search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cables"

    • எச்.டி.பாக்ஸ் கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
    • எச்.டி., பாக்ஸ் வருகைக்குப்பின், மாவட்டம் முழுவதும் ஏராளமானோர், அரசு கேபிள் டிவி., ஆபரேட்டராக இணைவர்

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட அரசு கேபிள் டி.வி., நிறுவன பிரிவினர் கூறியதாவது:-

    அரசு கேபிள் இணைப்புகளுக்கு எஸ்.டி.,க்கு (ஸ்டேன்டர்ட் டெபனிஷன்) பதில் எச்.டி.,(ைஹ டெபனிஷன்) செட்டாப் பாக்ஸ் வழங்குவதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் எச்.டி., பாக்ஸ் கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஆபரேட்டர்கள், தாங்கள் வசூலிக்கும் சந்தாவில் இணைப்பு ஒன்றுக்கு தற்போது ரூ.82.50 மட்டும் அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு செலுத்தினால் போதும். எச்.டி., பாக்ஸ் வருகைக்குப்பின், மாவட்டம் முழுவதும் ஏராளமானோர், அரசு கேபிள் டிவி., ஆபரேட்டராக இணைவர். தற்போது முதலே பலரும் ஆபரேட்டராக இணைவதற்கான வழிமுறைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து வருகின்றனர். கேபிள் இணைப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

    அரசு கேபிள் ஆபரேட்டராக விரும்புவோர், முகவரி, சேவை வழங்க உள்ள விவரங்களுடன் ஆதார் போன்ற ஆவணங்களை இணைத்து மாவட்ட தலைமை தபால் அலுவலகத்தில் விண்ணப்பித்து போஸ்டல் லைசென்ஸ் பெறவேண்டும். தொடர்ந்துtactv.inஎன்கிற இணையதளத்தில் உரிய ஆவணங்களை இணைத்து, விண்ணப்பிக்கவேண்டும். உரிய டெபாசிட் தொகை செலுத்தவேண்டும். அதிகாரிகள் கள ஆய்வு நடத்தி அரசு கேபிள் டிவி ஆபரேட்டராக அங்கீகரித்து லைசென்ஸ் வழங்குவர் என்றனர்.

    • கேபிள் ஒயர்களை முறையாக எடுத்துச் செல்லாததால் சாலையோர பகுதிகளில் ஆங்காங்கே தொங்கும் நிலை சென்னை நகரில் பல இடங்களில் காண முடிகிறது.
    • சாலையோர பகுதிகளில் உரிய அனுமதி பெறாமல் உள்ள கேபிள் ஒயர்களை அகற்ற வேண்டும்.

    சென்னையில் சாலையோர பகுதிகளில் தொங்கும் கேபிள் ஒயர்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது. சென்னையில் இணைய தளம், கேபிள்டி.வி உள்ளிட்ட சேவைகளுக்காக சாலையோரங்களில் கேபிள்கள் அமைக்கப்பட்டு வீடுகள், அலுவலகங்களுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த கேபிள் ஒயர்களை முறையாக எடுத்துச் செல்லாததால் சாலையோர பகுதிகளில் ஆங்காங்கே தொங்கும் நிலை சென்னை நகரில் பல இடங்களில் காண முடிகிறது.

    சென்னை மாநகர தெருக்களில் பல இடங்களில் தெருவிளக்கு கம்பங்களை ஆக்கிரமித்து கேபிள் ஒயர்கள் கொண்டு செல்லப்படுகின்றன. சென்னை வேப்பேரி, புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், பெரம்பூர், உள்ளிட்டபகுதிகளில் சாலைகளில் தொங்கியபடி கிடக்கும் இந்த ஒயர்கள் வாகனங்களில் சிக்கும்போது வாகன ஓட்டிகளுக்கும், அந்த வழியாக நடந்து செல்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

    சிலநேரங்களில் உயிருக்கு ஆபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றன. பல இடங்களில் கம்பங்களை நட்டு கேபிள் ஒயர்களை கொண்டு செல்லாமல், மரங்களில் தொங்கவிட்டும், வீடுகளின் மீதும் அனுமதி இல்லாமல் எடுத்து செல்கின்றனர்.

    சாலையோர பகுதிகளில் உரிய அனுமதி பெறாமல் உள்ள கேபிள் ஒயர்களை அகற்ற வேண்டும். தற்போது வேப்பேரி, பசைவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் கேபிள் ஒயர்கள் அறுந்து விழுந்து, கேட்பாரற்று வெகுநாட்களாக கிடக்கும் நிலை உள்ளது இதனை சீர்ப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சேலம் பி.எஸ்.என்.எல் ஆபீசில் ரூ.24 லட்சம் மதிப்பு கேபிள்கள் திருட்டாள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் காந்தி ரோடு பகுதியில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் துணை பொது மேலாளர் பாஸ்கரன் (வயது 57), அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், பி.எஸ்.என்.எல் அலுவலக வளாகத்தில் இருந்த ரூ.23,88,982 மதிப்புள்ள பழைய மற்றும் புதிய கேபிள்களை, இங்கு காவலாளிகளாக பணியாற்றிய செந்தில்குமார், ஜெயக்குமார், சேட்டு மற்றும் அருண்குமார் ஆகியோர் சேர்ந்து திருடியதாக ெதரிவித்து இருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×