search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "College students"

    • மூவலூர் ராமாமிர்த அம்மையார் என்ற திட்டத்தை அரசு தொடங்கியது.
    • சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 303 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    பெண் கல்வியை ஊக்கப்படுத்த தமிழக அரசு கல்லூரியில் பயலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க மூவலூர் ராமாமிர்த அம்மையார் என்ற திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 303 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

    இதில் 100 மாணவிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு சமூகநலத்துறை அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, தீபா, மகாலட்சுமி ஆகியோரின் முன்னிலையில் கல்லூரி வளாகத்தில் உள்ள குமரன் அரங்கில் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

    • மனித சங்கிலி அமைத்தும் புலிப் போன்று வேடமிட்டும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • காடுகளில் மரங்களை வெட்டாமல் இருந்தாலே போதும் புலிகளை காப்பாற்றலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக இன்று கல்லூரி நுழைவாயிலில் உலக புலிகள் தினத்தை முன்னிட்டு மனித சங்கிலி அமைத்தும் புலிப் போன்று வேடமிட்டும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் , தேசிய விலங்கான புலிகளின் முக்கியத்துவத்தை கூறி வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக மதுவிலக்கு அமலாக்க பிரிவு ‌காவல் ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் வடக்கு காவல் ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில் , மக்களிடம் புலிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்நாள் உலகம் முழுவதும் புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது .காடுகளின் காவலன் புலிகள் எனவும் , காடுகளில் மரங்களை வெட்டாமல் இருந்தாலே போதும் புலிகளை காப்பாற்றலாம். நாம் காடுகளை அழிப்பதன் மூலம் அதிக நகரங்களை உருவாக்குவதன் மூலம் வசிக்க இடம் இல்லாமல் உண்ண உணவு இல்லாமல் புலிகள் இறந்துவிடுகிறது .

    புலிகளின் எண்ணிக்கை முன்பு இருந்ததை விட இப்போது மிகவும் குறைவாக உள்ளது . இந்தியாவில் உள்ள 51 புலிகள் காப்பகங்களில், களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் ஆகிய 4 புலிகள் காப்பகங்கள் தமிழகத்தில் உள்ளன. புலிகளின் கண்கள் இரவில் மனிதர்களை விட ஆறு மடங்கு தெளிவாக தெரியும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாணவ செயலர்கள் அருள்குமார் , பாலசுப்பிரமணியம் , சுந்தரம் , பூபதி ராஜா ஆகியோர் தலைமையில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு புலி போன்று வேடமிட்டும் , பதாகைகளை ஏந்திக்கொண்டும் , புலிகளின் முககவசங்களை அணிந்தும், கைக்கட்டை விரல்களில் புலியின் நிறத்தை வரைந்தும் உலக புலிகள் தின விழிப்புணர்வு கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே காவல் நிலையம் அருகில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கல்லூரி மாணவர்களை மர்ம நபர்கள் அடித்து சென்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சீர்காழி:

    நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நாகப்பட்டினத்திலிருந்து சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே தனியார் கல்லூரி பேருந்தில் இருந்து மாணவர்கள் இறங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் அந்த மாணவர்களிடம் ஒவ்வொருவரிடமும் அவர்களது பெயர் மற்றும் முகவரியை விசாரித்தனராம். அதற்கு கல்லூரி மாணவர்கள் ஏன் விசாரிக்கிறார்கள் என்று கேட்டபோது விவரம் ஏதும் கூறாமல் மர்ம நபர்கள் சென்று விட்டனராம். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் நாகப்பட்டினத்தில் இருந்து தனியார் கல்லூரி பேருந்தில் இருந்து வந்த மாணவர்கள் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே இறங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர் கல்லூரிப் பேருந்தில் இருந்து இறங்கிய மாணவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.அப்போது சீர்காழி தாடாளன் மேலவீதியை சேர்ந்த பொறியியல் மாணவர் சந்தோஷ் குமார் (18) இதுகுறித்து கேட்டபோது அந்த மாணவரை தகாத வார்தைகளால் திட்டி அடித்த அந்த நபர்கள் அவருடன் இருந்த சக நண்பர்களை கல்லால் அடிக்க முயன்றுள்ளனர். மேலும் கல்லூரி பேருந்தை உடைத்து, கொளுத்தி விடுவேன் என்று மிரட்டி விட்டு இரண்டு இருசக்கர வாகனங்களில் 5 பேர் தப்பிச் சென்றுவிட்டனராம்.

    சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே காவல் நிலையம் அருகில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இவ்வாறு கல்லூரி மாணவர்களை மர்ம நபர்கள் அடித்து சென்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு பொதுமக்கள் ஒன்று கூடி விட்டனர். இது குறித்து அறிந்த சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் காவலர்கள் விரைந்து வந்து கல்லூரி மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து சீர்காழி கல்லூரி மாணவர் சந்தோஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில், அடித்து கல்லூரி பேருந்தை கொளுத்தி விடுவேன் என்று மிரட்டல் விடுத்து தப்பிச் சென்ற 5 பேர் குறித்து வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    திண்டுக்கல்லில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. போலீசார் கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் ரெயில்நிலையப்பகுதியில் போலிச்சாமியார்கள் அதிகளவில் உலாவி வருகின்றனர். குட்செட் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். இவர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்த போதும் கஞ்சாவிற்பனையை தடுக்க முடியவில்லை.

    குறிப்பாக கல்லூரி மாணவர்கள் ஒருமுறை புகைத்தால் மீண்டும் அதை தேடிவரும் நிலை உள்ளது.

    திண்டுக்கல் மாவட்ட சிறைச்சாலை பின்புறம் தற்போது கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. ஆண்கள் விற்பனையில் ஈடுபட்டால் எளிதில் மாட்டிக்கொள்வோம் என்பதால் பெண்களை பயன்படுத்தி கஞ்சா விற்பனையை தொடர்ந்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் எதிர்கால் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட சமூகவிரோத செயல்களுக்கு கஞ்சா புகைப்பது தூண்டுதலாக உள்ளது.

    எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கஞ்சாவிற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
    முதல் முறையாக ஓட்டுபோட்டது மகிழ்ச்சியாக உள்ளது என்று தர்மபுரி கல்லூரி மாணவிகள் கூறினர்.
    தர்மபுரி:

    தர்மபுரி சின்னசாமி கவுடு தெருவை சேர்ந்த மாணவி நீரா கூறியதாவது:-

    திருச்செங்கோடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். நான் முதல் முதலில் இன்று காலை அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தேன். எனக்கு முதல் முதலில் வாக்களிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் அனைவரும் தவறாமல் வந்து வாக்களிக்க வேண்டும். மேலும் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மக்களுக்கு நல்ல திட்டங்கள் கொண்டு வந்து பயனுள்ளதாக அமைய பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தர்மபுரி நெடுமாறன் நகர் பகுதியை சேர்ந்த மாணவி இனியா கூறியதாவது:-

    தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வருகிறேன். நான் தேர்தல் முதல் முதலில் வாக்களிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. காலையில் வந்து வரிசையில் நின்று வாக்களித்துள்ளேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இதேபோல் பொதுமக்கள் 100 சதவீதம் வந்து வாக்களிக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை உள்ளதால் அதற்கு தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து ஊரிசு கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று போராட்டம் செய்தனர். #PollachiAbuseCase #PollachiCase
    வேலூர்:

    பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ படங்கள் எடுக்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. வேலூர் ஊரிசு கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று காலை கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என கோ‌ஷம் எழுப்பினர். #PollachiAbuseCase #PollachiCase


    புரசைவாக்கத்தில் போலீஸ்காரரை தாக்கிய 3 கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அம்பத்தூர்:

    புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் அருகே நேற்று இரவு போக்குவரத்து போலீஸ்காரர் ஆறுமுகராஜ் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் கையில் பீர்பாட்டில்களை வைத்துக்கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதை போலீஸ்காரர் ஆறுமுகராஜ் தட்டிக்கேட்டார்.

    அப்போது அவர்கள் போலீஸ்காரரிடம் வாக்குவாதம் செய்தனர். திடீரென்று அவரை அடித்து உதைத்தனர்.

    இதுகுறித்து போலீஸ்காரர் ஆறுமுகராஜ் தலைமை செயலக காலனி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அங்கு சென்று போலீஸ்காரரை தாக்கியவர்களை மடக்கி பிடித்தார்.

    விசாரணையில் அவர்கள் அயனாவரம் குட்டியப்பன் தெருவை சேர்ந்த ஜேக்கப் (21), அயனாவரம் செம்மன்பேட்டையை சேர்ந்த சாமுவேல் (21), ஜோசப் (20) என்பதும் அனைவரும் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரிய வந்தது. 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.



    கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கணவன், மனைவியை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    கோவை:

    தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 56). இவரது மனைவி ஜெயா(45).

    இவர்கள் இருவரும் சவுரிபாளையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர். அவ்வழியாக ரோந்து சென்ற பீளமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி இருவரையும் பிடித்து விசாரித்தார்.

    அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்த போது அதில் 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் தேனியில் இருந்து கஞ்சாவை கடத்தி கொண்டு வந்து சிறு, சிறு பொட்டலங்களாக மாற்றி கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இவர்கள் கடந்த 4 வருடங்களாக கோவை ஒத்தகால் மண்டபம் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர்.

    முருகன் மீது பெரிய கடை வீதி போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் இருக்கிறது. இவர் கடந்த சில நாட்களாக பீளமேடு பகுதியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்ததாக போலீசார் கூறினார். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    காட்டூர் போலீசார் காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்ற போது பஸ் நிலையத்தின் எதிர்புறம் உள்ள கழிப்பிடம் அருகே முதியவர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நிற்பதை கண்டனர். அவரை பிடித்து சோதனை செய்த போது 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்தனர்.

    விசாரணையில் அவர் புதுசித்தாபுதூரை சேர்ந்த பன்னீர்செல்வம்(69) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் ரூ.1280 -ஐ பறிமுதல் செய்தனர். #tamilnews
    கும்மிடிப்பூண்டியில் இருந்து வந்த மின்சார ரெயிலில் மோதலில் ஈடுபட்ட சென்னை கல்லூரி மாணவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    பொன்னேரி:

    கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி இன்று காலை மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது.

    இதில் எளாவூர், கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பயணம் செய்தனர்.

    அவர்கள் கையில் பட்டாக்கத்தி, மதுபாட்டில், பட்டாசு வைத்திருந்தனர். ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

    மாணவர்கள் பட்டாக்கத்தியை காட்டி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின்சார ரெயில் மீஞ்சூர் ரெயில் நிலையம் வந்தபோது அங்கு தயாராக நின்ற போலீசார் ரகளையில் ஈடுபட்ட 8 மாணவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பிடிபட்டவர்கள் அனைவரும் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் என்று தெரிகிறது. அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்துகல்லூரி ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் சிலர் பட்டாக்கத்தியை பிளாட்பாரத்தில் உரசியபடி சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


    சென்னையில் கிராமிய பாரம்பரியத்தில் பாவாடை-தாவணி, சேலை அணிந்து வந்து பொங்கல் விழாவை மாணவிகள் கொண்டாடி மகிழ்ந்தனர். #Pongal
    சென்னை:

    தை திருநாளாம் பொங்கல் திருநாள் வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

    பொங்கல் விழாவையொட்டி கல்லூரி மாணவிகள் பட்டு, டிசைன்ஸ் சேலை மற்றும் பாவாடை-தாவணி அணிந்து வந்து அசத்தினார்கள். கிராமப்புறத்தை போன்ற சூழல் கல்லூரி வளாகத்தில் உருவாக்கப்பட்டு இருந்தது.

    பொங்கல் பானை வைத்து மாணவிகள் பொங்கலிட்டனர். பொங்கல் பானை பொங்கி வரும்போது, அவர்கள் ‘பொங்கலோ பொங்கல்’ என்று கூறியும், குலவையிட்டும் விழாவை களைகட்ட செய்தனர்.

    கிராமத்தில் திருவிழா காலங்களில் அமைக்கப்பட்டு இருக்கும் கடைகளை போல, இளநீர், ஐஸ், பஞ்சு மிட்டாய், மக்காச்சோளம், பணியாரம் உள்பட பல்வேறு விற்பனை கடைகளை மாணவிகளே ஏற்பாடு செய்து இருந்தனர். அதேபோல், ராட்டினம் ஒன்றும் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் மாணவிகள் ஏறி உற்சாகம் அடைந்தனர்.

    மாணவிகள் தங்கள் கை வண்ணத்தில் விதவிதமான வண்ணங்களில் கோலமிட்டனர். அதுமட்டுமில்லாமல் நாட்டுப்புற கலைகளை போற்றும் வகையில் தப்பாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் ஆகியவற்றை மாணவிகள் கல்லூரி வளாகத்தில் அரங்கேற்றினார்கள். விழாவின் இறுதியில் மாட்டு வண்டியில் ஏறி மாணவிகள் ஒய்யாரமாக பயணம் செய்தனர்.

    விழா குறித்து மாணவிகள் கூறுகையில், “தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கும் உலகில் நம்முடைய பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் போற்றுவது நமது கடமை. அந்த வகையில் பொங்கல் விழாவை கொண்டாடுவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இனி வரக்கூடிய தலைமுறைகளும் இதை பின்பற்ற வேண்டும் என்பது எங்களுடைய தாழ்மையான கோரிக்கை” என்றனர்.  #Pongal
    பூம்புகார் கடற்கரைக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவிகள் கடலில் குளித்தபோது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Poompuharbeach
    சீர்காழி:

    மயிலாடுதுறை தர்மபுரம் ஆதீனம் மகளிர் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.ஏ., படிப்பவர்கள் மஞ்சு, விவேகா, முதலாம் ஆண்டு படித்துவந்தவர் சிவப்பிரியா. இவர்கள் 3 பேரும் தனது தோழிகள் உட்பட 7 பேர் இன்று காலை பூம்புகார் கடற்கரைக்கு சுற்றுலா சென்றனர்.

    அப்போது காவிரி கடலோடு சங்கமிக்கும் இடத்தில் குளிக்க முடிவு செய்தனர். அப்போது சிவபிரியா, மஞ்சு, விவேகா ஆகிய 3 பேர் மட்டும் கடலில் இறங்கி குளித்துள்ளனர். இதில் சேற்றில் சிக்கி 3 மாணவிகளும் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதை கண்ட மற்ற மாணவிகள் செய்வதறியாமல் அச்சத்தில் அலறினர்.



    இதை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து சேற்றில் சிக்கிய 3 மாணவிகள் உடலையும் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பூம்புகார் போலீசார் 3 மாணவிகள் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் சேறுடன் கூடிய புதைமணல் அதிகம் இருப்பதால் அங்கு பொதுமக்கள் இறங்கி குளிக்கக்கூடாது என்ற அறிவிப்பு பலகையை போலீசார் அங்கு வைத்திருந்தனர். ஆனால் கல்லூரி மாணவிகள் இதனை கவனிக்காமல் இறங்கி குளித்ததால் பரிதாபமாக பலியானது தெரியவந்தது.

    கல்லூரி மாணவிகள் கடலில் குளித்தபோது இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. #Poompuharbeach
    கர்நாடகத்தில் கல்லூரி படிப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் வகையில் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. #Karnataka #FreeEducation #KumaraswamyCabinet
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் ஏற்கனவே 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வியை அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் கல்லூரி படிப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் திட்டத்திற்கு மந்திரிசபை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சட்டம் மற்றும் சட்டசபை விவகாரத் துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் கல்லூரி படிப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது பி.யூ.கல்லூரி, முதல் நிலை கல்லூரி மற்றும் உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்துள்ள பெண் குழந்தை களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டம் நடப்பு கல்வி ஆண்டு (2017-18) முதலே அமல்படுத்தப்படுகிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ.95 கோடி செலவாகும். இதன் மூலம் மாநிலத்தில் 3.70 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.

    கன்னட திரைப்படங்களில் கர்நாடகத்தில் உள்ள சுற்றுலா தலங்களை படம் பிடித்து காட்டினால், அதற்கு நிதி உதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக திரைப்பட சுற்றுலா கொள்கையை அமல்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. திரைப்படங்களில் சுற்றுலா தலங்களை காட்டினால் ரூ.1 கோடியும், பெரிய அளவில் சுற்றுலா தலங்களை காண்பித்தால் ரூ.2½ கோடியும் நிதி உதவி அளிக்கப்படும்.

    விவசாய நிலத்தை விவசாயம் அல்லாத நோக்கங்களுக்கு பயன்படுத்த விரும்புபவர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் அதற்கு அனுமதி வழங்க இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணபிக்க வேண்டும்.

    பீதர் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்படாமல் முடங்கிப்போய் உள்ளது. அவற்றை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர ரூ.20 கோடி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டது. கடப்பிரபா இடதுபுற கால்வாயை நவீனப்படுத்த ரூ.573 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

    மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் தாலுகாவில் உள்ள ஹாட்யா கிராமம் அருகே காவிரி ஆற்றில் இருந்து நீர் எடுத்து 12 ஏரிகளை நிரப்ப ரூ.15 கோடி ஒதுக்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. ரேஷன் கடைகளை நடத்தும் வணிகர்களுக்கு குவிண்டாலுக்கு லாபம் ரூ.80-ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.

    மேலும் 6-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சில படிகளை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ.400 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். பாகல்கோட்டை மாவட்டம் முதோல் தாலுகாவில் முதல் நிலை கல்லூரி தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.3.40 கோடி நிதி ஒதுக்கப்படும்.

    ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. இங்கு 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்கப்படுகிறது. இதற்கு ரூ.450 கோடி செலவாகும். கட்டமைப்பு பணிகளுக்கு முதல் கட்டமாக ரூ.90 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

    கர்நாடக இலவச மற்றும் கட்டாய கல்வி பெற குழந்தைகள் உரிமை விதிமுறைகளின்படி அரசு பள்ளிகள் இல்லாத பகுதிகளில் தனியார் பள்ளிகள் இருந்தால், அந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தை களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

    இவ்வாறு கிருஷ்ண பைரேகவுடா கூறினார்.

    முன்னதாக கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் தலைமை செயலாளர் மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர். இதில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் உள்ள மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கலந்து கொள்ளவில்லை. #Karnataka #FreeEducation #KumaraswamyCabinet
    ×