என் மலர்
நீங்கள் தேடியது "Israel Parliament"
- இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
- அப்போது பயங்கரவாதத்தால் ஏற்படும் வலியை இந்தியாவும் உணர்ந்துள்ளது என்றார்.
ஜெருசலேம்:
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றுள்ளார். சிறப்பு விமானம் மூலம் இஸ்ரேல் சென்ற அவருக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தார்.
இதையடுத்து, பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு சிறப்பு விருந்தினராகச் சென்று உரையாற்றினார். இதனால் அங்கு இந்திய தேசிய கொடியின் மூவர்ணங்களில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அந்நாட்டு சபாநாயகர் உயரிய விருதை அளித்து கவுரவித்தார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்ற ஒரே உலக தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
- அப்போது இஸ்ரேலைப் போல் இந்தியாவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
ஜெருசலேம்:
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இன்று இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றார். சிறப்பு விமானம் மூலம் இஸ்ரேல் சென்ற அவருக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தார்.
இதையடுத்து, பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு சிறப்பு விருந்தினராகச் சென்று உரையாற்றினார். இதனால் அங்கு இந்திய தேசிய கொடியின் மூவர்ணங்களில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் படைகளின் கொடூரத் தாக்குதலில் கொல்லப்பட்ட அனைவரின் குடும்பத்திற்கும் இந்திய மக்களின் இரங்கல் செய்தியை கொண்டு வந்துள்ளேன்.
நாங்கள் உங்கள் வலியை உணர்கிறோம். பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதிப்பாட்டில் இஸ்ரேலுடன் இந்தியா இன்றும் என்றும் துணை நிற்கும். பயங்கரவாதத்தை எந்தவொரு காரணமும் நியாயப்படுத்த முடியாது.
இந்தியாவும் பயங்கரவாதத்தால் ஏற்படும் வலியை நீண்ட காலமாக உணர்ந்துள்ளது. இஸ்ரேலியர்கள் உள்பட ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் நினைவு கூர்கிறோம்.
உங்களைப் போலவே எங்களுக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான இரட்டை நிலைப்பாடு இல்லாத பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொண்ட கொள்கையுள்ளது.
காசா அமைதித்திட்டத்திற்கு இந்தியா ஆதரவளிக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியில் யூதர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என தெரிவித்தார்.
பிரதமர் மோடி இஸ்ரேல் செல்வது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- போராட்டம் தீவிரமடைந்ததால் அந்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.
- இஸ்ரேல் பாராளுமன்றம் கூடிய முதல் அமர்வில் நீதிமன்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் மசோதா ஒப்புதலுக்கு முன்மொழியப்பட்டது.
ஜெருசலேம்:
இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே அங்கு நீதிமன்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் மசோதாவை அரசு சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வந்தது.
இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் தீவிரமடைந்ததால் அந்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.
ஆனாலும் போராட்டங்கள் தொடர்ந்தபடி இருந்தது. இந்நிலையில் போராட்டங்களுக்கு மத்தியில் நீதிமன்ற அதிகாரங்களை குறைக்கும் மசோதா இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
இஸ்ரேல் பாராளுமன்றம் கூடிய முதல் அமர்வில் நீதிமன்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் மசோதா ஒப்புதலுக்கு முன்மொழியப்பட்டது. இங்கு மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டது. பின்னர் நடந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 64 வாக்குகள் கிடைத் தன. எதிராக 56 வாக்குகள் பதிவானது. இதற்காக மசோதா பாராளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
முன்னதாக பாராளுமன்றம் முன்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது சில எதிர்ப்பாளர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வெளியே இழுத்து வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
நீதிமன்ற அதிகாரங்களை குறைக்கும் மசோதாவை திரும்பப்பெறக் கோரி போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் அம்மசோதாவை பாராளுமன்றம் ஏற்றுக் கொண்டதால் மக்களின் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது.






