என் மலர்

  செய்திகள்

  வேலூர் ஊரிசு கல்லூரி மாணவிகள் போராட்டம் செய்த காட்சி.
  X
  வேலூர் ஊரிசு கல்லூரி மாணவிகள் போராட்டம் செய்த காட்சி.

  பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து வேலூரில் கல்லூரி மாணவிகள் போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து ஊரிசு கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று போராட்டம் செய்தனர். #PollachiAbuseCase #PollachiCase
  வேலூர்:

  பொள்ளாச்சியில் பெண்கள் மற்றும் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ படங்கள் எடுக்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. வேலூர் ஊரிசு கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று காலை கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என கோ‌ஷம் எழுப்பினர். #PollachiAbuseCase #PollachiCase


  Next Story
  ×