search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வலுவடையும் பருவமழை: கேரளாவில் நிலச்சரிவு அபாயம்- பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்
    X

    வலுவடையும் பருவமழை: கேரளாவில் நிலச்சரிவு அபாயம்- பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

    • கோழிக்கோடு மாவட்டத்திற்கு வருகிற 5-ந்தேதி ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தாமதமாக தொடங்கி உள்ளது. இதனால் பரவலாக அனைத்து மாவட்டங்களி லும் மிதமான அளவு மழை பெய்து வருகிறது.

    தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அடுத்த 5 நாட் களுக்கு பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கண்ணூர் மற்றும் காசர் கோடு மாவட்டங்களுக்கு நாளை முதல் 5-ந்தேதி வரையிலும் எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், கோழிக் கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு 4-ந்தேதியும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 115 மில்லி மீட்டர் முதல் 204 மில்லி மீட்டர் வரை மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோழிக்கோடு மாவட்டத்திற்கு வருகிற 5-ந்தேதி ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மாவட்டத்தில் சிவப்பு எச்சரிக்கை போன்று மிக கனமழை பெய்யுமென்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. அங்கு 204.4 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்யுமென்று எதிர்பார்க் கப்படுகிறது.

    இதேபோல் பத்தினம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கனமழையின்போது, பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

    அவசரகால அறிவுறுத்தல் களை பின்பற்றுமாறும், கடல் தாக்குதலுக்கு உள்ளா கும் பகுதிகளில் வசிப்பவர்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    மீனவர்கள் வருகிற 5-ந்தேதி வரை கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென அறிவுறுத்தப் பட்டுள்ளது. கடற்கரைகளில் மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×