search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கத்திகுத்து"

    • சந்தீப் கூடுதலாக சட்னி கேட்டபோது விகாஸ் மறுத்ததாக தெரிகிறது.
    • முகத்தில் காயங்களுடன் சந்தீப் மருத்துவமனையில் அனுமதி.

    டெல்லியில் உள்ள ஷஹ்தரா விஸ்வாஸ் நகர் பகுதியில் மோமோவுக்கு கூடுதலாக சட்னி கேட்ட சந்தீப் என்பவரை கடையின் உரிமையாளர் விகாஸ் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சந்தீப் கூடுதலாக சட்னி கேட்டபோது விகாஸ் மறுத்ததாக தெரிகிறது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

    வாய் சண்டை தீவிரமடைந்த நிலையில், அங்கு இருவருக்குள்ளும் ரகளை ஏற்பட்டுள்ளது. இதில், கடையின் உரிமையாளர் சந்தீபை கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தி உள்ளார்.

    இந்த மோதலில், சந்தீப்பின் முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, முகத்தில் காயங்களுடன் சந்தீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சந்தீப் மீது தாக்குதல் நடத்திய விகாஸ் சம்பவ இடத்தில் இருந்து தலைமறைவானார். இந்நிலையில், விகாஸை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். 

    • திருச்சி சுப்பிரமணியபுரத்தில் மனைவி, ௨வது கணவருக்கு சரமாரி கத்தி குத்து விழுந்தது
    • கருத்து வேறுபாட்டினால் பிரிந்த முதல் கணவர் ஆத்திரத்தில் வெறிச்செயல்

    திருச்சி,

    தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியைச் சேர்ந்தவர் முகமது கனி (வயது 49), மீன் வியாபாரி. இவரது மனைவி சர்மிளா பானு ( 40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகி விட்டது. இந்த நிலையில் முகமது கனிக்கும் ஷர்மிளா பானுவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் கடந்த 4 வருட காலமாக பிரிந்து வாழ்கின்றனர்.

    முகமது கனி செங்கிப்பட்டியில் வசித்து வருகிறார். ஷர்மிளா பானு திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த ஜான் பாஷா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு வசித்துவருகிறார்.

    இந்த நிலையில் முகமது கனி தனது முதல் மனைவி ஷர்மிளா பானுவை பார்க்க போதையில் சுப்பிரமணியபுரம் வந்துள்ளார். அப்போது ஷர்மிளா பானு தனது 2+வது ஜான் பாஷாவுடன் இருந்ததைக் கண்டு ஆத்திரம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற முகமது கனி அங்கிருந்த காய்கறி வெட்டும் கத்தியால் ஜான் பாஷா மற்றும் ஷர்மிளா பானுவையும் கத்தியால் குத்தினர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    முகமது கனிக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கேகே நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம்பட்ட 3 பேரையும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பாலக்கரையில் பா.ஜ.க. பிரமுகருக்கு கத்திக்குத்து விழுந்தது
    • பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து 3 பேரை தேடி வருகின்றனர்

    திருச்சி,

    திருச்சி பாலக்கரை எடத் தெரு நெய்க்கார தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 43). கேஸ் சிலிண்டர் சப்ளை செய்பவரான இவர் அப்பகுதி 33-வது வார்டு பா.ஜ.க. தலைவராக உள்ளார்.கண்ணன் அங்குள்ள ஒரு வீட்டின் தரைதளத்தில் வசித்து வருகிறார். முதல் தளத்தில் அருண்குமார் என்பவர் வசிக்கிறார். இந்த நிலையில் மேல்மாடிக்கு கண்ணனின் தாயார் சென்றபோது அருண்குமார் தடுத்து நிறுத்தி கேள்வி எழுப்பினார்.இதை கண்ணன் தட்டி கேட்டார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அருண்குமார் மற்றும் நண்பர்கள் 2 பேர் சேர்ந்து கண்ணனை கத்தியால் குத்தினர்.இதில் கண்ணனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதை யடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து கண்ணன் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமார் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

    • கட்டண கழிப்பிடம் செல்வதில் தகராறு காரணமாக பஸ் டிரைவருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது
    • கரூர் டவுன் போலீசார் மற்றொரு டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர், 

    கரூர், வடக்கு பிரதட்ணம் சாலையை சேர்ந்தவர் வெற்றி முரசு (வயது 26), மினி பஸ் டிரைவர். இவர், கரூர் பஸ் ஸ்டாண்டில், கட்டண கழிப்பிடத்துக்கு சென்றுள்ளார். அப்போது, கழிப்பிடத்தின் ஊழியர், வெற்றி முரசுவிடம் கட்டண தொகையை கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கரூர் நெரூரை சேர்ந்த மற்றொரு மினி பஸ் டிரைவர் கபில் (30), கழிப்பிடத்துக்கு சென்றுள்ளார். பிறகு, கழிப்பிட ஊழியருக்கு ஆதரவாக கபில் பேசியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வெற்றி முரசு, கபிலை கத்தியால் தலை, கண்களில் குத்தினார். அதில், காயமடைந்த கபில் கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் வெற்றி முரசுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சொத்து தகராறில் அண்ணனை கத்தியால் குத்திய தொழிலாளி
    • குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள துங்கபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன்கள் முருகானந்தம் (வயது 40), சத்தியமூர்த்தி (25). இதில், முருகானந்தம் சென்னையிலும், சத்தியமூர்த்தி துங்கபுரத்திலும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் 2 பேருக்கும் இடையே சொத்து தகராறு இருந்துள்ளது. இந்தநிலையில் முருகானந்தம் சென்னையில் இருந்து விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்து உள்ளார். கடந்த 10-ந் தேதி அண்ணன்-தம்பி இடையே மீண்டும் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சத்தியமூர்த்தி தனது அண்ணன் முருகானந்தத்தை கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு 10 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் முருகானந்தம் கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்

    • சுபாஷினிக்கு கும்பகோணத்தை சேர்ந்த வெற்றி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • ஆத்திரம் அடைந்த வெற்றி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுப்பிரமணியின் வயிற்றின் சரமாரியாக குத்தியுள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கோட்டலாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). இவரது மனைவி சத்தியாவதி (49). இவர்களின் மகள் சுபாஷினி (28). கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன் என்பவருக்கு சுபாஷினியை திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் சுபாஷினி வேலைக்கு சென்றார். அங்கு கும்பகோணத்தை சேர்ந்த வெற்றி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் அப்பகுதியில் ஒரு வீடு வாடகை எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.

    சில காலங்களுக்கு பிறகு இருவருக்குமிடையே தக ராறு ஏற்பட்டது. இதையடுத்து சுபாஷினி வீட்டை விட்டு சென்றுவிட்டார். அவர் எங்கும் கிடைக்காததால், சுபாஷினியின் அம்மா வீடான பண்ருட்டி அருகே கோட்டலாம்பாக்கத்திற்கு வெற்றி வந்தார். அங்கு இருந்த சுபாஷினி யின் பெற்றோரிடம் எனது மனைவி சுபாஷினி எங்கே என கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரம் அடைந்த வெற்றி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுப்பிரமணியின் வயிற்றின் சரமாரியாக குத்தியுள்ளார். மேலும் தடுக்க வந்த சத்தியாவதியின் வயிற்றிலும் குத்தியுள்ளார். மயங்கி விழுந்த இருவரையும் பொதுமக்கள் முண்டி யம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து வெற்றியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • துறையூர் அருகே கோவில் திருவிழாவில் கத்திக்குத்து
    • 2 பேர் கைது, 2 பேர் தலைமறைவு

    துறையூர்,

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோயிவிலில் தற்சமயம் திருவிழா நடைபெற்று வருவதால், அப்பகுதியை சேர்ந்த ஒரு சில நபர்கள் அம்மனுக்கு சிறப்பு செய்வதற்காக ஊர்வலம் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பட்டாசு வெடித்துள்ளனர். இதற்கு அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினரான அரவிந்த் (வயது20), சங்கர் (18), ஆனந்த் (21), ராபின் (22) ஆகிய நான்கு பேரும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஊர் மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் நான்கு இளைஞர்களும் சேர்ந்து கூட்டத்தில் இருந்த வெங்கடேசன் (23), கார்த்திக் (23) ஆகிய இரு இளைஞர்களை கட்டையால் அடித்து காயப்படுத்தியதோடு, மறைத்து வைத்திருந்த கத்தியால் வெங்கடேசனை குத்தி உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கிராம தலைவர் தமிழ்ச்செல்வன் துறையூர் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார், அரவிந்த், சங்கர் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டு பின்னர் தலைமறைவான ஆனந்த், ராபின் ஆகிய இருவரையும் துறையூர் போலீசார் தேடி வருகின்றனர். துறையூர் அருகே கோயில் திருவிழாவில் கத்திக்குத்து நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இளம் பெண்ணை கேலி செய்த விவகாரத்தில் கத்தி குத்து
    • காதலன் உட்பட 14 பேர் கும்பல் ஆத்திரம்

    திருச்சி,

    திருச்சி மேலகல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் தர்மராஜ் (வயது 22). இவரின் நண்பர் சரவணன் மேலகல்கண்டார் கோட்டை அர்ஜூன் நகர் பகுதியை சேர்ந்த விஸ்வா என்பவரது காதலியை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த விஷ்வா தனது நண்பர்கள் கார்த்திக், ஜெகதீசன், ராமு, ரவி, ஆட்டோ பிரபு, பிரபாகரன், லியோ, முரளி, ராம் பிரசாத், சுதாகர், சின்னத்தம்பி, சேவாக் உள்ளிட்டவர்களை அழைத்துக் கொண்டு விவேகானந்த நகருக்குச் சென்றார். அப்போது தர்மராஜ் தனது வீட்டில் இன்னொரு நண்பர் சுதாகருடன் பேசிக்கொண்டு இருந்தார்.இதைத் தொடர்ந்து அந்த 14 பேர் கும்பலும் அத்துமீறி அவரது வீட்டுக்குள் புகுந்து இருவரையும் கத்தி மற்றும் பீர் பாட்டிலால் குத்தினர்.மேலும் தென்னை மட்டையால் அவர்களை தாக்கியதோடு வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் இருசக்கர வாகன த்தை அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றனர்.இதில் தர்மராஜூக்கு தலையிலும் கண்ணிலும், சுதாகருக்கு தலை மற்றும் கையிலும் காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இதுகுறித்து தர்மராஜ் கொடுத்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் மேற்கண்ட 14 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கார்த்திக், இன்னொரு சுதாகர், பிரபாகரன், லியோ, முரளி ஆகிய 5 பேரை கைது செய்தனர். மீதமுள்ள 9 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.இதேபோன்று திருச்சி செந்தண்ணீர்புரம் அரசு பள்ளி அருகில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இரு வேறு தரப்பைச் சேர்ந்த 13 பேர் மீது பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வல்லம் ஏரிக்கரைக்கு அகிலன் தனது நண் பர்களுடன் வந்தார்.
    • ரூ. ஆயிரம் பணத்ைதயும், செல்போனையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே மானடிக்குப் பம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி மகன் கலைமகன் (27).இவர் தனது நண்பர்களுடன்வல்லம் ஏரிக்கரையில் நேற்று பேசிக் கொண்டு இருந்தார். அப்போது கலைமகன் தனது செல்போனில் நெய்வேலி வட்டம் 3-ஐ சேர்ந்த அகிலன் (23) என்பவருடன், நெய்வேலி வடக்குத்து ரவுடியான கோபியுடன் நீபேச் கூடாது என எச்சரித்தார். அதற்கு அவர் ஏன் பேசக்கூடாது, நீ எங்கு இருக்கிறாய் என கேட்டு வல்லம் ஏரிக்கரைக்கு அகிலன் தனது நண்பர்களுடன் வந்தார்.

    அப் போது ஏற்பட்ட தகராறில் கத்தி, வீச்சரிவாள் போன்றஆயுதங்களால் சரமாரியாக கலைமகனை வெட்டினர். பின்னர் அவரிடம் இருந்த அப்போது அவ்வழியாக வந்த பொதுமக்கள் காயம்அடைந்தவரை மீட்டு கடலூர் அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். இது பற்றிதகவல்அறிந்ததும்காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் முத்தாண்டிகுப்பம் போலீஸ் சப். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன்மற்றும்போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் செல்போன் மூலம் பேசி முந்திரிதோப்பில் மறைந்து இருந்த அகிலன் (23), அவரது நண்பர் பொறி யாளர் வட்டம் 10-ஐ சேர்ந்த தமிழ் அரசன் (29) ஆகிய இருவரையும் கைது செய்து பணம், செல்போனை பறி முதல் செய்தனர்.

    • பொன்னியம்மாள் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.
    • ராமு (20) வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தையை கத்தியால் குத்தினார்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (வயது 42). விவசாயி, இவருக்கு பொன்னியம்மாள் (35) என்ற மனைவியும் ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பொன்னியம்மாள் தனது மகன் மற்றும் மகள்களுடன் பழைய சிறுவங்கூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இயைடுத்து வேலு 2-வது திருமணம் செய்து கொண்டு கண்ணம்மாள் (30) மற்றும் மகன், மகள் ஆகியோருடன் ரங்கநாதபுரத்தில் வசித்து வருகிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு பொன்னியம்மாள் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணச் செலவிற்கு பணம் வேண்டும் என தனது கணவர் வேலுவிடம் கேட்டுள்ளார். வேலு பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று அதிகாலை வேலுவின் மகன் ராமு (20) ரங்கநாதபுரத்திற்கு சென்றார். அங்கே வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தையை கத்தியால் குத்தினார். அப்போது வேலுவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதனைக் கண்ட ராமு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனைத் தொடர்ந்து வேலுவை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலு சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து தப்பி ஓடிய ராமுவை வலை வீசி தேடி வருகின்றனர். சகோதரியின் திருமணத்திற்கு பணம் தராத தந்தையை மகன் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிரேம் ராஜ் (வயது 21) இவர் நேற்று நொலம்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றார்.பயணக் களைப்பில் அந்த பகுதியில் உள்ள குளம் அருகே தூங்கிக் கொண்டிருந்தபோது,அருள் என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரேம்ராஜை கை, கால்களில் வெட்டினார். பின்னர் அங்கிருந்து அருள் தப்பிச் சென்றார்.
    • இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள், ஒலக்கூர் போலீசாருக்க தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கத்தியால் வெட்டுப்பட்டு படுகாயம் அடைந்த பிரேம் ராஜை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே ஒலக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் ராஜ் (வயது 21) இவர் நேற்று நொலம்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றார். அங்கு சென்ற பயணக் களைப்பில் அந்த பகுதியில் உள்ள குளம் அருகே தூங்கினார். ,அப்போது ஈச்சேரி பகுதியைச் சேர்ந்த அருள் அங்கு வந்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரேம் ராஜை கை, கால்களில் வெட்டினார்.

    பின்னர் அங்கிருந்து அருள் தப்பிச் சென்றார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து ஒலக்கூர் போலீசாருக்க தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஒலக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கத்தியால் வெட்டுப்பட்டு படுகாயம் அடைந்த பிரேம் ராஜை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிரேம் ராஜுக்கும் அருளுக்கும் ஏற்கனவே முன்விரோத தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்து அருள், பிரேம் ராஜை கத்தியால் வெட்டியது தெரிய வந்தது. பிரேம்ராஜை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய அருளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.குளம் அருகே தூங்கினார்.  அப்போது ஈச்சேரி பகுதியைச் சேர்ந்த அருள் அங்கு வந்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரேம் ராஜை கை, கால்களில் வெட்டினார். பின்னர் அங்கிருந்து அருள் தப்பிச் சென்றார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து ஒலக்கூர் போலீசாருக்க தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஒலக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கத்தியால் வெட்டுப்பட்டு படுகாயம் அடைந்த பிரேம் ராஜை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிரேம் ராஜுக்கும் அருளுக்கும் ஏற்கனவே முன்விரோத தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்து அருள், பிரேம் ராஜை கத்தியால் வெட்டியது தெரிய வந்தது. பிரேம்ராஜை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய அருளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

    • விஜயா (வயது 20) இவருக்கும் முருகன் (25) என்பவருக்கும் 3ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.3 மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விஜயா தனது தாய் வீட்டிற்கு சென்றார்
    • அவரது கணவர் முருகன் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயாவை சரமாரியாக குத்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே மோ. வன்னஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயா (வயது 20) இவருக்கும் தியாகதுருகம் அருகே பல்லக்கச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முருகன் (25) என்பவருக்கும் 3ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணம் ஆன 3 மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விஜயா மோ. வன்னஞ்சூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்   இதனை யடுத்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு விஜயாவை பலமுறை முருகன் அழைத்துள்ளார். அதற்கு விஜயா முருகனுடன் சேர்ந்து வாழ மறுத்துள்ளார். மேலும் கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் விஜயாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் இதனை முருகன் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. விஜயாவை மீண்டும் தன்னுடன் வாழ வருமாறு முருகன் அழைத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தால் நேற்று மாலை கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திலிருந்து மோ. வன்னஞ்சூர் கிராமத்திற்கு தனியார் மினி பஸ்சில் விஜயா சென்றார்.

    அப்போது மழை பெய்ததால் பஸ்சிலிருந்து இறங்கி விஜயா அம்பேத்கர் சிலை அருகில் உள்ள ஒரு கடை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகன் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயாவை சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் விஜயா துடித்துடித்து உயிரிழந்தார். மேலும் விஜயாவை கத்தியால் குத்தி விட்டு தப்ப முயன்ற முருகனை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலனையும் முருகன் கத்தியால் குத்தினார். பின்னர் முருகனை போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கொலை செய்ததை முருகன் ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தியதோடு விசாரிக்கச் சென்ற சப் இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்திய முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×