என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
கொடைக்கானலில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது
- சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறியும் நடவடிக்கையாக கொடைக்கானல் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 2 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறியும் நடவடிக்கையாக கொடைக்கானல் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி நாயுடுபுரம், பாக்கியபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த பாக்கியபுரத்தை சேர்ந்த ஜீவா மகன் விஜய் (வயது22), கீழ் பூமி பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் மகன் முருகன் (47) ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர்.
இதில் அவர்கள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து போதைக்காளான் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்றது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 1.100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.