search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Court"

    • உடுமலை வக்கீல்கள் சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சார்பில் மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.
    • பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    உடுமலை:

    உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு, உடுமலை வக்கீல்கள் சங்கம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சார்பில் மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது. உடுமலை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.மணிகண்டன் தலைமை தாங்கினார்.

    அதைத் தொடர்ந்து நடைபெற்ற முகாமில் கண் மற்றும் பல் பரிசோதனை, சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம், ஈ.சி.ஜி. மற்றும் அக்குபஞ்சர், பிசியோதெரபி சிகிச்சை நடத்தப்பட்டது.இதில் மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.எஸ்.பாலமுருகன், உடுமலை ஜே.எம். எண்-1 மாஜிஸ்திரேட் கே.விஜயகுமார், ஜே.எம். எண்-2 மாஜிஸ்திரேட்டு ஆர்.மீனாட்சி, உடுமலை வக்கீல் சங்கத்தலைவர் மனோகரன், பொருளாளர் பிரபாகரன், அரசு வக்கீல்கள் சேதுராமன், ரவிசந்திரன், திருப்பூர் மாவட்ட வக்கீல் அருணாசலம் உள்ளிட்ட வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    முகாமில் நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்ட வர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    • மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 7 அமா்வுகளாக நடைபெற்றது.
    • மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு தீா்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமாா் முன்னிலை வகித்தாா்.

    திருப்பூர்:

    தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுக்களின் உத்தரவின்பேரில், முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஸ்வா்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின்பேரில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 7 அமா்வுகளாக நடைபெற்ற இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரத்துக்குரிய குற்றவழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள் என மொத்தம் 2,387 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், 766 வழக்குகளுக்கு ரூ.28.51 கோடியில் சமரசத் தீா்வு காணப்பட்டது. திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்துக்கு மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு தீா்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமாா் முன்னிலை வகித்தாா்.

    இதில் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் புகழேந்தி, கூடுதல் மகளிா் நீதித் துறை நடுவா் காா்த்திகேயன், நீதித்துறை நடுவா் முருகேசன், வழக்குரைஞா்கள் பழனிசாமி, ரகுபதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். 

    • 2023-ம் ஆண்டில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வருவாய் வழக்குகள் மற்றும் இதர வழக்கு களுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.
    • மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் அன்று காலை 10 மணிக்கு சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவ ரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சீனிவாசன் முன்னிலையில் நடைபெற உள்ளது

    நெல்லை:

    2023-ம் ஆண்டில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வருவாய் வழக்குகள் மற்றும் இதர வழக்கு களுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடத்த சென்னை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தர விட்டுள்ளது. அதன்படி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வருவாய் வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நெல்லை மாவட்டத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வால் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

    மேற்கூறிய நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வருவாய் வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வருவாய் வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 200 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

    மேலும் நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் அன்று காலை 10 மணிக்கு சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவ ரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சீனிவாசன் முன்னிலையில் நடைபெற உள்ளது. மேலும் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்துமாறு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் (பொறுப்பு) கேட்டுக் கொண்டுள்ளார்.

    • தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், வக்கீல் ஜெகனை கொலை செய்ய பணம் தருவதாக கூறியுள்ளார்
    • நீதிமன்ற வளாகத்தில் இன்று வக்கீல்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் ஜோசப் ராஜ ஜெகன். வக்கீல். இவர் கடந்த 18-ந்தேதி காலை தனது அலுவல கத்திற்கு வந்து கதவை திறந்த போது அங்கு அருகில் நின்றி ருந்த மர்ம நபர் அவரை தலையில் வெட்டினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரையும், அவரது கூட்டாளி ஒருவ ரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.

    கூலிப்படையினர்

    போலீசார் நடத்திய விசாரணையில் வக்கீல் ஜெகனை வெட்டிக் கொல் வதற்காக வந்தவர்கள் கூலிப்படையினர் என்றும், சம்பவ இடத்திற்கு 3 பேர் வந்ததாகவும் ஒருவர் தப்பிவிட்டதாகவும் அவர்கள் தகவல் தெரிவித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீ சார் நடத்திய விசார ணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், வக்கீல் ஜெகனை கொலை செய்வதற்காக மூன்றடைப்பை அடுத்த பேரின்பபுரம் பகுதியை சேர்ந்த தனது நண்பரிடம் தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.9 லட்சம் தருவதாக கூறியதை அடுத்து தாங்கள் வக்கீலை கொல்ல வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோர்ட்டு புறக்கணிப்பு

    இந்நிலையில் வக்கீல் ஜெகன் கூலிப்படை யினரால் கொடூரமாக தாக்கப் பட்டதை கண்டி த்தும், சம்பந்தப் பட்ட வர்களை உடனே கைது செய்து அவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று வக்கீல்கள் நீதிமன்ற பணி களை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இந்த கொடூர தாக்குதலில் தொடர்புடைய மேலும் 4 பேரை உடனடி யாக கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • அம்பர் கிரீஸ் வைத்திருப்பது சட்டப்படி குற்றமா? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி விடுத்துள்ளது.
    • வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது

    மதுரை

    அம்பர் கிரீஸ் என அழைக்கப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீரை வைத்திருந்ததாக ஸ்ரீவில்லி புத்தூர் பகுதியை சேர்ந்த தர்மராஜ், வன துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.

    இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி அவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதி கூறுகையில், இது போன்ற வழக்குகளில் கைதான வர்கள் ஏற்கனவே ஜாமீன் பெற்றுள்ளதால், மனுதா ரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி, அரிய உயிரினமான திமிங்கலத்தை வேட்டை யாடுவது தடை செய்யப்பட்டு உள்ளது என்றார்.

    மேலும் அதே நேரத்தில் திமிங்கலம் வாய் வழியாக உமிழும் அம்பர் கிரீஸ் என்ற பொருளை ஒருவர் வைத்திருப்பது சட்டபடி குற்றமாகுமா? என்று கேள்வி எழுப்பினர். இதுகுறித்துஅரசு தரப்பு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    • திலகர் திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
    • ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி இந்த கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    மதுரை

    மதுரை சிம்மக்கல் ஒர்க் ஷாப் ரோடு பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி, மதுரை 2-வது மாஜிஸ் திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த–தாவது:-

    நான் எனது கணவருடன் சேர்ந்து இதே பகுதியில் டயர் வியாபாரம் செய்து வருகிறேன். சட்டப்படிப்பும் படித்து வருகிறேன். எனது கணவர் சரவணன் மாற்றுத் திறனாளி. அவரின் சகோ–தரர் மது பாண்டியன் எங்கள் கடையை சட்ட–விரோதமாக அபகரிக்கும் நோக்கத்தில் பல்வேறு தொந்தரவுகளை அளித்து வருகிறார்.

    அவர் கொடுத்த பொய்யான புகார் குறித்து முறை–யாக விசாரிக்காமல் என்னை போலீசார் கைது செய்தனர். உரிய விசாரணை நடத்தாமல் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்களை பின் பற்றாமலும் என்னை கைது செய்ததற்காக போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்தேன்.

    அந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். திலகர் திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் சப்-இன்ஸ்பெக் டர்கள் என் மீது மற்றொரு பொய்யான புகார் பெற்று வழக்கு பதிவு செய்து பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கினர்.

    எனவே திலகர் திடல் போலீஸ் நிலைய இன்ஸ் பெக்டர் சங்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரே–சன், சொர்ண ராஜா ஆகி–யோர் மீது உரிய நடவ–டிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி–யிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதி கல்யாண மாரிமுத்து விசா–ரித்தார். முடிவில், மனுதா–ரரை கைது செய்ததில் உரிய வழிகாட்டுதல்களை பின் பற்றவில்லை என்பது தெரிய வருகிறது. எனவே திலகர் திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் சப்-இன்ஸ்பெக் டர்கள் மீதான புகார் குறித்து திலகர் திடல் உதவி போலீஸ் கமிஷனர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நடவடிக்கையை குறித்து ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி இந்த கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி உத்தர–விட்டார்.

    • போராட்டம் தீவிரமடைந்ததால் அந்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.
    • இஸ்ரேல் பாராளுமன்றம் கூடிய முதல் அமர்வில் நீதிமன்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் மசோதா ஒப்புதலுக்கு முன்மொழியப்பட்டது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு நீதிமன்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் மசோதாவை அரசு சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வந்தது.

    இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் தீவிரமடைந்ததால் அந்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.

    ஆனாலும் போராட்டங்கள் தொடர்ந்தபடி இருந்தது. இந்நிலையில் போராட்டங்களுக்கு மத்தியில் நீதிமன்ற அதிகாரங்களை குறைக்கும் மசோதா இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

    இஸ்ரேல் பாராளுமன்றம் கூடிய முதல் அமர்வில் நீதிமன்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் மசோதா ஒப்புதலுக்கு முன்மொழியப்பட்டது. இங்கு மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டது. பின்னர் நடந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 64 வாக்குகள் கிடைத் தன. எதிராக 56 வாக்குகள் பதிவானது. இதற்காக மசோதா பாராளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    முன்னதாக பாராளுமன்றம் முன்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது சில எதிர்ப்பாளர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வெளியே இழுத்து வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    நீதிமன்ற அதிகாரங்களை குறைக்கும் மசோதாவை திரும்பப்பெறக் கோரி போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் அம்மசோதாவை பாராளுமன்றம் ஏற்றுக் கொண்டதால் மக்களின் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது.

    • மானாமதுரையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டுமான பணிகளை நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
    • சார்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகின்றன.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள சிவகங்கை சாலையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் குற்றவியல், உரிமையியல் நீதிமன்றங்களும், அண்ணா சிலை அருகே வாடகை கட்டிடத்தில் சார்பு நீதிமன்றமும் செயல்பட்டு வருகின்றன.

    தற்போது குற்றவியல், உரிமையியல் நீதிமன்றங்கள் செயல்படும் கட்டிடத்துக்கு அருகிலேயே நீதித்துறைக்கு சொந்தமான இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அப் துல்குத்தூஸ், மஞ்சுளா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், இவர்கள் நீதிமன்ற அலுவல் பணிகளை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது சிவகங்கை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி, தலைமை குற்றவியல் நீதிபதி சுதாகர், சார்பு நீதிபதி கீதா, மானாமதுரை நீதிமன்ற நீதிபதி அருண் பாண்டியன் உள்ளிட்டோர் உட னிருந்தனர்.

    முன்னதாக, நீதிபதிகளை மானாமதுரை வக்கீல்கள் சங்க தலைவர் கணேசன், செயலர் சுரேஷ்பாபு ஆகியோர் தலைமையிலான வக்கீல்கள் வரவேற்றனர்.

    • தங்கத்துரை தனது வீட்டை பேச்சிமுத்து என்பவரிடம் வாடகைக்கு விட்டுள்ளார்.
    • தங்கத்துரைக்கும் உமா மகேஸ்வரிக்கும் சொத்து பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூர் பாலாஜி அவென்யூவை சேர்ந்தவர் தங்கத்துரை. இவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இதனால் இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் உள்ள வீட்டை வக்கீலான பேச்சிமுத்து(வயது 33) என்பவரிடம் வாடகைக்கு விட்டுள்ளார்.

    இந்நிலையில், தங்கத்துரைக்கும் அவரது சகோதரியான சுரண்டையில் வசித்து வரும் உமா மகேஸ்வரிக்கும்(வயது 26) சொத்து பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. ஆனால் பாலாஜி அவென்யூவில் உள்ள வீடு தனக்கு சொந்தமானது என்று உமா மகேஸ்வரி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது பேச்சிமுத்து முறைப்படி வாடகை செலுத்தி வருவதாகவும், தன்னை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் கூறி உள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த உமா மகேஸ்வரி அந்த வீட்டின் கதவில் முட்டைகளை வீசியும், மின்சார பெட்டியை உடைத்தும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பேச்சிமுத்து அளித்த புகாரின் பேரில் தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகளையில் ஈடுபட்ட உமா மகேஸ்வரியை கைது செய்தனர்.

    • விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை ஒட்டி இரு தரப்பினர் இடையில் தகராறு ஏற்பட்டது.
    • சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 2 தரப்பினருக்கும் இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வன்னியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது.

    சேலம்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை ஒட்டி இரு தரப்பினர் இடையில் தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கோவிலை பூட்டி அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    இந்த நிலையில் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 2 தரப்பினருக்கும் இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வன்னியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது.

    மேலும் வன்னியர் சங்க மாநில பொதுச் செயலாளர் கார்த்திக், சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 4-ல் திருமாவளவன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். மேலும் திருமாவளவன் பேசிய வீடியோ ஆதாரங்களையும் சமர்ப்பித்தார்.

    இந்த வழக்கு இன்று பிற்பகல் சேலம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதையொட்டி வன்னியர் சங்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சேலம் கோர்ட்டில் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் காலை முதலே சேலம் கோர்ட்டில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் கோர்ட்டுக்குள் செல்லும் வாகனங்களும் தீவிர வாகன சோதனைக்கு பின்னரே கோர்ட்டுக்குள் அனுமதிக்கப்பட்டன. இதனால் கோர்ட் வளாகத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    • குளித்தலையில் மக்கள் நீதி மன்றம் நடைபெற்றது
    • சார்பு நீதிமன்ற நீதிபதி சண்முகக்கனி தலைமையில் நடைபெற்றது

    குளித்தலை,

    கரூர் மாவட்டம், குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குளித்தலை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதி மன்றம் நடைபெற்றது. சார்பு நீதிமன்ற நீதிபதி சண்முகக்கனி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் கூடுதல் முதன்மை நீதிபதியும், குற்றவியல் நடுவர் நீதிபதியுமான பிரகதீஸ்வரன், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கே.எஸ்.எம்.சாகுல் அமீது, செயலாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காசோலை வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள் என 34 வழக்குகளுக்கு ஒரு கோடியே ரூ.96 லட்சம் தீர்வு காணப்பட்டது.

    இதில் வாகன விபத்தில் கணவனை இழந்த மலர்விழிக்கு குளித்தலை வழக்கறிஞர் கார்த்திகேயன் திருச்சி நியூ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவன வாகன விபத்து இழப்பீடாக ரூ.55 லட்சம் பெற்றுக் கொடுத்தார். இதற்கான உத்தரவை சார்பு நீதிபதி மன்ற நீதிபதி சண்முகக்கனி வழங்கினார். திருச்சி நியூ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி கோட்ட மேலாளர் நடராஜன், வழக்கறிஞர் கார்த்திக், செயலாளரும், முன்னாள் அரசு வழக்கறிஞர் குளித்தலை நாகராஜன், நிக்கில்அர்விந்த், ராஜகோபால், மணிவேல் மற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியாளர்கள், சட்டப் பணிகள் குழு பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம் அருகே கோர்ட்டில் சாட்சி சொல்ல வற்புறுத்தி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    விருதுநகர்

    ராஜபாளையம் அருகே செட்டியாப்பட்டியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 57). இவரது பேத்தியுடன் அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் 
    (வயது 30) என்பவர் பழகியுள்ளார். பின்னர் இருவரும் காதலித்துள்ளனர். அப்போது கங்காதரன் சுப்புலட்சுமியின் பேத்தியுடன் உல்லாசமாக இருந்ததில் அவர் கர்ப்பிணி ஆகிவிட்டார்.

    இதுபற்றி கடந்த 2021-ம் ஆண்டு தளவாய்புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் கங்காதரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

    இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த கங்காதரன் சுப்புலட்சுமியை சந்தித்து உங்களது பேத்தியை திருமணம் செய்து கொள்கிறேன். எனக்கு சாதகமாக நீங்கள் சாட்சி சொல்ல வேண்டும். இதற்கு உடன்பாடாவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். 

    இதுபற்றி சுப்புலட்சுமி தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதரனை தேடி வருகின்றனர்.

    ×