன் பவுடர்களை எடுத்துக் கொள்கின்றனர்.

    இது உடனடி பாதிப்பை ஏற்படுத்தா விட்டாலும் சிறிது காலத்துக்கு பின் பாதிப்பு ஏற்படும்.ஒரு சிலர் புரோட்டீன் உணவை தவிர வேறு எதையும் உட்கொள்வதில்லை. இதனால் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு உயிருக்கு அபாயம் ஏற்படலாம் என்றனர்.

    • வடகானந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட கச்சிராயபாளையத்தில்வாய்க்கால்களில் சாக்கடை நீர் தேங்கி தெருக்களில் வெளியேறுகிறது. இதனால் கொசு அதிக அளவில் உற்பத்தியாகிறது.
    • இதனால்,பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள வடகானந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட கச்சிராயபாளையம் மின்சார அலுவலக வீதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இங்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட வாய்க்கால்களில் சாக்கடை நீர் தேங்கி தெருக்களில் வெளியேறுகிறது. இதனால் கொசு அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது.

    இது குறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டிகின்றனர்.

    எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக சாக்கடை நீரை அப்புறப்படுத்த வேண்டும். வாய்க்கால்களில் சாக்கடை நீர் தங்கு தடையின்றி செல்ல தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

    • திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட 1வது வார்டு விஷால் நகர் பகுதியில் வீடு மற்றும் தோட்டங்கள் நிலங்களில் பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு பன்றி ஒன்று இறந்து கிடந்தது. இதனால் இப்பகுதியில்துர்நாற்றம் வீசி வருகிறது.

    விழுப்புரம்:

    திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட 1வது வார்டு விஷால் நகர் பகுதியில் பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகின்றன. இந்த பகுதியில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இதனால் வீடு மற்றும் தோட்டங்கள் நிலங்களில் பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பன்றி ஒன்று இறந்து கிடந்தது. இதனால் இப்பகுதியில்துர்நாற்றம் வீசி வருகிறது

    . இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந்த பகுதியில் பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் பன்றிகளால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும் திருவெண்ணைநல்லூர் பேரூராட்சி கழக அதிகாரிகள் துப்புரவு தொழிலாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்.

    சுரண்டையில் உள்ள சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ள பி.எஸ்.என்.எல். பெட்டியை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
    சுரண்டை:

    சுரண்டையில் இருந்து சங்கரன்கோவில் ெசல்லும் சாலையில் பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் கட்டுப்பாட்டு பெட்டி சாய்ந்த நிலையில் உள்ளது.

    பள்ளி செல்லும் குழந்தைகள் அருகில் நின்று பேருந்தில் ஏறிச் செல்கின்றனர். அவர்கள்  அங்கு நிற்கும்போது ஒரு வித அச்சத்துடனே நிற்கின்றனர்.

    இதனருகே ஏ.டி.எம். உள்ளதால் பொதுமக்கள் பலர் வந்து பணம் எடுக்க அச்சத்தில் செல்கின்றனர்.

    எனவே சாய்ந்த நிலையில் சேதமாக உள்ள பெட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். 
    குமாரபாளையம் பகுதியில் சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்பட்டு வருகிறது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையத்தில் உள்ள சேலம் சாலை டிவைடர் வைக்கப்பட்டு மிகவும் குறுகியதாக உள்ளது. இதில் கடைகள் முன்பு வைக்கப்படும் ஸ்டாண்டிங்  போர்டுகள், நிறுத்தப்படும் வாகனங்கள், ஆகியவற்றால் ஏற்கனவே விபத்து  அபாயம் ஏற்பட்டு வருகிறது. 

    இந்நிலையில் மாடுகள், ஆடுகள் ஆகியவை சாலைகளில் திரிந்து வருகின்றன. வாகனங்களின் ஹாரன் சத்தத்தால் இவைகள் மிரண்டு அங்குமிங்கும் ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் ஓடும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது. 

    இது போன்று கால்நடைகளை சாலைகளில் நடமாட விடும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×