என் மலர்
நீங்கள் தேடியது "ரூ.59 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது"
- திருமண வேலைகளில் பிசியாக இருந்ததால் நிதிநிறுவன கணக்கு வழக்குகளை ஊழியர்களிடம் ஒப்படைத்திருந்தார்.
- கடந்த 4 மாதங்களில் சிறுகசிறுக ரூ.59 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே சாமியார்புதூரை சேர்ந்தவர் செல்வபிரகாஷ்(29). இவர் ஒட்டன்சத்திரத்தில் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. திருமண வேலைகளில் பிசியாக இருந்ததால் கணக்கு வழக்குகளை நிதிநிறுவன ஊழியர்களிடம் ஒப்படைத்திருந்தார்.
திருமணம் முடிந்து மீண்டும் நிதிநிறுவனத்திற்கு வந்த செல்வபிரகாஷ் வசூல் பணம் குறித்து கேட்டார். அப்போது ஊழியர்கள் அந்த பணத்தை மற்றவர்களுக்கு பைனான்ஸ் கொடுத்துள்ளதாக தெரிவித்தனர். ஆனால் அவர்கள் பேச்சில் நம்பிக்கை ஏற்படாததால் ஜெயபிரகாஷ் விசாரித்தார். அதில் பணம் யாருக்கும் கொடுக்காமல் ரூ.59 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார். எஸ்.பி உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வினோதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.
இதில் கடந்த 4 மாதங்களில் சிறுகசிறுக ரூ.59 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சாமியார்புதூரை சேர்ந்த மேலாளர் ஜெயபிரகாஷ்(23), ஊழியர் ரகுராம்(21) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






