search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கச்சிராயபாளையத்தில்  தேங்கி நிற்கும் சாக்கடை நீரால் நோய் பரவும் அபாயம்:  பொதுமக்கள் அச்சம்
    X

    வாய்க்காலில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் செல்லும் காட்சி,

    கச்சிராயபாளையத்தில் தேங்கி நிற்கும் சாக்கடை நீரால் நோய் பரவும் அபாயம்: பொதுமக்கள் அச்சம்

    • வடகானந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட கச்சிராயபாளையத்தில்வாய்க்கால்களில் சாக்கடை நீர் தேங்கி தெருக்களில் வெளியேறுகிறது. இதனால் கொசு அதிக அளவில் உற்பத்தியாகிறது.
    • இதனால்,பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள வடகானந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட கச்சிராயபாளையம் மின்சார அலுவலக வீதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இங்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட வாய்க்கால்களில் சாக்கடை நீர் தேங்கி தெருக்களில் வெளியேறுகிறது. இதனால் கொசு அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது.

    இது குறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டிகின்றனர்.

    எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக சாக்கடை நீரை அப்புறப்படுத்த வேண்டும். வாய்க்கால்களில் சாக்கடை நீர் தங்கு தடையின்றி செல்ல தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

    Next Story
    ×