என் மலர்
நீங்கள் தேடியது "2 people arrested"
- வீடு புகுந்து பணத்தை திருடியவர்கள் குறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர்.
- சிசிடிவி காமிரா காட்சிகள் மூலம் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1,25,000 பணம், கார் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் கோவிந்தாபுரம் நாயக்கர் புது தெரு 3 வது தெருவை சேர்ந்தவர் சரண்யா.(வயது 37).இவரது வீட்டில் கடந்த 12ந் தேதி இரவு வீட்டின் கதவை உடைத்து பணம் ரூ 1,50,000 த்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.இது குறித்து திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இதையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி. பாஸ்கரன் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து டவுன் டி.எஸ்.பி.கோகுல கிருஷ்ணன் மேற்பார்வையில்,நகர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில்,சப் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி,நகர் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன்,ஜார்ஜ் எட்வர்டு,தலைமை காவலர்கள் ராதாகிருஷ்ணன்,முகம்மது அலி, விசுவாசம்,சக்திவேல் ஆகியோர் இணைந்து விசாரணை நடத்தினர்.அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அந்த காட்சியில் பதிவான வாலிபர்களின் புகைப்படம் மூலம் போலீசார் அவர்களை தேடினர்.
அதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் மணிகண்டன்,சக்திவேல் ஆகியோர் உதவியுடன் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் சீலப்பாடியைச் சேர்ந்த முகமது பிலால் (வயது 30),கோபால் நகரைச் சேர்ந்த நாகேந்திரன் (24)ஆகிய 2 பேர் என்பது தெரிய வந்தது.இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1,25,000 பணம்,கார் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.பின்னர் முகமது பிலால்,நாகேந்திரன் ஆகிய 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- வாழைத்தார்களை வெட்டி குவித்து வைத்ததை நோட்டமிட்ட மற்ற விவசாயிகள் செல்போன் மூலம் தகவல் கொடுத்து மற்றவர்களை ஒருங்கிணைத்தனர்.
- அவர்கள் அந்த கும்பலை நெருங்கியபோது அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் வாழைத்தார் திருடிச்செல்லும் சம்பவம் அதிகரித்தது. இந்த நிலையில் உத்தமபாளையம்-கோம்பை சாலையில் வாழைத்ேதாட்டம் அருகே சந்தேகப்படும்படியாக ஒரு கார் நின்றது.
அதிலிருந்த சிலர் பாதர்கான்பாளையத்தை சேர்ந்த விவசாயி தோட்டத்தில் புகுந்தனர். அங்கு வாழைத்தார்களை வெட்டி குவித்து வைத்தனர். இதனைநோட்டமிட்ட மற்ற விவசாயிகள் செல்போன் மூலம் தகவல் கொடுத்து மற்றவர்களை ஒருங்கிணைத்தனர்.
அவர்கள் அந்த கும்பலை நெருங்கியபோது அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து காரை மடக்கி பிடிக்க முயன்றபோது 2 பேர் சிக்கினர். அவர்களை உத்தமபாளையம் போலீசில் விவசாயிகள் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் வாழைத்தார் திருடியது யோகேஸ்வரன் மற்றும் சூர்யா என தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய புதியவன், அசோக், மாரி ஆகியோரை தேடி வருகின்றனர்.
- கம்பம்-குமுளி சாலையில் அப்பாச்சி பண்ணை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
- சோதனையில் யானை தந்தம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கம்பம்:
கம்பம் வனப்பகுதியில் யானை தந்தம் கடத்தப்படுவதாக மத்திய வ னவிலங்கு குற்றகா ட்டுப்பாட்டு பணியக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மத்திய வனவிலங்கு குற்றகட்டுப்பாட்டு பணியக இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் கம்பம் மேற்கு ரேஞ்சர் ஸ்டாலின் மற்றும் வனத்துறையினர் கம்பம்-குமுளி சாலையில் அப்பாச்சி பண்ணை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கர்நாடக பதிவெண் கொண்ட பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அவர்கள் யானை தந்தம் கடத்தியது தெரியவந்தது. இதனைதொடர்ந்து யானை தந்தத்தை பறிமுதல் செய்து 2 பேரையும் கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கூடலூர் கன்னிகாளி புரத்தை சேர்ந்த சுரேஷ்கண்ணன்(32), கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கடைசிகடவு பகுதியை சேர்ந்த முகேஷ்கண்ணன் (28) என்பதும், யானை தந்தத்தை பைக்கில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்து எங்கிருந்து யானை தந்தம் கடத்தி வந்தனர். இந்த சம்பவத்தில் ேவறு யாருக்கும் தொடர்புள்ளதா என வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலையோர பள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் நத்தம் போலீசார் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது விபத்தில் இறந்தாரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
- இந்நிலையில் தொழிலாளியை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வீமாஸ் நகரில் டாஸ்மாக் கடை அருகே கடந்த 6-ம் தேதி ஒரு வாலிபர் இறந்து கிடந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வந்து விசாரணை நடத்தியதில் இறந்தவர் லிங்கவாடி எல்.வலையபட்டியைச் சேர்ந்த அழகுப்பிள்ளை மகன் சீனி (வயது 35) என்பது தெரிய வந்தது. இவர் தேங்காய் வெட்டும் தொழில் செய்து வந்தார்.
சாலையோர பள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் நத்தம் போலீசார் அவர் கொலை செய்யப்பட்டா ரா? அல்லது விபத்தில் இறந்தாரா? என்ற கோண த்தில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
விசா ரணையில் சீனி கொலை செய்ய ப்ப ட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது. இத னைத் தொட ர்ந்து அதே பகுதி யை சேர்ந்த சில ரிடம் போலீ சார் தீவிர விசா ரணை மே ற்கொ ண்ட னர்.
சம்பவம் நடந்த அன்று வத்தி பட்டியில் ஆசை என்ப வரின் பெட்டி க்கடையில் சீனி பொரு ட்கள் வாங்கி னார். அப்போது அவர்களுக்கு இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு ள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசை, தென்னரசு, ரஜினி என்ற நல்லியப்பன் மற்றும் பாபு ஆகிய 4 பேரும் சேர்ந்து சீனி யை தாக்கினர்.
அதன்பி ன்னர் சீனி அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்க செ ன்றார். அப்போது பின் தொட ர்ந்து வந்த அவர்கள் 4 பேரும் டா ஸ்மாக் கடை யில் மீண்டும் தகராறு செய்து தாக்கினர். இதனால் சீனி பரிதாபமாக உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது. முதலில் சந்தேக மர ணமாக வழக்குப்பதிவு செய்த நிலையில் பின்னர் இது கொலை வழக்காக மாற்ற ப்பட்டது.
வழக்கில் தொடர்பு டைய புதுக்கோ ட்டையை சேர்ந்த தென்னரசு, வலைய பட்டி ஆசை ஆகிய 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். மேலும் தலைமறை வாக உள்ள வலையப ட்டியைச் சேர்ந்த ரஜினி மற்றும் கவராயபட்டியை சேர்ந்த பாபு ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட சீனிக்கு சின்னப்பிள்ளை என்ற மனைவியும், 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
- பஸ்சுக்குள் ஏறிய வாலிபர்கள் திடீரென கத்தியை காட்டி பணம் கேட்டு டிரைவரிடம் தகராறு செய்தனர். பயணிகள் சத்தம்போட்டதால் தப்பி ஓடினர்.
- புகாரின்பேரில் போலீசார் வாலிபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஒட்டுப்பட்டியைச் சேர்ந்த ஜெயகாந்தி (வயது 50). இவர் திண்டுக்கல் அரசு பஸ் டிப்போவில் டிரைவ ராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு நில க்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது செங்கோட்டை பிரிவு அருகே 2 வாலிபர்கள் அரசு பஸ்சை வழிமறித்தனர். அவர்கள் பஸ் ஏறுவதற்காக த்தான் கையை காட்டுகின்ற னர் என்று நினைத்து பஸ்சை நிறுத்தினார். பஸ்சுக்குள் ஏறிய அவர்கள் திடீரென கத்தியை காட்டி பணம் கேட்டு டிரைவரிடம் தகராறு செய்தனர். இதனால் அங்கிருந்த பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சத்தம் போட்டனர்.
இதனால் அந்த 2 வாலிபர்களும் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்க ட்ராஜிடம் டிரைவர் ஜெய காந்தி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். விசாரணையில் அவர்கள் செங்கோட்டை யைச் சேர்ந்த இமானுவேல் (29) அஜய்குமார் (22) ஆகிேயார் என தெரிய வந்தது.
இதனைத் தொட ர்ந்து சப் இன்ஸ்பெக்டர் அருண்பிர சாத் தலைமை யிலான போலீசார் செங்கோ ட்டைக்கு விரைந்து சென்று அவர்கள் 2 பேரையும் கைது செய்து நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் திண்டு க்கல் சிறையில் அடைக்கப்ப ட்டனர். அரசு பஸ்சிலேயே பயணிகள் இருக்கும் போது கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- விக்னேஷ், அபிநயா (21) என்பவரும் கடந்த 2020-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
- விக்னேஷ் அடிக்கடி மனைவி அபிநயாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த நாச்சிக்குளம் தச்சர் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் விக்னேஷ் (வயது24).
இவரும் தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஈச்சங்குடி கிராமத்தை சேர்ந்த அபிநயா (21) என்பவரும் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 1½ வயதில் ஆண் குழந்ைத உள்ளது.
இந்தநிலையில் கணவர் விக்னேஷ் அடிக்கடி மனைவி அபிநயாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததுடன் தனது வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வரும்படி கூறி தாக்கி துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அபிநயா, கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். கணவர் உள்பட 2 பேர் கைது இந்த நிலையில் அபிநயா முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் தனது கணவர் தொடர்ந்து வரதட்சணை கேட்ட தொந்தரவு செய்து வருவதாக புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ் மற்றும் அவரது உறவினர் சிவகங்கையை சேர்ந்த சேகர் (39) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய விக்னேசின் தந்தை கணேசன், தாயார் கமலா ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- விருதுநகர் தொழிலதிபர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- சகோதரர்களான அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகரை சேர்ந்த தொழிலதிபரும், மருதுசேனை அமைப்பின் நிர்வாகியாகவும் இருந்த குமரவேல் விருதுநகர் பஜாரில் இருந்த தனது அலுவலகத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காரைக்குடியில் நடந்த ஒரு கொலை சம்பவத்திற்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் திருமங்கலம் அருகே உள்ள மையிட்டாபட்டியை சேர்ந்த சிவபிரகாஷ் (வயது24), ஹரிஹரன் (22) ஆகியோரை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்தனர். அவர்களை விருதுநகர் அழைத்து வந்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் இருவரும் சகோதரர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் ஞானசேகரன்(57), விக்ரமன்(55) ஆகியோர் மதுரை 6-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்கள் அருப்புக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.அவர்களை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.
இதையடுத்து சகோதரர்களான அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே சென்னை 6-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்த அமிர்தசங்கர் என்பவரை விருதுநகர் அழைத்து வந்து விசாரிப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.
- வாலிப்பாறை பகுதியில் கருங்காலி மரக்கட்டைகள் வெட்டி கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது
- சோதனையிட்டதில் 2 கருங்காலி மரக்கட்டைகள் கடத்திய 2 பேரிடம் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள வாலிப்பாறை பகுதியில் கருங்காலி மரக்கட்டைகள் வெட்டி கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனத்துறை யினர் தும்மக்குண்டு அருகே தேனி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு ெகாண்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் வைத்திருந்த சாக்குபையை வாங்கி சோதனை யிட்டதில் 2 கரு ங்காலி மரக்க ட்டை கள் இருந்தது தெரிய வந்தது.
அவர்களை வன ச்சரக அலுவலக த்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இந்த கட்டைகளை கடத்திய தும்மக்கு ண்டுவை சேர்ந்த அன்பு, தேனியை சேர்ந்த நரிக்குறவர் சுதாகர் என தெரியவரவே அவர்களை கைது செய்த னர். அவர்களிடமிருந்து ரூ.20ஆயிரம் மதிப்பிலான கருங்காலி மரக்கட்டைகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
வருசநாடு வனச்சரக த்திற்குட்பட்ட பகுதியில் அரியவகை மரங்கள் உள்ளன. குறிப்பாக கருங்காலி மரக்கட்டைகள் என்பது பல ஆண்டுகள் நிலைத்து வளரும் உறுதி யான மரமாகும். இந்த மரங்களை வெட்டி அதிலிருந்து ஜபமாலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒரு மாலையின் விலை ரூ.10ஆயிரம் முதல் பல ஆயிரம் வரை விலை கொண்டதாகும்.
இதனை அவரவர்கள் வசதிக்கேற்ப தங்கம், வெள்ளியாலான கம்பி களால் கோர்த்து பயன்படு த்தி வருகின்றனர். இதுபோ ன்ற அபூர்வ வகை மரக்க ட்டைகள் சர்வசாதாரண மாக கடத்தப்பட்டு வருகிறது. இதனைவெட்டும் போதே பிடிக்காமல் கடத்தி கொண்டுவரும்போது பிடித்து அபராதம் வசூலிக்கின்றனர். அபராதம் கட்டத்தவறினால் மட்டுமே கைது செய்யப்படுகின்றனர்.
கடந்த 2 மாதங்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட கருங்காலி மரக்கட்டைகள் கடத்தப்பட்டுள்ளன. வனப்பகுதியில் தீ வைத்தும் மரக்கட்டைகளை கடத்தும் வேலையில் சமூகவிரோத கும்பல் ஈடுபட்டு வருகின்ற னர். எனவே இவ்விசயத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள தென்னம்பட்டி ஆண்டிபட்டியை சேர்ந்தவர் மணிமாறன். இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் முள்ளம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது தென்னம்பட்டியை சேர்ந்த மோகன் (வயது24), மாரீஸ் (28) ஆகியோர் சண்டைபோட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை கண்டுகொள்ளாமல் மணிமாறன் சென்று விட்டார். இதனையடுத்து தங்களது வாகனத்தில் துரத்தி சென்ற இருவரும் மணிமாறனை மறித்து நாங்கள் சண்டை போட்டுக்கொண்டுள்ளோம்.
விலக்கி விடமாட்டாயா என அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து மணிமாறன் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து ஆகியோர் கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன் மற்றும் மாரீசை கைது செய்தனர்.
- கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர் பகுதியில் பரமத்தி போலீஸ் சப் -இன்ஸ் பெக்டர் சரண்யா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- 2 மூட்டைகளிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 386 கிலோ பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் ஆகியவை இருந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர் பகுதியில் பரமத்தி போலீஸ் சப் -இன்ஸ் பெக்டர் சரண்யா தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண் டிருந்தனர்.
அப்போது இருக்கூர் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் 2 பேர் மூட்டைகளுடன் நின்று கொண்டு இருந்ததை பார்த்து சந்தேகம் அடைந்த சப்- இன்ஸ்பெக்டர் சரண்யா, இருவரையும் பிடித்து அவர்கள் வைத் திருந்த 2 சாக்கு மூட்டை களையும் பிரித்து சோதனை மேற்கொண்டார். இதில் 2 மூட்டைகளிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 386 கிலோ பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் ஆகியவை இருந்தது.
இதையடுத்து தொடர்ந்து 2 பேர்களிடம் விசாரணை நடத்தியதில் கபிலர்மலை அருகே உள்ள வேட்டுவம் பாளையத்தை சேர்ந்த கருப்பண்ணன் மகன் நல்லசிவம் மற்றும் கரூர் அண்ணாநகரை சேர்ந்த விஸ்வநாதன் என்பது தெரிய வந்ததது. பரமத்தி போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 386 கிலோ பான் குட்காவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டு நீதிபதி உத்தரவின் பேரில் அவர்கள் இருவரும் பரமத்தி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.