என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில் பெரிய கத்தியுடன் மோட்டார்  சைக்கிளில் சுற்றிய 2 பேர் கைது
    X

    காரைக்காலில் பெரிய கத்தியுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றிய 2 பேர் கைது

    • 2 பேர் பெரிய கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தினர்.
    • மோட்டார் சைக்கிள், கையில் வைத்திருந்த பெரிய கத்தியை பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகர் பகுதியான நூல்கடை வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில், 2 பேர் பெரிய கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தியும், ஆபாசமாக திட்டியும் செல்வதாக காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் சென்றது. அதன்பேரில் சப்.இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது பெரிய கத்தியுடன், மோட்டார் சைக்களில் சுற்றிவந்த 2 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை விசாரித்த போது மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் திரு.பட்டினம் பண்டக சாலையைச்சேர்ந்த முகம்மது ஆசிக்(20), பின்னால் பெரிய கத்தியை வைத்திருந்த நபர் காரைக்கால் உமர் புலவர் வீதியைச்சேர்ந்த ஹமீது சுல்தான்(19) என்பதும் தெரிவந்தது. அவர்களின் மோட்டார் சைக்கிள், கையில் வைத்திருந்த பெரிய கத்தியை பறிமுதல் செய்த போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×